பாட்டாளி மக்களின் பிரதிநிதியை கம்யூனிசவாதி என முத்திரைக் குத்தும் அம்னோ அரசாங்கம்!

ஜூன் 27, 2011

”போதும் ஓய்வெடுங்கள்” என பாரிசான் அரசாங்கத்தை கோரும் வகையிலான கருப்பொருளில் நாடு தழுவிய நிலையில் மலேசிய சோசலிச கட்சி நிகழ்த்திய பிரச்சாரத்தின் போது, வட மாநிலங்களில் பிரச்சாரம் செய்துவந்த குழுவை காவல்த்துறையினர் அராஜகமான முறையில் கைது செய்ததோடு, சின் பெங், ரசீட் மைடின் ஆகியோரது முகங்கள் பதித்த சட்டைகள் அணிந்திருந்தமைக்காக 30 சோசலிச போராளிகளின்மீது தேச நிந்தனைச் சட்டம் கொண்டு வழக்கும் பதிவு செய்திருக்கின்றது மலேசிய அம்னோ அரசாங்கம்! அதுமட்டுமல்லாது, துண்டு அறிக்கைகளை விநியோகம் செய்ததற்காக அச்சு ஊடக மற்றும் பிரசுரிப்புச் சட்டத்திலும் , மாமன்னருக்கு எதிராக செயல்படுவதாக குற்றஞ்சாட்டி சட்டப்பிரிவு 122-இன் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து இண்ட்ராஃப் மக்கள் சக்தி / மனித உரிமைக் கட்சியின் தேசிய ஆலோசகர் திரு.நா.கணேசன் கருத்துரைக்கையில், அம்னோ அரசாங்கத்தின் சட்டவிரோதக் கைதானது சனநாயகத்திற்கு இழைத்த கொடுமை எனவும், ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்படவுள்ள 30 சோசலிச போராளிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
Advertisements

இசா சட்டத்தை துடைத்தொழிப்போம் – இண்ட்ராஃபின் அமைதி மறியல்

திசெம்பர் 14, 2009
இண்ட்ராஃப் வழக்கறிஞர்கள் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இரண்டாண்டுகள் பூர்த்தியடைந்ததை முன்னிட்டு, நேற்று பங்சாரில் இண்ட்ராஃபினர் அமைதி மறியலில் ஈடுபட்டனர். இம்மறியலில் திரு.செயதாசு கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார்.

பங்சார் சிறீ நாகேசுவரி ஆலயத்தை நோக்கி அமைதி ஊர்வலம்

அமைதி மறியல் சட்டத்திற்குப் புறம்பானது அல்லபொ.உதயகுமார் விளக்கம்
போராட்டம் தொடரும்

உதயாவின் உடல்நிலை..

மே 21, 2009
கடந்த வாரம் புதன்கிழமை, திரு.உதயகுமார் இரத்த பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு திரு.செயதாசுடன் சென்றிருக்கிறார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள திரு.உதயகுமாரின் இரத்தத்தில் சக்கரை அளவு 10.1-ஆக இருக்கிறது. மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அளவு 7.9 ஆகும். கடந்த மூன்று மாதங்களில் திரு.உதயகுமாரின் சக்கரை அளவு சராசரி 8.1. இதன்வழி திரு.உதயகுமாருக்கு கமுந்திங் தடுப்புக் காவலில் முறையான உணவுகளும், மருந்துகளும், சிகிச்சைகளும் வழங்கப்படவில்லை என்பது புலனாகிறது.

உதயாவிற்கு வழங்கப்பட வேண்டிய மருந்துகளில் 30% குறைக்கப்பட்டிருப்பதை அறிந்து, கெம்தா அதிகாரிகளிடம் பலமுறை உதயா முறையிட்டிருந்தும் அவ்வதிகாரிகள் தொடர்ந்து அவரின் உடல்நிலையை மோசமடையச் செய்வதற்கான பல வழிகளைக் கையாண்டிருக்கின்றனர். அதனாலேயே உதயா தன் காலை இழந்துவிடும் ஒரு நிலைக்கு தள்ளப்பட்டார். உளவியல் ரீதியில் இசா கைதிகளை துன்புறுத்துவதில் பெயர்ப்போன கெம்தா அதிகாரிகள் எவ்வளவு முயன்றும் உதயாவின் திடமான மனோநிலையை அசைக்கமுடியாத காரணத்தால், அவரின் உணவில் அளவுக்கதிகமான சக்கரை சேர்த்தல், மருந்துகளை மாற்றியும் குறைத்தும் கொடுத்தல், முறையான சிகிச்சைக்கு அனுமதி வழங்காதுதல் போன்ற தண்டனைகள வழங்கியிருக்கின்றனர்.

இத்தகைய மனித உரிமை மீறல்கள் அம்னோ அரசாங்கம் நடைமுறைப்படுத்திவரும் கொள்கைகளினால் விளைந்தவையே. அக்கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்த வேண்டியதுதான் நம்முடைய அடுத்தக்கட்ட போராட்டமாக இருக்க வேண்டும்!

உதயாவின் விடுதலை!

மே 10, 2009
நேற்று கமுந்திங்கிலிருந்து சிரம்பான்வரை மகிழ்வுந்து பேரணியில் கலந்துகொண்ட அனுபவம் மறக்க முடியாத ஒன்று. மலேசிய வரலாற்றில் நிபந்தனையோடு கூடிய விடுதலைப் பத்திரத்தில் கையெழுத்து இட மறுத்து, வெளியேற மறுத்த ஒரே மனிதன் அண்ணன் உதயா. இறுதியில் அடிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டிருக்கிறார்.

சிரம்பானுக்கு செல்லக் கூடாது!
ஊடக அறிக்கை கூடாது!
பொதுவிடத்தில் உரை நிகழ்த்தக் கூடாது!
பிரிக்பீல்ட்ஸ் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்!

இது காவல்த்துறையினரின் ஆணை!

ஆனால், இவர்களின் எச்சரிக்கைகளைக் கண்டு அஞ்சாது, கமுந்திங் முதல் சிரம்பான்வரை ஒரு கலக்கு கலக்கிய அண்ணன் உதயாவின் மனோதிடம் இந்நாட்டிலுள்ள வேறெந்த தலைவர்களுக்கும் கிடையாது! அண்ணன் உதயாவின் விடுதலை என்பது அம்னோவினால் அரங்கேற்றப்பட்ட ஓர் அரசியல் நாடகம் என்பதனை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். இனி தேவையில்லாத அறிக்கைகளை நம்பி குழம்பாமல், அண்ணன் உதயாவின் தலைமைத்துவத்தின்கிழ் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்படுங்கள்!

இனி இரண்டாவது அத்தியாயம் தொடங்குகிறது

இண்ட்ராஃப் குரல் – மனோகரன் பதவி விலகக்கூடாது.

மே 4, 2009

அண்மைய காலமாக .சா கைதி எம்.மனோகரன் மலையாளம் தம் தொகுதி மக்களுக்கு முழுமையாக சேவையாற்ற இயலாததன் காரணத்தை முன்னிட்டு, கோத்தா அலாம் சா சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறக்கவிருப்பதாக அறிக்கைகள் வெளிவருகின்றன. அதனை அடிப்படையாகக் கொண்டு, இண்ட்ராஃப் அவரை பதவி விலகக் கூடாது என கேட்டுக் கொள்கிறது.

எம்.மனோகரனைத் தேர்வு செய்த கோத்தா அலாம் சா தொகுதி மக்கள், அவரைத் தேர்வு செய்ததன் காரணத்தை நன்கு அறிவர். இனவாத அம்னோ அரசாங்கத்தின் கீழ் இருண்ட எதிர்காலத்தை முன்கூட்டியே கணித்துவிட்ட அம்மக்கள், ஓர் அரசியல் மாற்றத்தைக் காணவிரும்பி மார்ச் 8 2008-இல் முடிவெடுத்தனர்.

தற்கால நடப்புச் சூழலை கருத்தில் கொண்டு, மனோகரனின் இக்கட்டான நிலையை நன்கு அறிந்தவர்களாய் எதனையும் சந்திக்கக்கூடிய மனநிலையில் மக்கள் உள்ளனர். அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி சிறையில் அடைக்கப்பட்டு முழுமையாக அத்தொகுதி மக்களுக்கு சேவையாற்ற இயலாது போனாலும், அதனை ஒரு பொருட்டாகக் கருதாமல் தொடர்ந்து மனோகரனுக்கு பக்க பலமாக இருந்து வருகின்றனர் கோத்தா அலாம் சா மக்கள்.

இண்ட்ராஃப் தொடர்ந்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இண்ட்ராஃப் ஐவரையும் பிற இசா கைதிகளையும் விடுவிக்கக்கோரி பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கிவருகிறது. இந்நடவடிக்கைகள் நம்முடைய எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறும்வரை தொடரப்பட வேண்டும்.

இதுகாறும் மனோகரனின் விடுதலை மற்றும் தொகுதி மக்களுக்கு முழுமையான சேவை வழங்குவதில் அவர் எதிர்நோக்கும் இக்கட்டான சூழ்நிலை குறித்த மக்கள் கூட்டணியின் நிலைப்பாடானது அதிகாரப்பூர்வ அறிக்கைகளை வெளியிடுவதோடு தொக்கி நிற்கிறது. இந்நிலைகுறித்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் மக்கள் கூட்டணி அரசாங்கம் இறங்காததுகண்டு இண்ட்ராஃப் அதிருப்தி கொள்கிறது.

இதுபோக, கணவரின் துணையின்றி தாம் ஒருவராகவே பல சுமையான பொறுப்புகளை ஏற்று தொகுதி மக்களுக்கு தொண்டாற்றிவரும் மனோகரனின் துணைவியாருக்கு பக்க பலமாக மக்கள் கூட்டணியினர் உதவி புரிந்திருக்க வேண்டும். மக்கள் கூட்டணி நினைத்திருந்தால் மற்ற மக்கள் பிரதிநிகளைக் கொண்டு சுழல் முறையில் அத்தொகுதிக்கு சேவையாற்றியிருக்கலாம். வழக்கறிஞர் பணி, குடும்பப் பொறுப்பு ஆகியவைகளால் சற்று சிரமப்பட்டுவரும் மனோகரனின் துணைவியாருக்கு உதவியாக இருந்திருக்கலாம்.

மக்கள் கூட்டணியின்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு பாத்திரமாக, மக்கள் கூட்டணியினர் சில அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியாக வேண்டும். மனோகரன் மற்றும் பிற இசா கைதிகளின் விடுதலையை முன்னிறுத்தி அவர்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்துவர வேண்டும். மக்களால் சனநாயக ரீதியில் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான எம்.மனோகரன் விடுதலையாகி முழுமையாக தன் தொகுதி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் எனக் கோரும்வகையில் மக்கள் கூட்டணியினர் உடனடியாக மக்களவையில் ஒரு தீர்மானத்தினை கொண்டுவர வேண்டும். அத்தீர்மானமாது ஏற்றுக்கொள்ளப்படாவிடின், குறைந்தபட்ச நடவடிக்கையாக மக்களைவையிலிருந்து மக்கள் கூட்டணியினர் வெளிநடப்பு செய்ய வேண்டும்.

பொ.வேதமூர்த்தி
இலண்டன்
இண்ட்ராஃப் தலைவர்

போராட்டம் தொடரும்