சோசலிச கட்சியின் மனுவை பினாங்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!

ஜூன் 30, 2011
Advertisements

பினாங்கில் அம்னோ, பெர்காசா குண்டர் கும்பலின் அராஜகம்!

ஜூன் 29, 2011
நேற்று இரவு 9.00 மணிக்கு பினாங்கு இண்ட்ராஃப் மக்கள் சக்திக்கு சோசலிச கட்சியிடமிருந்து ஓர் அவசர அழைப்பு வந்தது. அம்னோ மற்றும் பெர்காசா குண்டர் கும்பல் காவல் நிலையத்தின் வெளியே திரண்டிருக்கும் 40 சோசலிச கட்சியினருக்கும் கைதானவர்களின் குடும்பத்தினருக்கும் மருட்டல் விடுத்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அச்சமயம் பிறை அலுவலகத்தில் நடைப்பெற்றுக் கொண்டிருந்த இண்ட்ராஃபின் வாராந்திர சந்திப்புக் கூட்டத்தை ஒத்திவைத்துவிட்டு அனைவரும் கெப்பாலா பாதாசை நோக்கி விரைந்தோம்.
சுமார் 200க்கும் மேற்பட்ட அம்னோ மற்றும் பெர்காசா குண்டர்கள் காவல் நிலையத்தின் முன்பு கூச்சலிட்டுக் கொண்டு சாலையை வழிமறித்துத் திரண்டிருந்தனர். காவல்த்துறையினரோ வயதானவர்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்காது நடப்பதைக் கண்டும்காணாதது போல் நின்றுகொண்டிருந்தனர்.
அன்று நடைப்பெற்ற அப்பரபரப்பான சம்பவத்தின் காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.


பாட்டாளி மக்களின் பிரதிநிதியை கம்யூனிசவாதி என முத்திரைக் குத்தும் அம்னோ அரசாங்கம்!

ஜூன் 27, 2011

”போதும் ஓய்வெடுங்கள்” என பாரிசான் அரசாங்கத்தை கோரும் வகையிலான கருப்பொருளில் நாடு தழுவிய நிலையில் மலேசிய சோசலிச கட்சி நிகழ்த்திய பிரச்சாரத்தின் போது, வட மாநிலங்களில் பிரச்சாரம் செய்துவந்த குழுவை காவல்த்துறையினர் அராஜகமான முறையில் கைது செய்ததோடு, சின் பெங், ரசீட் மைடின் ஆகியோரது முகங்கள் பதித்த சட்டைகள் அணிந்திருந்தமைக்காக 30 சோசலிச போராளிகளின்மீது தேச நிந்தனைச் சட்டம் கொண்டு வழக்கும் பதிவு செய்திருக்கின்றது மலேசிய அம்னோ அரசாங்கம்! அதுமட்டுமல்லாது, துண்டு அறிக்கைகளை விநியோகம் செய்ததற்காக அச்சு ஊடக மற்றும் பிரசுரிப்புச் சட்டத்திலும் , மாமன்னருக்கு எதிராக செயல்படுவதாக குற்றஞ்சாட்டி சட்டப்பிரிவு 122-இன் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து இண்ட்ராஃப் மக்கள் சக்தி / மனித உரிமைக் கட்சியின் தேசிய ஆலோசகர் திரு.நா.கணேசன் கருத்துரைக்கையில், அம்னோ அரசாங்கத்தின் சட்டவிரோதக் கைதானது சனநாயகத்திற்கு இழைத்த கொடுமை எனவும், ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்படவுள்ள 30 சோசலிச போராளிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

கல்வித்துறையில் தொடர்ந்து எட்டி உதைக்கப்படும் இந்திய மாணவர்கள்!

ஜூன் 18, 2011

நேற்று 17 சூன் 2011 பினாங்கு வடகிழக்கு மாவட்ட காவல்த்துறை நிலையத்தில் இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியினர் இந்திய மாணவர்களுக்கு எதிராக தொடர்ந்து தொடுக்கப்பட்டு வரும் ஓரங்கட்டுதலை எதிர்த்து புகார் செய்துள்ளனர். அரசு கல்வி உபகாரச் சம்பளம் மற்றும் பிற கல்வி வாய்ப்புகள் சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஏழை இந்திய மாணவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்துவருவதை இண்ட்ராஃப் மக்கள் சக்தி இயக்கம் கடுமையாக கண்டிப்பதாக இண்ட்ராஃப் ஆலோசகர் திரு.கணேசன் கூறினார்.நாடுதழுவிய நிலையில் செய்யப்பட்ட புகார்கள் சேகரிக்கப்பட்டு மலேசிய ஐக்கிய நாட்டவை அலுவகத்தில் அடுத்த வாரம் 22 சூன் 2011-ல் சமர்ப்பிக்கப்படவுள்ளது. தனிப்பட்ட முறையிலோ அல்லது இயக்கம்வழி செய்த புகார்களையோ சமர்ப்பிக்க எண்ணம் கொண்டவர்கள் மனித உரிமைக் கட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.

http://www.humanrightspartymalaysia.com/contact-us/

போராட்டம் தொடரும்…


நம் சமூக உயர்வு அரசியல் விழிப்புணர்வில்தான் உள்ளது!

ஜூன் 8, 2011

போராட்டம் தொடரும்…


15/38 திட்டம்!

ஜூன் 7, 2011

இந்திய மலேசியர்களின் பெரும்பான்மை தொகுதிகளை உருவாக்கி அரசியல் பலம் பெருவதற்கு, “15/38 அரசியல் தன்னாளுமை வியூகத்திற்கு” நம்மால் ஆன ஆதரவினை வழங்குவோம். தேசிய வளர்ச்சி வெள்ளோட்டத்தில் இந்தியர்களின் பங்கினை அதிகரிப்பதற்கும், இனவாத, மதவாத கொள்கைகளை வேரறுப்பதற்கும் நமக்குத் தேவையான அரசியல் பலத்தினை உண்டாக்குவோம்!