அரியணை ஏறுகிறது தமிழ் மொழி..

மார்ச் 30, 2008

தமிழ் வழியில் மருத்துவப் படிப்பு கொண்டுவர நடவடிக்கை

சென்னை, மார்ச் 30- தமிழ் வழியில் மருத்துவப் படிப்பு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் கூறினார்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் ‘குறிஞ்சி முத்தமிழ் மன்றம்’ என்ற அமைப்பைப் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள். இந்த மன்றத்தின் ஆண்டு விழா சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் நேற்று நடைப்பெற்றது. இதில் சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்துக்கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-

பொதுவாகவே மருத்துவர்களுக்கும் தமிழ் மொழிக்கும் இடைவெளி அதிகம். இப்படிப்பட்ட நிலையில், அறிவியல் தமிழை வளர்க்கும் நோக்கில் தனி அமைப்பை ஏற்படுத்தி அதைத் தொடர்ந்து நடத்தி வருவது பாராட்டுக்குரியது. முதல்வர் கருணாநிதி ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழ் அரியணை ஏறும் காலம் வெகு தொலைவில் இல்லை. அந்த வகையில் மருத்துவத் துறையிலும் தமிழ் அரியணை ஏறும். மருத்துவத்துறையில் தமிழ்வழியில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். நான் சுகாதாரத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற நேரத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். முதல்வர் வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டனர். அதற்காக மாணவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்களிடம் கொடுத்த வாக்குறுதி கண்டிப்பாக காப்பாற்றப்படும். ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படிக்கிற மாணவர்கள் சென்னைக்கு அருகே அலமாதி என்ற கிராமத்தை தத்தெடுத்து மருத்துவச் சேவை செய்து வருகின்றனர். ஒரு கிராமத்தை மட்டுமல்ல, ஏராளமான கிராமங்களை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தத்தெடுத்து சேவையாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

மாணவர்கள் பொதுவாழ்வில் ஈடுபட வேண்டும். ஏதோ கல்லூரிக்கு போனோம் படித்தோம், சினிமாவுக்குப் போனோம் என்று நின்றுவிடாமல் பொதுவாழ்வுக்காகப் போராட முன்வர வேண்டும். இவ்வாறு அமைச்சர் பன்னீர் செல்வம் கூறினார்.

தகவல் : ஞாயிறு நண்பன் (நன்றி)

தசை மறுத்துப் போகும் நோய் / Muscular Dystrophy

December 4, 2007

உலகத்தில் இன்று பல நோய்களுக்கு மும்முரமாக பல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும், Muscular dystrophy எனும் நோய்க்கு உட்பட்டவர்கள் மட்டும் இன்னும் கண்டுபிடிப்புகளின் நன்மைகளைப் பெறாதவர்களாக இருக்கிறார்கள். காரணம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள நோயானது எளிதில் குணமாகக் கூடிய நோயல்ல. குறிப்பாகச் சொல்லப்போனால், இந்நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை எனக் கூறலாம். உடம்பில் உள்ள தசைகள் செயலற்றுப்போகும் இந்நோயானது மனிதனுக்கு ஆயுளைக் முன்கூட்டியே குறித்து வைத்திருக்கும். படிப்படியாக ஒரு மனிதனை மரண வாயிலுக்கு இட்டுச் செல்லும் தன்மையுடையது இந்நோய்.

ஆனால், தற்போதைய நிலவரத்தின்படி பிட்ஸ்பெர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையில் இந்நோய் தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. மனிதனின் உயிரணுக்களில் உள்ள GENE எனப்படும் ஒருவகையான மரபணுக் கூறு நல்லப்படியாக இருந்தாலே இந்த நோயைக்கட்டுப்படுத்த முடியும் என ஒரு நியதி இருக்க, வேரொருவரின் உடம்பிலிருந்து நல்ல GENE மரபணுக்களை எடுத்து நோய் கண்டிருப்பவரின் உடலில் செலுத்த இந்நோய் தன் வீரியத்தை இழக்கின்றது என அண்மையில் கண்டுபிடித்துள்ளார்கள்.

இருப்பினும் இந்த Muscular Dystrophy நோய் கண்டிருப்பவரின் செல்களில் அனைத்திலும் இந்த GENEஐ தனித்தனியாக செலுத்துவது என்பது முடியாதக் காரியம். எனவே இரத்தம் மூலமாக ஒரு எலியின் உடலில் GENE-களை செலுத்தி ஆய்வு செய்தபோது இந்நோய் மிக விரைவில் தன் வீரியத்தை இழந்துள்ளது தெரிய வருகிறது. பின்பு, இதேச் சோதனை Muscular Dystrophy நோய்க் கண்ட ஆன்ட்ரூ எனும் சிறுவனின் மீது நடத்தப்பட்ட பின் இன்நோயானது மெதுவாக தன் வீரியத்தை இழந்து வருகிறது என மருத்துவர்கள் பெருமைபடக் கூறுகின்றனர். இந்த ஆராய்ச்சியானது பெரிய அளவில் வெற்றிப் பெற்றுள்ளது மருத்துவத்துறையின் இன்னொரு சாதனை எனக் கூறலாம்.

Muscular Dystrophy நோய்த் தொடர்பான படக்காட்சி

>தசை மறுத்துப் போகும் நோய் / Muscular Dystrophy

December 4, 2007

>உலகத்தில் இன்று பல நோய்களுக்கு மும்முரமாக பல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும், Muscular dystrophy எனும் நோய்க்கு உட்பட்டவர்கள் மட்டும் இன்னும் கண்டுபிடிப்புகளின் நன்மைகளைப் பெறாதவர்களாக இருக்கிறார்கள். காரணம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள நோயானது எளிதில் குணமாகக் கூடிய நோயல்ல. குறிப்பாகச் சொல்லப்போனால், இந்நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை எனக் கூறலாம். உடம்பில் உள்ள தசைகள் செயலற்றுப்போகும் இந்நோயானது மனிதனுக்கு ஆயுளைக் முன்கூட்டியே குறித்து வைத்திருக்கும். படிப்படியாக ஒரு மனிதனை மரண வாயிலுக்கு இட்டுச் செல்லும் தன்மையுடையது இந்நோய்.

ஆனால், தற்போதைய நிலவரத்தின்படி பிட்ஸ்பெர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையில் இந்நோய் தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. மனிதனின் உயிரணுக்களில் உள்ள GENE எனப்படும் ஒருவகையான மரபணுக் கூறு நல்லப்படியாக இருந்தாலே இந்த நோயைக்கட்டுப்படுத்த முடியும் என ஒரு நியதி இருக்க, வேரொருவரின் உடம்பிலிருந்து நல்ல GENE மரபணுக்களை எடுத்து நோய் கண்டிருப்பவரின் உடலில் செலுத்த இந்நோய் தன் வீரியத்தை இழக்கின்றது என அண்மையில் கண்டுபிடித்துள்ளார்கள்.

இருப்பினும் இந்த Muscular Dystrophy நோய் கண்டிருப்பவரின் செல்களில் அனைத்திலும் இந்த GENEஐ தனித்தனியாக செலுத்துவது என்பது முடியாதக் காரியம். எனவே இரத்தம் மூலமாக ஒரு எலியின் உடலில் GENE-களை செலுத்தி ஆய்வு செய்தபோது இந்நோய் மிக விரைவில் தன் வீரியத்தை இழந்துள்ளது தெரிய வருகிறது. பின்பு, இதேச் சோதனை Muscular Dystrophy நோய்க் கண்ட ஆன்ட்ரூ எனும் சிறுவனின் மீது நடத்தப்பட்ட பின் இன்நோயானது மெதுவாக தன் வீரியத்தை இழந்து வருகிறது என மருத்துவர்கள் பெருமைபடக் கூறுகின்றனர். இந்த ஆராய்ச்சியானது பெரிய அளவில் வெற்றிப் பெற்றுள்ளது மருத்துவத்துறையின் இன்னொரு சாதனை எனக் கூறலாம்.

Muscular Dystrophy நோய்த் தொடர்பான படக்காட்சி

Follow

Get every new post delivered to your Inbox.