ஏன் இந்த கொலைவெறி நஜீப்?

திசெம்பர் 27, 2011

மலேசிய இந்தியர்கள் 54 ஆண்டுகளாக ‘மலாய் மேலாண்மை கொள்கையினால் கொலைவெறிக்குள்ளாகும் நிலை மாற வேண்டும். அதற்கு முதலில் அம்னோ ஒழியவேண்டும்!

Advertisements

பினாங்கில் கர்நாடக இசை கருத்தரங்கு

மே 18, 2011

அன்புடையீர்,

பினாங்கில் கர்நாடக இசை பற்றிய கருத்தரங்கொன்று எதிர்வரும் 29 -ம் திகதி மே மாதம் , நடைப்பெறவுள்ளது. இந்நிகழ்வானது, கர்நாடக இசையின் வரலாறு மற்றும் நம் உடலுக்கு ராகங்கள் மற்றும் தாளங்களினால் ஏற்படும் நன்மைகளை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றது.

இந்நிகழ்வின் ஏற்பாட்டாளர் தனது ஆய்வின் வழி , அயல் நாடுகளில் சமர்பித்த கட்டுரைகளை கொடுக்கவுள்ளார்.

கர்நாடக இசையின் தாத்பரியத்தை புரிந்து கொள்ள மேலும் அதில் உள்ள உன்னதமான அம்சங்களை தெரிந்து கொள்ள உதவும் வகையில் இக்கருத்தரங்கு அமையவிருப்பதாகவும், மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கும் நினைவாற்றல் திறமையினை பெறவும் இசை வழிகாட்டுவதாகவும் நிகழ்வின் ஏற்பாட்டாளர் புஷ்கலா தெரிவித்துள்ளார்.

இப்பயன்மிகு கருத்தரங்கில் கலந்து பயன்பெற மாணவர்களையும் பெற்றோர்களையும் நிகழ்வின் ஏற்பாட்டாளர் அழைக்கிறார்.

இடம் : அருள்மிகு கருமாரியம்மன் கோயில், ஜாலான் தோடாக், செபராங் ஜெயா, 13700 பிறை, பினாங்கு.

திகதி : 29/05/2011 (ஞாயிறு)

நேரம் : காலை 8.00 மணி முதல் நண்பகல் 1.00 மணிவரை

மர்ம இசைத்தட்டு…

பிப்ரவரி 29, 2008

அண்மைய காலமாக கெடா மற்றும் பினாங்கு மாநிலங்களில் மர்ம இசைத்தட்டு ஒன்று இந்திய மக்களின் மத்தியில் தவழ்ந்துக் கொண்டிருந்தது. இந்த இசைவட்டை சோஸியலிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள் உருவாக்கியுள்ளதாக நம்பப்படுகிறது. இவர்கள் தமிழ் சினிமா பாடல்களின் இசையில், வரிகளை மாற்றிப் பாடியுள்ளனர். ‘சென்னை 600018’, ‘சித்திரம் பேசுதடி’, ‘திருவிளையாடல் ஆரம்பம்’ போன்ற படங்களின் பாடல்கள் இந்த இசைவட்டில் இடம்பெற்றிருக்கின்றன. இப்பாடல்களின் வரிகள், முதலாளி வர்கத்தின் கொடுமையையும், தொழிலாளிகள் படும் துன்பத்தினையும் சித்தரிப்பதாக உள்ளன. ‘மாற்றம் வேண்டும்’ என இப்பாடல்கள் நமக்குக் கூறும் அறிவுரை.

>மர்ம இசைத்தட்டு…

பிப்ரவரி 29, 2008

>அண்மைய காலமாக கெடா மற்றும் பினாங்கு மாநிலங்களில் மர்ம இசைத்தட்டு ஒன்று இந்திய மக்களின் மத்தியில் தவழ்ந்துக் கொண்டிருந்தது. இந்த இசைவட்டை சோஸியலிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள் உருவாக்கியுள்ளதாக நம்பப்படுகிறது. இவர்கள் தமிழ் சினிமா பாடல்களின் இசையில், வரிகளை மாற்றிப் பாடியுள்ளனர். ‘சென்னை 600018’, ‘சித்திரம் பேசுதடி’, ‘திருவிளையாடல் ஆரம்பம்’ போன்ற படங்களின் பாடல்கள் இந்த இசைவட்டில் இடம்பெற்றிருக்கின்றன. இப்பாடல்களின் வரிகள், முதலாளி வர்கத்தின் கொடுமையையும், தொழிலாளிகள் படும் துன்பத்தினையும் சித்தரிப்பதாக உள்ளன. ‘மாற்றம் வேண்டும்’ என இப்பாடல்கள் நமக்குக் கூறும் அறிவுரை.

http://hindrafsupporters.ning.com/xn_resources/widgets/music/swf/xspf_player.swf

பாட்டொன்று கேட்டேன்…..

ஒக்ரோபர் 24, 2007

நாம் இன்பமாக இருக்கும்பொழுது கண்ணுக்குத் தெரியாத ஆண்டவன், கஷ்டம் என்று ஒரு மாயைத்திரை நம்மை மறைக்கும்பொழுது அத்திரையில் இறைவனின் அன்புத் திருவுருவம் தெரிவதேன்?

இன்பத்தில் திளைத்திருக்கும் மனிதன் தன்னையே மறந்திருக்கும்பொழுது கடவுளை மட்டும் ஞாபகம் வைத்திருக்க முடியுமா என்ன… மனிதன் பலசமயங்களில் சந்தர்ப்ப சூழ்நிலைகளோடு எப்படியெல்லாம் உறவாடுகிறான் என்பதனைப் பார்க்கும்பொழுது, இந்த மனிதக்குலம் உலகில் இன்றும் நிலைத்திருக்கும் இரகசியம் வெளிச்சம்போட்டுக் காட்டப்படுகிறது.

சந்தர்ப்பங்களை தன் வசப்படுத்தும் கலையினைக் கற்றவன் மனிதன். அதற்காக அவன் தியாகம் செய்தது நிம்மதி, தூக்கம் இன்னும் பலப் பல.

மனிதன் தூங்குகிறானோ இல்லையோ, இதோ நம்முள் தூங்கிக்கொண்டிருக்கும் ஒரே விஷயம் நம்முடைய வாழ்க்கைத் தொடர்பான தேடல்கள்தான். இந்தப் பாடல்கள் சில சமயம் என்னைத் தட்டி எழுப்பி இருக்கின்றன. நீங்களும் கேளுங்களேன், நீங்கள் ஏற்கனவே கேட்டப் பாடல்கள்தான்.

Powered by eSnips.com