மனித உரிமைகள் கட்சியின் அன்பு கலை விழா

பிப்ரவரி 23, 2010
எதிர்வரும் 6-ஆம் திகதி மார்ச்சு மாதம் கிள்ளான் ஒக்கியன் மண்டபத்தில், மனித உரிமைகள் கட்சியின் நிதி திரட்டும் அன்பு கலை விழா நடைப்பெறவிருக்கின்றது. மனித உரிமைகள் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இந்நிதி திரட்டும் நிகழ்வு நாடு தழுவிய நிலையில் நடைப்பெறவுள்ளது. முற்றிலும் ஒரு புதிய முயற்சியாக தெருவில் நின்று போராளிகள் கூத்துக்கட்டுவதைப் போலவே, மேடையில்மலேசிய இந்தியர்களின் உரிமைப் போரட்டமும், அரசியல் தன்னாளுமை வியூகமும்எனும் கருப்பொருளில் ஆடல், பாடல்களுடன் கலைஞர்கள் கூத்துக்கட்டவிருக்கின்றனர்.

இந்நிகழ்வில் இண்ட்ராஃப் மக்கள் சக்தியின் சட்ட ஆலோசகர், மனித உரிமைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திரு.உதயகுமார் கலந்துகொண்டுமலேசிய இந்தியர்களின் அரசியல் தன்னாளுமை வியூகம்குறித்து உரையாற்றவிருக்கிறார். மேலும்மலேசிய இந்தியர்களின் அரசியல் நிலைமைகுறித்த கண்காட்சியும் இடம்பெறவிருக்கின்றது.

இந்நிகழ்வின் நுழைவுச்சீட்டின் விலை குறித்த விவரங்கள் :

பத்துபேர் அமர்ந்து விருந்துண்ணும் வட்டமேசை ரிம.500 வெள்ளி மற்றும் ரிம1000 வெள்ளி மட்டுமே.

தனியாள் நுழைவுச் சீட்டு ரிம.50 மற்றும் ரிம100 மட்டுமே.

இந்நிகழ்வு வெற்றிப்பெற நுழைவுச் சீட்டை வாங்கி ஆதரவு கொடுக்க நினைக்கும் அன்பர்கள் கீழ்கண்ட தொலைப்பேசி எண்களுடன் தொடர்பு கொள்ளவும்.

திரு.செயதாசு : 03-2282 5241 அல்லது 012-6362 287
திரு.கலைசெல்வம் : 012-5637614

Advertisements

தமிழ்மொழி வகுப்பு இல்லை. ஆனால் அராபிய மொழி வகுப்பு உண்டு. உதயகுமார் வருத்தம்

பிப்ரவரி 23, 2010மூலம் : மனித உரிமைகள் கட்சி


சிறீ பேராக் மலாய் பள்ளிக்கு 20 மில்லியன் மானியம், 523 தமிழ்ப்பள்ளிகளுக்கு??

பிப்ரவரி 13, 2010

செந்தூலில் அமைந்துள்ள ஒரு மலாய்ப் பள்ளியின் துணைக் கட்டிட நிர்மாணிப்பிற்காக 20 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக துணைப் பிரதமர் / கல்வி அமைச்சர் தான் சிறீ முகிதீன் யாசின் அறிவித்திருக்கிறார்.

”20 மில்லியன் மானியத் தொகையும், கோலாலம்பூர் மாநகர் மன்றம் வழங்கிய நிலமும் தயாராக இருக்கிறது. இனி நிர்மாணிப்பு வேலைகளை விரைவில் தொடங்கலாம்என்று கூறுகிறார் துணைப்பிரதமர். இன்னும் சில மாதங்களில் இப்பள்ளியின் துணைக்கட்டிட நிர்மாணிப்புப் பணி பூர்த்தியாகிவிடும். இதேப்போன்று 99 சதவிகிதம் மலாய் முசுலீம் மாணவர்களுக்காக, பேராக் மாநிலத்தில் அமைந்துள்ள துரோலாக் எனுமிடத்தில் மாரா அறிவியல் தொடக்கக் கல்லூரியைக் கட்டுவதற்கு மத்திய அரசாங்கம் 120 மில்லியன் ரிங்கிட்டை செலவு செய்துள்ளது.

ஆனால், 52 ஆண்டுகள் ஆகியும் 80 சதவிகித தமிழ்ப்பள்ளிகளும் அரசின் முழு மானியம் பெறுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. இப்பள்ளிகள் பாழடைந்த நிலையில் மாட்டுத் தொழுவம் மற்றும் வைப்பறையைப் போன்று காட்சியளிக்கின்றன.

2009-ஆம் ஆண்டின் நாட்டு வரவுசெலவு கணக்கில் முதலாவது மற்றும் இரண்டாவது பொருளாதார ஊக்கமளிப்புத் திட்டத்தின்கீழ் தமிழ்ப் பள்ளிகளுக்கென்று ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் 100 மில்லியன் ரிங்கிட் 523 தமிழ்ப்பள்ளிகளைச் சென்றடையவில்லை. “ பொருட்களின் விலையேற்றத்தின் பாதிப்பின் காரணமாக” ( தி ஸ்டார் 30/09/09, மற்றும் 13/10/09 எனும் திகதியிடப்பட்ட பிரதமருக்கான எங்களுடைய கடிதம் )

தமிழ்ப் பள்ளிகளை அரசின் முழு மானியம் பெற்றப் பள்ளிகளாக மாற்றாதிருப்பதற்கு இதுபோன்ற காரணங்களைத்தான் கூறுகிறார்கள். கீழே காண்பிக்கப்பட்டுள்ள கொள்கலனில் அமைந்துள்ள தமிழ்ப் பள்ளியின் படத்தைக் காண்க.

இதுதான் ஒரு மலாய்சியா??


மூலம் : மனித உரிமைகள் கட்சி

நீதி கேட்கும் முன்னாள் நிக்கோ தொழிற்சாலை ஊழியர்கள்!

பிப்ரவரி 9, 2010
பாகம் 1


தைப்பிங்கில் மனித உரிமைக் கட்சியின் கருத்தரங்கு

பிப்ரவரி 8, 2010

புதியதோர் புரட்சி செய்வோம்…