தமிழ் எழுத்துலகின் மாபெரும் இழப்பு..!

பிப்ரவரி 29, 2008

பிரபல எழுத்தாளர் சுஜாதா நேற்றிரவு சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73.
எழுத்தாளர் சுஜாதா சென்னை மைலாப்பூர் நாகேஸ்வரா பூங்கா அருகில் ஜட்ஜ் சுந்தரம் தெருவில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு `பைபாஸ்’அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்றிரவு 10.30 மணியளவில் அவர் மரணம் அடைந்தார்.

சுஜாதாவின் இரு மகன்களும் அமெரிக்காவில் உள்ளனர். சுஜாதாவின் மரணம் பற்றி அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்ததும் வெள்ளிக்கிழமை சுஜாதாவின் இறுதிச்சடங்கு நடைபெறும். அதுவரை சுஜாதாவின் உடல் அப்பல்லோ மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருக்கும்.

எழுத்தாளர் சுஜாதா, 1935-ம் ஆண்டு மே மாதம் 3-ந்தேதி பிறந்தார். தந்தை; சீனிவாச ராகவன், தாயார் கண்ணம்மா. தந்தை தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றியவர். சுஜாதாவின் இயற்பெயர் ரெங்கராஜன்.

சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்த சுஜாதா சிறுவயதில், ஸ்ரீரங்கத்தில் பாட்டியின் வீட்டில் வசித்தார். அங்குள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார். பிறகு திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.எஸ்.சி. இயற்பியல் படிப்பை முடித்தார். இங்கு படித்தபோது, இவரது நண்பராக திகழ்ந்தவர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆவார். பிறகு சென்னை எம்.ஐ.டி.யில் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படிப்பை முடித்தார்.

27 வயதில் அவருக்கு திருமணம் நடந்தது. மனைவியின் பெயர் சுஜாதா. பின்னாளில் மனைவியின் பெயரில் கதைகளை எழுதியதால் மனைவியின் பெயரே அவருக்கு நிலைத்து விட்டது.

டெல்லி அகில இந்திய வானொலியில் பணிபுரிந்த அவர் 1970-ல் பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு பணிபுரிந்தபோது, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவின் பொது மேலாளராகவும் பதவி வகித்தார். அவரது தலைமையிலான குழுதான் தற்போது தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பணியில் இருந்த காலத்திலேயே பத்திரிகைகளுக்கு எழுத ஆரம்பித்தார்.

1993-ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றது முதல் சென்னையில் வசித்து வந்தார். சுஜாதாவுக்கு, ரங்கபிரசாத், கேஷவ பிரசாத் என்னும் 2 மகன்கள் உண்டு. மகன்கள் இருவரும் அமெரிக்காவில் வசிக்கிறார்கள்.

சுஜாதா 100-க்கும் மேற்பட்ட நாவல்களும், 200-க்கும் மேலான சிறுகதைகளும் எழுதி இருக்கிறார். 15 நாடகங்களும் எழுதியுள்ளார். ஏராளமான விஞ்ஞான ஆய்வுக் கட்டுரைகளையும், கேள்வி-பதில்களையும் எழுதி இருக்கிறார்.

டைரக்டர் ஷங்கரின் இந்தியன், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி படங்களில்
இணைந்தும் சுஜாதா பணியாற்றி இருக்கிறார். இதேபோல் இயக்குனர் மணிரத்னத்துடன்
இணைந்து இருவர், ஆயுத எழுத்து, கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களிலும் பணியாற்றி இருக்கிறார்.

சுஜாதாவுக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் கிடைத்துள்ளது.

தமிழ் இலக்கியம் ஒரு சிகரம் என்றால், சுஜாதா அவர்கள் அச்சிகரத்தை அடையும் ஏணிப்படிகளில் ஒருவராகக் கருத்தப்பட்டு வந்தவர். அப்படியில் கால் பதிக்காது சிகரத்தின் உயரத்தை அளக்க முடியாது. அந்த அளவிற்கு எழுத்தாளர் சுஜாதா அவர்கள் தமிழ் இலக்கியத்திற்கு பெருந்தொண்டு ஆற்றி வந்தவர்.

அனைவரும், அன்னாரின் ஆத்மா சாந்தியடைந்து மறுபிறப்பு என இருப்பின் மீண்டும் தமிழனாய் பிறந்து, தமிழுக்கு தொண்டாற்றும் எழுத்தாளனாக உருவாக வேண்டும் என இறைவனை பிரார்த்தித்துக் கொள்வோமாக…

Advertisements

>மர்ம இசைத்தட்டு…

பிப்ரவரி 29, 2008

>அண்மைய காலமாக கெடா மற்றும் பினாங்கு மாநிலங்களில் மர்ம இசைத்தட்டு ஒன்று இந்திய மக்களின் மத்தியில் தவழ்ந்துக் கொண்டிருந்தது. இந்த இசைவட்டை சோஸியலிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள் உருவாக்கியுள்ளதாக நம்பப்படுகிறது. இவர்கள் தமிழ் சினிமா பாடல்களின் இசையில், வரிகளை மாற்றிப் பாடியுள்ளனர். ‘சென்னை 600018’, ‘சித்திரம் பேசுதடி’, ‘திருவிளையாடல் ஆரம்பம்’ போன்ற படங்களின் பாடல்கள் இந்த இசைவட்டில் இடம்பெற்றிருக்கின்றன. இப்பாடல்களின் வரிகள், முதலாளி வர்கத்தின் கொடுமையையும், தொழிலாளிகள் படும் துன்பத்தினையும் சித்தரிப்பதாக உள்ளன. ‘மாற்றம் வேண்டும்’ என இப்பாடல்கள் நமக்குக் கூறும் அறிவுரை.

http://hindrafsupporters.ning.com/xn_resources/widgets/music/swf/xspf_player.swf

மர்ம இசைத்தட்டு…

பிப்ரவரி 29, 2008

அண்மைய காலமாக கெடா மற்றும் பினாங்கு மாநிலங்களில் மர்ம இசைத்தட்டு ஒன்று இந்திய மக்களின் மத்தியில் தவழ்ந்துக் கொண்டிருந்தது. இந்த இசைவட்டை சோஸியலிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள் உருவாக்கியுள்ளதாக நம்பப்படுகிறது. இவர்கள் தமிழ் சினிமா பாடல்களின் இசையில், வரிகளை மாற்றிப் பாடியுள்ளனர். ‘சென்னை 600018’, ‘சித்திரம் பேசுதடி’, ‘திருவிளையாடல் ஆரம்பம்’ போன்ற படங்களின் பாடல்கள் இந்த இசைவட்டில் இடம்பெற்றிருக்கின்றன. இப்பாடல்களின் வரிகள், முதலாளி வர்கத்தின் கொடுமையையும், தொழிலாளிகள் படும் துன்பத்தினையும் சித்தரிப்பதாக உள்ளன. ‘மாற்றம் வேண்டும்’ என இப்பாடல்கள் நமக்குக் கூறும் அறிவுரை.

சொல்ல மறந்தக் கதை…

பிப்ரவரி 28, 2008

25 நவம்பர் 2007, மலேசிய இந்தியர்கள் நிமிர்ந்து எழுந்த நாளது. இந்திய சமுதாயம் மறுமலர்ச்சியை நோக்கி முதல் காலடி எடுத்து வைத்த நிகழ்வு 25 நவம்பரில் நடைப்பெற்ற மாபெரும் எழுச்சிப் பேரணியாகும். ஆனால், அதே தினத்தில் பேரணி நடப்பதற்கு சில மணி நேரங்களே எஞ்சியிருந்த வேளையில் பத்துமலை வளாகத்தில் ஒரு கருப்புச் சரித்திரம் எழுதப்பட்டது..!

அமைதியாக கூடியிருந்தவர்களை உசுப்பிவிட்டு வேடிக்கை பார்த்ததுமட்டுமல்லாமல், பத்துமலை வளாக இரும்புக் கதவை இழுத்து மூடிவிட்டு உள்ளிருந்தவர்களை அமில நீர், கண்ணீர்ப் புகை குண்டுகளைக் கொண்டு தாக்கியக் கொடூரம் மன்னிக்க முடியாதக் குற்றமாகும்.

ஆனால், குற்றவாளிகளாக கருதப்பட வேண்டியவர்களை விட்டு விட்டு, அடிவாங்கிய பொதுமக்களை, கொலைக்குற்றம் சுமத்தி ‘வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சியது’ அம்னோ அரசாங்கம்.

வாருங்கள் பத்துமலைக்கு சென்று திரு.கலைவாணரைச் சந்திப்போம்…

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

பகுதி 5

பகுதி 6,7 படச்சுருள்களில் பொது மக்கள் தாக்கப்பட்டதன் விளைவாக ஒரு சில உணர்ச்சிவசப்பட்ட இளைஞர்கள் தகாத வார்த்தைகளை உபயோகித்திருப்பர். வாசகர்கள் கவனம் தேவை.

பகுதி 6

பகுதி 7

நம்மிடமும் சில பலவீனங்கள் உள்ளதென்பதை எடுத்துக்காட்டவே இப்படங்களின் சிலக் காட்சிகள் தணிக்கை செய்யப்படாமல் வெளியிடப்பட்டுள்ளன. இனி அனைத்து நிகழ்வுகளும் முறையாக திட்டமிடப்பட்டு, அறிவுப்பூர்வமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே நமது குறிக்கோள். உணர்ச்சிவசப்படும் இளைஞர்களே, இனி நிதானமாகச் செயல்படுங்கள். காலம் இன்னும் கடந்துவிடவில்லை. வெற்றி நமக்கே!

போராட்டம் தொடரும்…

மலேசிய அரசியல் கட்சிகளின் தேர்தல் கொள்கை அறிக்கைகள்

பிப்ரவரி 27, 2008

வருகின்ற 12-ஆவது நாட்டின் பொதுத் தேர்தலை முன்னிட்டு, நாட்டின் பல முன்னனிக் கட்சிகள் தேர்தல் கொள்கை அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. நாட்டின் முன்னனிக் கட்சிகளான பாரிசான் நேசனல், ஜனநாயக செயல் கட்சி மற்றும் மக்கள் நீதிக் கட்சி போன்றவை தங்கள் கட்சிகளின் கொள்கை அறிக்கைகளை தமிழில் வெளியிட்டுள்ளனர்.
(பாஸ் கட்சியைத் தவிர)

ஒவ்வொரு கட்சியின் தேர்தல் கொள்கை அறிக்கையைப் படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பைச் சுட்டுங்கள்.

பாரிசான் நேசனல்

ஜ.செ.க

மக்கள் நீதிக் கட்சி (கெஅடிலான்)

மக்கள் நீதிக் கட்சி (கெஅடிலான்)ஹாராபான் மலேசியா எனும் அகப்பக்கத்தை நான்கு மொழிகளில் வெளியிட்டுள்ளது. அகப்பக்கத்தைப் பார்வையிட இணைய இணைப்பைச் சுட்டுங்கள் :
ஹாராபான் மலேசியா

உங்கள் ஓட்டுரிமையை முறையாக பயன்படுத்தி சரியான கட்சிக்கு ஓட்டுகளைப் போடுங்கள்..