அனுவார் இபுராகிம் பெர்மாத்தாங் பாவோ நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

ஜூலை 31, 2008

அனுவார் இபுராகிமின் அரசியல் பிரவேசம் எப்பொழுது.. எப்பொழுது என பலரின் கேள்விகளுக்கு இன்று விடை கொடுக்கப்பட்டது.. இன்று மதியம் நடத்தப்பட்ட நிருபர் சந்திப்பு ஒன்றில் அனுவார் இபுராகிம், பெர்மாத்தாங் பாவோ நாடாளுமன்றத் தொகுதியில் தாம் போட்டியிடவிருப்பதாகத் அறிவித்துள்ளார்.பெர்மாத்தாங் பாவோ தொகுதியானது அனுவார் போட்டியிட்டு வெற்றி பெற்றப் பழைய தொகுதியாகும்.அத்தொகுதியில் கடந்த மார்ச் 8 பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற அனுவாரின் மனைவி வான் அசிசா இசுமாயில், அவரின் தொகுதியைத் தன் கணவருக்கு விட்டுக் கொடுப்பதாக அறிவித்தார். இன்று காலையில் தாம் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை மக்களவைத் தலைவரிடம் ஒப்படைத்துவிட்டதாகவும், இருப்பினும் தாம் மக்கள் நீதிக் கட்சியின் தலைவராக தொடர்ந்து நீடிப்பார் எனவும் அவர் கூறினார்.

ஏற்கனவே சிலாங்கூர் மந்திரி புசார் டான் சிறீ காலிட் (பண்டார் துன் ரசாக்), மக்கள் நீதிக் கட்சியின் உதவித் தலைவர் அஸ்மின் அலி (கோம்பாக்) போன்றோர் தங்களது தொகுதிகளை அனுவாருக்கு விட்டுக் கொடுப்பதற்குத் தயாராக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் 60 நாட்களுக்குள் மலேசிய தேர்தல் ஆணையம் பெர்மாத்தாங் பாவோவின் தேர்தலுக்கான திகதியை அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அனுவார் இபுராகிமின் அரசியல் பிரவேசம் குறித்து முன்னால் பிரதமர் துன் மகாதீர் கருத்துரைக்கையில், “என் மனைவியாக இருந்திருந்தால், இதே முடிவைத்தான் எடுத்திருப்பாள்” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில் ஓரிணப்புணர்ச்சி வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்ட அனுவார் இபுராகிம் 48 மணி நேரத்தில் கைது செய்யப்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் ஆருடம் கூறுகின்றன.

அனுவாரின் அரசியல் பிரவேசத்தைத் தடுக்கும் ஒரு நடவடிக்கையாக, மீண்டும் அவர் கைதாவாரா….?

Advertisements

இண்ட்ராப்பின் ‘ஜாலூர் கெமிலாங்’ நிகழ்வு..

ஜூலை 28, 2008

வருகின்ற 3-ஆம் திகதி ஆகசுட்டு மாதம், நாட்டின் 51-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய நிலையில் இண்ட்ராப் ‘ஜாலூர் கெமிலாங்’ விழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வில், இண்ட்ராப்பின் நிகழ்வுகள், வருங்கால திட்டங்கள் விளக்கப்படுவதோடு இண்ட்ராப் தலைவர் திரு.வேதமூர்த்தியுடன் நேரடி தொலை கலந்துரையாடலும் நடைப்பெறும். எதிர்க்கட்சி தலைவர்களும் கலந்துக் கொள்ளும் இந்நிகழ்வில் இண்ட்ராப் ஆதரவாளர்கள் பங்கு பெற்று பயனடையுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்ரனர்.

அமைதியான தீபாவளி – இண்ட்ராப்பு கோரிக்கை..

ஜூலை 27, 2008

இண்ட்ராப்பு குரல்

பழைய வழக்கத்திற்கு மாறாக, இவ்வருட தீபாவளியை அனைவரும் தியானம், இறைவழிபாடு என அமைதியாகவும் எளிமையான முறையிலும் தத்தம் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களோடு கொண்டாட வேண்டும் என இண்ட்ராப்பு தனது ஆதரவாளர்களைக் கேட்டுக் கொள்கிறது. சம உரிமை, சம வாய்ப்பு, பேச்சு சுதந்திரம் மற்றும் சமயச் சுதந்திரத்திற்காக குரல் எழுப்பிய ஐந்து இண்ட்ராப் தலைவர்களுக்காக இவ்வருட தீபாவளிக் கொண்டாட்டமானது அமைதியான முறையில் நடைப்பெற வேண்டும். இதனை ஆதரவாளர்கள் அனைவரும் அமைதிப் போராட்டமாகக் கருத வேண்டும்.

தீபாவளியானது கொண்டாடப்படுவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், அவற்றின் பொதுவான நோக்கம் என்று பார்த்தால் தீமைகள் அழிந்து நன்மை பிறக்க வேண்டும் எனும் நோக்கத்திலியே கொண்டாடப்படுகிறது. தீபாவளி பிறந்ததற்கான பல புராணக் கதைகள் இருந்தாலும், மக்கள் மத்தியில் பிரசித்திப் பெற்ற புராணக் கதை, நரகாசுரனை வதைத்த கிருஷ்ணரின் மனைவி சத்யபாமாவின் கதையே. இப்புராணக் கதையில் நரகாசுரனின் வதமானது, வாழ்வின் இருளை நீக்கி ஒளியை அளித்ததற்குச் சமமாகக் கொண்டாடப்படுகிறது.

ஆனால், மலேசிய இந்தியர்களைப் பொறுத்தவரையில் நாடு சுதந்திரம் அடைந்து இன்று வரையில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, சமய சுதந்திரம், பேச்சு சுதந்திரம் அற்று இருளில் வாழ்ந்து வந்துள்ளனர். இண்ட்ராப்பு இதுவரை அரசாங்கத்திடம் பல மனுக்களையும் கோரிக்கைகளையும் கொடுத்து சம உரிமைக் கேட்டு போராடி வந்துள்ளது. ஆனால், செவிடன் காதில் ஊதிய சங்கைப்போல் அரசாங்கம் நம்முடைய கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை. அரசாங்கத்திற்கு நம்முடைய தேவைகளைப் பல வகையில் புரிய வைத்திருந்தும், இந்திய சமூகம் இருளிலிருந்து இன்னும் வெளிப்படவில்லை.

இன்றுவரை நாம் கொண்டாடிவரும் தீபாவளியானது ஓர் அர்த்தமற்றதாகவே புலப்படுகிறது. இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி எனும் தீபாவளியின் உண்மைக் கருப்பொருளை இந்திய சமுதாயம் அடைந்துவிடவில்லை. இன்றுவரையில் நாம் சம உரிமைக்காகப் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம்.

இதன்வழி இண்ட்ராப்பு அனைத்து ஆதரவாளர்களையும் தீபாவளியன்று அமைதியான முறையிலும், தியானம், இறை வழிபாடு என்று இறைவனிடம் உள்ளொளி வேண்டி கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது. இவ்வருட அமைதியான தீபாவளியின் வழி, அரசாங்கத்தின்மீது ஒட்டுமொத்த சமுதாயம் கொண்டிருக்கும் ஆதங்கத்தைப் புலப்படுத்தியாக வேண்டும். அதோடு அவர்கள் நடைமுறைப்படுத்திவரும் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டமானது மலேசிய மக்களால் வெறுக்கப்படும் சட்டமாக உள்ளது என்பதனையும் புலப்படுத்தவேண்டும்.

இண்ட்ராப்பு என்றும் அடுத்தவரின் உரிமைகளைக் கேட்கவில்லை, ஆனால் கொடுக்கப்பட வேண்டிய உரிமைகள் மறுத்தளிக்கப்படும்பொழுது அதனைத் தட்டிக் கேட்டு வாங்குவதில் என்றும் பின்வாங்குவதில்லை. போராட்டம் தொடரும்…

திரு.வேதமூர்த்தி
இண்ட்ராப் தலைவர்
இலண்டன்