ஃபிரண்ட் லைன்" மனித உரிமை இயக்கம் மாமன்னருக்குக் கடிதம்…

ஜூன் 26, 2008

திரு.உதயகுமாருக்கு உரிய சிகிச்சை வழங்கக் கோரி, டப்ளின் அயர்லாந்தை மையமாகக் கொண்ட ‘ஃபிரண்ட் லைன்’ எனும் மனித உரிமை இயக்கம் மலேசிய நாட்டு பேரரசிற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதன் நகல் உங்கள் பார்வைக்கு… இவ்வியக்கத்தின் மதிப்பிற்குரிய ஆலோசகர்களாக 14-ஆம் தாலாய் லாமா, நோபல் பரிசுப் பெற்ற வங்காரி மூதா மாத்தாய் போன்றோர் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Frontline DefendersUpload a Document to Scribd
Read this document on Scribd: Frontline Defenders
Advertisements

நடந்து பாருங்கள், உலகமே உங்களுக்கு அடிமை..

ஜூன் 26, 2008

“தனது நடைப்பயணம் பற்றி சதீசு குமார் பெட்ரெண்டு ரஸ்ஸலுக்கு ஒரு கடிதம் எழுதி தெரிவித்தார். உடனே ரஸ்ஸல் உலக அமைதிக்காக நடைபயணம் செய்யும் முயற்சிக்கு வாழ்த்துக்கள். ஆனால் எனக்கு 90 வயதாகிறது. உலகம் மிகப்பெரியது. எப்படியாவது என் சாவிற்கு முன்னால் உன்னை ஒரு முறை பார்த்துவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். வேகமாக நடந்து வா” என்று பதில் எழுதியிருந்தார். அது சதீசு குமார் மனதில் இன்னும் ஆர்வத்தை அதிகமாக்கியது.

ஒன்றரை மாதங்களுக்கு பிறகு அவர்கள் பாகிஸ்தான் எல்லைக்கு வந்து சேர்ந்தார்கள். அவர் கையில் விசா, கடப்பிதழ் எதுவுமில்லை. அத்தோடு இந்தியா பாகிஸ்தான் இரண்டும் யுத்த நெருக்கடியில் இருந்த நாட்கள் அவை. பாகிஸ்தானுக்குள் பிரவேசிக்கும் முன்பாக அவரது நண்பர்களில் ஒருவர் நாலைந்து பொட்டலங்கள் சாப்பாடு தந்து நீங்கள் பாகிஸ்தானிற்குள் போகிறீர்கள். அது எதிரியின் தேசம் உங்களுக்கு சாப்பாடு கூட கிடைக்காது இதைக் கொண்டு செல்லுங்கள் என்று தந்திருக்கிறார்.

சதீசு குமார் அதை மறுத்தபடியே இந்த சாப்பாட்டை வாங்கிக் கொண்டால் இன்னொரு மனிதன் மீது நான் நம்பிக்கை வைக்கவில்லை என்றாகிவிடும். ஆகவே எனக்கு வேண்டாம். பட்டினியால் சாவதாக இருந்தால் கூட பரவாயில்லை பாகிஸ்தானில் செத்துப் போகிறேன் என்று நடக்கத் துவங்கினார்.

எல்லை காவலர்கள் அவரைப் பற்றி நாளிதழில் வெளியான செய்தியால் தடை செய்யாமல் அனுமதி தந்தார்கள். பயமும் தயக்கமுமாக பாகிஸ்தானினுள் நடக்க துவங்கிய போது ஒரு கார் அருகில் வந்து நின்று பாகிஸ்தானியர் ஒருவர் இறங்கி வந்து நீங்கள்தானா சதீசு குமார் என்று கேட்டிருக்கிறார்.

ஆமாம் என்றதும் உங்களைப் பற்றி ஒரு மாலை செய்தியேட்டில் வாசித்தேன். அப்போது இருந்து நீங்கள் பாகிஸ்தான் வருவதற்காக காத்திருந்தேன். மிக நியாயமான காரணத்திற்காக நடைபயணம் செல்கிறீர்கள். உங்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன். நீங்கள் என்னோடு காரில் வாருங்கள் என்று அழைத்தார்.

அறியாத உலகில் எதிர்படும் முதல்மனிதனே இவ்வளவு அன்பாக நடத்துகிறானே என்று வியந்தபடியே தாங்கள் காரில் வர முடியாது, முகவரியை தாருங்கள் வீட்டிற்கு வந்து சேர்கிறோம் என்றார்கள். அவரோ விடாப்பிடியாக, இல்லை வழியில் யாராவது அழைத்தால் போய்விடுவீர்கள் அதனால் உங்கள் பைகளை என்னிடம் தாருங்கள். அதை மட்டுமாவது நான் கொண்டு செல்கிறேன் என்று அவரது உடைமைகளை வாங்கி கொண்டு சென்றுவிட்டார்.

அன்றிரவு அந்த பாகிஸ்தானியர் வீட்டில் சாப்பிட்டு விட்டு உறங்கியிருக்கிறார்கள். அப்போது சதீசு குமாருக்கு தோன்றியது. நண்பர் தன்மீதான அக்கறையில் தந்த பொட்டலத்தில் இருந்தது உணவு அல்ல பயம். அடுத்த மனிதனை நம்பமுடியாமல் போன பயம் தான் சாப்பாட்டை கட்டி கொண்டு போகச் செல்கிறது என்ற உண்மை புரிந்திருக்கிறது”

-இப்படியாகச் செல்லுகின்றது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய “நடையால் வென்ற உலகம்” என்ற கட்டுரை.அனைவரும் கண்டிப்பாக படிக்கவேண்டிய ஒரு பதிவு.முழுக்கட்டுரையையும் கீழ்கண்ட சுட்டியில் படிக்கலாம்.

நன்றி: http://sramakrishnan.com/deep_story.asp?id=88&page=

அந்த பெரிய மனிதர் சதீசு குமார் பற்றிய ஆவணப்படம் கீழே வீடியோ வடிவில்

இப்பதிவானது என்னுடைய முன்னூறாவது பதிவாக அமைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். 70 வயதைக் கடந்தும் உலகத்தை கால்களாலேயே சுற்றி வந்த ஐயா சதீசு குமாரின் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும், தற்போது கால் உடைந்து படுத்துக் கிடக்கும் எனக்கு ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் விரைவில் நடக்க வேண்டும் என்கிற ஆர்வம் இவரைப் பற்றி படித்ததும் மேலோங்கியிருக்கிறது.

இவ்வேளையில் ஐயா சதீசு குமார் அவர்களைப் பற்றிய பதிவினைக் கொடுத்த திரு.இராமகிருஷ்ணன் அவர்களுக்கும், இவரின் பதிவை எனக்கு அறியப்படுத்திய பி.கே.பி அண்ணா அவர்களுக்கும் எனது நன்றிகள்.

இப்பதிவானது என்னுடைய முண்ணூறாவது பதிவாக அமைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். 70 வயதைக் கடந்தும் உலகத்தை கால்களாலேயே சுற்றி வந்த ஐயா சதீசு குமாரின் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும், தற்போது கால் உடைந்து படுத்துக் கிடக்கும் எனக்கு ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் விரைவில் நடக்க வேண்டும் என்கிற ஆர்வம் இவரைப் பற்றி படித்ததும் மேலோங்கியிருக்கிறது.

இவ்வேளையில் ஐயா சதீசு குமார் அவர்களைப் பற்றிய பதிவினைக் கொடுத்த திரு.இராமகிருஷ்ணன் அவர்களுக்கும், இவரின் பதிவை எனக்கு அறியப்படுத்திய பி.கே.பி அண்ணா அவர்களுக்கும் எனது நன்றிகள்.

>வேதமூர்த்திக்கு கைதா, விடுதலையா? கேள்வி நிராகரிக்கப்பட்டது..!

ஜூன் 26, 2008

>பத்து தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா, தற்போது இலண்டனில் வசித்துவரும் இந்து உரிமைப் பணிப்படையின் தலைவர் திரு.வேதமூர்த்தி மீண்டும் மலேசியாவிற்கு வந்தால், அவர் நிலை என்ன? கைது செய்யப்படுவாரா? அப்படி கைது செய்யப்பட்டால் எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்? எனும் கேள்விகளை மக்களவையில் சமர்ப்பித்தபோது நிரூபணமில்லாத கேள்விகளைக் கேட்கக் கூடாது என பதில்கடிதத்தில் மறுமொழியிட்டு அக்கேள்விகளை 23,1(H) விதிமுறையின் கீழ் மக்களவை நிராகரித்துவிட்டதாகக் கூறினார்.

தாம் நிரூபணமில்லாத கேள்விகளைக் கேட்கவில்லையெனவும், அரசாங்கம் சட்ட திட்டங்களை அமல்படுத்துவதில் வெளிப்படையான போக்கை கடைப்பிடிக்குமாறு நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைப்பெற்ற நிருபர் கூட்டத்தில் அவர் கேட்டுக் கொண்டார்.

மலேசியா கினி படச்சுருள்

mkinitv_client(“25june08_TianChua_ISA.mp4”);

வேதமூர்த்திக்கு கைதா, விடுதலையா? கேள்வி நிராகரிக்கப்பட்டது..!

ஜூன் 26, 2008

பத்து தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா, தற்போது இலண்டனில் வசித்துவரும் இந்து உரிமைப் பணிப்படையின் தலைவர் திரு.வேதமூர்த்தி மீண்டும் மலேசியாவிற்கு வந்தால், அவர் நிலை என்ன? கைது செய்யப்படுவாரா? அப்படி கைது செய்யப்பட்டால் எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்? எனும் கேள்விகளை மக்களவையில் சமர்ப்பித்தபோது நிரூபணமில்லாத கேள்விகளைக் கேட்கக் கூடாது என பதில்கடிதத்தில் மறுமொழியிட்டு அக்கேள்விகளை 23,1(H) விதிமுறையின் கீழ் மக்களவை நிராகரித்துவிட்டதாகக் கூறினார்.

தாம் நிரூபணமில்லாத கேள்விகளைக் கேட்கவில்லையெனவும், அரசாங்கம் சட்ட திட்டங்களை அமல்படுத்துவதில் வெளிப்படையான போக்கை கடைப்பிடிக்குமாறு நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைப்பெற்ற நிருபர் கூட்டத்தில் அவர் கேட்டுக் கொண்டார்.

மலேசியா கினி படச்சுருள்

mkinitv_client(“25june08_TianChua_ISA.mp4”);

இந்துராப்பு தலைவர்களின் விடுதலைக்கு டப்ளின் குழு கோரிக்கை..

ஜூன் 25, 2008

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இண்ட்ராப் ஐவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று டப்ளினில் அமைந்துள்ள மனித உரிமைக் கழகம் ஒன்று அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

“நியாயமான மனித உரிமை நடவடிக்கைகளுக்காக போராடிய அந்த ஐவரும் எவ்வித விசாரணையுமின்றி காவலில் வைக்கப்பட்டிருப்பதாக ,ஃப்ரண்ட் லைன் என்னும் அக்கழகம் கூறியது.

இந்திய சமுகத்தின் பிரச்னைகளுக்காக போராடிய அந்த ஐவரும்- பி.உதயகுமார், எம். மனோகரன், வி. கணபதி ராவ், டி. வசந்தகுமார், ஆர்.கெங்காதரன்- திசம்பர் 13 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

உடனடியாக, அவர்கள் ஈராண்டு தடுப்புக் காவலில் வைக்கப்படுவதற்காக தைப்பிங் கமுண்டிங் தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.

“மனித உரிமைகளுக்காக, குறிப்பாக மலேசியாவின் சிறுபான்மை இந்தியர்களின் உரிமைகளைப் பாதுகாக்க போராடியதற்காக அந்த ஐவரும் காவலில் இருப்பதாக நம்புகிறோம்”, என அக்கழகத்தின் இயக்குனர் மேரி லவ்லோர், மாமன்னர் சுல்தான் மிர்சான் சைனால் அபிடினுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நீரிழிவு நோயாளியான உதயகுமாருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு மன்னர் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என்றும் லவ்லோர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

“அந்த ஐவரின் உடல் மற்றும் மன நலம் குறித்து ஃப்ரண்ட் லைன் கவலை கொள்வதாகவும்”, அவர் கூறினார்.

மலேசியாவில் மனித உரிமை போராட்டவாதிகள், அச்சமின்றி தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சூழலை அரசாங்கம் உருவாக்கித் தர வேண்டும் என்றும் அக்கழகம் விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.

செய்தி : மலேசியா இன்று