ஓரினப்புணர்ச்சி ! அனுவார் கைது செய்யப்படலாம் !


தன்னை ஓரினப்புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாகக் கூறி, 23 வயது ஆடவர் ஒருவர் நேற்று மாலை 6 மணியளவில் திராவர்சு சாலை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். கடந்த பத்தாண்டுகளில் இரண்டாவது முறையாக இத்தகைய புகார் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

கோலாலம்பூர் துணைத் தலைமை காவல்த்துறை அதிகாரி முகமது சப்து ஓஸ்மானை தொடர்புக் கொண்டு கேட்டப் பொழுது, அனுவார் மீது புகார் செய்யப்பட்டது உண்மை எனக் கூறினார்.

இதற்கிடையில், அனுவார் இபுராகிம் நேற்றிரவு சில கட்சியின் தலைவர்களுடன் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். அனுவாரின் பிரத்தியேக உதவியாளரான சைஃபுல் பகாரியை மதியம் காவல் துறையினர் அழைத்துச் சென்று, அவரை அனுவார் ஓரினப்புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாக ஒப்புக் கொண்டு ஒரு புகாரை அளிக்குமாறு காவல் துறையினர் வற்புறுத்தியதாக இரவு 11.15 மணியளவில் கிடைக்கப்பெற்ற மக்கள் நீதிக் கட்சியின் குறுந்தகவல் அறிவித்தது.

இப்புகாரைத் தொடர்ந்து இன்று அனுவார் எந்நேரமும் காவல்த் துறையினரால் கைது செய்யப்படலாம் எனத் தெரிய வருகிறது.

இவ்விடயம் தொடர்பாக இன்று அனுவார் இபுராகிம் நிருபர் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து தன்நிலை விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஷா அலாம் குவாலிட்டி தங்கும் விடுதியைச் சுற்று மக்கள் நீதிக் கட்சியின் இளைஞர் பணிப்படையினர் சுமார் 1000 பேர்கள் 22 தொகுதிகளிலிருந்து திரட்டப்பட்டு குவிக்கப்பட்டு வருகின்றனர். அடுத்த 48 மணிநேரத்தில் அனுவார் இபுராகிம் கைது செய்யப்படும் சாத்தியம் இருப்பதாக அறியப்படுகிறது.

மலேசியா கினி படச்சுருள்

mkinitv_client(“”);
அம்னோ தனது புத்தியைக் காட்டி விட்டது…!

பலம் கொண்டு எதிர்த்தும் முயற்சி வீணே..! இனி எதிராளியின் பலத்தை ஒடுக்க அம்னோ 50 ஆண்டுகளாக கடைப்பிடிக்கும் ஒரே வழி… போலீஸ்…! போலீஸ்…! கைது…! கைது…!

இன்று அனுவார் கைதானால்…? போராட்டம்தான்…!!!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: