மலேசிய இந்து ஆலயங்கள் உடைப்பு!!

செப்ரெம்பர் 30, 2007

அன்பு நெஞ்சங்களே, அண்மைய சில காலமாக மலேசியாவில் வாழும் தமிழர்களுக்கு நேர்ந்த சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.மலேசிய நாட்டின் 5 முக்கிய கோட்பாடுகளின் முதன்மைக் கோட்பாடான “இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்” எனும் கூற்றுக்கு முரண்பாடான ஒரு சம்பவத்தை கீழே உள்ள படக்காட்சியில் காணுங்கள்.இதற்கான விளக்கத்தினை அடுத்தமுறை உங்களுக்கு அறியப்படுத்துகிறேன்.அதுவரை இவை உங்கள் சிந்தனைக்கு……

தகவல் : www.malaysiakini.tv

Advertisements

மலேசியத் தமிழர்கள்

செப்ரெம்பர் 30, 2007

மலேசியத் தமிழர்களின் சரித்திரம் பல சோகக் கதைகளைக் கொண்டது. இன்றளவில் அச்சரித்திரம் பலரால் மறக்கப்பட்டு விட்டாலும், அதனை மீண்டும் புரட்டிப் பார்க்க சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. அதற்குக் காரணம் சில காலங்களாகவே மலேசியத் தமிழர்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் புதுவகை இன்னல்களும் நேரடி, மறைமுக தாக்கல்களுமேயாகும்.சோகமும் இன்னலும் தாக்கும்போதுதான் மனிதனுக்கு கடவுள் என்பவர் ஒருவர் இருப்பதாகவே நினைவுக்கு வரும். அதுவரையில் மனிதன் தன்னை மறந்து ஆடிக்கொண்டிருப்பான். ஆனால் “கண் கெட்டப்பின் சூரிய நமஸ்காரம் செய்யமுடியுமா?

ஆனால், மலேசியத் தமிழர்களுக்கு இன்னும் கண் முற்றிலும் பாழாகி விடவில்லை, இருப்பினும் மெல்ல மெல்லப் பாழாகும் நிலைக்கு இட்டுச் செல்ல சந்தர்ப்ப சூழ்நிலைகள் நெருங்குகின்றன என்பதனை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ளத்தான் வேண்டும்.
நல்ல வேளை “சேற்றில் முளைத்த செந்தாமரைகள்” என பலர் நம் மலேசியத் தமிழர்களின் தன்மானத்தை நிலைநிறுத்த போராடிக்கொண்டு இருக்கின்றனர். இவர்களுக்கு உதவிக்கரமாக செயல்பட நம் இருகரங்கள் ஏன் செயல்படாமல் மறுத்துப்போய் இருக்கின்றன என்று ஒவ்வொரு மலேசியத்தமிழர்களும் சிந்திக்க வேண்டும்!! செயல்பட வேண்டும்!!
மலையக தமிழர்களின் போராட்டங்களையும் சவால்களையும் வரும் காலங்களில் வெளியிடவுள்ளேன்.அன்பர்கள், இது தொடர்பாக தகவல்கள் பலவற்றை இவ்வலையகத்தில் பரிமாறிக் கொள்ளலாம்.

நன்றி.

>திருக்குறள் உங்கள் விரல் நுனியில் !

செப்ரெம்பர் 30, 2007

>இரண்டே வரிகளில் நறுக்கென்று தத்துவங்களை வாரி வழங்கி தமிழர்களின் வாழ்வியல் உன்னதங்களை எடுத்துரைத்த மகானாகிய வள்ளுவரின் திருக்குறள் இதோ உங்கள் விரல் நுனிகளை அலங்கரிக்க வந்துள்ளது.இம்மென்பொருளை பதிவிறக்கம் செய்து தேவைப்படும்பொழுது கணினித் திரையில் திருக்குறளை உலாவ விடலாம்.இதோ, பதிவிறக்கம் செய்ய இங்கே சுட்டுங்கள் : http://srimatam.ning.com/profiles/blog/show?id=826742%3ABlogPost%3A922

திருக்குறள் உங்கள் விரல் நுனியில் !

செப்ரெம்பர் 30, 2007

இரண்டே வரிகளில் நறுக்கென்று தத்துவங்களை வாரி வழங்கி தமிழர்களின் வாழ்வியல் உன்னதங்களை எடுத்துரைத்த மகானாகிய வள்ளுவரின் திருக்குறள் இதோ உங்கள் விரல் நுனிகளை அலங்கரிக்க வந்துள்ளது.இம்மென்பொருளை பதிவிறக்கம் செய்து தேவைப்படும்பொழுது கணினித் திரையில் திருக்குறளை உலாவ விடலாம்.இதோ, பதிவிறக்கம் செய்ய இங்கே சுட்டுங்கள் : http://srimatam.ning.com/profiles/blog/show?id=826742%3ABlogPost%3A922

>தமிழ் ஓலைச்சுவடியை புரட்ட வாரீர்!!!

செப்ரெம்பர் 29, 2007

>வணக்கம் தமிழ் நெஞ்சங்களே.

என் அகப்பக்கத்திற்கு வருகை புரிந்தமைக்கு எனது நன்றிகள்.
இவ்வலையகத்தில் தமிழர்களின் பல அம்சங்களைப் பற்றி விரிவாக இணைக்கவுள்ளேன்.இதற்கு ஒத்துழைப்பு வழங்க தமிழர்கள் அனைவரும் முன்வர வேண்டும்.

நீங்கள் இவ்வகப்பக்கத்திற்கு ஏதாவது கருத்துக் கூறவோ , அல்லது பயனான தகவல்களை இணைக்கவோ எண்ணினால் உடனடியாக அதனைச் செய்யவும்.
உங்கள் கருத்துக்களை நீங்கள் தமிழிலேயே தட்டி அனுப்பலாம்.
இதற்காக தமிழ் தட்டச்சு செயலியாக பயன்படும் மென்பொருளை இந்த அகப்பக்கத்திலிருந்து பயன்படுத்திக் கொள்ளலாம் : தமிழ் தட்டச்சு