கல்வித்துறையில் தொடர்ந்து எட்டி உதைக்கப்படும் இந்திய மாணவர்கள்!

ஜூன் 18, 2011

நேற்று 17 சூன் 2011 பினாங்கு வடகிழக்கு மாவட்ட காவல்த்துறை நிலையத்தில் இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியினர் இந்திய மாணவர்களுக்கு எதிராக தொடர்ந்து தொடுக்கப்பட்டு வரும் ஓரங்கட்டுதலை எதிர்த்து புகார் செய்துள்ளனர். அரசு கல்வி உபகாரச் சம்பளம் மற்றும் பிற கல்வி வாய்ப்புகள் சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஏழை இந்திய மாணவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்துவருவதை இண்ட்ராஃப் மக்கள் சக்தி இயக்கம் கடுமையாக கண்டிப்பதாக இண்ட்ராஃப் ஆலோசகர் திரு.கணேசன் கூறினார்.நாடுதழுவிய நிலையில் செய்யப்பட்ட புகார்கள் சேகரிக்கப்பட்டு மலேசிய ஐக்கிய நாட்டவை அலுவகத்தில் அடுத்த வாரம் 22 சூன் 2011-ல் சமர்ப்பிக்கப்படவுள்ளது. தனிப்பட்ட முறையிலோ அல்லது இயக்கம்வழி செய்த புகார்களையோ சமர்ப்பிக்க எண்ணம் கொண்டவர்கள் மனித உரிமைக் கட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.

http://www.humanrightspartymalaysia.com/contact-us/

போராட்டம் தொடரும்…

Advertisements

கல்வித்துறையில் எட்டி உதைக்கப்படும் இந்திய சமூகம்!

ஜூன் 12, 2010

சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தும் இந்திய மாணவர்களுக்கு எதிர்காலம் இல்லை!

மே 31, 2010

பினாங்குவாழ் எ.சு.பி.எம் / எ.சு.தி.பி.எம் முடித்த மற்றும் மெட்ரிகுலேசனில் பயிலும் மாணவ மாணவியரின் கவனத்திற்கு..
எ.சு.பி.எம் மற்றும் எசு.தி.பி.எம் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருந்தும், மெட்ரிகுலேசன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட மாணவர்களும் அரசு உயர்கல்விக்கூடங்களில் பயின்றும் அரசு உபகாரச் சம்பளம் நிராகரிக்கப்பட்ட மாணவர்களும் உடனடியாக பினாங்கு மனித உரிமைகள் கட்சியினை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கடந்த மே 29-ஆம் நாளன்று, மனித உரிமைகள் கட்சியின் தலைமையகத்தில் சிறப்பான தேர்ச்சி பெற்றும் மெட்ரிகுலேசன் மற்றும் அரசு உபகாரச் சம்பளம் கிடைக்கப்பெற்றிராத ஏழு இந்திய மாணவர்களை பேட்டி எடுத்து, அவர்களின் விண்ணப்பங்களை உடனடியாக அம்னோ அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமாறு மூன்று நாட்கள் கெடு விதித்திருந்தனர்.

இதேப்போன்றதொரு நடவடிக்கையினை நாடு தழுவிய அளவில், மனித உரிமைகள் கட்சியினர் தற்போது மேற்கொண்டு வருகின்றனர். பினாங்கு மாநிலத்தில் இனவாதக் கொள்கைகளினால் பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்கள் தங்களின் பெற்றோரோடு துணிந்து உரிமையைக் கேட்க முன்வர வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம்.
நாடு தழுவிய நிலையில் பாதிக்கப்பட்ட அனைத்து சிறப்புத் தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களும் ஒன்று சேர்ந்தால், இந்த இனவாத அம்னோ அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு ஆவண செய்ய முடியும்.

காலங்காலமாக தகுதிபெற்ற நம் ஏழை இந்திய மாணவர்கள் தேர்வு செய்யும் கல்வித் துறைகளை தட்டிக்கழித்து நம் சமூகத்தை நடைப்பிணமாக்கிக் கொண்டு வரும் போக்கை நாம் வன்மையாக கண்டிப்பதோடு மட்டுமல்லாது, இனியும் இக்கொடுமையான ஓரங்கட்டுதலைப் பார்த்து வாய்மூடி கிடக்காது துணிந்து உரிமையைக் கேட்க முன்வருமாறு பெற்றோர்களையும் மாணவர்களையும் அழைக்கிறோம்.
பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாகத் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் :-
திரு.கணேசன் : 012-4803284
திரு.கலைச்செல்வம் : 012-5637614
திரு. கனகசுந்தரம் : 017-4155449
பிற மாநிலத்தைச் சார்ந்த மாணவர்களும் எங்களோடு தொடர்பு கொள்ளலாம். நீங்கள் வசிக்கும் மாநிலத்தின் பொறுப்பாளர்கள் உங்களைத் தொடர்புகொள்ள ஆவண செய்வோம்.
போராட்டம் தொடரும்…

7’ஏ’க்கள் பெற்ற தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு எம்.ஆர்.எசு.எம் அறிவியல் கல்விக்கூடத்தில் இடம் தரவேண்டும்!

திசெம்பர் 30, 2009

டத்தோ நஜிப் ரசாக்

மலேசிய பிரதமர்

Perdana Menteri Malaysia

Blok Utama Bangunan Perdana Putra,

Pusat Pentadbiran Kerajaan Persekutuan,
62502 Putrajaya

E-mail:najib@pmo.gov.my.

டான் ஸ்ரீ முயிடின் யாசின்

மலேசிய துணைப் பிரதமர்

Perdana Menteri Malaysia

Blok Utama Bangunan Perdana Putra,

Pusat Pentadbiran Kerajaan Persekutuan,
62502 Putrajaya E-Mail : najib@pmo.gov.my.

அனைத்து 817 தமிழ்ப்பள்ளி 7 ‘மாணவர்களுக்கும் எம்.ஆர்.எஸ்.எம் அறிவியல் கல்லூரியில் ஒன்றாம் படிவம் (2010) பயில நுழைவு தரப்பட வேண்டும்.

மேலே குறிப்பிட்டது போல, நாடு முழுவதிலும் உள்ள 817 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் யூ.பி.எஸ்.ஆர் சோதனையில் 7 ஏக்கள் பெற்ற சாதனை மலேசிய நண்பன், தமிழ் நேசன் மற்றும் மக்கள் ஓசை போன்ற நாளிதழ்களில் 20/11/09 முதல் சில தினங்களுக்கு தலைப்புச் செய்திகளாக வெளியாகின.

உத்துசான் மலேசியா 29/11/09 பக்கம் 8 மற்றும் நியூ ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் பக்கம் 20 ஆகிய இரண்டு நாளேடுகளில் மாரா கல்லூரிகளுக்கான நுழைவு கடிதங்கள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரையில் 7 ‘க்கள் பெற்ற 817 தமிழ்ப்பள்ளி மாணவர்களில் ஒருவருக்குக் கூட மாரா அறிவியல் பயிற்சி கல்லூரியிடமிருந்து நுழைவு கடிதம் கிடைக்கவில்லை என்ற கருத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

அதோடு மட்டுமின்றி மலேசிய கல்வித்திட்டத்தில்ஒரு மலேசியாதிட்டத்திற்கு ஏற்ப மலாய் இஸ்லாமிய மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் போன்று 7 ‘க்கள் பெற்ற இந்த 817 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு எவ்வித அங்கீகாரமும் இதுவரையில் வழங்கப்படவில்லை.

தேசிய பள்ளி மாணவர்கள் மொத்தம் 5 ஏக்கள் மட்டுமே பெற முடியும். ஆனால் சிறந்த தேர்ச்சியான 7 ‘க்கள் பெற்ற தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த இந்த 817 மாணவர்கள் தகுந்த வாய்ப்பு அளிக்கப்படாவிட்டால் அவர்கள் எங்குச் செல்வார்கள் மற்றும் தங்களுடைய திறமையையும் அறிவு வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்கும் அத்துடன் நாட்டின் வளர்ச்சிக்கும் எவ்வாறு பங்காற்றுவார்கள்?

ஆகவே, 7 ஏக்கள் பெற்ற 817 தமிழ்ப்பள்ளி மாணவர்களும் மற்றும் தேசிய பள்ளியில் 5 ஏக்கள் பெற்ற அனைத்து இந்திய மாணவர்களுக்கும் 21/11/09ஆம் நாளன்று பெரித்தா ஹாரியான் பக்கம் 7இல் வெளியிடப்பட்ட நாடு முழுவதிலுமுள்ள 42 மாரா அறிவியல் கல்லூரியில் இருக்கும் மொத்தம் 12,440 இடங்களில் உள்ள முழு தங்கும் வசதி பெற்ற கல்லூரிகள் மற்றும் என்.எஸ்.டி 5/4/08ஆம் நாள் பக்கம் 7இல் வெளியான படிவம் ஒன்றுக்கான 2010 ஆம் ஆண்டில் தொடங்கவிருக்கும் மாரா கல்லூரியில் இடம் கொடுக்கப்பட வேண்டும். எனவேதான் நம் மலேசிய பிரதமரால் முழங்கப்படும் ஒரு மலேசியா வாசகம் உண்மையானதாக இருக்கும்.

அதோடு மட்டுமின்றி அவர்கள் மாரா அறிவியல் கல்லூரிகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அவர்களுக்கு மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அரசாங்கத்தால் உத்தரவாதம் தரப்பட வேண்டும். இந்திய மாணவர்கள் தலையில் முக்காடு அணிவது (tudung), கட்டாய இஸ்லாம் மத வகுப்புகளுக்குச் செல்லவோ, இஸ்லாம் மதமாற்றத்திற்கு கட்டாயப்படுத்தப்படுவதோ இருத்தல் கூடாது. அரசியல் சாசனப் பிரிவு 11 (மத சுதந்திரம்) மற்றும் 12-இன் படி யாரும் மற்றவர்களை அவர்களின் சொந்த மதம் தவிர்த்து பிற மத நிகழ்வுகளில் கலந்துக் கொள்ள கட்டாயப்படுத்தக் கூடாது.

போலிஸ் அதிகாரிகளின் பிள்ளைகள் படிக்க போலீஸ் (எம்.ஆர்.எஸ்.எம்), இராணுவ வீரரின் பிள்ளைகள் பயில இராணுவ (எம்.ஆர்.எஸ்.எம்), மற்றும் ஃபெல்டா துறையில் உள்ளவர்களின் பிள்ளைகள் படிக்க ஃபெல்டா (எம்.ஆர்.எஸ்.எம்) இருக்கிறது. தமிழ் (எம்.ஆர்.எஸ்.எம்) மாரா அறிவியல் கல்லூரி எழுப்பப்பட்டால் அது இந்த 817 7 ஏக்கள் பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் நாடு முழுவதும் உள்ள 523 தமிழ்ப்பள்ளிகளில் உள்ள 110,000 மாணவர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். இவ்வாறு செய்வதால் அவர்களும் நாட்டின் மேம்பாட்டிற்கான தங்களின் பங்களிப்பை ஆற்ற உறுதுணையாக அமையும்.

உங்களின் உடனடி பதில் மற்றும் நடவடிக்கையை பெரிதும் மதிக்கிறோம்.

நன்றி,

இப்படிக்கு,

________________

பி. உதயகுமார்

(பொது செயலாளர்)


>இன்றைய பதிவிறக்கம்..

மார்ச் 30, 2008

>மனிதவள இலாகாவின் பயிற்சிக் கழகம் இவ்வாண்டின் தொழிலியல் கல்விக்கான டிப்ளோமா, மற்றும் அடிப்படைச் சான்றிதழ்களுக்கான பயிற்சிகளை நாடு தழுவிய தனது பயிற்சிக் கழகங்களில் வழங்கவுள்ளது. பட்டப்படிப்பை மேற்கொள்ள வாய்ப்பு இல்லாத இந்திய இளைஞர்கள், இந்த பயிற்சிகளுக்கு விண்ணப்பித்து உங்கள் பட்டப்படிப்புக் கனவை நிஜமாக்க ஒரு ஏணிப்படியாக இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். முழுவதும் அரசாங்கத்தினால் நடத்தப்படும் இப்பயிற்சிகளுக்கு வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, ஆர்வமுள்ளோர் முந்துங்கள்…! நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்..!

விண்ணப்ப பாரங்களைப் பதிவிறக்கம் செய்திட இணைய இணைப்பைச் சுட்டுங்கள். ILJTM


இன்றைய பதிவிறக்கம்..

மார்ச் 30, 2008

மனிதவள இலாகாவின் பயிற்சிக் கழகம் இவ்வாண்டின் தொழிலியல் கல்விக்கான டிப்ளோமா, மற்றும் அடிப்படைச் சான்றிதழ்களுக்கான பயிற்சிகளை நாடு தழுவிய தனது பயிற்சிக் கழகங்களில் வழங்கவுள்ளது. பட்டப்படிப்பை மேற்கொள்ள வாய்ப்பு இல்லாத இந்திய இளைஞர்கள், இந்த பயிற்சிகளுக்கு விண்ணப்பித்து உங்கள் பட்டப்படிப்புக் கனவை நிஜமாக்க ஒரு ஏணிப்படியாக இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். முழுவதும் அரசாங்கத்தினால் நடத்தப்படும் இப்பயிற்சிகளுக்கு வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, ஆர்வமுள்ளோர் முந்துங்கள்…! நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்..!

விண்ணப்ப பாரங்களைப் பதிவிறக்கம் செய்திட இணைய இணைப்பைச் சுட்டுங்கள். ILJTM


இன்றைய பதிவிறக்கம்.. கல்வி உபகாரச் சம்பளம்

பிப்ரவரி 23, 2008

ஷெல் நிறுவனம் உள்நாட்டு கல்விசார் நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்க முன்வந்துள்ளது. இதன் விளம்பரம் இன்னும் சில வாரங்களில் வெளிவரும் எனவும், முன்கூட்டியே நமக்குத் தகவல் கிடைத்துள்ளதால் மலேசிய இந்திய மாணவர்கள் இக்கல்வி உபகாரச் சம்பளத்திற்கு முந்திக் கொண்டு, இவ்வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். குறிப்பிட்ட சிலத் துறைகளுக்கே இந்த உபகாரச் சம்பளங்கள் வழங்கப்படுகிறது. 31-ஆம் திகதி மார்ச் மாதம் விண்ணப்பத்திற்கான இறுதி நாள். மேலும் தகவல்களுக்கு இந்த விளம்பரத்தைச் சுட்டவும் :

கல்வி உபகாரச் சம்பளம்