>இண்ட்ராஃபின் மனு வீசியெறியப்பட்டது ! உதயகுமாரை குத்துவதற்கு கையோங்கிய காவல்த்துறை அதிகாரி!

செப்ரெம்பர் 1, 2010

>

போராட்டம் தொடரும்…

Advertisements

வீர முனீசுவரர் ஆலயம் உடைப்பு!

ஜூன் 28, 2009

27 சூன் 2009

ஊடக அறிக்கை

ஆலய உடைப்புவீர முனீசுவரர் ஆலயம், யாப் குவான் செங் சாலை, அம்பாங் சாலை, கோலாலம்பூர்

கடந்த 27/06/2009 காலை 10 மணியளவில், ..காவைச் சேர்ந்த குண்டர்கள் என நம்பப்படும் சுமார் 35 பேர் 20 ஆண்டுகால இந்து ஆலயமொன்றை உடைத்து தள்ளியிருக்கின்றனர். அம்னோவின் கைப்பாவையாக விளங்கிவரும் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம், காவல்த்துறையினர், ..கா குண்டர்கள் போன்றோர்போல்டன் செண்டிரியான் பெர்காட்எனும் மேம்பாட்டு நிறுவனத்துடன் கைகோர்த்துக்கொண்டு இச்செயலைப் புரிந்துள்ளதாக நாங்கள் நம்புகிறோம்.

அனுமதியின்றி உட்பிரவேசிப்பவர்களிடமிருந்து ஆலயத்தை பாதுகாக்குமாறு ஆலய நிர்வாகத்தினர் பலமுறைடாங் வாங்கிகாவல் நிலையத்தில் புகார்கள் செய்துள்ளனர். (டாங் வாங்கி/022122/09). ஆலயத்தை உடைக்க அத்துமீறி நுழைந்தவர்கள் நீதிமன்ற ஆணைக் கடிதத்தை ஏதும் தன்னிடம் காட்டவில்லை என ஆலய நிர்வாக உறுப்பினர் திரு.சிவனேசுவரன் தலைமை இன்சுபெக்டர் ஆனந்த் அவர்களிடம் கூறியுள்ளார். அவர்களாகவே வந்து ஆலயத்தை உடைத்துவிட்டுச் சென்றுவிட்டனர். ஆலயத்தை பாதுகாக்க வேண்டிய காவல்த்துறையினரே குண்டர்களுக்கு பாதுகாப்பாக இருந்து செயல்பட்டது மிகவும் அதிருப்தியை அளிக்கிறது. அப்பாவிகளான ஆலய நிர்வாகத்தினரை அங்கிருந்து களைந்துபோகுமாறு காவல்த்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். காவல்த்துறையினரின் கடமையோ ஆலயத்தை பாதுக்காப்பது. பீனல் கோட் சட்டப்பிரிவு 295-இன் படி, வழிப்பாட்டுத் தளங்களை உடைத்துத் தள்ளுவது சட்டப்படி குற்றம் எனவும், இக்குற்றத்திற்கு தண்டனையாக மூன்றாண்டுகள் சிறைவாசத்தினையும் வழங்குகிறது. ஆலயத்தை தரைமட்டமாக்கிய குண்டர்களையும் மேம்பாட்டு நிறுவனத்தினரையும் காவல்த்துறையினர் கைது செய்து பீனல் கோட் சட்டப்பிரிவு 295-இன் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கவேண்டும்.

இந்நடவடிக்கையை சம்பந்தப்பட்டவர்கள்மீது ஏழு நாட்களுக்குள் நடைமுறைப்படுத்துமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்.

இதுநாள்வரை உடைப்பட்ட பல ஆலயங்களுக்காக திரு.உதயாவும் திரு.வேதாவும் பல முறையீட்டு மனுக்களை சமர்ப்பித்திருந்தாலும், ஒரு தடவைகூட நீதிமன்றத்தில் வழக்குகள் நடவாதது கண்டு மிகவும் அதிருப்தி கொள்கிறோம். குற்றமிழைப்பவர்களுக்கு சட்ட ரீதியாக தண்டனைப் பெற்றுக் கொடுப்பதில் அட்டர்ணி செனரல் முனைப்பு காட்டினாலேயொழிய, ஆலய உடைப்பு விவகாரங்களுக்கு ஒரு தீர்வே கிடைக்காது. பாராளுமன்றத்தில் எதிர்கட்சியினரின் கேள்விகளுக்கு கூட்டரசு பிரதேசங்களுக்கான துணை அமைச்சர் தமது அதிகாரப்பூர்வ அறிக்கையினூடாக , இனி எதிர்வருங்காலங்களில் எந்தவொரு வழிபாட்டுத் தளமும் உடைபடாது என வாக்குறுதி கொடுத்திருந்தார். என்ன ஓர் அப்பட்டமான பொய்? சனநாயகத்தின்மீதும், மக்களின்மீதும், நாடாளுமன்றத்தின்மீது அம்னோவிற்கு மதிப்பு கிடையாது. மலேசிய வரலாற்றிலேயே இரண்டில் மூன்று பெரும்பான்மையை அம்னோ இழந்ததற்கான முக்கிய காரணங்களில் ஒன்று ஆலய உடைப்பு. புதிய அம்னோ தலைமைத்துவத்திலும் எந்தவொரு மாற்றமும் கிடையாது, ஆகையால் மாற்றத்தை எதிர்ப்பார்க்கின்ற நாம் அடுத்த பொதுத்தேர்தலில் (2012-2013) அம்னோவை முழுமையாக தோற்கடிக்க வேண்டும். இதைத் தவிர்த்து வேறு வழியேயில்லை.

வாழ்க மக்கள்!

திரு.செயதாசு
இண்ட்ராஃப் மக்கள் சக்தி

ஆலய உடைப்பு தொடர்பான நிழற்படங்கள் கீழே..


போராட்டம் தொடரும்

பத்துமலையில் உதயாவிற்கு முடிகாணிக்கை..

மே 12, 2009

எதிர்வரும் 17-ஆம் திகதி மே மாதம் (ஞாயிற்றுக்கிழமை), பத்துமலை வளாகத்தில் அண்ணன் உதயா முடிகாணிக்கை மற்றும் சிறப்பு பிராத்தனை நிகழ்வுகளில் கலந்துக்கொள்ளவிருக்கிறார். காலை 9 மணியளவில் நடைப்பெறவிருக்கும் இந்நிகழ்விற்கு மக்கள் சக்தி ஆதரவாளர்கள் அனைவரும் கலந்துக்கொள்ள அழைக்கப்படுகின்றனர். அன்றைய தினத்தில், உதயாவின் விடுதலையை முன்னிட்டு பல ஏராளமான மக்கள் சக்தி ஆதரவாளர்கள் முடிகாணிக்கை செலுத்தவிருப்பதாக அறியப்படுகிறது.

இந்நிகழ்வினை முன்னிட்டு பினாங்கு மக்கள் சக்தியினர் பத்துமலை செல்ல பேருந்து வசதி ஏற்படுத்தியிருக்கின்றனர். பினாங்கு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து பத்துமலை செல்ல எண்ணம் கொண்டவர்கள் தொடர்புக் கொள்ள வேண்டிய கைப்பேசி எண்கள் : –

திரு.கலை 012-5637614

திரு.செல்வம் 016-4827974

ஆதரவாளர்கள் பேருந்துப் பயணத்திற்காக தங்களின் பெயரை விரைவாக பதிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

போராட்டம் தொடரும்..


பத்துமலையில் உதயாவிற்கு முடிகாணிக்கை..

மே 12, 2009

எதிர்வரும் 17-ஆம் திகதி மே மாதம் (ஞாயிற்றுக்கிழமை), பத்துமலை வளாகத்தில் அண்ணன் உதயா முடிகாணிக்கை மற்றும் சிறப்பு பிராத்தனை நிகழ்வுகளில் கலந்துக்கொள்ளவிருக்கிறார். காலை 9 மணியளவில் நடைப்பெறவிருக்கும் இந்நிகழ்விற்கு மக்கள் சக்தி ஆதரவாளர்கள் அனைவரும் கலந்துக்கொள்ள அழைக்கப்படுகின்றனர். அன்றைய தினத்தில், உதயாவின் விடுதலையை முன்னிட்டு பல ஏராளமான மக்கள் சக்தி ஆதரவாளர்கள் முடிகாணிக்கை செலுத்தவிருப்பதாக அறியப்படுகிறது.

இந்நிகழ்வினை முன்னிட்டு பினாங்கு மக்கள் சக்தியினர் பத்துமலை செல்ல பேருந்து வசதி ஏற்படுத்தியிருக்கின்றனர். பினாங்கு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து பத்துமலை செல்ல எண்ணம் கொண்டவர்கள் தொடர்புக் கொள்ள வேண்டிய கைப்பேசி எண்கள் : –

திரு.கலை 012-5637614

திரு.செல்வம் 016-4827974

ஆதரவாளர்கள் பேருந்துப் பயணத்திற்காக தங்களின் பெயரை விரைவாக பதிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

போராட்டம் தொடரும்..


>பினாங்குத் தீவு மக்கள் சக்தி பால்குடம்

பிப்ரவரி 8, 2009

>மு.ப : 10.50

காலை 8 மணியளவில் லோரோங் கூலிட் சிறீ முத்து மாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட மக்கள் சக்தி பால்குடம் தற்சமயம் தண்ணீர்மலையில் பால்குட காணிக்கை செலுத்துவதற்கு தயாராக இருக்கின்றனர். மக்கள் சக்தி சமூக சேவைப் பந்தலில் வழக்கம்போல் பொதுமக்கள் பலர் அடையாள அட்டை, பிறப்புப் பத்திரம், சமூக நல இலாகா உதவிகள் கோரி வந்த வண்ணம் உள்ளனர்.


பினாங்குத் தீவு மக்கள் சக்தி பால்குடம்

பிப்ரவரி 8, 2009

மு.ப : 10.50

காலை 8 மணியளவில் லோரோங் கூலிட் சிறீ முத்து மாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட மக்கள் சக்தி பால்குடம் தற்சமயம் தண்ணீர்மலையில் பால்குட காணிக்கை செலுத்துவதற்கு தயாராக இருக்கின்றனர். மக்கள் சக்தி சமூக சேவைப் பந்தலில் வழக்கம்போல் பொதுமக்கள் பலர் அடையாள அட்டை, பிறப்புப் பத்திரம், சமூக நல இலாகா உதவிகள் கோரி வந்த வண்ணம் உள்ளனர்.


திருவெம்பாவை – பாடல் 5

ஜனவரி 12, 2009

திருவெம்பாவை – பாடல் 4

மாலறியா நான்முகனுங் காணா மலையினைநாம்
போலறிவோ மென்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேஎன்
றோல மிடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்.

அரிவையர் கூட்டம் வேறு ஒரு வீட்டிற்குச் செல்கிறது. அந்த வீட்டு அஞ்சுகம் மஞ்சத்தைவிட்டு எழுந்திருக்கவில்லை. அவளைப் பார்த்து மங்கையர் தலைவி கேட்கின்றாள்:

மால்அறியா நான்முகனும் காணா, மலையினைநாம்
போல்அறிவோம் என்றுஉள்ள பொக்கங்க ளபேசும்
பால்ஊறு தேன்வாய்ப் படிறீ, கடைதிறவாய்.”

திருமால் அறியாத திருவடியை , நான்முகன் அறியாத திருவடியை , மலை உருவாய்மாமலை போல் மேனி உடையராய், ஓங்கி உலகளந்த உத்தமனைநாம் உணர்வோம் என்று பொய்யுரைக்கும் பெண்ணே, சுரக்கின்ற பாலையும், தேனையும் போல் இனிமையாகப் பேசுகின்ற வஞ்சகியே, கொஞ்சம் கதவைத் திறப்பாய்!” என்று சொன்ன போது, அவள் வாயில் பாலும் தேனும் ஊறியது போல் வந்தவர்கள் நினைத்தார்கள். ஆனால், “நாம் போல் அறிவோம்என்று சொன்னவுடன், அவள் வஞ்சக நெஞ்சினள் என்பதை உணர்ந்தார்கள்.

மால்அறியா நான்முகனும் காணா மலை.” நான்முகன், மால் என்ற இருவரும் இறைவன் ஒளிமலையாகத் தோன்றியும் முறையே முடியையும் அடியையும் காண முடியாதுப் போயினர்.

மேலும் தலைவி பாடுகிறாள் :

ஞாலமே, விண்ணே, பிறவே அறிவரியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டு அருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே, சிவனேஎன்று
ஓலம் இடினும்

நாங்கள் உன் வாசலில் வந்து பாடுகிறோம். யாரைப்பற்றி?
மண்ணுலகத்தார் அறிய முடியாத அந்த அருட்பெரும் கடவுளை, விண்ணுலகத்தார் அறிய முடியாத அந்தப் பேரருளை, பிற உலகத்தார் அறிய முடியாத அந்த அரும் பொருளை நாம் பாடுகிறோம். அவர் அழகுத் திருக்கோலம், நம் கருமேனி கழிக்க வந்த திருக்கோலம். எளியவர்களாகிய நம்மை ஆட்கொள்ளும் பெருங்குணத்தை புகழ்ந்து பாடுகிறோம். அவன் சீலத்தையும் சிறப்பையும் பாடுகிறோம். அது மட்டுமா? சிவனே, சிவபெருமானே என்று ஓலமிட்டுக் கூவுகின்றோம். ஒருமுறைசிவனேஎன்றாலே, உறக்கம் கலையவேண்டும். இரண்டாம் முறையாக ஓலமிடுகிறோம். ஆனால் நீயோ,

“……………………… உணராய் உணராய்காண்
ஏலக் குழலி, பரிசுஏலோர் எம்பாவாய்

ஓலங்கேட்டும், ஓய்வு நீங்காது உன்னையே இன்னும் நீ அறிந்திலையே, விழித்து எழுந்தாய் இல்லை. மயிர்ச்சாந்தணிந்த கூந்தலாய், இது என்ன உன் தன்மை? உன்னை மயிர்ச்சாந்தால் அலங்கரித்துக் கொண்டு அக்கோலத்தைக் கண்டு மகிழ்கின்றாயே தவிர, அப்பெருமானைக்கோலமே நீ வா!’ என்று கூவி அழைத்தால் குறைந்திடுமோ? அவன் கோலமன்றோ திருக்கோலம். அழியாக் கோலம். நீயே உணர்ந்திருக்க வேண்டும். நாங்கள் பகர்ந்துமா பகற்கனவு நீங்கவில்லை?”

-மாணிக்கத்தேன்-

இறைமையின் வல்லமை அறியாத / அறிய விரும்பாத மாந்தர்கள் இப்படித்தான் அடிக்கடி நொண்டிச் சாக்குகள் கூறிக் கொண்டு உறக்கத்தில் இருப்பர்! சமயங்களின்வழிதான் இறைமையை அறிய முயற்சிக்க வேண்டுமென்பதில்லை. முதலில் உன் மனசாட்சிக்கு கட்டுப்படு. அற வழியில் நடக்க முயற்சி செய். இயற்கையே இறைமையை உனக்கு ஆசானாக இருந்து உணர்த்தும்!