’மலேசிய வரலாறு’ பாடம் மீளாய்வு செய்யப்பட வேண்டும்! மின்னொப்பம் இடுங்கள்!

ஏப்ரல் 22, 2011

பள்ளிகளிலும் மற்றும் பிற கல்விசார் கழகங்களிலும் பயன்படுத்தப்படும் வரலாறு பாடத்திட்டங்களையும், பாடநூல்களையும் உடனடியாக மீளாய்வு செய்யக்கோரும் விண்ணப்பம்.
அக்கறையுள்ள பெற்றோர்களாகவும், இந்நாட்டின் குடிமக்களாகவும் அங்கம் வகிக்கும் நாங்கள், நம் நாட்டின் வரலாறு பாடப்புத்தங்களில் உள்ள வரலாற்றுப் பிழைகளையும் மற்றும் அதன் பலவீனங்களையும் மிகுந்த சிரத்தையோடு சுட்டிக் காட்ட விரும்புகிறோம். அவைகளாவன :-
a) வரலாறு பாடநூல்களில் நிறைய வரலாற்று பிழைகளும், பாதி உண்மைகளுமே அடங்கியிருக்கின்றன;
b) நாட்டின் வளர்ச்சிக்கு பல்லின மக்களும் ஆற்றிய பங்கினை அது பிரதிபலிக்கவில்லை; மற்றும்
c) குறுகியப் பார்வையோடு, குறிப்பிட்ட சமய நாகரீகங்களையும் நம்பிக்கைகளையும் புறக்கணிக்கும் வகையில் பாராபட்சமாக எழுதப்பட்டுள்ளது.
நம் இளைய மாணவ சமுதாயத்தின் சிந்தனைகளைப் பாதிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் வரலாறு பாடத்திட்டங்களிலும், பாடநூல்களிலும் அடங்கியுள்ளதால், உடனடி நடவடிக்கையாக பள்ளிகளிலும் மற்றும் பிற கல்விசார் கழகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் வரலாறு பாடத்திட்டங்களையும், பாடநூல்களையும் விரிவான மீளாய்வுக்கு உட்படுத்தி, புதிய பாடத்திட்டத்தினை வரைய வேண்டும் என அரசாங்கத்தையும், சம்பந்தப்பட்ட பொறுப்பிலுள்ள தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறோம்.
பாடத்திட்டங்கள் மற்றும் பாடநூல்கள் மீளாய்வையும், மறுவரைவையும் செய்யக்கூடிய நிபுணத்துவக்குழுவில் நாட்டின் முக்கிய இனங்களை பிரதிநிதிக்கும் தகுதியுள்ளவர்கள் இடம்பெற வேண்டும் என நாங்கள் பரிந்துரை செய்கிறோம்.
இந்த மீளாய்வின் நோக்கமானது, ஒரு பரந்த கொள்கை மற்றும் முற்போக்கான அம்சங்கள் கொண்ட வரலாறு பாடத்திட்டங்களையும் பாடநூல்களையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான், அவற்றில் :-
1) குறிப்பிட்ட நாகரிகத்தையும் சமயத்தையுமே அதிகம் வலியுறுத்தாது, உலக வரலாற்றில் பல முக்கியமான நாகரிங்கங்களையும் நிகழ்வுகளையும் பற்றிய ஒரு விரிவான மற்றும் சமமான பார்வையை நம் மாணவர்களுக்கு ஏற்படுத்த முடியும்.
2) துல்லிதமான ஆய்வு செய்து வரலாற்றுச் சம்பவங்களின் ஆதாரங்களை பாராபட்சமின்றி பதிவு செய்ய வேண்டும்.
3) வரலாற்றைப் பின்ணனியாகக் கொண்ட நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபட்ட பல்லின மக்களின் பங்களிப்பினை நியாயமாக அங்கீகரிக்க வேண்டும்.
4) மாணாக்கர்களின் சிந்தனைகளில் குறிப்பிட்ட சமயத்தின் மீதோ அல்லது அரசியல் கொள்கையின் மீதோ பிடிப்பு ஏற்படுத்துவதற்கான பாதிப்பு அம்சங்கள் நீங்கப்பெற்ற, முற்றிலும் வரலாற்று உண்மைத் தகவல்களின் மீதும் அதனைச் சார்ந்த செயல்பாடுகளின் மீதும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
Advertisements

இண்ட்ராஃப் இயக்கம் மக்கள் கூட்டணியுடன் இணையுமா?

நவம்பர் 1, 2008

சங்கங்கள் சட்டம் 1960-இன் கீழ் தடை செய்யப்பட்டுள்ள மனித உரிமை இயக்கமான இண்ட்ராஃப் தொடர்ந்து மலேசிய இந்தியர்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் தனக்கென்று உறுதியானதோர் அடித்தளத்தை அமைத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருந்து வருகிறது.

கடந்த வாரத்தில் 100 மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஒன்றுகூடி இண்ட்ராஃபின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பான விவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரியவருகிறது. ஆனால், இன்று மலேசிய நண்பன் நாளிதழில் முதல் பக்கத்தில் சஞ்ஜை என்பவர் வெளியிட்ட ஓர் அறிக்கையில், இண்ட்ராஃப் உறுப்பினர்கள் மக்கள் கூட்டணியில் உறுப்பினர்களாக இணைந்து போராட்டத்தை தொடர்வார்கள் என்று கூறி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறார். இன்னும் இருவாரங்களில் மக்கள் கூட்டணியில் எந்த உறுப்புக் கட்சியுடன் இணைந்து செயலாற்றவிருக்கிறோம் என்பதனை அறிவிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மலேசியா கினியில் வெளிவந்த செய்தியில், இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் மக்கள் கூட்டணியுடன் இணைந்து செயல்படுவது குறித்த விடயம் தொடர்பாக அடிமட்ட ஆதரவாளர்கள்வரை கருத்துகணிப்பு நடத்தப்பெறுவதாக குறிப்பிட்டுள்ளது. மக்கள் கூட்டணி இந்தியர்களுக்கு பொதுத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை இன்னும் முழுமையாக நிறைவேற்றாத இவ்வேளையில், இண்ட்ராஃப் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் மக்கள் கூட்டணியில் இணைவதைப் பற்றி யோசித்து வருகிறார்கள்.

ஒரு மனித உரிமை இயக்கம் அரசியல் கட்சியில் இணைந்து செயல்படுவது குறித்து வாசகர்களின் கருத்துகள் என்ன என்பதனை அறிய விழைகிறேன்.

நாம் கடினப்பட்டு ‘நல்லதோர் வீணை செய்து விட்டோம்’, இனி அதனை திறம்பட மீட்டெடுப்பதும் அதனைப் புழுதியில் எரிவதும் நம் கையில்தான் உள்ளது.

இண்ட்ராஃப் மக்கள் கூட்டணியுடன் இணையலாமா? அப்படி இணையும்படி நேர்ந்தால், எதிர்காலத்தில் இண்ட்ராஃப் எதிர்நோக்கவிருக்கும் சாதக பாதகங்கள் என்ன? அல்லது வேறேதாவது கருத்துகளை முன்னெடுக்க விரும்புகிறீர்களா?

உங்கள் கருத்துகளை எதிர்ப்பார்க்கிறேன்…

இனவாத ஆசிரியை கௌரவிப்பு..!

ஓகஸ்ட் 15, 2008

அண்மையில் குவாலா லாங்காட் மாவட்டத்திலுள்ள, தெலுக் பங்லிமா காராங் இடைநிலைப்பள்ளியில், ருசுனித்தா என்ற வரலாற்றுப் பாட ஆசிரியை, நான்காம் மற்றும் ஐந்தாம் படிவம் பயிலும் தமிழ் மாணவர்களை ‘கில்லிங்’, பரையர்,‘கருங்குரங்குகள்’, ‘நீக்ரோக்கள்’, தமிழர்கள் நாய்க்குப் பிறந்தவர்கள், வேசிமக்கள், தமிழ் இளைஞர்கள் விறையற்றவர்கள், பெண்களுக்கு எப்போதும் மாத விலக்கு இருந்து கொண்டே இருக்கும் என மிகவும் மரியாதையான முறையில் புகழ்ந்து பேசியிருக்கின்றார்.

அவரை கௌரவிக்கும் வகையில் கல்வி அமைச்சினால், அதே மாவட்டத்தில் அவர் வசிப்பிடத்திற்கு மிக அருகாமையில், (முன்பிருந்த பள்ளியைவிட) இன்னும் பல வசதிகளோடு கூடிய விவேகப் பள்ளி ஒன்றிற்கு இடமாற்றம் செய்யப்பட்டு சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்.

நீதி கேட்கச் சென்ற பெற்றோர்களையும், தன்னார்வ இயக்கங்களையும் கொலைக்காரர்கள் எனச் சித்தரிக்கும் வகையில், ருசுனித்தாவிற்கு பாதுகாப்பும் கொடுக்க அரசாங்கம் முனைந்துள்ளது பாராட்டிற்குரியது. முடிந்தால் அவர் பணிபுரியும் இடத்திலும், அவர் வீட்டைச் சுற்றியும் கலகத் தடுப்புப் படையினரை 24 மணிநேரமும் காவலுக்கு வைத்து ‘தோக்கோ குரு’ எனும் பட்டத்திற்குகந்த ருசுனித்தாவிற்கு பாதுகாப்பு அளிக்குமாறு முன்மொழிகிறேன்.

முடிந்தால் அவர் தினமும் தன் பணியிடத்திற்குச் செல்லும்வேளையில், முகமூடி அணிந்த காவல்த் துறையின் சிறப்புப் படையினரும் துணைக்குச் சென்று கல்வியுகத்தின் கடைந்தெடுத்த மாணிக்கத்திற்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பது எனது தனிக் கோரிக்கை.

அப்படியென்றால், பலப்பேர் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்ட மாணவர்கள் செய்த புகார்? பெற்றோர்கள், தன்னார்வ இயக்கங்கள், அரசியல் கட்சிகள் விடுத்த வேண்டுகோள், கொடுத்த மனு எல்லாமே?

விழலுக்கு இரைத்த நீர்தான்…..

இனி எத்தனை காலம் பொறுத்திருப்பது? நாமெல்லாம் இந்த நாட்டில் மதமாற்றம் குறித்து கருத்தரங்கு நடத்தக் கூடாது, யூ.ஐ.டி.எம் பல்கலைக்கழகத்தில் பூமிபுத்ராக்களைத் தவிர பிற இனத்தார் கல்விப் பயில இடம் கேட்கக் கூடாது, சம உரிமை, கருத்துச் சுதந்திரம், சமய சுதந்திரம், பொருளாதாரச் சமப் பங்கீடு இவற்றைப் பற்றி வாய்திறக்கக் கூடாது, இன்னும் எதைக் கேட்க நினைத்தாலும், கூடாது..கூடாது..கூடாது…!!!

இதுதான் பல இனங்கள் ஒற்றுமையாக வாழும் மலேசியா… இன்னும் 15 நாட்களே எஞ்சியுள்ளன மலேசியாவின் 51-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கு…

மலேசியத் தமிழர்களுக்கு எப்பொழுது சுதந்திரம்……?

இவ்விவகாரம் குறித்த முந்தைய பதிவு : தமிழர்களை ‘கில்லிங்’, பரையர்கள் என்பதா?

அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு

வாக்களித்தவர் எண்ணிக்கை : 29

இடைநீக்கம் : 13%

வேறு பள்ளிக்கு மாற்றம் : 3%

வேலையை விட்டு நிரந்தர நீக்கம் : 75%

மறுவாழ்வுப் பயிற்சி : 0%

மன்னித்து விடலாம் : 6%

நான்கு இண்ட்ராப் ஆதரவாளர்கள் கைது!!

ஓகஸ்ட் 7, 2008

இன்று மதியம் கோலாலம்பூர் மாநாட்டு மையத்தின் வெளியே அறிக்கைகள் கொடுத்துக் கொண்டிருந்த நான்கு இண்ட்ராப் ஆதரவாளர்கள் காவல்த் துறையினரால் கைது செய்யப்பட்டனர். கைதான நால்வரில் ஒரு பெண்மணியும் அடங்குவார் என டாங் வாங்கி ஓ.சி.பி.டி துணைத் தலைமைக் காவல்த்துறை அதிகாரி சூல்கார்னாயின் அப்துல் ரகுமான் நிருபர்களிடம் தெரிவித்தார்.

கைதானவர்களின் வழக்கறிஞரான திரு.சுரேந்திரன் கூறுகையில், 54-வது காமன்வேல்ட் மாநாட்டின்போது 30 இண்ட்ராப் உறுப்பினர்கள் அறிக்கைகளை பொதுமக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்த வேளையில் இந்நால்வரும் கைது செய்யப்பட்டதாகக் கூறினார். மாநாட்டில் கலந்துக் கொண்ட உலக சட்டவல்லுனர்களுக்கு, உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் அராஜகமான முறையில் கைதான 5 இண்ட்ராப் தலைவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எடுத்துரைக்கவே, இண்ட்ராப் ஆதரவாளர்கள் அறிக்கைகளை விநியோகித்துக் கொண்டிருந்தனர் என அவர் தெரிவித்தார்.

20 நிமிடங்கள் கால அவகாசம் கொடுத்த காவல்த் துறையினர், 15 நிமிடங்கள் கழித்து எஸ்.ஜெயதாஸ், எஸ்.பூபாலன், கே.பாலகிருஷ்ணன் மற்றும் பி.சுசிலா போன்றோரைக் கைது செய்து டாங் வாங்கி தடுப்புக் காவலில் அடைத்தனர். ஏழு ஆண்கள் அடைக்கப்பட்டுள்ள செல்லில் பி.சுசிலாவை அடைத்து வைத்தது தமக்குப் பெரிய அதிர்ச்சியைக் கொடுப்பதாக அவர் மேலும் கூறினார். அவர் இண்ட்ராப் ஆதரவாளர் என்பதற்காக இப்படி அவமானப்படுத்தலாமா என அவர் முறையிட்டார்.

காவல்த்துறை அதிகாரி சுல்கார்னாயின் கூறுகையில், சுசிலாவிற்குப் பாதுகாப்பாக ஒரு பெண் காவல்த்துறை அதிகாரி செல்லின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், கைதானவர்கள்மீது Section 27 (5) Police Act எனும் சட்டத்தின் கீழ் விசாரணை நடைப்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

“வெளிநாட்டினர் மாநாட்டிற்குக் கலந்துக் கொள்ள வந்துள்ளனர், அவர்களின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம்” என நிருபர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் சுல்கார்னாயின் கூறினார்.

சொந்த நாட்டு மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்துக் கொண்டு, வெளிநாட்டினருக்கு பாதுகாப்புக் கொடுக்கிறார்களா.. வேடிக்கையாக உள்ளது..! உலகளவில் மலேசியத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டி உரிமைகளையும் ஐவரையும் மீட்கும்வரை..

போராட்டம் தொடரும்…

அண்மைய கருத்துக் கணிப்பின் முடிவுகள்..