சந்திரயான் – 1 விண்ணைத் தொட்டது!

ஒக்ரோபர் 22, 2008

இந்தியா தனது முதலாவது நிலவுக்கான விண்கலத்தை இன்று அதிகாலை (இந்திய நேரப்படி) 6.22 மணியளவில் வெற்றிகரமாக பாய்ச்சி புதிய வரலாற்றைப் படைத்துள்ளது. இவ்விண்கலம் சென்னையிலிருந்து வடக்கில் 80 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிறீ அரிகோட்டா சத்தீசு தவான் ஏவுதளத்திலிருந்து விண்ணில் பாய்ச்சப்பட்டது.

சந்திரயான் 1 எனும் விண்கலத்தை சுமந்திருந்த பி.எசு.எல்.வி சி-11 என அழைக்கப்படும் விண்ணோடம் விண்ணில் செலுத்தப்பட்டு திட்டமிட்டபடி 4 கட்டங்களாகப் பிரிந்தது. இதில் நான்காவது மற்றும் இறுதிக் கட்டத்தில் விண்ணோடம் பிரிந்ததும் சந்திரயான்-1 விண்கலம் தனது புவிப் பாதையை வெற்றிகரமாக அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

விண்ணோடம் ஏவப்பட்ட 1,100 வினாடிகளில் சந்திரயான்-1 திட்டமிட்ட புவிப் பாதையை அடைந்ததாக ‘இசுரோ’ தலைவர் மாதவன் நாயர் உறுதிப்படுத்தினார்.

தற்போது சந்திரயான் -1 புவிவட்டப் பாதையில் இணைந்து புவியை வலம் வரத் தொடங்கியுள்ளதாகவும், சந்திரயான் -1 வலம் வரும் சுற்றுவட்டப்பாதை புவியிலிருந்து 250 கி.மீ உயரமாகவும் 23000 கி.மீட்டர் உயரமாகவும் மாற்றப்படும் என சிறீ அரிகோட்டா ஏவுதளத்தின் பேச்சாளர் திரு.எசு.சதீசு கூறினார்.

சந்திரயான் – 1 புவியை வலம் வந்து நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிறுத்தப்படுவதற்கு பெங்களூரிலுள்ள பைலாலு கட்டுப்பாட்டு மையம் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. சந்திரயான் -1 நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைய 15 நாட்கள் எடுக்கும் என இசுரோ கட்டுப்பாட்டு மையத்திலுள்ள விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

சந்திரயான்-1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியதன் மூலம், நிலவுக்கு ஆளில்லா விண்கலம் அனுப்பிய ஆறாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதற்குமுன் அமெரிக்கா, ருசியா, ஐரோப்பா, சப்பான், சீனா ஆகிய வல்லரசுகள் நிலவிற்கு விண்கலம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவிற்குப் போட்டியாக இருக்கும் சீனாவைவிட அதிக தொழில்நுட்பமும் மதிநுட்பமும் இந்தியா பெற்றிருப்பதாக திரு.சதீசு கூறினார்.

“விண்வெளி ஆய்வுக்காக இந்திய அரசு கோடிக் கணக்கில் செலவு செய்வதை விரும்பாததாலும், இத்திட்டத்திற்கு அரசியல்வாதிகளின் எதிர்ப்பு இருப்பதாலும் சீனாவைவிட சற்று மந்தமாகச் செயல்பட வேண்டியுள்ளது. எங்களுக்கு போதிய நிதி கிடைத்தால் நிலவிற்கு முதல் இந்தியரைக் கால்பதிக்க வைக்க எங்களால் முடியும்.” என்று ‘இசுரோ’வின் தலைவர் திரு.மாதவன் நாயர் தெரிவித்தார்.

2011-இல் இந்தியா நிலவிற்கு விண்கலம் ஒன்றினை அனுப்பி தரையிறங்கச் செய்து பல ஆராய்ச்சிகளை அங்கு மேற்கொள்ளவிருக்கிறது. அதனையடுத்து முதல் இந்தியனை அங்கு கொண்டுச் செல்லும் திட்டமும் வழிவகுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டங்களுக்கு முன்னோடியாக சந்திரயான் – 1 விண்கலம் அமையும் என்றால் அது மிகையாகாது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பல ஆய்வுகளுக்கிடையில் உறுவான சந்திரயான் – 1 இரண்டாண்டுகளுக்கு நிலவின் சுற்று வட்டப்பாதையில் வலம் வந்து ஆய்வுகள் மேற்கொள்ளும். நிலவின் மேற்பரப்பை துல்லியமாகப் படம் பிடித்து அவ்வப்போது பூமிக்குத் தகவல் அளிப்பதோடு மட்டுமல்லாது, புவியில் கிடைக்கும் கனிமங்களின் சத்திக்கு பதிலாக மாற்று சத்தியைப் பெற்றுத் தரும் கனிமங்களையும் ஆய்வும் செய்யும்.

விண்வெளி என்பது மனிதனின் எதிர்காலக் கனவுகளை நிசமாக்கும் இருப்பிடம்! நிலவிற்கும் அப்பாற்பட்ட ரகசியங்களை உணர வேண்டுமென்றால், முதலில் நாம் நிலவிற்கு சென்றாக வேண்டும்! நிலாதான் விண்வெளியை எட்டிப் பார்க்கும் முதற்படி!” என்று திரு.சதீசு கூறினார்.

இந்தியாவின் எதிர்காலக் கனவுகள் நிசமாக அனைவரும் வாழ்த்துவோம். இக்கனவு திட்டங்களைச் செயல்படுத்துவதன் வழி முதற் தமிழன் நிலவைத் தொட்டால் அது நமக்குப் பெருமையே…

Advertisements

சந்திரயான் – 1 விண்ணைத் தொட்டது!

ஒக்ரோபர் 22, 2008

இந்தியா தனது முதலாவது நிலவுக்கான விண்கலத்தை இன்று அதிகாலை (இந்திய நேரப்படி) 6.22 மணியளவில் வெற்றிகரமாக பாய்ச்சி புதிய வரலாற்றைப் படைத்துள்ளது. இவ்விண்கலம் சென்னையிலிருந்து வடக்கில் 80 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிறீ அரிகோட்டா சத்தீசு தவான் ஏவுதளத்திலிருந்து விண்ணில் பாய்ச்சப்பட்டது.

சந்திரயான் 1 எனும் விண்கலத்தை சுமந்திருந்த பி.எசு.எல்.வி சி-11 என அழைக்கப்படும் விண்ணோடம் விண்ணில் செலுத்தப்பட்டு திட்டமிட்டபடி 4 கட்டங்களாகப் பிரிந்தது. இதில் நான்காவது மற்றும் இறுதிக் கட்டத்தில் விண்ணோடம் பிரிந்ததும் சந்திரயான்-1 விண்கலம் தனது புவிப் பாதையை வெற்றிகரமாக அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

விண்ணோடம் ஏவப்பட்ட 1,100 வினாடிகளில் சந்திரயான்-1 திட்டமிட்ட புவிப் பாதையை அடைந்ததாக ‘இசுரோ’ தலைவர் மாதவன் நாயர் உறுதிப்படுத்தினார்.

தற்போது சந்திரயான் -1 புவிவட்டப் பாதையில் இணைந்து புவியை வலம் வரத் தொடங்கியுள்ளதாகவும், சந்திரயான் -1 வலம் வரும் சுற்றுவட்டப்பாதை புவியிலிருந்து 250 கி.மீ உயரமாகவும் 23000 கி.மீட்டர் உயரமாகவும் மாற்றப்படும் என சிறீ அரிகோட்டா ஏவுதளத்தின் பேச்சாளர் திரு.எசு.சதீசு கூறினார்.

சந்திரயான் – 1 புவியை வலம் வந்து நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிறுத்தப்படுவதற்கு பெங்களூரிலுள்ள பைலாலு கட்டுப்பாட்டு மையம் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. சந்திரயான் -1 நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைய 15 நாட்கள் எடுக்கும் என இசுரோ கட்டுப்பாட்டு மையத்திலுள்ள விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

சந்திரயான்-1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியதன் மூலம், நிலவுக்கு ஆளில்லா விண்கலம் அனுப்பிய ஆறாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதற்குமுன் அமெரிக்கா, ருசியா, ஐரோப்பா, சப்பான், சீனா ஆகிய வல்லரசுகள் நிலவிற்கு விண்கலம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவிற்குப் போட்டியாக இருக்கும் சீனாவைவிட அதிக தொழில்நுட்பமும் மதிநுட்பமும் இந்தியா பெற்றிருப்பதாக திரு.சதீசு கூறினார்.

“விண்வெளி ஆய்வுக்காக இந்திய அரசு கோடிக் கணக்கில் செலவு செய்வதை விரும்பாததாலும், இத்திட்டத்திற்கு அரசியல்வாதிகளின் எதிர்ப்பு இருப்பதாலும் சீனாவைவிட சற்று மந்தமாகச் செயல்பட வேண்டியுள்ளது. எங்களுக்கு போதிய நிதி கிடைத்தால் நிலவிற்கு முதல் இந்தியரைக் கால்பதிக்க வைக்க எங்களால் முடியும்.” என்று ‘இசுரோ’வின் தலைவர் திரு.மாதவன் நாயர் தெரிவித்தார்.

2011-இல் இந்தியா நிலவிற்கு விண்கலம் ஒன்றினை அனுப்பி தரையிறங்கச் செய்து பல ஆராய்ச்சிகளை அங்கு மேற்கொள்ளவிருக்கிறது. அதனையடுத்து முதல் இந்தியனை அங்கு கொண்டுச் செல்லும் திட்டமும் வழிவகுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டங்களுக்கு முன்னோடியாக சந்திரயான் – 1 விண்கலம் அமையும் என்றால் அது மிகையாகாது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பல ஆய்வுகளுக்கிடையில் உருவான சந்திரயான் – 1 இரண்டாண்டுகளுக்கு நிலவின் சுற்று வட்டப்பாதையில் வலம் வந்து ஆய்வுகள் மேற்கொள்ளும். நிலவின் மேற்பரப்பை துல்லியமாகப் படம் பிடித்து அவ்வப்போது பூமிக்குத் தகவல் அளிப்பதோடு மட்டுமல்லாது, புவியில் கிடைக்கும் கனிமங்களின் சத்திக்கு பதிலாக மாற்று சத்தியைப் பெற்றுத் தரும் கனிமங்களையும் ஆய்வும் செய்யும்.

கண்டங்களின் பெயர்ச்சி

திசெம்பர் 4, 2007

எல்லோரும் உலக வரைப்படத்தைப் பார்த்திருப்பர். அதில் கண்டங்களின் வடிவையும் இடங்களையும் பார்த்திருப்பர். என்றாலும்கூட அவர்கள் இன்று காண்பது போலவே உலகம் என்றும் ஒரே அமைப்பில் காணப்பட்டதில்லை. எழுபது ஆண்டுகளுக்கு முன்னால், அல்பிரட் வெக்கனர் என்னும் பெயரிய நிலநூல் அறிஞர் ஒருவர், இன்று காணப்படும் கண்டங்கள் இப்போது இருப்பதை விட மிக நெருக்கமாக இருந்ததாகக் கூறுகின்றார். அக்கண்டங்கள் இப்போது இருக்கும் இடங்களுக்கு மெல்ல மெல்ல பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் பெயர்ந்து வந்தன. இங்குக் காணப்படும் வரைப்படங்கள் அவ்வரலாற்றைக் காட்டுகின்றன.

முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன் நீங்கள் உலக வரைப்படத்தைப் பார்ப்பீர்கள் என்றால் அது ஏறக்குறைய இவ்வாறுதான் காட்சி அளித்திருக்கும். இக்கண்டங்கள் அனைத்தும் ஒரே மாபெரும் கண்டமாக ஒன்றொடன்று முற்றிலும் இணைந்திருந்தன. அதனைப் பெங்கியா என்றழைக்கின்றனர்.

பதினெட்டுக் கோடி ஆண்டுகளுக்கு முன் ஒரே கண்டமாக இருந்த பெங்கியா என்னும் இம்மாபெரும் கண்டமானது, வடக்குத் தெற்காக இரு பிரிவாகப் பிரிந்தது. வடக்குப் பிரிவு லோரேசியா என்று அழைக்கப்படுகிறது. தெற்குப் பிரிவு கோண்டுவானா என்றழைக்கப்பெறுகிறது.

பதிமூன்றரைக்கோடி ஆண்டுகளுக்கு முன் இன்றைய வட அமெரிக்கா ஐரோப்பாவினின்றும் ஆசியாவினின்றும் பெயரத்தொடங்கியது.

ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன் இன்றைய கண்டங்கள் மேலும் தொலைவாகப் பெயர்ந்தன. அவற்றின் தனித் தோற்றங்களை உங்களால் அடையாளம் காண முடிகின்றதா? இக்காலகட்டத்தில் ஆஸ்திரேலியா இன்னமும் தெந்துருவத்துடன் ( அண்டார்ட்டிக்கா ) இணைந்திருப்பதைக் கவனியுங்கள்.

இந்த வரைப்படம் கண்டங்களின் இன்றைய இடங்களைக் காட்டுகின்றது. ஆனால் அவை இன்னமும் தொடர்ந்து பெயர்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வட அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஓர் ஆண்டுக்கு இரண்டு செண்டி மீட்டர் இடைவெளியில் ஒன்றைவிட்டு ஒன்று பெயர்ந்து கொண்டுள்ளன. இன்றிலிருந்து எதிர்வரும் 5 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு கண்டங்களின் தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பதை நீங்களே ஊகித்து ஓர் உலக வரைப்படத்தை வரைந்து பாருங்களேன். இன்னும் 5 கோடி ஆண்டுகாலத்தில் அவை ஆயிரம் கிலோ மீட்டர் இடைவெளியைக் கொண்டிருக்கும்.

நன்றி : தமிழ் நெறி

இந்தியாவின் முதல் சந்திரனுக்கான விண்கலம்

நவம்பர் 18, 2007

இந்திய விண் ஆய்வுக் கழகம் வருகின்ற 30-ஆம் திகதி மார்ச் மாதம் 2008-இல் சந்திராயன் – 1 எனும் விண்கலத்தை சந்திரனுக்கு பாய்ச்ச உள்ளது. Polar Satellite Launch Vehicle (P.S.L.V.) எனும் துணைக்கோளை சென்னையிலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் சிரீ ஹரிகோட்டா விண்கல மையத்திலிருந்து பாய்ச்சவுள்ளதாக விக்ரம் சாராபாய் விண்கல மையத்தில் துணைப்பேராசிரியராக இருக்கும் டாக்டர் ஆதிமூர்த்தி தெரிவித்தார்.

இந்த ஆய்வின் முக்கிய நோக்கமானது, சந்திரனில் “Helium” எனப்படும் வாயு அதிகம் இருப்பதால் அந்த வாயுவைக் கொண்டு பூமியின் கனிமங்களில் கிடைக்கப்பெறும் சக்திகளுக்கு பதிலாக மாற்று சக்தியாக இதனைப் பயன்படுத்துவதற்கே என அவர் மேலும் கூறினார்.

அதோடு இந்தியாவின் அடுத்த கட்ட ஆராய்சியாக, விண்வெளியில் நிலையம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். இந்த விண்வெளி நிலையம் அமைக்கப்படுமாயின் இந்திய விஞ்ஞானிகள் ஆய்வுகள் மேற்கொள்ள வசதியாக இருக்கும் எனவும் இதற்காக இந்தியாவும் அமெரிக்காவும் உடன்படிக்கைப்படி வேலைகளை ஆரம்பிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியனின் கனவுகள் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்..