பினாங்கு இண்ட்ராஃப் மக்கள் சக்தியின் தைப்பூச பந்தல்

ஜனவரி 31, 2010

Advertisements

உரிமையா… சலுகையா… ? கூலிமில் கருத்தரங்கம்

ஜனவரி 22, 2010
உரிமையா, சலுகையா எனும் கருவைக் கொண்டு எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (24/01/2010) பாயா பெசார் கூலிமில் அமைந்துள்ள அன்னை சிறீ கருமாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைப்பெறவிருக்கும் கருத்தரங்கில் கலந்துக்கொள்ள சுற்று வட்டார மக்கள் அழைக்கப்படுகின்றனர். தவறாமல் கலந்துகொண்டு பயனடைவீர்களாக..

படத்தைச் சுட்டி பெரிதாக்கிப் படிக்கவும்

போராட்டம் தொடரும்…


மெழுகுவர்த்தி ஏந்திய அமைதி மறியல் நடைப்பெறாது – இண்ட்ராஃப்

ஜனவரி 11, 2010

சமய விடயங்களில் அம்னோ அரசாங்கத்தின் அலட்சியப் போக்கினைக் கண்டிக்கும்வகையிலும், கிருத்துவ நண்பர்களின் நம்பிக்கைகளை மதிக்காது அவர்கள்மீது இழைக்கப்பட்டிருக்கும் அரசியல் நோக்கங்கொண்ட வன்முறை தாக்குதல்களைக் நிறுத்தக் கோரியும் இண்ட்ராஃப் மெழுகுவர்த்தி ஏந்திய அமைதி மறியல் நிகழ்வு ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

இருப்பினும், கிருத்துவ சமயத் தலைவர்களும் மற்றும் கிருத்துவ சமயத்தவர் சிலரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க பெட்டாலிங் செயா அசம்சன்ஸ் கிருத்துவ தேவாலயத்தின் நுழைவாயிலில் எதிர்வரும் 13 சனவரியன்று நடைப்பெறவிருந்த அமைதி மறியல் கைவிடப்படுகிறது.

இக்கட்டான சூழ்நிலையை சந்தித்துவரும் மலேசிய கிருத்துவ சமயத்தவர்கள் மற்றும் அதன் தலைவர்களின் எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பு அளிக்கும் வகையில், இண்ட்ராஃப் மெழுகுவர்த்தி ஏந்திய அமைதி மறியலைக் கைவிடுகிறது என அறிவித்துக் கொள்கிறோம்.

நன்றி

பொ.வேதமூர்த்தி
இண்ட்ராஃப் தலைவர்


பிரவாசி பாரதிய திவாசு மாநாட்டில் இண்ட்ராஃப்..

ஜனவரி 10, 2010
இண்ட்ராஃப் தலைவர் திரு.பொ.வேதமூர்த்தி தயாரித்த மலேசிய இந்திய சிறுபான்மையினர் மற்றும் மனித உரிமை மீறல்கள் 2009 எனும் ஆய்வறிக்கையை புது தில்லியில் நடைப்பெறும் பிரவாசி மாநாட்டின்போது திரு.உதயகுமார் பலருக்கும் விநியோகித்து விளக்கமளித்தார். மலேசிய சிறுபான்மை இந்தியர்களுக்கு எதிராக இழைக்கப்படும் மனித உரிமை மீறல்களை, அனைத்துலக கவன ஈர்ப்பு மூலம் அம்னோ அரசாங்கத்திற்கு பல்வகையில் அழுத்தம் கொடுக்கும் ஒரு முயற்சியாக இண்ட்ராஃப் இம்மாநாட்டில் கலந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மலேசிய சிறுபான்மை இந்தியர்களின் பிரச்சனைகள் குறித்து இந்திய நிருபர்கள் திரு.உதயகுமாரின் விளக்கத்தை கேட்டறிதல்.

கலிஃபோர்னியாவை மையமாகக் கொண்ட பொறியியலாளர் திரு.என்.பி.ஆசார்யா, மலேசிய இந்தியர்களின் பிரச்சனைகள் குறித்து அமெரிக்க வெளியுறவு செனட் குழுவின் பார்வைக்கு அங்குள்ள செனட்டர் மூலமாகக் கொண்டுச்செல்லவிருப்பதாக உறுதி கூறினார்.

ஃபிஜியின் முன்னால் பிரதமர் மகிந்த சௌத்ரியுடன்..

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் அனுமந்த ராவுடன்

30 இந்திய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு திரு.உதயகுமார் விளக்கமளித்தல்..

முன்னாள் இந்திய எதிர்க்கட்சி தலைவர் சிறீ லால் கிருஷ்ணா அத்வானியுடனான தனிப்பட்ட சந்திப்பு..


போராட்டம் தொடரும்

தேவாலயங்கள் தாக்கப்பட்டதை கண்டிக்கும்வகையில் இண்ட்ராஃப் ஏற்று நடத்தும் மெழுகுவர்த்தி ஏந்திய அமைதிப் பேரணி

ஜனவரி 9, 2010

ஊடக அறிக்கை 10/01/10

கரு : அதிகாரத்துவத் தூண்டுதலின் பேரில் நான்கு கிருத்துவ தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசி தாக்கியதை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்திய அமைதி மறியல்

அண்மையில் மலேசியாவில் அரசியல் நோக்கங்கொண்ட அம்னோ அரசின் தூண்டுதலின்பேரில் நான்கு கிருத்துவ தேவாலயங்கள் தீக்குண்டுகள் கொண்டு தாக்கப்பட்டதை இண்ட்ராஃப் வன்மையாகக் கண்டிக்கிறது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை அம்னோ அரசாங்கம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, சில தரப்பினரை தூண்டிவிட்டு தனது இருப்பினை அச்சுறுத்தலின் மூலம் மேலும் பலப்படுத்திக் கொள்வதற்காக, பொதுமக்கள் மத்தியில் மதக்கலவரத்தை தூண்டிவிட எத்தனித்திருக்கிறது.

இத்தீக்குண்டு தாக்குதல்களைத் தவிர்த்து சென்ற வெள்ளிக்கிழமைத் தொழுகைக்குப்பின் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ஆர்ப்பாட்டக்காரர்களால் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் மருட்டலாகவும், பகைமையைத் தூண்டும்வகையிலும் இருந்தன. தேசநிந்தனைக் குற்றச்சாட்டிற்காக இந்த் ஆர்ப்பாட்டக்காரர்களின்மீது அம்னோ அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இநநாட்டைப் பொறுத்தமட்டில், நம் அரசியலமைப்புச் சட்டம் வழிவகுக்கும் சமயச் சுதந்திரமானது இன்றுவரையில் கானல் நீராகவே இருந்துவருகிறது.

அம்னோ அரசாங்கத்தின் பக்கச் சார்புடைய நடைமுறைக்கொள்கைகளின் தொடர்பாதிப்புகளை எதிர்க்கொண்டுவரும் மலேசியச் சமுதாயம் முன்பைவிட பக்குவமடைந்திருப்பதை இன்றைய அரசாங்கம் புரிந்துகொள்ளத் தவறியிருக்கின்றது.

மலேசிய கிருத்துவ நண்பர்களுக்கெதிராக அவர்களின் தேவாலயங்களின்மீது நடத்தப்பெற்ற தீக்குண்டு தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கும் வகையிலும், மத நல்லிணக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும்வகையிலும் இண்ட்ராஃப் மெழுகுவர்த்தி ஏந்திய அமைதிப் பேரணியை ஏற்று நடத்தவுள்ளது. அனைத்து அமைதி விரும்பிகளையும், சனநாயகத்தின்மீது நம்பிக்கைக் கொண்டுள்ள சகோதர சகோதரிகளையும் எங்களோடு இவ்வமைதிப் பேரணியில் இணைந்து, மலிந்துவரும் சமய சுதந்திரமும், சிறுபான்மை உரிமைகளும் காக்கப்பட வேண்டும் என்பதற்கான பலமிக்க குரலை எழுப்புவதற்கு அழைக்கிறோம். இந்நாட்டில் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகளையும் அநியாயங்களையும் அரசாங்கம் கடுமையாகக் கருதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைப்போமாக.

திகதி : 13 சனவரி 2010

நேரம் : 8.00 pm

இடம் : அசம்சன்ஸ் தேவாலய நுழைவாயில் , டெம்ப்லர் சாலை பெட்டாலிங் ஜெயா (அசுந்தா மருத்துவமனை அருகில்)

இம்மெழுகுவர்த்தி ஏந்திய அமைதிப் பேரணியில் கலந்துகொள்ள எண்ணங்கொண்டவர்கள் எங்களுடைய தகவல் ஒருங்கிணைப்பாளர் திரு.செயதாசு அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

அலைப்பேசி எண்கள் : 012-6362287

நன்றி

பொ.வேதமூர்த்தி

தலைவர்

இண்ட்ராஃப்

போராட்டம் தொடரும்


மலேசிய இந்தியர்களின் மனித உரிமை ஆண்டறிக்கை 2009

ஜனவரி 7, 2010
2008-ஆம் ஆண்டைப் போலவே, 2009-ஆம் ஆண்டிற்கான மலேசிய இந்தியர்கள் குறித்தான மனித உரிமை ஆண்டறிக்கையை புது தில்லியில் நடைப்பெற்றுவரும் பிரவாசி பாரதிய திவாசு (புலம்பெயர் இந்தியர் மாநாடு)ஆண்டுக்கூட்டத்தில் இண்ட்ராஃப் தலைவர் திரு.பொ.வேதமூர்த்தி சமர்ப்பித்துள்ளார். கடந்தாண்டில் சிறுபான்மை மலேசிய இந்தியர்களுக்கு எதிராக மத்திய மற்றும் மாநில அரசினால் நடத்தப்பெற்ற 15 வகையான மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு தெளிவாகவும் விரிவாகவும் வரையப்பட்டுள்ள இவ்வறிக்கையை அனைவரும் படித்து பிறருக்கும் அறியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Malaysian Indians Annual Human Rights Report 2009

2008-ஆம் ஆண்டின் மலேசிய இந்தியர்களின் மனித உரிமை ஆண்டறிக்கையைப் படிக்க இங்கே சுட்டுக : அறிக்கை 2008

போராட்டம் தொடரும்

பிறப்பு பத்திரம் இல்லையென்றால் பள்ளிக்கூட நுழைவு இல்லை!

ஜனவரி 1, 2010

டத்தோ நஜிப் ரசாக்
மலேசிய பிரதமர்
Perdana Menteri Malaysia
Blok Utama Bangunan Perdana Putra,
Pusat Pentadbiran Kerajaan Persekutuan,
62502 Putrajaya

டான் ஸ்ரீ முயிடின் யாசின்
மலேசிய துணைப் பிரதமர்
Perdana Menteri Malaysia
Blok Utama Bangunan Perdana Putra,
Pusat Pentadbiran Kerajaan Persekutuan,
62502 Putrajaya

பிறப்பு பத்திரம் இல்லையென்றால் பள்ளிக்கூட நுழைவு இல்லை

மதிப்பிற்குரிய பிரதமர் மற்றும் துணைப்பிரதமர் அவர்களுக்கு,

மேலே குறிப்பிட்டது போல,

ஒரு தமிழ் நாளிதழில் 2007ஆம் ஆண்டின் இறுதியி¢ல், கல்வி அமைச்சால் தமிழ்ப்பள்ளிகளுக்கு வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் 2008ஆம் ஆண்டு முதல் பிறப்பு பத்திரம் கிடைக்கப்பெறாத மாணவர்கள் பள்ளிக்கூடங்களில் நுழைய அனுமதிக்கக்கூடாது என்று தெரிவித்திருந்தது. அதையடுத்து வந்த நாளிதழ்களில் பிறப்புப் பத்திரம் இல்லாத மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப்படவில்லை என்றும் முக்கியமாக தமிழ்ப்பள்ளிகளில் அவர்கள் சேர்க்க மறுக்கப்படுகிறார்கள் என்ற செய்தி வெளியாகிய வண்ணம் உள்ளன.

இதையொட்டி நாங்கள் தங்களுக்கு தெரிவிக்க விரும்பும் கருத்து என்னவென்றால் இப்படி பிறப்புப் பத்திரம் இல்லாத காரணத்தால் பள்ளி நுழைவு மறுக்கப்படும் மாணவர்களின் நிலை எதிர்காலத்தில் ஒரு கேள்விக்குறியாகிவிடும். இந்நிலை நீடித்து வந்தால் ஆரம்பப் பள்ளியைத் தொடர்ந்து, இடைநிலைப்பள்ளி, தொழில்கல்வி கல்லூரிகள், மேற்படிப்பு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் மற்றுமின்றி அவர்களுக்கு கல்வி உதவிக்கடன் மற்றும் உபகாரச்சம்பளம் பெறுவதிலிருந்து நிராகரிக்கப்படுகிறார்கள். அதோடு மட்டுமின்றி அவர்கள் மோட்டார் சைக்கிள், வேன், பேருந்து மற்றும் லாரி ஓட்டுவதற்கு லைசன்ஸ் மறுக்கப்பட்டு வேலை தேடி சம்பாதிக்கும் வாய்ப்பையும் இழப்பார்கள். இதுமட்டுமின்றி அவர்கள் ஒரு தொழில் செய்வதற்குக் கூட லைசன்ஸ் (அனுமதி) கிடைக்காது. ஒரு சாப்பாட்டுக் கடையைக் கூட அவர்களால் திறக்க இயலாது. பிறப்புப் பத்திரமின்றி அவர்கள் எவ்வித திறனும் தேவைப்படாத காவலாளி, தொழிற்சாலை பணியாளர் மற்றும் அலுவலகத்தில் சுத்தம் செய்யும் வேலைக்குக் கூட ஏற்றுக் கொள்ளப்படமாட்டார்கள்.

இறுதியில் அவர்கள் திருமணத் தடையை எதிர்நோக்குவார்கள். அவர்கள் திருமணம் செய்து கொண்டாலும் அவர்களின் அடுத்த சந்ததியினர் இதே பிரச்சனையில் மூழ்கி இவர்கள் அனுபவித்த துயரங்கள் மீண்டும் ஒரு சுழற்சியாக உழன்று கொண்டிருக்கும். இவ்வாறு பிரச்சனைகளை எதிர்நோக்கும் இந்திய இளைஞர்கள் வேறு வழியின்றி குண்டர் கும்பல் மற்றும் சமூகச்சீர்கேடுகளில் ஈடுபடுகிறார்கள்.

இதனால் அரசாங்கம் 2010ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் RM 1 மில்லியன் ரிங்கிட்டை தேசிய காவல் துறை, பாதுகாப்பு மற்றும் குற்றங்களை கையாள்வதற்கென ஒதுக்கியுள்ளது. இதில் கிள்ளான் நகரில் கடந்த 8/11/09ஆம் நாளன்று ஒரே நாளில் ஐந்து இந்திய இளைஞர்களை சுட்டு கொன்றது. அதிலும் ஒரு இளைஞனுக்கு 17 வயதுதான் ஆகிறது என்கிற விஷயம் மிகுந்த வேதனையளிக்கிறது.

ஏறக்குறைய 150,000 இந்தியக் குழந்தைகள் மலேசியாவில் பிறந்திருந்தாலும் மூன்றாம், நான்காம், ஐந்தாம் தலைமுறையை எட்டியவர்களானாலும் இன்னமும் அவர்களின் பிறப்புப் பத்திரம் 1,016,799 பீரோ தாதா நெகாராவின் பட்டாதாரிகள் சிலரால் சின்னசின்ன காரணங்களால் வெறுமனே மறுக்கப்பட்டுவருகின்றன என்று 21-6-09 யூ.எம். புலெட்டின் (UM Buletin) 19ஆம் ஏட்டில் வெளியிடப்பட்டுள்ளது. மத வேறுபாடு காரணத்தினால் இவர்களுக்கு பிறப்புப் பத்திரம் வழங்கவே கூடாது என்று அவர்கள் தீர்மானித்திருப்பதாக நாங்கள் எண்ணுகிறோம். மேலும் விண்ணப்பதாரர்கள் சாதாரண குடும்பத்தில் பிறந்திருந்தால் அவர்கள் விண்ணப்பம் அறவே ஏற்றுக் கொள்ளப்பட மறுக்கப்படுகிறது.

ஆகவே இதற்கான தீர்வை குறுகிய மற்றும் நீண்ட கால திட்டத்தில் விரைவில் நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம்.

1) 2007ஆம் ஆண்டிறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கை தடை செய்யப்பட்டு 2010க்கான புதியதொரு அறிக்கையில் முக்கியமாக தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் கல்வி இலாகாவினர் எந்தவொரு இந்திய மாணவரின் நுழைவையும் தடை செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்படவேண்டும்.
2) தேசிய உள்துறை தலைமை செயலாளர் புதியதொரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதில் பிறப்புப் பத்திரம் நிராகரிக்கப்பட்ட அனைத்து இந்திய குழந்தைகளின் நிலையை உடனடியாக ஆராய்ந்து அவர்களுக்கு இன்றிலிருந்து 60 நாட்களுக்குள் பிறப்புப் பத்திரம் கிடைக்கும்படி வழி செய்ய வேண்டும்.

உங்களின் உடனடி பதில் மற்றும் நடவடிக்கையை பெரிதும் மதிக்கிறோம்.

நன்றி,
இப்படிக்கு,

________________
பி. உதயகுமார்
(பொது செயலாளர்)