முகிதீன் யாசினின் மாற்றாந்தாய் போக்கினை இண்ட்ராஃப் சாடியது!

செப்டம்பர் 21, 2011

மூன்று பொதுத் தேர்தல்களில் புறக்கணிக்கப்பட்ட பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் அடிக்கல் நாட்டு விழா கடந்த 17 செப்தெம்பர் அன்று நடந்தேறியது. அந்நிகழ்வில் துணைப்பிரதமரும் கல்வி அமைச்சருமான முகிதீன் யாசின் கலந்து அடிக்கல் நாட்டு விழாவைத் தொடக்கிவைத்து உரையாற்றினார். வழக்கம்போல் வெற்று வாக்குறுதிகளை அள்ளி இரைத்த அவரின் உரை பலரின் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. மக்களை தொடர்ந்து வெற்று வாக்குறுதிகளால் அலைக்கழிக்காமல், பொதுத் தேர்தலுக்கு முன்பாகவே பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டட நிர்மாணிப்பு பணிகளை அரசாங்கம் தொடங்க வேண்டும் என இண்ட்ராஃபின் தேசிய ஆலோசகர் திரு.கணேசன் எச்சரித்தார்.

போராட்டம் தொடரும்…


கல்வித்துறையில் தொடர்ந்து எட்டி உதைக்கப்படும் இந்திய மாணவர்கள்!

ஜூன் 18, 2011

நேற்று 17 சூன் 2011 பினாங்கு வடகிழக்கு மாவட்ட காவல்த்துறை நிலையத்தில் இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியினர் இந்திய மாணவர்களுக்கு எதிராக தொடர்ந்து தொடுக்கப்பட்டு வரும் ஓரங்கட்டுதலை எதிர்த்து புகார் செய்துள்ளனர். அரசு கல்வி உபகாரச் சம்பளம் மற்றும் பிற கல்வி வாய்ப்புகள் சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஏழை இந்திய மாணவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்துவருவதை இண்ட்ராஃப் மக்கள் சக்தி இயக்கம் கடுமையாக கண்டிப்பதாக இண்ட்ராஃப் ஆலோசகர் திரு.கணேசன் கூறினார்.நாடுதழுவிய நிலையில் செய்யப்பட்ட புகார்கள் சேகரிக்கப்பட்டு மலேசிய ஐக்கிய நாட்டவை அலுவகத்தில் அடுத்த வாரம் 22 சூன் 2011-ல் சமர்ப்பிக்கப்படவுள்ளது. தனிப்பட்ட முறையிலோ அல்லது இயக்கம்வழி செய்த புகார்களையோ சமர்ப்பிக்க எண்ணம் கொண்டவர்கள் மனித உரிமைக் கட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.

http://www.humanrightspartymalaysia.com/contact-us/

போராட்டம் தொடரும்…


’மலேசிய வரலாறு’ பாடம் மீளாய்வு செய்யப்பட வேண்டும்! மின்னொப்பம் இடுங்கள்!

April 22, 2011

பள்ளிகளிலும் மற்றும் பிற கல்விசார் கழகங்களிலும் பயன்படுத்தப்படும் வரலாறு பாடத்திட்டங்களையும், பாடநூல்களையும் உடனடியாக மீளாய்வு செய்யக்கோரும் விண்ணப்பம்.
அக்கறையுள்ள பெற்றோர்களாகவும், இந்நாட்டின் குடிமக்களாகவும் அங்கம் வகிக்கும் நாங்கள், நம் நாட்டின் வரலாறு பாடப்புத்தங்களில் உள்ள வரலாற்றுப் பிழைகளையும் மற்றும் அதன் பலவீனங்களையும் மிகுந்த சிரத்தையோடு சுட்டிக் காட்ட விரும்புகிறோம். அவைகளாவன :-
a) வரலாறு பாடநூல்களில் நிறைய வரலாற்று பிழைகளும், பாதி உண்மைகளுமே அடங்கியிருக்கின்றன;
b) நாட்டின் வளர்ச்சிக்கு பல்லின மக்களும் ஆற்றிய பங்கினை அது பிரதிபலிக்கவில்லை; மற்றும்
c) குறுகியப் பார்வையோடு, குறிப்பிட்ட சமய நாகரீகங்களையும் நம்பிக்கைகளையும் புறக்கணிக்கும் வகையில் பாராபட்சமாக எழுதப்பட்டுள்ளது.
நம் இளைய மாணவ சமுதாயத்தின் சிந்தனைகளைப் பாதிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் வரலாறு பாடத்திட்டங்களிலும், பாடநூல்களிலும் அடங்கியுள்ளதால், உடனடி நடவடிக்கையாக பள்ளிகளிலும் மற்றும் பிற கல்விசார் கழகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் வரலாறு பாடத்திட்டங்களையும், பாடநூல்களையும் விரிவான மீளாய்வுக்கு உட்படுத்தி, புதிய பாடத்திட்டத்தினை வரைய வேண்டும் என அரசாங்கத்தையும், சம்பந்தப்பட்ட பொறுப்பிலுள்ள தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறோம்.
பாடத்திட்டங்கள் மற்றும் பாடநூல்கள் மீளாய்வையும், மறுவரைவையும் செய்யக்கூடிய நிபுணத்துவக்குழுவில் நாட்டின் முக்கிய இனங்களை பிரதிநிதிக்கும் தகுதியுள்ளவர்கள் இடம்பெற வேண்டும் என நாங்கள் பரிந்துரை செய்கிறோம்.
இந்த மீளாய்வின் நோக்கமானது, ஒரு பரந்த கொள்கை மற்றும் முற்போக்கான அம்சங்கள் கொண்ட வரலாறு பாடத்திட்டங்களையும் பாடநூல்களையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான், அவற்றில் :-
1) குறிப்பிட்ட நாகரிகத்தையும் சமயத்தையுமே அதிகம் வலியுறுத்தாது, உலக வரலாற்றில் பல முக்கியமான நாகரிங்கங்களையும் நிகழ்வுகளையும் பற்றிய ஒரு விரிவான மற்றும் சமமான பார்வையை நம் மாணவர்களுக்கு ஏற்படுத்த முடியும்.
2) துல்லிதமான ஆய்வு செய்து வரலாற்றுச் சம்பவங்களின் ஆதாரங்களை பாராபட்சமின்றி பதிவு செய்ய வேண்டும்.
3) வரலாற்றைப் பின்ணனியாகக் கொண்ட நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபட்ட பல்லின மக்களின் பங்களிப்பினை நியாயமாக அங்கீகரிக்க வேண்டும்.
4) மாணாக்கர்களின் சிந்தனைகளில் குறிப்பிட்ட சமயத்தின் மீதோ அல்லது அரசியல் கொள்கையின் மீதோ பிடிப்பு ஏற்படுத்துவதற்கான பாதிப்பு அம்சங்கள் நீங்கப்பெற்ற, முற்றிலும் வரலாற்று உண்மைத் தகவல்களின் மீதும் அதனைச் சார்ந்த செயல்பாடுகளின் மீதும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

>பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி குறித்த ஆவணப்படம்

ஜனவரி 6, 2011

>

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4

போராட்டம் தொடரும்…


>காணொளி : பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடம் எங்கே?

ஆகஸ்ட் 23, 2010

>

நேற்று (ஆகசுட்டு 22, 2010) ஞாயிற்றுக்கிழமையன்று பினாங்கு இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியின் செயலகத்தில் பத்து கவான்வாழ் பொதுமக்கள் மற்றும் பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பயின்றுவரும் பிள்ளைகளின் பெற்றோர்களுடனான ஒரு கலந்துரையாடல் நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
கடந்த 8 ஆண்டுகளாக நீடித்துவரும் பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி நிலம் மற்றும் புதிய கட்டிடம் குறித்த பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக இண்ட்ராஃப் இயக்கம் பொதுமக்களுடன் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டது. அக்கலந்துரையாடலின் இறுதியில் சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டன. அந்நிகழ்வின் ஒரு பகுதியை காணொளி வடிவில் இங்கு இணைத்துள்ளேன். அடுத்தாண்டு சூன் மாதத்திற்குள் அப்பள்ளியின் புதிய கட்டிட நிர்மாணப்பணி தொடங்க வேண்டுமென இண்ட்ராஃப் எதிர்ப்பார்க்கிறது.

போராட்டம் தொடரும்…


>பினாங்கு பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர்களுடனான கலந்துரையாடல்

ஆகஸ்ட் 20, 2010

>

படத்தைச் சுட்டி பெரிதாக்கிப் படிக்கவும்.


அனைத்து மலேசியர்களுக்கும் பொதுவான தேர்வு முறை – இண்ட்ராஃப் கோரிக்கை

ஜூன் 16, 2010
பாகம் 1
பாகம் 2

போராட்டம் தொடரும்…


கல்வித்துறையில் எட்டி உதைக்கப்படும் இந்திய சமூகம்!

ஜூன் 12, 2010


சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தும் இந்திய மாணவர்களுக்கு எதிர்காலம் இல்லை!

மே 31, 2010

பினாங்குவாழ் எ.சு.பி.எம் / எ.சு.தி.பி.எம் முடித்த மற்றும் மெட்ரிகுலேசனில் பயிலும் மாணவ மாணவியரின் கவனத்திற்கு..
எ.சு.பி.எம் மற்றும் எசு.தி.பி.எம் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருந்தும், மெட்ரிகுலேசன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட மாணவர்களும் அரசு உயர்கல்விக்கூடங்களில் பயின்றும் அரசு உபகாரச் சம்பளம் நிராகரிக்கப்பட்ட மாணவர்களும் உடனடியாக பினாங்கு மனித உரிமைகள் கட்சியினை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கடந்த மே 29-ஆம் நாளன்று, மனித உரிமைகள் கட்சியின் தலைமையகத்தில் சிறப்பான தேர்ச்சி பெற்றும் மெட்ரிகுலேசன் மற்றும் அரசு உபகாரச் சம்பளம் கிடைக்கப்பெற்றிராத ஏழு இந்திய மாணவர்களை பேட்டி எடுத்து, அவர்களின் விண்ணப்பங்களை உடனடியாக அம்னோ அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமாறு மூன்று நாட்கள் கெடு விதித்திருந்தனர்.

இதேப்போன்றதொரு நடவடிக்கையினை நாடு தழுவிய அளவில், மனித உரிமைகள் கட்சியினர் தற்போது மேற்கொண்டு வருகின்றனர். பினாங்கு மாநிலத்தில் இனவாதக் கொள்கைகளினால் பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்கள் தங்களின் பெற்றோரோடு துணிந்து உரிமையைக் கேட்க முன்வர வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம்.
நாடு தழுவிய நிலையில் பாதிக்கப்பட்ட அனைத்து சிறப்புத் தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களும் ஒன்று சேர்ந்தால், இந்த இனவாத அம்னோ அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு ஆவண செய்ய முடியும்.

காலங்காலமாக தகுதிபெற்ற நம் ஏழை இந்திய மாணவர்கள் தேர்வு செய்யும் கல்வித் துறைகளை தட்டிக்கழித்து நம் சமூகத்தை நடைப்பிணமாக்கிக் கொண்டு வரும் போக்கை நாம் வன்மையாக கண்டிப்பதோடு மட்டுமல்லாது, இனியும் இக்கொடுமையான ஓரங்கட்டுதலைப் பார்த்து வாய்மூடி கிடக்காது துணிந்து உரிமையைக் கேட்க முன்வருமாறு பெற்றோர்களையும் மாணவர்களையும் அழைக்கிறோம்.
பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாகத் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் :-
திரு.கணேசன் : 012-4803284
திரு.கலைச்செல்வம் : 012-5637614
திரு. கனகசுந்தரம் : 017-4155449
பிற மாநிலத்தைச் சார்ந்த மாணவர்களும் எங்களோடு தொடர்பு கொள்ளலாம். நீங்கள் வசிக்கும் மாநிலத்தின் பொறுப்பாளர்கள் உங்களைத் தொடர்புகொள்ள ஆவண செய்வோம்.
போராட்டம் தொடரும்…

தமிழ்மொழி வகுப்பு இல்லை. ஆனால் அராபிய மொழி வகுப்பு உண்டு. உதயகுமார் வருத்தம்

பெப்ரவரி 23, 2010



மூலம் : மனித உரிமைகள் கட்சி


Follow

Get every new post delivered to your Inbox.