சொந்த நாட்டிலேயே கள்ளக்குடியேறிகளைப்போல் வாழ்க்கை!

மார்ச் 17, 2010
ஏழை இந்திய மலேசியர்கள் எதிர்நோக்கிவரும் பல்வேறு பிரச்சனைகளில் முதன்மையாகத் திகழ்வது பிறப்புப் பத்திரம் மற்றும் அடையாள அட்டை இல்லாமை எனும் பிரச்சனைதான். சொந்த நாட்டிலேயே சுமார் ஒரு லட்சம் இந்திய மலேசியர்கள் கள்ளக்குடியேறிகளைப் போல் வாழ்ந்து வருகிறார்கள் என புள்ளி விவரங்கள் அறிவிக்கின்றன. நாளுக்கு நாள் இப்பிரச்சனை தொடர்ச் சங்கிலியைப்போல் நீண்டுகொண்டே செல்கிறது.

அண்மையில் இண்ட்ராஃப் தலைமையிலான பிரித்தானிய மக்களவை கருத்தரங்கு நிகழ்வில், ஒரு தமிழர் குடும்பத்தின் அவல நிலையினை திரு.நரகன் பங்கேற்பாளர்களிடம் விளக்கிக்காட்டி, ஏழை இந்திய மலேசியர்கள் எவ்வாறு ஓரங்கட்டுதலுக்கு உள்ளாகிறார்கள் என்பதனை நன்கு படம்பிடித்துக் காட்டியிருந்தார்.

பினாங்கில் கம்போங் பாகான் செராய், பெர்மாத்தாங் பாவோ எனுமிடத்தில் மிக வரிய நிலையில் வாழ்க்கையை ஓட்டிவரும் அக்குடும்பத்தினரின் நேர்க்காணலின் ஒரு பகுதி இதோ :-

பாகம் 1

போராட்டம் தொடரும்…

Advertisements

மனித உரிமைகள் கட்சியின் அன்பு கலை விழா

பிப்ரவரி 23, 2010
எதிர்வரும் 6-ஆம் திகதி மார்ச்சு மாதம் கிள்ளான் ஒக்கியன் மண்டபத்தில், மனித உரிமைகள் கட்சியின் நிதி திரட்டும் அன்பு கலை விழா நடைப்பெறவிருக்கின்றது. மனித உரிமைகள் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இந்நிதி திரட்டும் நிகழ்வு நாடு தழுவிய நிலையில் நடைப்பெறவுள்ளது. முற்றிலும் ஒரு புதிய முயற்சியாக தெருவில் நின்று போராளிகள் கூத்துக்கட்டுவதைப் போலவே, மேடையில்மலேசிய இந்தியர்களின் உரிமைப் போரட்டமும், அரசியல் தன்னாளுமை வியூகமும்எனும் கருப்பொருளில் ஆடல், பாடல்களுடன் கலைஞர்கள் கூத்துக்கட்டவிருக்கின்றனர்.

இந்நிகழ்வில் இண்ட்ராஃப் மக்கள் சக்தியின் சட்ட ஆலோசகர், மனித உரிமைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திரு.உதயகுமார் கலந்துகொண்டுமலேசிய இந்தியர்களின் அரசியல் தன்னாளுமை வியூகம்குறித்து உரையாற்றவிருக்கிறார். மேலும்மலேசிய இந்தியர்களின் அரசியல் நிலைமைகுறித்த கண்காட்சியும் இடம்பெறவிருக்கின்றது.

இந்நிகழ்வின் நுழைவுச்சீட்டின் விலை குறித்த விவரங்கள் :

பத்துபேர் அமர்ந்து விருந்துண்ணும் வட்டமேசை ரிம.500 வெள்ளி மற்றும் ரிம1000 வெள்ளி மட்டுமே.

தனியாள் நுழைவுச் சீட்டு ரிம.50 மற்றும் ரிம100 மட்டுமே.

இந்நிகழ்வு வெற்றிப்பெற நுழைவுச் சீட்டை வாங்கி ஆதரவு கொடுக்க நினைக்கும் அன்பர்கள் கீழ்கண்ட தொலைப்பேசி எண்களுடன் தொடர்பு கொள்ளவும்.

திரு.செயதாசு : 03-2282 5241 அல்லது 012-6362 287
திரு.கலைசெல்வம் : 012-5637614


தீபாவளி சோகம் : கண்கலங்கும் தாய்

ஒக்ரோபர் 19, 2009


பாகம் 1
பாகம் 2
திருமதி பரமேசுவரிக்கு உதவிக்கரம் நீட்ட எண்ணங்கொண்டவர்கள் அவரை நேரடியாகத் தொடர்புக் கொள்ளலாம்.

திருமதி பரமேசுவரி கைப்பேசி எண் : 017-4293960


மலாக்கா ரும்பியா தமிழ்ப்பள்ளிக்கு உடனடியாக நிதியுதவி தேவைப்படுகிறது!

மே 25, 2009
மக்கள் ஓசை 24/05/09 பக்கம் 1


மக்கள் ஓசை 24/05/09 பக்கம் 13 (தொடர்ச்சி)

மலாக்கா மக்கள் ஓசை நிருபர் திரு.சரவணதீர்த்தா அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இச்செய்தி இங்கு பதிவிடப்படுகிறது. மலாக்கா ரும்பியா தமிழ்ப்பள்ளிக்கு நிலம் வாங்குவதற்கு மூன்றரை லட்சம்வரை நிதியுதவித் தேவைப்படுவதாலும், அப்பணத்தை மூன்றே மாதத்திற்குள் செலுத்தி நிலத்தைப் பெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாலும், பொதுமக்கள் தயவு செய்து தங்களால் இயன்ற நிதியை இப்பள்ளிக்கு காணிக்கையாக்குமாறு திரு.சரவணதீர்த்தா கேட்டுக்கொள்கிறார்.

நன்கொடைகளை கீழ்காணும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.

Maybank : 504124002001

காசோலையாக இருந்தால் , Lembaga Pengurus SJK(T) Rumbia எனும் பெயரில் அனுப்பவும்.

மேலும் தகவல்களுக்கு நீங்கள் தொடர்புக்கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண்கள் :

06-3163180 / 010-2086265 , 019-6565004 / 013-6132191


திருமதி சத்தியவதிக்கு நிதியுதவி தேவைப்படுகிறது!

மே 5, 2009

சிறுநீரகக் கோளாறினால் அவதியுற்றுவரும் திருமதி சத்தியவதி மாடசாமி என்பவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக நிதி திரட்டும் ஒரு விருந்து நிகழ்வு எதிர்வரும் 9-ஆம் திகதி மே மாதம் சுங்கைபட்டாணி சரசுவதி தமிழ்ப் பள்ளி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, அன்புள்ளங்கள் பலரும் திருமதி சத்தியவதி மாடசாமிக்கு உதவி புரிய முன்வர வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய நபர் :

திரு.சேகர், 016-435 6853
மின்னஞ்சல் முகவரி : muniness@gmail.com


திருமதி சத்தியவதிக்கு நிதியுதவி தேவைப்படுகிறது!

மே 5, 2009

சிறுநீரகக் கோளாறினால் அவதியுற்றுவரும் திருமதி சத்தியவதி மாடசாமி என்பவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக நிதி திரட்டும் ஒரு விருந்து நிகழ்வு எதிர்வரும் 9-ஆம் திகதி மே மாதம் சுங்கைபட்டாணி சரசுவதி தமிழ்ப் பள்ளி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, அன்புள்ளங்கள் பலரும் திருமதி சத்தியவதி மாடசாமிக்கு உதவி புரிய முன்வர வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய நபர் :

திரு.சேகர், 016-435 6853
மின்னஞ்சல் முகவரி : muniness@gmail.com


திரு.செயதாசிற்காக சிறுநீரக மருத்துவ நிதி கலை நிகழ்ச்சி

ஏப்ரல் 22, 2009
நாடறிந்த இண்ட்ராஃப் மக்கள் சக்தி போராட்டவாதியான திரு.செயதாசு சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் அவதிப்பட்டுவருவது அனைவரும் அறிந்த ஒன்றே. தற்சமயம் வாரத்திற்கு மூன்று முறை சிறுநீரக சுத்திகரிப்பு செய்தும் வருகிறார். மலேசியாவில் வாழும் சிறுபான்மை இனத்தவரின் உரிமைகளுக்காக தனது உடலநலத்தையும் ஒரு பொருட்டாக கருதாமல் களத்தில் இறங்கிய திரு.செயதாசு அவர்களுக்கு இந்த சமுதாயம் பல வகையில் கடன்பட்டிருக்கிறது.

பலரும் சாக்கு போக்கு சொல்லி தட்டிக் கழிக்கும் தருணங்களில் ஒரு செயல்வீரராக காட்சியளித்து சந்தர்ப்பவாதிகளுக்கு பாடம் புகட்டிய அந்த வீரருக்கு நாம் செய்ய வேண்டிய ஒரு கடமையுளது.

எதிர்வரும் மே மாதம் 1-ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணியளவில், கிள்ளான் ஒக்கியன் அரங்கத்தில் திரு.செயதாசின் சிறுநீரகங்கள் மாற்று அறுவை சிகிச்சைக்காக நன்கொடை திரட்டும் கலை நிகழ்ச்சி விருந்தோடு நடைப்பெறவுள்ளது. இக்கலை நிகழ்வின் நுழைவுச் சீட்டு ஆளுக்கு தலா ரி. 100 மட்டுமே. தற்சமயம் நாடு தழுவிய நிலையில் இச்சீட்டுகள் விற்பனையாகி வருகின்றன.

கைமாறு எதிர்பாராது அவர் ஆற்றிய சமூகத் தொண்டிற்கு, நம்மாலான கைமாறு இது என மனதிற்கொண்டு இச்சீட்டுகளை அன்பர்கள் வாங்கி நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறோம்.

நுழைவுச் சீட்டுகளை வாங்க எண்ணம் கொண்ட அன்பர்கள் கீழ்கண்ட அலைப்பேசி எண்களுடன் தொடர்புக் கொள்ளவும்.

வடமாநிலங்களில் வசிப்போர் :-

திருமதி சரஸ்வதி : 012-7162884

திரு.கலை : 012-5637614

கூட்டரசு பிரதேசம், சிலாங்கூர் மற்றும் தென் மாநிலங்களில் வசிப்போர் :-

திரு.கே.எம்.ராஜ் : 019-2295445

திரு.சிவா : 019-6944693

திரு.செயதாசு : 012-6362287

அனைவரும் திரண்டு வருக.. ! ஒருமித்த உணர்வுடன் கடமை வீரர்களாய் செயல்படுவோம் ! நிகழ்வை வெற்றிப் பெறச் செய்வோம்.. வாரீர்!

போராட்டம் தொடரும்