இண்ட்ராஃப் தீபாவளி வாழ்த்து அட்டைகள்..

செப்ரெம்பர் 30, 2008

இவ்வருட தீபாவளியை மிதமான முறையில் அனுசரித்து அரசாங்கத்திற்கு நம்முடைய அதிருப்தியைத் தெரிவிக்க ஆரஞ்சு நிற புத்தாடை, தியானம், இறைவழிபாடு , கூட்டுப் பிராத்தனை என்றெல்லாம் ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்துக் கொண்டிருக்க, உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தீபாவளி அட்டைகளை அனுப்ப அழகான வாழ்த்து அட்டைகளைத் தேடிக் கொண்டிருக்கிறீர்களா?

அழகாய் இருந்தால் மட்டும் போதாது, கருத்துகளும் நிறைந்திருக்க வேண்டும்..

நம் போராட்டத்தின் முக்கிய குறிக்கோள்களாக அமைந்திருப்பவை 18 அம்சக் கோரிக்கைகள்.. வாழ்த்து கூறுவதுடன் போராட்டத்தின் குறிக்கோளையும் நினைவூட்டுவதற்கு, 18 அம்சக் கோரிக்கைகள் கொண்ட இண்ட்ராஃப் தீபாவளி வாழ்த்து அட்டைகள் வெளிவந்துள்ளன..

படத்தைச் சுட்டி பெரிதாக்கிப் பார்த்து, பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்..

Advertisements

4-ஆம் திகதி பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பு..!

செப்ரெம்பர் 30, 2008

அரி ராயா பெருநாளன்று கெப்பாலா பாத்தாசில் அமைந்துள்ள பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பிற்குச் செல்வதற்கு இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் தயாராக இருந்த சமயம், திகதி திடீரென்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அரி ராயாவின் முதல் நாளன்று புத்ரா உலக வாணிப மையத்தில் நண்பகல் மணி 12.30 தொடங்கி மாலை 4.30 மணிவரை பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பு நடைப்பெறவுள்ளது. அன்றைய தினத்தில் தென் மாநிலங்களில் வசிக்கும் இண்ட்ராஃப் ஆதரவாளர்கள், அங்குச் சென்று பிரதமரிடம் அரி ராயா வாழ்த்துகள் கூறி இண்ட்ராஃப் தலைவர்களுக்கு முறையான நீதி வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதனை அடுத்து அக்டோபர் 4-ஆம் திகதியன்று பிரதமர் கெப்பாலா பாத்தாசில் அமைந்துள்ள மில்லேனியம் மண்டபத்தில் காலை 11.00 மணியிலிருந்து மாலை 5.00 மணிவரை திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்விற்கு ஏற்பாடு செய்துள்ளார். இத்திறந்த இல்ல உபசரிப்பிற்கு வட மாநிலங்களிலிருந்தும், கிழக்குக்கரை மாநிலங்களிலிருந்தும் இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் படைத்திரள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்விறு நிகழ்வுகளிலும் இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் ஆரஞ்சு நிற உடையினை அணிந்துச் செல்வதோடு, அமைதியான முறையில் கலந்துக் கொண்டு வாழ்த்துகளையும் மனுவையும் சமர்ப்பித்துவிட்டு வருமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. அவ்விரு நிகழ்வுகளிலும் ஆரஞ்சு நிற அலை பளிச்சென்று தெரிய வேண்டும்..

மறவாமல் கலந்துக் கொண்டு ஒரு கலக்கு கலக்கிருங்க…

"ஓலைச்சுவடி" – ஓராண்டு நிறைவு..

செப்ரெம்பர் 29, 2008

MySpaceGraphicsandAnimations.com

இன்று ஓலைச்சுவடிக்கு ஒரு வயதுப் பிறந்தநாள். இந்த ஓராண்டு பதிவுலக அனுபவத்தில் நான் சந்தித்த மனிதர்களையும் சவால்களையும் சற்று நேரம் எண்ணிப் பார்க்கிறேன்..

கண்மூடி கண் திறப்பதற்குள் இம்மாய உலகில் எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.. குறிப்பாக மலேசிய தமிழர்களின் சிந்தனையில் ஒரு புரட்சி உண்டாகும் என்று கனவிலும் கருதாதக் காலம் அது. எப்பொழுது தமிழர்களின் வழிப்பாட்டுத் தளங்கள் உடைக்கப்பட்டதோ, அதனைத் தட்டிக் கேட்கச் சென்ற பொதுமக்களும் வழக்கறிஞர்களும் அடிவாங்கினார்களோ அன்றுதான் எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் பிறந்தது.

அச்சமயம் இண்ட்ராஃப் என்ற இயக்கத்தை பற்றி அறிந்திராத காலம். புத்ராசெயாவில் பிரதமர் அலுவலகத்தின் முன் 5000 தமிழர்கள் ஒன்றுதிரண்டு மனு கொடுத்தார்கள் என்ற அளவில்தான் செய்தி தெரியும். அதன் சாரம்சம் அன்று தெரியாது.

ஆனால் தொடர்ச்சியாக பல ஆலயங்கள் உடைபடும்போதுதான் என் எழுத்திற்கு இண்ட்ராஃப் எனும் இயக்கம் உரமாக அமைந்தது. அந்த காலக்கட்டத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது, ஏன் அனைத்து மலேசியத் தமிழர்களாலும் மறக்க முடியாது. பல நூற்றாண்டுகளாய் அந்நிய சத்திகளின் பிடியில் அடிமை வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருந்த தமிழர்களின் உண்மையான போராட்ட குணத்தை அப்பொழுது காணும் பாக்கியம் அனைவருக்கும் கிடைத்தது. போராட்ட குணம் என்பதெ நம் மரபணுக்களில் ஆணியடிக்கப்பட்டுவிட்ட ஒரு சாசனம்தானே.

அன்று திரட்டப்பட்ட ‘மக்கள் சக்தி’ எனும் மாபெரும் அணியின் தாக்கத்தினால் பலர் தியாகிகளாயினர், போராளிகளாயினர், அதே வேளையில் என்னைப் போன்ற பலரும் எழுத்தாளர்கள் ஆயினர். ‘மக்கள் சக்தி’ ஏற்படுத்திய சுதந்திர அலை ஒவ்வொரு மலேசியத் தமிழ் குடிமகனையும் எழுத்தாளனாக்கியது. சனநாயகத்தின் விளிம்பில் கருத்துக் களங்கள் விரிவடைந்தன. சுதந்திர வாசகங்கள் முரசுக் கொட்டி விண்ணைப் பிளந்தன.

எழுத்துகளில் மட்டும் வீரத்தையும், போராட்டத்தையும், விழிப்புணர்வையும் காட்டினால் போதுமா, களத்தில் இறங்கி போராடினால்தானே அது உண்மை போராட்டமாக இருக்கும் என்ற சிந்தனையின் தூண்டுதலால், களத்திலும் இறங்கி காவல்த்துறையின் பிடியில் சிக்கிய அந்த நினைவுகள் என்றுமே சுகம் தரும் நினைவுகளாகவே மனதில் குடிகொண்டிருக்கின்றன. தொடர்ந்து போராட வேண்டும் என்ற உணர்ச்சி மட்டுமே விஞ்சி நிற்கிறது.

இந்த ஓராண்டு பதிவுலக அனுபவத்தில் பல மறக்க முடியாத சம்பவங்களை சம்பாதித்துக் கொண்டேன். நல்ல நண்பர்கள் வரமாகவும், துரோகிகள் நல்ல பாடங்களாகவும் எனக்கு வந்தமைந்தார்கள். நான் விபத்திற்குள்ளாகி இருந்த சமயத்தில் ஓடோடி வந்து உதவி செய்த பல நல்ல உள்ளங்களையும், விரைவில் நலம் அடைய ஆசி கூறி தன்னம்பிக்கை ஊட்டிய பலரையும் இக்கணம் நினைத்துப் பார்த்து நெகிழ்கிறேன். பதிவு எழுதுவது வெட்டி வேலை என்றும், அதனால் நமக்கு எந்த லாபமும் இல்லை என்று கருதுவாரும் உளர். ஆனால், என் ஓராண்டு பதிவுலக அனுபவத்தில் இழந்ததைவிட பெற்றுக் கொண்டதே அதிகம். ஒன்றை இழந்தால்தான் மற்றொன்று எனும் நியதி உலகின் மாற்றமுடியாத விதி. நான் இழந்தது என் நேரங்களை மட்டும்தான், ஆனால் அதன்வழி எனக்குக் கிடைத்ததோ சுவையான அனுபவங்கள், வாழ்க்கைப் படிப்பினைகள், நல்லோர் நட்பு என என்னைச் சுற்றி ஒரு நட்பு வட்டாரம். இது தொடர வேண்டும்…

இந்த நல்ல சந்தர்ப்பத்தில் எனக்கு ஆக்கவழிகளைக் காட்டி ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி கூறுவது என் கடமையாகும். அதேவேளையில் என் எழுத்துகளின் வழி சிலரின் மனங்களைக் காயப்படுத்தி இருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டியதும் என் கடமையாகிறது. ஆனால் இந்த மன்னிப்பு நம் சமுதாயத்தைக் கூறுபோடும் துரோகிகளுக்கு அல்ல. மற்றபடி இதுநாள்வரையில் “ஓலைச்சுவடி”க்கு பல வகையில் ஆதரவு கொடுத்து வந்த வாசகர்களுக்கும் சக பதிவர்களுக்கும் இவ்வேளையில் எனது நன்றிகளைக் கூறிக் கொள்வதோடு, வாசகர்கள் அளிக்கும் ஊக்கமே எங்களுக்குச் சிறந்த ஊட்டச் சத்து மருந்து என்றியம்பி மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

போராட்டம் தொடரும்…

மெழுகுவர்த்தி ஏந்தியப் பேரணி இனிதே நடந்தேறியது..

செப்ரெம்பர் 28, 2008

மலேசியாவின் சனநாயகக் கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டுவரும் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தை அகற்றவும், மலேசிய இந்தியர்களுக்கு உரிமைக் குரல் கொடுத்த ஐந்து இண்ட்ராஃப் தலைவர்களை விடுவிக்கவும் கோரி நடத்தப்பட்ட இண்ட்ராஃபின் மெழுகுவர்த்தி ஏந்திய பேரணி எந்த ஒரு தடங்கலும் இன்றி இனிதே நடைப்பெற்று முடிந்தது.

இரவு 7.30 மணியளவில் மெர்டேக்கா சதுக்கத்தில் கூடியிருந்த இண்ட்ராஃப் ஆதரவாளர்களுக்கு அச்சதுக்கத்தில் ஒன்றுகூட அனுமதி மறுக்கப்பட்ட வேளையில் அனைவரும் அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கோர்ட்டுமலைப் பிள்ளையார் ஆலயத்தை நோக்கி ஊர்வலமாக நடந்தனர்.

இந்த ஊர்வலத்தில் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியா கினி படச்சுருள்

போராட்டம் தொடரும்…