ஏன் இந்த கொலைவெறி நஜீப்?

திசெம்பர் 27, 2011

மலேசிய இந்தியர்கள் 54 ஆண்டுகளாக ‘மலாய் மேலாண்மை கொள்கையினால் கொலைவெறிக்குள்ளாகும் நிலை மாற வேண்டும். அதற்கு முதலில் அம்னோ ஒழியவேண்டும்!

Advertisements

கொள்கலனில் வாழ்க்கை நடத்தும் ஒரு முதியவரின் கதை…

திசெம்பர் 3, 2011

நான்கு ஆண்டுகளாக தங்குவதற்கு முறையான வீடின்றி ஒரு கொள்கலனில் வாழ்க்கை நடத்தும் ஓர் ஏழை இந்திய முதியவரின் சோகக் கதையிது…


பினாங்கில் இண்ட்ராஃபின் உண்மை கண்டறியும் பயணம்

ஓகஸ்ட் 27, 2011

அண்மையில் மனித உரிமை வழக்கறிஞரான திரு.சுரேசு குரோவர் மலேசியாவிற்கு வருகைப் புரிந்து பல இடங்களுக்கு பயணம் செய்து இந்திய மலேசியர்களுக்கெதிரான மனித உரிமை மீறல் சம்பவங்களை நேரடியாக கண்டு தகவல்களை திரட்டிச் சென்றுள்ளார். இவையனைத்தையும் இண்ட்ராஃபின் லண்டன் சிவில் வழக்கிற்கு தக்க ஆதாரங்களாகப் பயன்படுத்தவிருக்கின்றனர் லண்டனில் உள்ள சட்டக் குழுவினர். அத்தகைய பயணத்தின் ஓர் அங்கமாக பினாங்கிற்கும் வருகை தந்திருந்தார் திரு.சுரேசு குரோவர். அப்பயணத்தின் சில நிழற்படங்கள் உங்களின் பார்வைக்காக..


பினாங்கின் கடைசி இந்திய பாரம்பரிய கிராமத்திற்கு ஆபத்து!

மே 7, 2011
பினாங்கு மாநில ’யுனெஸ்கோ’ பாரம்பரிய நிலத்தில் அமைந்துள்ள செயிண்ட் பிரான்சிஸ் சேவியர் தமிழ் கிருத்துவ பாரம்பரிய கிராமத்தின் தலையெழுத்து தற்போது கேள்விக்குறியாக உள்ளது. 150 ஆண்டுகளாக இரண்டு தலைமுறையாக வாழ்ந்துவரும் இந்திய மக்களை தற்போது கத்தோலிக்க பிசோப்பாக இருப்பவர் அங்கிருந்து வெளியேற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் தமிழ் கிருத்துவர்களின் நலனுக்காக வழங்கப்பட்ட இந்நிலம் அருகிலுள்ள சிட்டிடெல் தங்கும்விடுதி உரிமையாளருக்கு விற்கப்படப்போவதாகவும், இவ்வாண்டு இறுதிக்குள் அங்கு வசிக்கும் மக்கள் தத்தம் வீடுகளை காலி செய்ய வேண்டும் எனவும் கோரி நீதிமன்றத்தில் தேவாலய நிர்வாகம் வழக்கு பதிவும் செய்திருக்கிறது. ஜோர்ச்டவுன் நகர மையத்தில் உள்ள பினாங்கு சாலையில் அமைந்துள்ள அவ்வழகிய குக்கிராமமானது பினாங்குத் தீவின் கடைசி இந்திய பாரம்பரிய கிராமம் என அறியப்படுகிறது. இக்கிராமத்திற்கும் புவா பாலா கிராமத்திற்கு ஏற்பட்ட முடிவுதானா? வாருங்கள் அங்குள்ள மக்களையே நாம் கேட்போம்..

போராட்டம் தொடரும்…


>நாடற்ற பல ஏழை இந்தியப் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதில்லை!

செப்ரெம்பர் 7, 2010

>

போராட்டம் தொடரும்…


>’மக்கள் சேவை தினம்’- பினாங்கு ம.உ.க ஊடக அறிக்கை

செப்ரெம்பர் 5, 2010

>
இன்று (ஞாயிற்றுக்கிழமை 05-09-2010 ) பினாங்கு மாநில மனித உரிமைக் கட்சியின் அலுவலகத்தில் பிறப்புப் பத்திரம் மற்றும் அடையாள அட்டையின்றி குடியுரிமையற்றவர்களாக வாழும் இந்தியர்களுக்காக உதவும் வகையில் ‘மக்கள் சேவை தினம்’ எனும் நிகழ்வு நடந்தேறியது. இந்நிகழ்வில் பிறை, புக்கிட் மெர்தாஜாம், பாகன் செராய், பெர்மாத்தாங் பாவோ மற்றும் பினாங்குத் தீவு ஆகிய இடங்களிலிருந்து 80-க்கும் மேற்பட்ட நாடற்ற இந்திய குடும்பங்கள் வருகை புரிந்திருந்தனர். போக்குவரத்து பிரச்சனைகளை எதிர்நோக்கிய பல குடும்பங்களை மனித உரிமைக் கட்சியினர் ம.உ.க செயலகத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்திருந்தனர்.


மனித உரிமைக் கட்சியின் தேசிய மதியாலோசகர் திரு.நா.கணேசன் தலைமையில் காலை 10.00 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்வில் முதல் அங்கமாக செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் நடைப்பெற்றது. 1,50 000 நாடற்ற மலேசிய இந்தியர்களின் தொடர்பிரச்சனைகளை அரசாங்கம் உடனடியாக களைவதற்கு ஆவண செய்ய வேண்டும் என செய்தியாளர் கூட்டத்தில் திரு.நா.கணேசன் வலியுறுத்தினார். இந்நாட்டில் எந்தவொரு பொருளை வாங்கினாலும் ரசீது கிடைக்கும். ஒரு வளர்ப்புப் பிராணியை வாங்குவதென்றாலும் அதற்கென்று உரிமம், சான்றிதழ் பெற்றாகவேண்டும். ஆனால், இந்நாட்டில் பிறந்த 1,50 000 இந்திய குடிமக்களுக்கு சான்றாக பிறப்புப் பத்திரம் இல்லாத அவல நிலை இன்றுவரை தொடர்ந்துவருவது வேதனைக்குறிய விஷயமாகும் என அவர் தெரிவித்தார்.


மலேசிய கூட்டரசு அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 14(1)(b)-யின் படி இந்நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிய பிறப்புரிமையை அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் ஐக்கிய நாட்டுச் சபையின் உலகலாவிய மனித உரிமைப் பிரகடனத்தை மீறக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார். நாடற்ற மலேசிய இந்தியர்கள் இந்நாட்டில் பலவிதமான பிரச்சனைகளை எதிர்நோக்கிவருகின்றனர். ஏழ்மை நிலை, திருமணத் தடை, பாதுகாப்பற்ற மற்றும் அடிமைத் தொழில், சுகாதார மற்றும் மருத்துவச் சேவை புறக்கணிப்பு, ஆரம், இடைநிலை மற்றும் உயர்க்கல்வி நிராகரிப்பு, மலிவு விலை வீடு, அர்சாங்க வாடகை வீடு, அரசாங்க உதவிகள் நிராகரிப்பு, வங்கியில் கடனுதவி மறுப்பு, குடியுரிமையற்ற குழந்தைகள், காவல்த்துறையினரிடம் பிடிபடுதல், வாகனம், வியாபார உரிமம் மறுப்பு, காப்புறுதி, பங்குகளை வாங்க நிராகரிப்பு, சமய உரிமை புறக்கணிக்கப்பட்ட நிலை என பலவகையில் கள்ளக்குடியேறிகளைவிட மோசமாக வாழ்ந்து வரும் மலேசிய இந்திய மண்ணின் மைந்தர்களின் குடியுரிமைப் பிரச்சனை உடனடியாக தீர்க்கப்படவேண்டும்.

மூன்றே வாரங்களில் ஓர் இந்திய குடும்பத்தில் உள்ள ஏழு குழந்தைகளுக்கு மனித உரிமைக் கட்சியின் தலையீட்டால் பதிவிலாகா பிறப்புப் பத்திரங்களைக் கொடுக்கும்போது, ஏன் 1,50000 மலேசிய இந்தியர்களுக்கு கொடுக்க்க்கூடாது என திரு.நா.கணேசன் கேள்வி எழுப்பினார்.
மேலும் இந்நிகழ்விற்கு வந்திருந்த சுமார் 15 குழந்தைகள் பிறப்புப் பத்திரம் இல்லாததனால் பள்ளிக்குச் செல்லாமல் உணவகங்களில் பாத்திரம் கழுவுவது, கனரக வாகன உதவியாளராக வேலை செய்வது, கோழிப் பண்ணையில் எச்சங்களை அள்ளுவது போன்ற வேலைகளை செய்து வருவதை உருக்கமாக கூறியபோது வந்திருந்தோரை கவலையில் ஆழ்த்தியது. அதனையடுத்து 80 இந்திய குடும்பங்களுடன் இணைந்து மனித உரிமைக் கட்சியினர் பதாகையேந்தி புகைப்படம் எடுக்கும் நிகழ்வு நடந்தது. அனைவரும் ஹிண்ட்ராஃப் வாழ்க! மனித உரிமை வாழ்க! என கோஷமிட்டனர்.
மதியம் 12.00 மணியளவில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.மதிய உணவிற்குப்பின் மனித உரிமைக் கட்சியினர் 80 குடும்பங்களின் பிரச்சனைகளை ஒவ்வொன்றாக கவனித்து உதவி செய்தனர். எதிர்வரும் 26-ஆம் திகதியன்று இவ்விந்திய குடும்பங்கள் மீண்டும் பினாங்கு மனித உரிமைக் கட்சியின் செயலகத்தில் ஒன்றுகூடவிருக்கின்றனர். பினாங்கு மாநில பதிவிலாகா அதிகாரிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அன்றைய தினம் பரிசீலித்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள மனித உரிமைக் கட்சி ஆவண செய்யும். இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்நோக்கும் வட மாநிலங்களைச் சார்ந்தவர்கள் பினாங்கு மாநில மனித உரிமைக் கட்சியினரைத் தொடர்பு கொள்ளுமாறு திரு.நா.கணேசன் கேட்டுக் கொண்டார்.
தொடர்புக்கு : திரு.நா.கணேசன் 0124803284 திரு.கலைச்செல்வம் 0125637614 திரு.அண்ணாதுரை 0174107244
போராட்டம் தொடரும்…

கல்வித்துறையில் எட்டி உதைக்கப்படும் இந்திய சமூகம்!

ஜூன் 12, 2010