இண்ட்ராஃப் குரல் – மனோகரன் பதவி விலகக்கூடாது.

மே 4, 2009

அண்மைய காலமாக .சா கைதி எம்.மனோகரன் மலையாளம் தம் தொகுதி மக்களுக்கு முழுமையாக சேவையாற்ற இயலாததன் காரணத்தை முன்னிட்டு, கோத்தா அலாம் சா சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறக்கவிருப்பதாக அறிக்கைகள் வெளிவருகின்றன. அதனை அடிப்படையாகக் கொண்டு, இண்ட்ராஃப் அவரை பதவி விலகக் கூடாது என கேட்டுக் கொள்கிறது.

எம்.மனோகரனைத் தேர்வு செய்த கோத்தா அலாம் சா தொகுதி மக்கள், அவரைத் தேர்வு செய்ததன் காரணத்தை நன்கு அறிவர். இனவாத அம்னோ அரசாங்கத்தின் கீழ் இருண்ட எதிர்காலத்தை முன்கூட்டியே கணித்துவிட்ட அம்மக்கள், ஓர் அரசியல் மாற்றத்தைக் காணவிரும்பி மார்ச் 8 2008-இல் முடிவெடுத்தனர்.

தற்கால நடப்புச் சூழலை கருத்தில் கொண்டு, மனோகரனின் இக்கட்டான நிலையை நன்கு அறிந்தவர்களாய் எதனையும் சந்திக்கக்கூடிய மனநிலையில் மக்கள் உள்ளனர். அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி சிறையில் அடைக்கப்பட்டு முழுமையாக அத்தொகுதி மக்களுக்கு சேவையாற்ற இயலாது போனாலும், அதனை ஒரு பொருட்டாகக் கருதாமல் தொடர்ந்து மனோகரனுக்கு பக்க பலமாக இருந்து வருகின்றனர் கோத்தா அலாம் சா மக்கள்.

இண்ட்ராஃப் தொடர்ந்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இண்ட்ராஃப் ஐவரையும் பிற இசா கைதிகளையும் விடுவிக்கக்கோரி பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கிவருகிறது. இந்நடவடிக்கைகள் நம்முடைய எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறும்வரை தொடரப்பட வேண்டும்.

இதுகாறும் மனோகரனின் விடுதலை மற்றும் தொகுதி மக்களுக்கு முழுமையான சேவை வழங்குவதில் அவர் எதிர்நோக்கும் இக்கட்டான சூழ்நிலை குறித்த மக்கள் கூட்டணியின் நிலைப்பாடானது அதிகாரப்பூர்வ அறிக்கைகளை வெளியிடுவதோடு தொக்கி நிற்கிறது. இந்நிலைகுறித்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் மக்கள் கூட்டணி அரசாங்கம் இறங்காததுகண்டு இண்ட்ராஃப் அதிருப்தி கொள்கிறது.

இதுபோக, கணவரின் துணையின்றி தாம் ஒருவராகவே பல சுமையான பொறுப்புகளை ஏற்று தொகுதி மக்களுக்கு தொண்டாற்றிவரும் மனோகரனின் துணைவியாருக்கு பக்க பலமாக மக்கள் கூட்டணியினர் உதவி புரிந்திருக்க வேண்டும். மக்கள் கூட்டணி நினைத்திருந்தால் மற்ற மக்கள் பிரதிநிகளைக் கொண்டு சுழல் முறையில் அத்தொகுதிக்கு சேவையாற்றியிருக்கலாம். வழக்கறிஞர் பணி, குடும்பப் பொறுப்பு ஆகியவைகளால் சற்று சிரமப்பட்டுவரும் மனோகரனின் துணைவியாருக்கு உதவியாக இருந்திருக்கலாம்.

மக்கள் கூட்டணியின்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு பாத்திரமாக, மக்கள் கூட்டணியினர் சில அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியாக வேண்டும். மனோகரன் மற்றும் பிற இசா கைதிகளின் விடுதலையை முன்னிறுத்தி அவர்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்துவர வேண்டும். மக்களால் சனநாயக ரீதியில் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான எம்.மனோகரன் விடுதலையாகி முழுமையாக தன் தொகுதி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் எனக் கோரும்வகையில் மக்கள் கூட்டணியினர் உடனடியாக மக்களவையில் ஒரு தீர்மானத்தினை கொண்டுவர வேண்டும். அத்தீர்மானமாது ஏற்றுக்கொள்ளப்படாவிடின், குறைந்தபட்ச நடவடிக்கையாக மக்களைவையிலிருந்து மக்கள் கூட்டணியினர் வெளிநடப்பு செய்ய வேண்டும்.

பொ.வேதமூர்த்தி
இலண்டன்
இண்ட்ராஃப் தலைவர்

போராட்டம் தொடரும்

அண்ணன் உதயாவுக்குத் தேவை உடனடி சிகிச்சை!

பிப்ரவரி 18, 2009
மலேசியா கினி படச்சுருள்

போராட்டம் தொடரும்…

>அண்ணன் உதயாவுக்குத் தேவை உடனடி சிகிச்சை!

பிப்ரவரி 18, 2009

>

மலேசியா கினி படச்சுருள்

போராட்டம் தொடரும்…

வெட்டப்படும் நிலையில் உதயாவின் கால்கள்!

பிப்ரவரி 17, 2009

இன விடுதலைக்காகவும் , சம உரிமைக்காகவும் நடந்த உதயாவின் கால்கள் இன்று வெட்டப்படும் நிலையில் உள்ளன. இண்ட்ராஃப் வழக்கறிஞர்கள் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் கைதானவுடன் நாடெங்கிலும் மக்கள் பொங்கி எழுந்தனர். நாடு தளுவிய அளவில் ஆலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் தொடர்ந்தாற்போல் நடைப்பெற்று வந்தன.

இன்று உதயா எனும் மாமனிதனுக்கு முறையான சிகிச்சை வழங்கப்படாமல் தனது கால்களை இழக்கும் நிலையில் இருக்கிறார். ஒருத்தராவது குறைந்த பட்சம் ஆலயத்தில் அவரின் பெயரில் பிரார்த்தனை செய்திருப்போமா? அன்று இருந்த அந்த வேகமும் விடுதலைக்கான வேட்கையும் இன்று எங்கே?

இந்த நன்றிகெட்ட தனத்தையும் அஞ்சி நடுங்கும் கோழைத்தனத்தையும் மீண்டும் இந்திய சமூகம் காணாதா என ஏங்கிகொண்டிருந்த அம்னோவின் வயிற்றில் படிப்படியாக பாலை வார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பது வேதனையான உண்மை. உதயாவை பெற்ற தாய் அங்கு கண்ணீர் வடிக்கிறாள்! என் மகனை காப்பாற்றுங்கள் என தள்ளாத வயதிலும் தெருவில் நின்று கூக்குரலிடுகிறாள். நாம் இவை அனைத்தையும் காலை தேநீரைச் சுவைத்துக்கொண்டே நாளிதழ்கள் படித்து தெரிந்துகொள்கிறோம். ஆனால், நம்மிடமிருந்து ஒரு சொற்ப முயற்சியும் வெளியில் எட்டிப் பார்க்கவில்லை!

மக்கள் சக்தி தலைவர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் சில மூடர்கள் எனக்கு அந்த பதவியைக் கொடு, இந்தப் பதவிக்கு என்னை பரிந்துரை செய், சட்டமன்ற தேர்தலில் என்னை நிற்க வை! என சொந்த சுயநல வியாபாரத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளதால் உதயாவின் உடல் நிலை குறித்து யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை. அந்த குறிப்பிட்ட தலைவர்களின் பின்னால் பித்து பிடித்து அலையும் விஷ பாம்புகளுக்கும் இவ்விடயத்தில் அக்கறையில்லை! இனி, அந்த கூட்டத்தை நம்பி ஒரு புண்னியமும் இல்லை!

ஒரு மனித உரிமை இயக்கம் எப்படி அரசியலுக்கு சோரம் போனது?! குறிப்பிட்ட கட்சிகளுக்கு கூஜா தூக்குவதற்குதான் மக்கள் சக்தி உருவானதா என்ற கேள்வி இன்று நம்முள் எழுகின்றது! இன்று யாரும் இண்ட்ராஃபின் 18 கோரிக்கைகளைப் பற்றி நினைத்துப் பார்ப்பதில்லை, நினைவுக் கூறவும் விரும்புவதில்லை! அரசு எந்திரங்களின் தொடர் ஒடுக்குதலால் மீண்டும் சமுதாயம் அஞ்சி நடுங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது! அன்றிருந்த வீர இளைஞர்கள் இன்று சோர இளைஞர்களாய் பயத்தின் நிழலில் இருந்துவருவதை கவனிக்க முடிகிறது!

அதனால்தான் இன்று உதயாவின் உயிருக்கு உலை ஏற்பட்டபின்பும் கேட்பதற்கு நாதியில்லாமல் அவரும் அவரது குடும்பத்தினரும் பரிதாப நிலையில் உள்ளனர். அவரின் தற்போதைய உடல் நிலையைப் பார்க்கும் பொழுது குறைந்தது இரு வாரங்களுக்குள் முறையான சிகிச்சை வழங்கியே ஆக வேண்டிய நிலை உள்ளது. வீணடிக்கப்படும் ஒவ்வொரு நொடியும் அவருடைய உடல் நிலை மேலும் மோசமடையலாம்!

இனி முடிவு பொதுமக்களின் கையில்தான் உள்ளது! என்ன செய்யப்போவதாய் உத்தேசம்? பிரதமருக்கு, உள்துறை அமைச்சருக்கு முறையான கடிதம் அனுப்பியாயிற்று! காவல்நிலையத்தில் புகார் செய்தாயிற்று! பதாகைகளையேந்தி நியாயத்தையும் கேட்டாயிற்று! இனி, உதயாவைக் காப்பாறுவதற்கு ஏதேனும் வழிகள் உண்டா? தயவு செய்து கூறுங்கள்….

மலேசியர்களுக்கு உதயாவின் மடல்!

பிப்ரவரி 10, 2009
அண்ணன் உதயகுமாரின் இம்மடலைப் படித்து பாருங்கள். கருத்தூன்றி படித்து பார்த்தால் பல கேள்விகளுக்கு இம்மடல் விடையளிப்பதை உணர முடியும்

ஆங்கில பதிப்பு : பதிவிறக்கம்

மறவாமல் இக்கடிதத்தை நகலெடுத்து தெரிந்தவர்களிடம் விநியோகியுங்கள்..

போராட்டம் தொடரும்..