தமிழன் ஊனமாக்கப்பட்டான்…!!

மே 22, 2008

அதிகார முறைக்கேடுகளுக்கு இச்சம்பவம் ஓர் அத்தாட்சி..! சனநாயக நாட்டில் ஓர் தமிழன் அதிகார வர்கத்தினரால் அடித்து துன்புறுத்தப்பட்டு இறுதியில் உடல் ஊனமாக்கப்பட்டுள்ளான். சஞ்சீவு குமார் என்ற தமிழனை கடந்த 28 சூலை 2007-இல் வெளிநாட்டிற்கான உளவுத்துறை அதிகாரி என குற்றம் சுமத்தி காவல் துறையினர் அவரை 55 நாட்கள் தடுத்து வைத்திருந்தனர். தடுத்து வைக்கப்பட்டிருந்த 55 நாட்களில் விசாரணை என்றப் பெயரில் சிறைச்சாலை அதிகாரிகள் சஞ்சீவு குமாரை ஈவு இரக்கமின்றி கொடுமைப்படுத்தியதாக, சஞ்சீவு குமாரின் மனைவி சர்மிளா உதயகுமார் கடந்த 20 மே அன்று டாங்கு வாங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சுமார் இரண்டு மாதங்கள் சிறையில் வைக்கப்பட்டப்பின், 22 செப்டம்பர் 2007-இல் சஞ்சீவு குமாரை மலேசிய மக்கள் அதிகம் வெறுக்கும் இடமான கமுந்திங்கு தடுப்புக் காவல் முகாமிற்குக் கொண்டு சென்றனர். மனித வர்க்கத்திற்கே தலைக்குனிவை ஏற்படுத்தும் வகையில் சஞ்சீவு குமார் ஆங்கே சிறைச்சாலை அதிகாரிகளால் சித்திரவதை செய்யப்பட்டதாக, ஒருக் காவலாளியாகப் பணிப்புரியும் சர்மிளா தமது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

பலமுறை காலணி அணிந்த கால்களால் எலும்புப் பகுதிகளில் உதைக்கப்பட்டும், தலைப்பகுதியில் தாக்கப்பட்டும், மரக்கட்டைகளால் இடதுகாலும், இடது கையும் அடிக்கடி சராமரியாகத் தாக்கப்பட்டும், தண்ணீர் புட்டிகளால் அடிக்கப்பட்டும் இன்று சஞ்சீவு குமார் உருக்குலைந்து போயிருப்பதாக திருமதி சர்மிளா அவர்கள் மனவேதனையோடு கூறியுள்ளார். கடினமான பொருட்காளால் தனது கணவரின் மர்ம உறுப்பு தாக்கப்பட்டதுடன், அவருடையச் சிறுநீரை பருகக் கோரி சிறைச்சாலை அதிகாரிகள் வற்புறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 11 ஏப்ரல் 2008-இல் சஞ்சீவு குமார் இடது கால், கை வலியால் துடித்ததனால் தைப்பிங்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், ஆங்கே முறையான சிகிச்சைகள் வழங்கப்படாமல் ஒரு வாரத்திற்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார் எனவும் திருமதி சர்மிளா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சஞ்சீவு குமார் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவதாகவும், இடது கை,கால் முற்றிலும் நிரந்தரமாகச் செயலிழந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாளுக்கு நாள் சஞ்சீவு குமார் தனது எடையை இழந்து வருவதாகவும், தினமும் வலுவிழந்து வலியோடு காணப்படுவதாகவும் சர்மிளா தனது புகாரில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

திருமதி சர்மிளாவோடு உடன் புகார் செய்யச் சென்ற “இ.சாவை துடைத்தொழிப்போம்” இயக்கத்தின் தலைவர் திரு. சாயிட்டு இபுராகிமை நிருபர்கள் அணுகி கேட்டதற்கு, திரு.சஞ்சீவு குமாரை வெளிநாட்டிற்காக வேவு பார்த்ததாகச் சந்தேகித்து காவல் துறையினர் கைது செய்ததாகக் குறிப்பிட்டார்.

குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கே சட்டத்தில் தமது உரிமைகளைக் காத்துக் கொள்வதற்கு உரிமை இருக்கும் பட்சத்தில், சந்தேகத்தின் பெயரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நபர்களைக் கொடுமைப்படுத்த சட்டத்தில் இடமே இல்லை. ஆனால் நடப்பது என்ன…?

இப்படிப்பட்ட முறைகேடுகளுக்கு மத்தியில்தான் உங்களுடைய வருங்கால சந்ததியினர் வாழப் போகின்றனரா? இன்று கவலையறியாது உங்கள் கரங்களைப் பற்றிக் கொண்டு உங்களுடன் உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளின் முகத்தை ஒரு முறைப் பாருங்கள். இக்கொடுமை இன்று தட்டிக் கேட்கப்படாவிட்டால், அவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என சிந்தித்துப் பாருங்கள்..! சஞ்சீவு குமாருக்கு நேர்ந்த இந்த கதியானது வருங்காலங்களில் யாருக்கும் நடக்காமல் இருப்பதற்கு நாம்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போராட்டம் தொடரும்…

Advertisements

இன்றைய பதிவிறக்கம்…

மே 21, 2008

“குழலினிது யாழினிது என்பர் மழலைச் சொல் கேளாதவர்” என்பது மழலைகளுக்குறியச் சிறப்பு. மழலை மொழிக்கு எவ்வளவு இனிமை உளதோ, அதேப்போன்று அமுத மொழியாம் தமிழ் மொழிக்கும் ஒரு தனிச் சிறப்பு உளது. தோண்டத் தோண்ட அமுத சுரபியாய், ஊற்றெடுக்கும் மணற்கேணியாய் விளங்கும் இனிய தமிழில் மழலைகளுக்கு பெயர் சூட்டினால் அது தமிழுக்கு நாம் ஆற்றும் மிகப் பெரிய சிறப்பு அல்லவோ.. தமிழர்களாய்ப் பிறந்த நாம் இன்று இனிய தமிழில் பெயர் வைப்பதைத் தவிர்த்து வருவது மிகவும் வருந்தத்தக்கச் செயலாகும்.

இனி வரும் காலங்களில், உங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டித்தான் பாருங்களேன். உங்களைப் பார்த்து மற்றவர்கள் பின்பற்ற மாட்டார்களா என்ன? தமிழில் பெயரிடுவதை ஒரு புரட்சியாகச் செய்வோமே..

உங்கள் செல்லக் குழந்தைகளுக்கு இனிய தமிழில் பெயர் சூட்ட வேண்டுமா? கீழ்கண்ட மென்பொருளை பதிவிறக்கம் செய்து தமிழ்ப் பெயர்களை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

“குழந்தைகளின் செல்லப் பெயர்கள்”

“குழலினிது யாழினிது என்பர் மழலைச் சொல் கேளாதவர்” என்பது மழலைகளுக்குறியச் சிறப்பு. மழலை மொழிக்கு எவ்வளவு இனிமை உளதோ, அதேப்போன்று அமுத மொழியாம் தமிழ் மொழிக்கும் ஒரு தனிச் சிறப்பு உளது. தோண்டத் தோண்ட அமுத சுரபியாய் ஊற்றெடுக்கும் மணற்கேணியாய் விளங்கும் இனிய தமிழில் மழலைகளுக்கு பெயர் சூட்டினால் அது தமிழுக்கு நாம் ஆற்றும் மிகப் பெரிய சிறப்பு அல்லவோ.. தமிழர்களாய்ப் பிறந்த நாம் இன்று இனிய தமிழில் பெயர் வைப்பதைத் தவிர்த்து வருவது மிகவும் வருந்தத்தக்கச் செயலாகும்.

இனி வரும் காலங்களில், உங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டித்தான் பாருங்களேன். உங்களைப் பார்த்து மற்றவர்கள் பின்பற்ற மாட்டார்களா என்ன? தமிழில் பெயரிடுவதை ஒரு புரட்சியாகச் செய்வோமே..

உங்கள் செல்லக் குழந்தைகளுக்கு இனிய தமிழில் பெயர் சூட்ட வேண்டுமா? கீழ்கண்ட மென்பொருளை பதிவிறக்கம் செய்து தமிழ்ப் பெயர்களை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

“குழந்தைகளின் செல்லப் பெயர்கள்”

லீ குவான் யூவின் கீழ் ஒரு தேசம்..

மே 20, 2008

தென்கிழக்காசிய நாடுகளிலேயே மிகவும் வளர்ச்சி அடைந்த நாடு எனக் கருதப்படுவது சிங்கப்பூர் எனும் குட்டித் தீவுதான். 1959 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தன்னாட்சி பெற்று, 1963 ஆம் ஆண்டில் மலேசியாவுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றது. 1965 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து முழு சுதந்திரம் பெற்று குடியரசாக உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் உலகிலேயே செல்வம் நிறைந்த நாடுகளில் ஒன்றாக மாறியது.

இத்தகு வளர்ச்சிகளை அந்நாடு பெற்றிருப்பினும், குடிமக்களின் கருத்து சுதந்திரம் பல ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருவதை யாராலும் மறுக்க முடியாது. கருத்துச் சுதந்திரத்திற்காக போராடுபவர்களை உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் பேரில் கைது செய்வது நம் நாட்டில் வழக்கமாகிவிட்டது என்றாலும், சிங்கப்பூரும் மலேசியாவிற்கு சளைத்தது அல்ல என கடந்த காலங்களில் அது நிரூபித்து வந்துள்ளது. அந்நாட்டிலும் இ.சா சட்டம் இன்றளவிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு மக்களின் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்டு வருகிறது.

லீ குவான் யூவின் ஆட்சி காலத்தில் திட்டமிட்டு மக்களின் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கிய நிரூபணங்கள் ஓர் ஆவணப்படமாகத் தயாரிக்கப்பட்டு வெளிவந்துள்ளது. இதோ அதன் படச்சுருள் :-