>16-ஆம் திகதியில் நான் பெற்ற அனுபவம்.. (அத்தியாயம் எட்டு)

மார்ச் 30, 2008

>

(இறுதி அத்தியாயத்தை இப்பொழுதுதான் எழுத நேரம் கிடைத்துள்ளது, அதுவும் ஒரு வாசகரின் நினைவூட்டலுக்குப் பின்புதான் இறுதி அத்தியாயத்தின் கதை நினைவுக்கு வந்தது. காலம் கடந்து எழுதுவதற்கு வாசகர்கள் மன்னிக்கவும்.)

கதை தொடர்கிறது…

கொடுக்கப்பட்ட சிறைச்சாலை உணவை பசி மயக்கத்தில் ஒரு பதம் பார்த்துவிட்டு, சற்று நேரம் ஓரிடத்தில் அமர்ந்து களைப்பாறிக் கொண்டிருந்தேன். அதே கூடாரத்தில் திரு.மாணிக்கவாசகம் ( தற்போதைய காப்பார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ) தனியாக அமர்ந்து ஏதோ ஒரு யோசனையில் ஆழ்ந்திருந்தார். அவரின் தனிமையை ஏன் கெடுப்பானேன் என்று அவரிடம் பேச்சுக் கொடுக்க தயங்கினேன். சில நிமி்டங்கள் கழித்து, மீண்டும் ஒரு ‘பிளேக் மரியா’ லாரியில் இந்தியர்கள் கொண்டு வரப்பட்டனர். லாரியிலிருந்து இறங்கியவர்கள் ‘மக்கள் சக்தி’ என கோஷமி்ட, நாங்களும் அவர்களை கோஷமி்ட்டு வரவேற்றோம்.

இப்படியே சில லாரிகளில் இந்தியர்கள் வந்த வண்ணமாயிருந்தனர். வெயிலின் சூட்டில் மி்கவும் சோர்ந்து போயிருந்த வேளை, போலீஸ் அதிகாரியொருவர்,

“சரி, காலைல வந்தவங்க எல்லாரும் வந்து ஐ.சி எடுத்துகுங்க..”

எங்களையும் சேர்த்துதான் கூப்பிடுகிறார் என நினைத்து எழுந்தேன்.

“விடிய காலைல வந்தவங்க மட்டும் வாங்க, பஸ்ல வந்தவங்க வேட் பண்ணுங்க, உங்களோட ஐ.சி இன்னும் கொடுக்கல..”

நண்பர் கலையரசு தனது அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டார். சற்று நேரத்தில் அவர்களுக்கு விடுதலை கிடைத்தது. கலையரசு செல்வதற்கு முன், நானும் அவரும் மற்றும் மகேந்திரனும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். விடியற்காலை 3 மணியிலிருந்து தடுத்து வைக்கப்பட்டவர்கள் மாலை மணி 4 அளவில் விடைப்பெற்றுச் சென்றனர்.

எஞ்சிய நாங்கள் மீண்டும் சோர்வோடு, எப்பொழுது எங்கள் அடையாள அட்டை வருமென காத்திருந்தோம். அரைமணி நேரம் கழித்து ஒரு போலீஸ் அதிகாரி ஒருப் பை நிறைய உணவுப் பொட்டலங்களைக் கொண்டு வந்து,

” செமுவா மாக்கான், இனி பெகாவாய் புஞா.. டியா ஓராங் தாக் மாக்கான், அம்பேல்”

அதிகாரிகளுக்கு வழங்கவிருந்த உணவுப் பொட்டலங்கள் மி்ச்சம் இருந்ததால் எங்களிடம் கொண்டு வந்து நீட்டப்பட்டது. பொட்டலத்தை திறந்து பார்க்கும் பொழுது கோழி, பிரியாணி சாதம் என அமர்க்களமாக இருந்தது. அதையும் ஒரு வெட்டு வெட்டினோம்.

உணவருந்தி சற்று நேரம் கழிந்ததும், திரு.மாணிக்கவாசகம் அவர்களின் பெயர் வாசிக்கப்பட்டது. அவர் முன்னே சென்றதும் அவரின் கைகளில் விலங்கு மாட்டப்பட்டு வேனில் ஏற்றப்பட்டார். நாங்கள் அனைவரும் மக்கள் சக்தி என கோஷமிட திரு.மாணிக்கவாசகமும் பதிலுக்கு சந்தோஷமாகத் தலையாட்டினார். வேன் மின்னல் வேகத்தில் பறந்தது.

மாலை 4.45 மணியளவில் எங்கள் பெயர் வாசிக்கப்பட்டு அடையாள அட்டைகள் திரும்பக் கொடுக்கப்பட்டன. அப்பொழுது அங்கிருந்த ஒரு இந்திய போலீஸ் அதிகார்,

” தோ பாருங்க.. உங்கள அக்தா கே.கே 3 கீழே புடிச்சு வெச்சிருந்தாங்க, அதுகான அதிகாரம் எங்ககிட்ட இருக்கு.. பெரியவரு உங்கமேலெ கருணை வெச்சு உங்கமேலே எந்த ஒரு கேஸும் போடாம அனுப்புறாரு… பாக்க போனா அவருக்குதான் நீங்க தேங்க்ஸ் சொல்லனும்..”

என்று ஒரு மலாய்க்கார அதிகாரியை சுட்டிக் காட்டினார்.

அப்பொழுது கூட்டத்தில் ஒரு சிலர் “தெரிமா காசே பாஞாக் இன்சேக்” என நன்றிக் கூறிக் கொண்டனர். ஆனால் கூட்டத்திலொருவர்,

“இவனுங்களுக்கு எதுக்கு நன்றிலாம் சொல்லிட்டு, சொல்லாதீங்கலா..! பேசாமே ஐ.சி ய வாங்கிட்டு வாங்க.. ஒரேடியா நடிப்பானுங்க..!”

எனக்கும் இது சரியென்றுபட்டது. நன்றாகவே போலீஸார் எங்களைத் தாஜா செய்கின்றனர் எனத் தெரிந்தது.

அடையாள அட்டையைப் பெற்றப் பின் நாங்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டோம். சோதனைக்காக பறிமுதல் செய்யப்பட்ட எங்கள் பொருட்கள் மீண்டும் ஒப்படைக்கப்பட்டன. செல்லும் வழியில் பேரணி நடந்த இடத்திற்குச் செல்லக்கூடாது என போலீசார் எங்களை எச்சரித்து விடுவித்தனர். எங்களுக்கு பிறகு வந்த மற்ற ஒரு குழுவினர் எங்களை உற்சாகமூட்டி வழியனுப்பினர். எங்கள் பேருந்தில் ஏறும் சமயம், ஒரு விரைவுப் பேருந்து புலாபோலினுள் அழைத்துவரப்பட்டது. அவர்கள் அமைதி பேரணியில் கலந்துக் கொள்ள தாமதமாக வந்தவர்கள் என தெரிந்துக் கொண்டோம். அவர்களை இன்னும் எத்தனை மணி நேரம் தடுத்து வைப்பார்களோ என மனதில் எண்ணிக் கொண்டே பேருந்து ஏறினேன்.

பேருந்து புலாபோல் நுழைவாயிலை நெருங்கியதும், அங்கு ஒரு சிலர் நின்றுக் கொண்டிருந்தது பார்வைக்குத் தென்பட்டது.

“அண்ணே, பஸ்ச கொஞ்ச நேரம் நிப்பாட்டுங்க..”

என ஒருசிலர் ஓட்டுநரைக் கேட்டுக் கொண்டதற்கிணங்க, பேருந்து புலாபோல் நுழைவாயிலில் ஓரங்கட்டப்பட்டது. அப்போது எனக்கு இணையம் மூலம் நன்கு அறிமுகமான சில முகங்கள் தென்பட்டன. அவர்களில் இராஜாராக்ஸ் வலைப்பதிவர் இராஜா, 5 தலைவர்களை விடுவிக்கக் கோரி முதன்முறையாக 5 நாட்கள் உண்ணா நோன்புப் போராட்டத்தை மேற்கொண்ட சிங்கப்பூர் தமி்ழன் சீலன் பிள்ளை போன்றோர் அங்கு நிற்கக் கண்டேன். இராஜா கையில் புகைபடக் கருவியோடு நின்றுக்கொண்டிருந்ததை காண முடிந்தது.

அமைதிப் பேரணியில் சந்திக்கலாம் என இராஜாவிடம் கூறியது நினைவுக்கு வந்தது. பேருந்து படிக்கட்டுகளில் நின்றுக் கொண்டு இராஜாவை நோக்கி கையசைத்தேன், அவர் புகைபடங்கள் எடுப்பதில் மும்முரமாக இருந்ததால் என்னை கவனிக்கவில்லை.

பேருந்து மீண்டும் புறப்பட்டது. வழிநெடுக சாலைகளிலும் உணவுக் கடைகளிலும் இந்தியர்கள் பேருந்தைப் பார்த்து கையசைத்தனர். பேருந்து மீண்டும் நின்றது. பேருந்தினுள் இரு புது முகங்கள் தென்பட்டன..

“அண்ணே, பஸ்ச மி்ஸ் பண்ணிட்டோம், சுங்கை பூலோ வரைக்கும் லிப்ட் கிடைக்குமா”

ஓட்டுநர் சம்மதம் தெரிவிக்க அவர்களையும் ஏற்றிக் கொண்டு பேருந்து மி்ன்னல் வேகத்தில் பறந்தது. மாநகரில் எங்கும் நிற்காமல், நெடுஞ்சாலை எடுத்து சுங்கை பூலோ ஓய்வு எடுக்கும் இடத்தில் பேருந்து நின்றது. அனைவரும் நன்றாகக் களைப்பாறினர். அதன் பின் பேருந்து மீண்டும் வடக்கு நோக்கி விரைந்தது. இரவு பத்து மணியளவில் புக்கிட் கந்தாங் ஓய்வெடுக்கும் இடத்தில் பேருந்து நின்றது. அனைவரும் ஒன்று கூடினோம். ஒரு பெரிய வட்டம் பிடித்து நின்று ஒரு சபதம் எடுத்துக் கொண்டோம். இனி, இந்திய சமுதாயம் முன்னேற வேண்டுமென்றால், இந்தியர்களாகிய நாம் அவர்களுக்கு முழு ஆதரவு வழங்க வேண்டும்.

பசிக்கு உணவு தேடி கடைகளுக்குப் போனாலும், இந்திய உணவகம் இருந்தால் அவர்களுக்குத்தான் நாம் முன்னுரிமை வழங்க வேண்டும். விலையை ஒரு பொருட்டாகக் கருதக் கூடாது. சீனர்களைப் போல் இனி எந்த ஒரு காரியத்திலும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என சபதம் எடுத்தோம்.

அனைவரின் முகத்திலும் ஒரு தெளிவு இருந்தது. பேருந்து ஜூரு கட்டணச் சாவடியை நெருங்கும் போது, பேருந்தில் உள்ள ஒரு பெரியவர்,

” சாமி்வேலு செபராங் பிறை வந்துருக்காராம்..! ஓரே கலவரமா இருக்காம், இப்பதான் என் மகன் போன் பண்ணி சொன்னான்.. “

இப்படிக் கூறிவிட்டு தாம் ஜூரு கட்டணச் சாவடியிலேயே இறங்கிக் கொள்ளப் போவதாகக் கூறி இறங்கிக் கொண்டார்.

பேருந்து பிறையில் ஆட்களை இறக்கிவிட்டு பினாங்குத் தீவிற்கு புறப்பட்டுச் சென்றது. நடுநிசி மணி 12ஐ எட்டியிருந்தது. பேருந்து குளுகோர் இராஜகாளியம்மன் ஆலயத்தின் முன் வந்து நின்றது. அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகள் கூறிக் கொண்டு பிரிந்துச் சென்றோம். ஒரு குடும்பமாகச் சென்று கஷ்டங்களை ஒன்றாக அனுபவித்ததனால், அவர்களை விட்டு மனம் பிரியவில்லை.

மெதுவாக பூமரத்தம்மன் ஆலயத்தை நோக்கி நடைப்பயின்றேன். ஆலயத்தை நெருங்க நெருங்க மனதில் ஒரு கேள்விக்குறி.

” மோட்டார் வண்டி பாதுகாப்பாக இருக்குமா..?!”

ஆலயத்தை நெருங்கிவிட்டேன்.

காரிருளிலும், ஆலயத்தின் ஒரு பகுதி அகல் விளக்குகளின் வெளிச்சத்தில் மங்கலாகத் தெரிந்தது. அந்த மர்ம ஆசாமி்கள் எங்கே என்று கண்கள் மங்கலான வெளிச்சத்தினூடே துலாவி துலாவி பார்த்தன. காணவில்லை. ஆலயத்தின் பின்புறம் சென்றேன், நிறுத்திவைத்த மோட்டார் வண்டி அதே இடத்தில் பத்திரமாக இருந்ததை கண்டதும் நிம்மதி அடைந்தேன். அருகில் ஒரு மேசையில் செங்கல்லை தலையில் வைத்துக் கொண்டு அந்த மர்ம ஆசாமி் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார். நன்றி கூறலாம் என நினைத்தேன், ஆனால் எதற்கு வம்பு என்று, மோட்டார் வண்டியைத் திருட வந்தவன் போல், வண்டியை மெதுவாக தள்ளிக் கொண்டு ஆலயத்தின் முன்புறம் சென்று பூமரத்தம்மனை நன்றி உணர்வோடு ஒரு பார்வை பார்த்துவிட்டு மோட்டாரைச் செலுத்தினேன்.

இறுதி அத்தியாயம் முற்றும்…

அன்று ஐவருக்காக போராடிய போராட்டத்தின் பயனாக, இன்று ஐந்து மாநிலங்களை ஆளுங்கட்சி இழக்க நேரிட்டுள்ளது. இதுதான் மக்கள் சக்தி! ஒன்றுபடுவோம், செயல்படுவோம்!

போராட்டம் தொடரும்…

16-ஆம் திகதியில் நான் பெற்ற அனுபவம்.. (அத்தியாயம் எட்டு)

16-ஆம் திகதியில் நான் பெற்ற அனுபவம்.. (அத்தியாயம் ஏழு)

மார்ச் 3, 2008

அனைவரும் கூடாரத்தை நோக்கி நடந்தோம். அங்கு நண்பர் கலையரசு என்னை வரவேற்றார்.

” காலைலே மூணு மணிலேர்ந்து இங்கதான்.. மொதல்ல எங்கல டேவான்லதான் வெச்சிருந்தானுங்க.. பிறகு ரொம்ப சத்தம் போடுறோனு இங்க தொரத்தி உட்டுடானுங்க” என புன்னகையுடன் கூறினார்.

அதன்பின் அவருடைய நண்பர்களிடம் என்னை அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு, நான் அங்கேயே அமர்ந்துக் கொண்டு நடப்பனவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். நேரம் ஆக ஆக, வெயிலின் கொடுமை அதிகரித்தது. கூடாரத்தினுள் புழுக்கம் எங்களை வாட்டி எடுத்தது. பலர் உணவு கேட்டு காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டிருந்தனர். மண்டோர் வேலை செய்துக் கொண்டிருந்த இந்திய அதிகாரி அனைவரையும் சமதானப்படுத்திக் கொண்டிருந்தார்.

மதியம் 12.30 எட்டியிருந்தது.

உணவு என்றப் பெயரில் இரு இந்தியர்கள் எங்கள் கூடாரத்தின் எதிரே ஒரு சின்னக் கடையை திறந்தனர். ஆனால் அவர்களிடம் அனிச்சம், ரொட்டி, சிறுவர்களுக்கான தின்பண்டங்கள், குளிர்பானங்கள் என சத்து இல்லாத உணவுகளை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்துக் கொண்டிருந்தனர். பசியில் ருசியறியாது பலர் அவற்றை வாங்கி உண்டு தங்கள் பசியைப் போக்கிக் கொண்டனர்.

சில மணிநேரங்கள் கழிந்தது.. அதற்குள்ளாக சில காவல் துறையின் ‘பிலேக் மரியா’ லாரிகள் பல இந்தியர்களை பேரணியிலிருந்து பிடித்து இங்கே கொண்டு வந்திருந்தார்கள். அங்கு நடப்பனவற்றைப் படம் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது எதேச்சையாக ஒருவரைக் கண்டேன். அவர் என்னைப் பார்த்ததும் சிரித்துவிட்டு,

“உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே”

அவரைப் பார்த்ததும் இராஜாராக்ஸ் வலைப்பதிவர் என நினைத்தேன். பின்பு அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

“ஐம் மகேந்திரன், ப்ளோகர்”

“ஓ, நீங்க இராஜா இல்லியா..?”

“நோ, இராஜா நானு எல்லாம் ஒன்னாதான் வந்தோம்.. என்ன மட்டும் புடிச்சி கொண்டு வந்துடானுங்க.. இராஜா இங்க வந்துகிட்டு இருக்காரு..”

அதன் பிறகு அவர், தான் காவல் துறையினரால் பிடிப்பட்டக் கதையினைக் கூறிக்கொண்டிருந்தார்.

அதன் பின்னர், நான் மீண்டும் அங்கு நடக்கும் பலக் காட்சிகளை பதிவு செய்ய ஆரம்பித்தேன்.

நண்பர் கலையரசு வந்தார்.

” கலை, தோ அவர்தான் மகேந்திரன்..ப்ளோகர்..”

“ஓ, அப்டியா.. நில்லுங்க.. பேசிட்டு வந்துறேன்…”

சில நிமிடங்கள் கழித்து இருவரும் என்னை நோக்கி வந்தனர்..

கலையரசு கேட்டார்,

” சதீஷ், என்னலா அவருக்கு நீங்கதான் ஓலைச்சுவடி ப்ளோக்கர்னு தெரியாதாம்”

மகேந்திரன்,
” யேன் மொதல்லியே சொல்லலே, நீங்கதானா அது..”

அதன் பிறகு மூவரும் ஒன்றாக அமர்ந்துக் கொண்டு கதையடித்துக் கொண்டிருந்தோம்..

மதியம் இரண்டு மணியளவில், சிலக் காவல் துறை அதிகாரிகள் கூடாரத்தின் முன் கூடினர். எங்களிடம் சிறுநீர் பரிசோதனை செய்யப் போவதாக அறிவித்தார்கள்.

வயதானவர்கள் முதல் பெண்கள், சிறுவர்கள் வரை சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். இது எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாகவும், அவமானமாகவும் தோன்றியது. என்னுடைய பெயர் அழைக்கப்பட்டது, கையில் ஒரு பிளாஸ்டிக் கின்னம் கொடுக்கப்பட்டு கழிவறைக்கு வழிகாட்டப்பட்டது.

என் வாழ்வில் அப்படியொரு துர்நாற்றமுடைய, அசிங்கமான ஒரு கழிவறையைக் கண்டதில்லை எனலாம். இருப்பினும் எப்படியோ நாங்கள் அனைவரும் ஒரு வகையாக சமாளித்துக் கொண்டோம்.

பரிசோதனையின் முடிவு அனைவருக்கும் சாதகமாக இருந்தது. மூன்று மணியளவில், ஒரு மலாய்க்காரன் தனது மோட்டார் வண்டியில் உணவு பொட்டலங்களைக் கொண்டு வந்து இறக்கி விட்டுச் சென்றான்.

பொட்டலத்தைத் திறந்துப் பார்த்ததும்தான் தெரிந்தது, அது சிறைக் கைதிகளுக்குக் கொடுக்க வேண்டிய உணவு என்று. சோறு, அழுகிய கத்திரிக்காய் இரு துண்டுகள், பாதி பொரித்த மீன் துண்டு, தக்காளி இரசம். ஒரு பையில் தண்ணீர் கட்டி வைத்துக் கொடுத்தார்கள். மீன் துண்டில் மட்டும் உப்பு அளவுக்கு அதிகமாக இருந்தது.மற்ற பதார்த்தங்களில் ருசியேதும் இல்லாமல் சப்பென்று இருந்தது. பசியில் மயக்கம் கண்டதாலும், சோர்வு மிகுதியாலும், அதையும் உண்ண வேண்டியதாயிற்று.

இறுதி அத்தியாயம் இன்றிரவு பதிவிடப்படும்..

16-ஆம் திகதியில் நான் பெற்ற அனுபவம்.. (அத்தியாயம் ஆறு)

பிப்ரவரி 25, 2008

சற்று நேரம் மண்டபத்தின் வெளியே நின்றுக் கொண்டிருந்தோம். பிறகு அம்மண்டபத்தின் உள்ளிருந்து ஒரு காவல்துறை அதிகாரி (தமிழர்) வெளியே வந்தார். வெளிவந்ததும் எங்களைப் பார்த்து,

“சரிங்க.. இப்ப வந்து ஒரு ஒரு ஆளா பேர கூப்டுவேன், அவங்க வந்து முன்னுக்கு நில்லுங்க..சரியா…”

கையில் எங்கள் அடையாள அட்டைகளை வைத்துக் கொண்டு ஒவ்வொரு பெயராக வாசித்தார். முதலில் 10 பேர்களின் பெயர் வாசிக்கப்பட்டு அவர்கள் மண்டபத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். என் பெயர் அழைக்கப்படவில்லை, எனவே வெளியிலிருந்து உள்ளே என்ன நடக்கிறது எனக் கண்காணித்தேன். வரிசையாக பத்து மேசைகள் அடுக்கப்பட்டு ஒவ்வொரு மேசையிலும் ஒரு காவல்துறை அதிகாரி நாற்காலி போட்டு அமர்ந்திருந்தார். உள்ளேச் சென்றவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மேசையின் எதிர்ப்புறம் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்துக் கொள்ளப் பணிக்கப்பட்டார்கள். பின் அவர்களிடம் கேள்விகள் கேட்கப்படுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்கள் பேசுவது விளங்காததனால் என் பார்வையை அங்கிருந்து அகற்றி மறுபுறம் மக்கள் சக்தி கூட்டத்தினிடம் பரவ விட்டேன். அங்கு அனைவரும் ஒரு நீண்ட கூடாரத்தினுள் அமர்ந்துக் கொண்டு பார்வையை எங்கள் பக்கம் செலுத்திக் கொண்டிருந்தார்கள்.

சற்று நேரத்தில் மீண்டும் அதே காவல்துறை அதிகாரி அடுத்த பத்து பேர்களை வாசித்து அவரவர்களுடைய அடையாள அட்டையைக் கொடுத்தார். எனக்கும் கிடைத்தது. அதன் பின் அனைவரையும் மண்டபத்தினுள் அழைத்துச் சென்ற அவர் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் எங்களை அமரச் சொன்னார். நான் ஒரு காவல் துறை அதிகாரி முன் அமர்ந்தேன். என் அடையாள அட்டையை அந்த அதிகாரியிடம் நீட்டினேன். அவர் ஒரு வெள்ளைத் தாளில் என் அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை எழுதிக் கொண்டிருந்தார்.

சுற்றி முற்றிப் பார்த்தேன். அனைத்து அதிகாரிகளின் முகங்களிலும் புன்னைகை இருந்தது. எங்களை தடுத்து வைத்த சந்தோஷக் கலையோ என்னவோ, ஆனால் அனைவரும் மரியாதையாக கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சற்று நெரம் கழித்து என் முன்னே அமர்ந்திருந்த அதிகாரி கேள்விக் கணைகளைத் தொடுத்தார்.

“இன்சேக் டாரி மானா?”

“பினேங்”

” டாதாங் மாச்சாம் மானா..?”

“பஸ்”

“ஓகே, கெர்ஜா அபா”

“குரு ஸ்கோலா”

அந்த அதிகாரியின் முகத்தில் சற்று நேரம் ஈயாடவில்லை. அடுத்து இன்னும் மரியாதையாகப் பலக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே அனைத்தையும் வெள்ளைத் தாளில் குறித்துக் கொண்டார்.

அங்குமிங்கும் மண்டோர் வேலைப் புரிந்துக் கொண்டிருந்த அதே இந்திய காவல் துறை அதிகாரியை அழைத்தேன்.

“அண்ணே, கொஞ்ச நேரம் இங்க வாங்கண்ணே…”

” கொஞ்ச நேரம் இருங்க..”

எதோ வேளையில் மும்முரமாக இருந்தார், பின்பு என்னிடம் நெருங்கினார்..

“சொல்லுங்க…”

இல்லண்ணே, இப்ப இவங்க எங்களோட டீதேல்ஸ்லாம் எடுக்குறாங்களே, இதனால ஏதாச்சும் வேலைக்கு பாதிப்பு வருமா..?”

“அதுலாம் ஒன்னுமில..கவலவேணாம்.. சும்மா ஒரு ப்ரோசீடியருக்குதான் எழுதுறாங்க..ஓகே..” எனக் கூறிவிட்டு மற்ற வேலைகளை கவனிக்க ஆரம்பித்தார்.

விசாரணை முடிந்து எங்களை வெளியே அனுப்பினார்கள், நாங்கள் அனைவரும் சற்று நேரம் மண்டபத்தின் வெளியே காத்திருந்தோம். அடுத்த குழு உள்ளே விசாரிக்க அழைத்துச் செல்லப்பட்டனர். வெளியிலிருந்து உள்ளே என்ன நடக்கிறது என எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தோம். சற்று நேரம் கழித்து விஜய் என்கிற இந்திய அதிகாரி மண்டபத்திலிருந்து வெளியெ வந்தார். எங்களைப் பார்த்து,

“சரிங்க, இங்க யாரும் நிக்க வேணாம், யாருலாம் உள்ளுக்கு போய்டிங்களோ தயவு செஞ்சி அந்த டெண்ட் கிட்ட போயி வேட் பண்ணுங்க.. இங்க இப்டி கூட்டமா நின்னா அப்புறம் உங்களுக்குதான் பிரச்சனை.. போங்க..”

எனக் கட்டளையிட்டுக் கொண்டிருந்தார். ஆனால் நாங்கள் யாரும் மசியவில்லை. அங்கேயே நின்றுக் கொண்டு மண்டபத்தினுள் என்ன நடக்கிறது என்றுப் பார்த்துக் கொண்டிருந்தோம். சற்று நேரம் கழித்து எங்கள் கூட்டத்திலொருவர்,

“ஏ, நம்ம பஸ்ச செக் பண்ராணுங்க… பேக்ல சட்டைலாம் இருக்கு…!!”

உடனே வேலன்,

“நான் ஃபேஸ் மாஸ்க், கையுறை எல்ல வெச்சிருக்கேனே”

அச்சமயம் எங்கள் பார்வை முழுதும் எங்கள் பேருந்து மீதே இருந்தது. பேருந்தினுள் இரு காவல் துறை அதிகாரிகள், எங்களுடைய பொருட்களை அலசி ஆராய்வது தெரிந்தது. சற்று நேரம் கழித்து பேருந்தினுள் இருந்த அனைவருடைய துணிப்பைகளையும் எடுத்துக் கொண்டு அதிகாரிகள் மண்டபத்தினுள் நுழைந்தனர்.

அப்பொழுது கூட்டத்திலிருந்த ஒருவர்,

” கேட்டா, அது நம்மலோட ஜாமனுங்க இல்லேனு சொல்லிருங்க..ஓகே.. ரெண்டு பஸ்ல வந்தோம்..ஜாமானுங்க மாறி மிக்ஸ் ஆயிபோச்சினு சொல்லிருங்க…”

போராட்டம் தொடரும்…

அத்தியாயம் ஆறு முற்றும்…

16-ஆம் திகதியில் நான் பெற்ற அனுபவம்.. (அத்தியாயம் ஐந்து)

பிப்ரவரி 23, 2008

தூரத்திலிருந்தே ஒரு காவல்துறை அதிகாரி எங்கள் பேருந்தை நோக்கிக் கைக்காட்டி பிற அதிகாரிகளிடம் ஏதோ கூறுவது எங்களுக்கு தென்பட்டது.

“போச்சிடா..பாத்துட்டானுங்க..! கண்டிப்பா நிப்பாட்டுவானுங்க..” இப்படி ஒருவர் கூற, இன்னொருவர்..

“கை காட்டுறான்..கை காட்டுறான்.. நிக்கச் சொல்றான்..!”

பேருந்தை ஓரங்கட்ட கையசைக்கப்பட்டது. பேருந்தும் சாலையோரத்தில் ஓரங்கட்டி நின்றது.

” பெகி மானா..!?

பேருந்து ஓட்டுநர் பதிலளித்தார்..

” பெகி கோயில், செம்பாயாங்…”

காவல்துறையினர் பேருந்தை சற்று நேரம் நோட்டமிட்டனர்.

” புகா பிந்து..! “

பேருந்து கதவு திறக்கப்பட்டது. ஒரு காவல்துறை அதிகாரி பேருந்தினுள் நுழைந்து நோட்டமிட்டார். பேருந்தில் உள்ளோர் அனைவரும் அமைதியாக இருந்தனர். அவர் கீழே இறங்கியதும் பேருந்தில் உள்ள ஒருவர்,

“எல்லாரும் இறங்க வேணாம், ரெண்டு பேரு போய் பேசுனா போதும்..”

ஓட்டுநர் பேருந்தை விட்டு இறங்கினார். அவரைத் தொடர்ந்து இரண்டு பேர்கள் பேருந்தைவிட்டு இறங்கினர். ஜன்னல் ஓரத்திலிருந்து நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கீழிறங்கியவர்களின் அடையாள அட்டை வாங்கப்பட்டு பரிசோதனைக்குள்ளானது.

உடனே நான் என் நிழற்படக்கருவியை கையில் எடுத்துக் கொண்டேன். காவல் துறையினர் அடிக்கடி பேருந்தில் உள்ளவர்களை வெளியிலிருந்து கண்ணோட்டமிட்டுக் கொண்டிருந்தனர்.

அவர்கள் என் பக்கம் பார்க்காதபோது ஜன்னல் வழி சில படங்களை பதிவு செய்ய முடிந்தது. எனக்கு உதவியாக வேலன்,

“இங்கே பாருங்க, இதெ எடுங்க.. அவன் பாக்கல..ஓகே..ஓகே.. தோ இதையும் எடுங்க..கைல M-16 வெச்சுறுக்கான்..அத கிளியரா எடுங்க.. மெகசின் லோட் பண்றான் பாருங்க.. புடிச்சி போட்டுருவோம்”

என் பின்னால் இருந்த ஒரு பெரியவர்,

“இதுக்குலாம் எதுக்கு பயந்துகிட்டு, நேரா அவன் பாக்கும்போதெ எடுங்க.. கொஞ்சம் இப்படி வந்து எடுங்க..இங்க நல்லா தெரியிது..”

சில நிமிடங்கள் கழிந்தது..

நானும் சிலரும் பேருந்தைவிட்டு இறங்கிவிட்டோம்.. சிலர் காவல் துறையினரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். அருகில் சென்று என்ன பேசுகிறார்கள் என்பதனை கவனித்தேன்..

“லூ அடா அபா அபா புக்திகா?”

“பெகி செம்பாயாங் மாவ் அபா புக்தி?”

“யூ கெனா துஞ்சோக் புக்தி பெகி செம்பாயாங்..”

“ஓகே லா இன்சேக், கலாவ் இன்சேக் தாக் பெர்சாயா சமா காமி, இன்சேக் ஈக்குட் கிதா..”

“இனி காமி டா தேங்கொக் பாஞாக் பஸ் டரி செமலாம்..காமி தாவ்”

“தாக்டா இன்சேக், காமி டா பாயார் செரீபு கத் தோக்கோங் து, உந்தோக் செம்பாயாங்”

பேசிப் பார்த்ததில் காவல் துறையினர் மசிவதாகத் தெரியவில்லை.. எங்களை விட்டுவிட்டு இன்னொரு பேருந்தை அவர்கள் நிறுத்தச் சென்றுவிட்டார்கள். அப்பேருந்தில் இந்தியர்கள் ஒரு திருமணத்திற்குச் செல்வதுப் போல் காணப்பட்டார்கள். 5 நிமிடங்கள் கழித்து அப்பேருந்து தன் பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டது.

மீண்டும் ஒரு காவல் அதிகாரி எங்களை நோக்கி வந்தார்.

“லூ ஓராங் அடா பாவா புடாக் கெசிக் கா?”

“தாக்டா இன்சேக்”

“ஓகே, செமுவா டெங்ஙார் சினி, செகாராங் காமி மாவ் யூ ஓராங் டுடோக் டி டாலாம் பஸ்”

அப்பொழுது எங்களுடன் வந்திருந்த ஒருவர்,

“இன்சேக் சாயா பூஞா ஐ.சி? “

“கெனாப்பா?”

“தாடி இன்சேக் அம்பேல் சயா புஞா ஐ.சி..”

” ஜாடி…?”

“சாயா மாவ் ஐ.சி சாயா..”

” கெனாப்பா சாயா பெர்லூ பாகி ஐ.சி டெகாத் யூ? “

“இதூ ஐ.சி சாயா, சோ, சாயா மாவ் ஐ.சி சாயா பாலேக்! இன்சேக் தாக் போலேக் அம்பேல் ஐ.சி சாயா!”

“சியாபா காத்தா தாக் போலே? ஆ…..! பாவா யூ பூஞா லோயர்..! சியாபா காத்தா தாக் போலே? யூ தாவ், காமி அடா உண்டாங் உண்டாங்.. காமி போலே அம்பேல் ஐ.சி காமு..!”

“மானா போலே இன்சேக்?!”

“ஆ… செகாராங் ஜங்கான் புவாட் மசாலா, பெகி டுடோக் டலாம் பஸ், லெபஸ் து இகூட் கிதா பூஞா கெரேத்தா..ஓகே? ஜாங்கான் பக்சா காமி! கலாவ் யூ தாக் பெகெர்ஜசாமா, யூ யாங் அகான் சுசா.. ! ஜாங்கான் நந்தி கமி தகான் யூ சுமுவா, பாகாம்?! பிகி டுடோக்!”

எங்களில் ஒருவர்,

“சிகரெட் இருந்தா யாராச்சும் கொடுங்க.. தாஜா பண்ணி பாப்போம்..”

ஒரு காவல் துறை அதிகாரிக்கு சிகரெட் கொடுக்கப்பட்டது.. புகையை நன்றாக இழுத்துக் கொண்டே அந்த அதிகாரி ஒரு சிலரின் சமரசப் பேச்சுகளில் தன்னை சற்று நேரம் ஐக்கியப்படுத்திக் கொண்டார். இறுதியாக ‘முடியாது’ என்ற வார்த்தையைத் தவிர அவரிடமிருந்து வேறு பதில் வராது அனைவரும் ஏமாந்து போயினர். சிகரெட் கொடுத்திருக்கவே தேவை இல்லை…

இறுதியாக, கையில் M-16 இரக துப்பாக்கியேந்தி எங்களை வலுக்கட்டாயமாக மிரட்டி பேருந்தில் அமர வைத்தனர் காவல் துறையினர். அதன்பின் ஒரு காவல்துறை அதிகாரி பேருந்தில் ஏறி,

“ஆ…செகாராங் செமுவா அம்பேல் கெலுவார் ஐ.சி..”

என்று கட்டளையிட்டுவிட்டு அனைவருடைய அடையாள அட்டைகளையும் பறிமுதல் செய்தார். காவல் அதிகாரி ஒவ்வொரு இருக்கையாகச் சென்று அடையாள அட்டைகளை வாங்கிக் கொண்டே இருக்கைகளை கண்ணோட்டமிட்டுக் கொண்டு வந்தார். என் இருக்கையில் நான் மறந்துப்போய் முகமூடியை வைத்திருந்தேன். அதைக் கண்டுவிட்ட ஒருவர் எனக்கு ஞாபகப்படுத்தினார்,உடனே அதைக் காவல் அதிகாரி பார்ப்பதற்குள் எடுத்து ஒளிவைத்தேன். அதன்பின் அந்த காவல்துறை அதிகாரி எல்லா அடையாள அட்டைகளையும் சரிபார்த்துவிட்டு பேருந்து ஓட்டுநரிடம்..

“ஓகே, யூ ஈக்குட் காமி செகாராங்.. ஈக்குட் கெரேத்தா டேப்பான்..!”

என்று கட்டளையிட்டு இறங்கிச் சென்றார்.

முன்னே ஒரு காவல் துறையின் ரோந்துக் கார் செல்ல, எங்கள் பேருந்து அக்காரைப் பின் தொடர்ந்தது. நிச்சயம் எங்களைப் புலாபோலுக்குத்தான் அழைத்துச் செல்கிறார்கள் என்று மனதில் தோன்றியது. எனவே, நண்பர் கலையரசுவை கைப்பேசியின் மூலம் தொடர்புக் கொள்ள முயற்சித்தேன். ஆனால் தொடர்பு கிடைக்கவில்லை.

இருபது நிமிட பயணத்திற்குப் பிறகு நாங்கள் ஜாலான் செமாராக்கில் அமைந்துள்ள காவல் துறைப் பயிற்சி மையமான புலாபோல் PULAPOL (Pusat Latihan Polis, Jalan Semarak Kuala Lumpur )அடைந்தோம்.

புலாபோல் வளாகத்தில் நுழைந்த பேருந்து, ரோந்து வாகனத்தைப் பின்பற்றிச் சென்றது. வழிநெடுக காவல் துறையினர் நின்றுக் கொண்டிருந்தார்கள். இறுதியாக எங்களுக்கு சைகை காட்டப்பட்டு ஒரு வாகனம் நிறுத்துமிடத்தில் பேருந்து நின்றது. அவ்விடத்தில் மக்கள் கூட்டம் திரண்டு நிற்பதைக் காண முடிந்தது. அவ்வேளை எனக்கு நண்பர் கலையரசுவிடமிருந்து கைப்பேசி அழைப்பு வந்தது.

” சதீஷ், எங்க இருக்கீங்க..?”

“தோ, உங்க முன்னுக்கு ஒரு பஸ் வந்து நின்னுச்சில..அதுலதான் இருக்கேன்..” என்று சிரித்துக் கொண்டே கூறினேன்..

நண்பர் கலையரசுவும் என் பதிலைக் கேட்டு..

” ஹா..ஹா..ஹா.. வாங்க..வாங்க.. வேல்கம்..” என சிரித்துக் கொண்டே வரவேற்றார்.

நாங்கள் அனைவரும் பேருந்தைவிட்டு இறங்குவதற்கு முன் சிலர் அறிவிப்புச் செய்து கொண்டிருந்தார்கள்.

“யாராச்சும் பேன்னர், மக்கள் சக்தி டீ- சேர்ட் இருந்துச்சுனா கொண்டு வராதீங்க, பஸ்லியே எங்கையாச்சும் ஒளி வெச்சுருங்க..கடைசிவரக்கும் நாம்ம கோட்டுமலைக்குதான் போறோன்னு சொல்லிருங்க..ஓகேவா”

அனைவரும் வெறுங்கையோடு இறங்கினோம்.. பேருந்தைவிட்டு இறங்கியதும் “மக்கள் சக்தி வாழ்க..!” என்ற கோஷங்கள் பரவலாகக் கேட்டன..

எங்களுக்கு சிரிப்பு வந்துவிட்டது…

” ஹா..ஹா..ஹா..நம்ம கைங்களே நம்மல காட்டி கொடுத்துருச்சீங்களே…”

இனியும் காவல் துறையை ஏமாற்ற முடியாது என்று சிரித்துக் கொண்டே அனைவருக்கும் கையசைத்தோம்.. நாங்களும் மக்கள் சக்தியில் இணைந்தோம்..

கூட்டத்தில் நண்பர் கலையரசுவின் முகம் தெரிந்தது.. தூரத்திலிருந்து கையசைத்தார்.. நானும் பதிலுக்கு கையசைத்தேன்..

பிறகு நாங்கள் அனைவரும் தனிக் குழுவாக ஒரு மண்டபத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு வெளியே நிற்கவைக்கப்பட்டோம்..

போராட்டம் ஆரம்பமாகும்…

அத்தியாயம் ஐந்து முற்றும்…

16-ஆம் திகதியில் நான் பெற்ற அனுபவம்.. (அத்தியாயம் நான்கு)

பிப்ரவரி 22, 2008

டூத்தா சாலைக் கட்டணச் சாவடியைக் வெற்றிகரமாக கடந்துவிட்ட பூரிப்பு சில மணித்துளிகளே எனக்கு நீடித்தது.. டூத்தா சாலைக் கட்டணச் சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவில், சாலை இரு பிரிவாகச் செல்லும். ஒன்று கூச்சிங் சாலை, மற்றொன்று மாநகர் செல்லும் சாலை. பயணத் தொடக்கத்திலிருந்து நிதானமாகவே காணப்பட்ட பேருந்து ஓட்டுநர், பேருந்தை கூச்சிங் சாலையில் அதே நிதானத்தோடு செலுத்தினார். ஓட்டுநர் அருகே நின்றுக்கொண்டிருந்த ஒருவர் யாரோ ஒருவரிடம் கைப்பேசியின் மூலம் நாடாளுமன்றம் செல்லும் வழியைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

” சொல்லுங்க சார்.. ஆம்.. ஓகே..ஓகே.. ஜாலான் கூச்சீங்கா சார்? ஓகே, ஜாலான் கூச்சிங் எடுத்தாச்சி… இப்ப ஜாலான் கூச்சிங்ல பூந்துட்டோம்.. ஓகே, நேரா போவா? ஓகே ஓகே சார்.. சைன் போர்ட் பாக்கணுமா? ஓகே, செலாயாங், சுங்கை பூலோ, கெப்போங்னு போட்டுருக்கு.. ஆம், ஓகே ஓகே, நேராதானே..ஓகே ஓகே..”

ஓட்டுநரைப் பார்த்து,

” அண்ணே, நீங்க நேரா போங்க… அங்கதான் பார்லிமெண்ட் இருக்காம்..”

இதையெல்லாம் பக்கத்திலிருந்துக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது.. கோலாலம்பூர் பாதைகள் எனக்கு அத்துப்படி என்பதால், தவறு நடந்துவிட்டது தெரிந்தது, இருப்பினும் அமைதியாக அமர்ந்திருந்தேன்.. அடிக்கடி ஜன்னல் வழியே எட்டி எட்டி பார்த்துக் கொண்டே வந்தேன். ஒருவேளை ஓட்டுநர் குறுக்குப்பாதை ஏதாவது கண்டுபிடித்திருப்பார் என்று நினைத்துக் கொண்டு மனதைத் தேற்றிக் கொண்டேன். இருப்பினும், இந்நேரம் நிகழ்வு ஆரம்பமாயிருக்கும், பல நிகழ்வுகளைப் பார்க்க முடியாமல் போய்விடுமே என மனதிற்குள் ஒரு ஆதங்கம் இருந்துக்கொண்டே இருந்தது.

பேருந்து கெப்போங்கை அடைந்துவிட்டது. சரி கேட்டுப் பார்க்கலாம் என்று என் பக்கத்தில் அமர்ந்திருந்த வேலனிடம் கேட்டேன்.

“அண்ணே, பஸ் எங்கணே போது?”

“அதான்யா, எனக்கும் தெரியல”

பேருந்து முன் நின்றுக் கொண்டிருந்த அதே இளைஞர் மீண்டும் கைப்பேசியில்,

” இன்னும் நேராவாண்ணே, ஓகே..ஆம்..ஓகே, தோ பாசார் போரோங் கெப்போங்னு போட்டுருக்கு.. முன்னுக்கு வளைஞ்சிருனுமா..? ஓகே..”

பிறகு அவர் ஓட்டுநருக்கு, தனக்கே அறிமுகம் இல்லாதப் பாதையை ‘இங்கே வளைங்க, அங்க நில்லுங்க’ என்று கட்டளைப் போட்டுக் கொண்டிருந்தார்.

அப்பொழுதுதான் பேருந்து ஓட்டுநர் வழித் தெரியாமல் எங்கேயோ பேருந்தை ஓட்டிக் கொண்டுச் செல்கிறார் என்று தெரிந்தது..

உடனே நான்,

“அண்ணே, நீங்க போற ரூட் சாலா.., நீங்க திரும்பி யூ டர்ன் எடுக்கணும்..”

பக்கத்தில் அமர்ந்திருந்த வேலன்,

“உங்களுக்குப் பாத தெரியுமா?”

“ஆம்.தெரியும்”

பேருந்தினுள் படிக்கட்டுகளில் நின்றுக்கொண்டிருந்த இளைஞர் பேருந்தில் உள்ளவர்களிடம் ,

“யாருக்காச்சும் கே.எல் பாதை தெரியுமா?”

யாரும் பதில் கூறவில்லை.. உடனே வேலன்,

“தோ பாருலா, இவருக்குப் பாத தெரியுன்றாரு”

அந்த இளைஞர் என்னைப் பார்த்து,

“உங்களுக்குத் தெரியுமா?”

“தெரியும்”

வாங்க, வந்து பாத காட்டுங்க”

“சரிண்ணே, நீங்க மொதல்ல யூ டர்ன் எடுங்க”

பேருந்து கெப்போங் சந்தையைத் தாண்டியதும், ஒரு வளைவு எடுத்து மீண்டும் மாநகர்ச் செல்லும் சாலையில் பேருந்து பயணமானது. மாநகர் நோக்கி பேருந்துச் சென்றுக் கொண்டிருக்கும் வேளை, சற்றுத் தொலைவில் வாகனங்கள் நெரிசலில் அணிவகுத்து நிற்பது கண்ணிற்குத் தென்பட்டது. நெரிசல்ப் பகுதியை அடைந்ததும் ஒரு ஐந்து நிமிடம் நெரிசலில் ஐக்கியமாகி பேருந்து ஆமை வேகத்தில் நகர்ந்துக் கொண்டிருந்தது. எதற்கும் அனைவரும் விழிப்பு நிலையில் இருந்தோம். பேருந்து அடி மேல் அடி வைத்து நகர வாகன நெரிசலின் முக்கியக் காரணம் மெல்ல மெல்ல எங்கள் கண்களுக்குப் புலப்படத் தொடங்கியது.

மீண்டும் ஒரு அறிவிப்பு வந்தது…

” முன்னுக்கு புளோக் போட்டுருக்கானுங்க… கேட்டா எல்லாரும் கோட்டு மலைப் பிள்ளையார் கோயிலுக்கு போறோன்னு சொல்லிருங்க..ஓகே வா?”

சாலைத் தடுப்பை நெருங்க நெருங்க நாங்கள் அனைவரும் ஓட்டுநரைப் பார்த்து,

“அண்ணே, சோத்துக் கை சைட்டு போங்க, அவனுங்க பீச்சக் கை சைட்டு புளோக் போட்டுருக்காணுங்க..”

பேருந்து மெதுவாக சாலையின் வலதுபுறத்திற்கு இடம் பெயர்ந்தது…

சாலைத் தடுப்பை நெருங்க நெருங்க சாலைத் தடுப்பின் முழு உறுவம் ஒருகணம் எங்களை பயமுறுத்தியது.. சாலை முழுவதுமாக அடைக்கப்பட்டு ஒவ்வொரு வாகனமாக சோதனை செய்யப்பட்டு மாநகரினுள் அனுமதிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இம்முறை எங்களுக்கும் வேறு வழி தெரியவில்லை, காரணம் அப்படியொரு பலத்தப் பாதுகாப்பு..

பயணம் தொடரும்…

அத்தியாயம் நான்கு முற்றும்…

Follow

Get every new post delivered to your Inbox.