உதயாவின் விடுதலை!

நேற்று கமுந்திங்கிலிருந்து சிரம்பான்வரை மகிழ்வுந்து பேரணியில் கலந்துகொண்ட அனுபவம் மறக்க முடியாத ஒன்று. மலேசிய வரலாற்றில் நிபந்தனையோடு கூடிய விடுதலைப் பத்திரத்தில் கையெழுத்து இட மறுத்து, வெளியேற மறுத்த ஒரே மனிதன் அண்ணன் உதயா. இறுதியில் அடிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டிருக்கிறார்.

சிரம்பானுக்கு செல்லக் கூடாது!
ஊடக அறிக்கை கூடாது!
பொதுவிடத்தில் உரை நிகழ்த்தக் கூடாது!
பிரிக்பீல்ட்ஸ் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்!

இது காவல்த்துறையினரின் ஆணை!

ஆனால், இவர்களின் எச்சரிக்கைகளைக் கண்டு அஞ்சாது, கமுந்திங் முதல் சிரம்பான்வரை ஒரு கலக்கு கலக்கிய அண்ணன் உதயாவின் மனோதிடம் இந்நாட்டிலுள்ள வேறெந்த தலைவர்களுக்கும் கிடையாது! அண்ணன் உதயாவின் விடுதலை என்பது அம்னோவினால் அரங்கேற்றப்பட்ட ஓர் அரசியல் நாடகம் என்பதனை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். இனி தேவையில்லாத அறிக்கைகளை நம்பி குழம்பாமல், அண்ணன் உதயாவின் தலைமைத்துவத்தின்கிழ் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்படுங்கள்!

இனி இரண்டாவது அத்தியாயம் தொடங்குகிறது

போராட்டம் தொடரும்

3 Responses to உதயாவின் விடுதலை!

 1. கிருஷ்ணா சொல்கிறார்:

  அந்த சிங்கத்தின் கர்ஜனையும் குறையவில்லை.. அவருக்கான ஆதரவும் குறையவில்லை! அவரை நான் நேற்று சிரம்பானில் அவரின் இல்லத்தில் கூட்டத்தோடு கூட்டமாக சந்தித்து ஆரத்தழுவி விடைபெற்றேன். சிரம்பான் நகரத்தையே ஒரு கலக்கு கலக்கி விட்டனர் மக்கள் சக்தி ஆதரவினர்! வாழ்க ஹிண்ட்ராஃப்.. வாழ்க மக்கள் சக்தி..!

 2. vasantarao appalasamy சொல்கிறார்:

  HINDRAF leaders relesed! but where are the solutions? wat happen to our 18 demands?

  UMNO continuosly showing their ignorance towards Malaysian ethnic Indian….

 3. குமரன் மாரிமுத்து சொல்கிறார்:

  அடேயப்பா…. அவரை வரவேற்க கூடியவர்களின் முகங்களில் இருந்த உட்சாகம்.. அப்பப்பா… சொல்லில் அடங்காது… தைப்பிங் முதல் சிரம்பான் வரை அண்ணனை அழைத்துவந்த வாகனங்களின் அணிவகுப்பு…வானவேடிக்கைகள்… சிரம்பான் சாலைகள் அதிர்ந்து உரைந்து நின்ற காட்சிகள்… என்று அடுக்கிக் கொண்டே போகலாம். வாழ்க அண்ணன் உதயா… வாழ்க மக்கள் சக்தி…

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: