பிறந்தநாள் விருது & முக்கிய புள்ளி

நவம்பர் 21, 2008

இன்றையமலேசிய நண்பன்நாளிதழில் தலையங்கச் செய்தியில் சாருக்கானுக்கு டத்தோ விருது, மக்களின் வாழ்த்தும் வருத்தமும் என்ற கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. இக்கட்டுரையின் சாராம்சம் என்னவென்றால் வெளிநாட்டுப் பிரமுகருக்கு வழங்கும்டத்தோஎனும் உயரிய விருது மலேசியர்களுக்கு, அதிலும் குறிப்பாக சாதனை புரிந்த பல மலேசியத் தமிழர்களுக்கு ஏன் வழங்கப்படுவதில்லை எனும் ஏக்கத்தை வெளிப்படுத்தியிருந்தது அக்கட்டுரை.

இக்கட்டுரையைப் படித்தவுடன் எனக்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எசு.எம்.முகம்மது இத்ரீசு அவர்களின்சுவடுகள் மறைந்தால்எனும் நூலில் வெளிவந்தக் கட்டுரைதான் ஞாபகத்திற்கு வந்தது.

அவர் கூறும் சில கருத்துகளை நாம் அலசிப் பார்ப்போம்..

மக்களுக்கு விருது வழங்குவதில் மலேசியாவை எந்த நாடும் தோற்கடிக்க முடியாது. நம்முடைய நாட்டில் மொத்தம் 13 மாநிலங்கள். ஒவ்வொரு மாநில சுல்தான் அல்லது ஆளுநர் பிறந்தநாளுக்கும், சமுதாயத்தில் சேவையாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். மாமன்னரின் பிறந்தநாள் என்றால் மத்திய விருதுக்கு வாய்ப்பு உண்டு. “டான் சிறீ“, “டத்தோ“, “பி.சே.கே“, “.எம்.என்என்று ஒவ்வொரு வருடமும் பல ஆயிரம் பேர் பட்டங்கள் சூட்டி மகிழ்விக்கப்படுகின்றனர்.

நாட்டின், சமுதாயத்தின் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பதில் தப்பில்லைதான். நல்லது செய்த ஒருவருக்கு அங்கீகாரம் வழங்குவது நற்பண்புதானே. மற்றவர்களும் அதே வழியில் சேவையாற்ற வழிகோளும் ஒரு நடவடிக்கையே இது. ஆனால் இந்த விருது வழங்கும் நடவடிக்கையில் சில கெட்ட விளைவுகளும் அடங்கியே இருகின்றன. சமுதாயத்துக்கு உண்மையாக நேர்மையாக உழைக்கும் ஒருவர் பெரும்பாலும் விருதுகளை எதிர்பார்ப்பதில்லை. அதை ஒரு பொருட்டாகவே நினைப்பது கூட கிடையாது.

சேவை செய்பவர் இப்படி இருக்கையில் விருது பெற்றால் அதிலிருந்து பிற்காலங்களில் தமக்கு ஏதாவது நன்மை விளையும் என்று எதிர்பார்த்து விருதை விரைந்து நாடுபவர்களும் உண்டு. “டான் சிறீ“, “டத்தோஎன்ற பட்டம் இருந்தால் மேற்கொண்டு வரும் வியாபாரத்தை இன்னும் விருத்தி செய்து கொள்ளலாம், செய்கின்ற தொழிலில் இன்னும் பெரிய பதவி, உயர்வான வாழ்க்கை என்ற பார்வையிலேயே விருதுகளுக்காக பரபரக்கிறார்கள். பெயருக்கும் முன்னால் வரும் இந்தப் பட்டங்கள் தன்னுடைய மதிப்பை உயர்த்திவிட்டதாக ஒரு மிதப்பு அவர்களுக்கு.

குறிப்பிட்ட அரசியல்வாதிகளுக்கு, நேர்மையாக உழைத்தவர்களுக்கு இந்த விருது தரப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் குறிப்பிட்ட அரசியல் தலைவர்களுக்கு ஆதரவு கொடுத்தால் விருது கிடைக்கும் என்ற உத்தரவாதமும் வழங்கப்படுகிறது. சனநாயக நாட்டில் எல்லோரும் சமம்தான். இந்த விருது வழங்கும் கலாசாரம் மக்களிடையே பேதத்தை வளர்த்து வருகிறது.

பெரிய விருந்துகளிலும், வைபவங்களிலும் முக்கிய புள்ளிகள் வரும்பொழுது பாருங்கள். வரவேற்புரை நிகழ்த்தப்படும்பொழுது யாங் ஆமாட் பெரோர்மாட், டான் சிறீ, புவான் சிறீ, டத்தோ, டத்தின்என்று வரிசைப்படுத்திவிட்டு பிறகுதான் துவான் புவானுக்கு மரியாதை. நிகழ்வு நடந்து முடிந்த பின்பு உணவருந்துவதற்கு இவர்களுக்கென்று பிரத்தியேகமாக அறை ஒதுக்கப்பட்டு உணவு பரிமாறப்படுகிறது. இப்படித் தரம் பிரித்துப் பார்க்கும் பழக்கத்தை நாம் பிரிட்டிசுகாரர்களிடமிருந்து கற்றுக் கொண்டோம்.

எல்லா நாடுகளும், சேவையாற்றிய வீரப் பிரசைகளுக்கு ஏதாவது ஒரு வகையில் அங்கீகாரம் வழங்குகிறது. ஆனால் சில நாடுகள் மட்டுமே விருதுகள் வழங்கி பெயருக்கு முன்னால் பட்டத்தையும் சேர்த்து எழுதிக்கொள்ள வைத்து வாழ்நாள் முழுக்க குதூகலிக்க வைக்கிறது.

சேவை செய்தவர்களுக்கு அங்கீகாரம் தேவைதான். ஆனால் பெயருக்கு முன்னால் பட்டத்தையெல்லாம் கொடுத்து சராசரி மனிதனை விட அவர்கள் உசத்தி என்று தலை மேல் தூக்கிக் கொண்டாடுவது முறைதானா?

சிந்தித்துப் பாருங்கள்….

ஆபிரகாம் லிங்கனும் கென்னடியும் எப்படி இறந்தனர்?

நவம்பர் 5, 2008

அடுத்து நீங்கள் படிக்கவிருக்கும் விடயம் நிச்சயம் உங்கள் புருவங்களை உயர்த்தும். அமெரிக்க அதிபர்கள் ஆபிரகாம் லிங்கன்,கென்னடி ஆகிய இருவருக்கும் பலவிதங்களில் ஒற்றுமை இருக்கிறது.

எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு சுவாரசியமான மடலை தமிழாக்கம் செய்து உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். சிலர் இவ்விடயம் குறித்து ஏற்கனவே படித்திருக்கலாம், இருப்பினும் மீண்டும் ஒரு மீள்பார்வை..

ஒரு வரலாறு நூறு ஆண்டுகள் கழித்து மீண்டும் நடைப்பெற்றக் கதையிது!

ஆபிரகாம் லிங்கன் 1846-ஆம் ஆண்டில் சட்டசபை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

சான் எஃப். கென்னடி 1946-ஆம் ஆண்டில் சட்டசபை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆபிரகாம் லிங்கன் 1860-ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார்.

சான் எஃப்.கென்னடி 1960-ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இவர்களிருவரும் குடிமக்களின் உரிமைகளில் அதிக கவனம் செலுத்தியவர்கள்.

இவர்களிருவரின் மனைவிமார்களும் அமெரிக்க வெள்ளை மாளிகையில் வாசம் செய்த காலத்தில்தான் தங்கள் பிள்ளைகளை இழந்தனர்.

இவ்விரு அதிபர்களும் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நாள் வெள்ளிக் கிழமையாகும்.

இவ்விருவருமே தலையில் சுடப்பட்டு இறந்தனர்.

ஆச்சரியமாக இருக்கிறதா…?

லிங்கனின் செயலாளரின் பெயர் கென்னடி.

கென்னடியின் செயலாளரின் பெயர் லிங்கன்.

இவ்விரு அதிபர்களுமே தென் மாநிலங்களைச் சார்ந்த நபர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

இவ்விரு அதிபர்களைக் கொலைச் செய்த கொலையாளிகளின் பெயரும் சான்சன்.

லிங்கனுக்கு அடுத்து அதிபர் பதவியையேற்ற அண்ட்ரூ சான்சன் 1808-ஆம் ஆண்டில் பிறந்தவாராவார்.

கென்னடிக்கு அடுத்து அதிபர் பதவியையேற்ற லிண்டன் சான்சன் 1908-ஆம் ஆண்டில் பிறந்தவராவார்.

லிங்கனைக் கொலைச் செய்த சான் வில்க்ஸ் பூத் 1839-ஆம் ஆண்டு பிறந்தவராவார்.

கென்னடியைக் கொலைச் செய்த லீ ஆர்வீ ஓஸ்வெல்ட் 1939-ஆம் ஆண்டி பிறந்தவராவார்.

இவ்விரு கொலையாளிகளின் முழுப்பெயர்கள் ஒவ்வொன்றிலும் மூன்றுப் பெயர்கள் அடங்கியுள்ளன.

இவ்விரு கொலையாளிகளின் பெயர்களுமே 15 ஆங்கில எழுத்துகளால் அமைந்தவை.

(John Wilkes Booth , Lee Harvey Oswald)

என்ன, படிக்கப் படிக்க ஆச்சரியமாக உள்ளதா?

லிங்கன் – ‘ஃபோர்டு’ என்றழைக்கப்படும் ஒரு திரையரங்கில் கொல்லப்பட்டார்.

கென்னடி – ‘ஃபோர்டு’ நிறுவனம் தயாரித்த ‘லிங்கன்’ எனும் மகிழுந்தில் பயணம் செய்யும்போது கொல்லப்பட்டார்.

திரையரங்கில் லிங்கனைக் கொன்ற கொலையாளி ஒரு கிடங்கில் சென்று ஒளிந்துக் கொண்டான்.

கென்னடியைக் கொன்ற கொலையாளி ஒரு கிடங்கிலிருந்து துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு, பின் ஒரு திரையரங்கில் சென்று ஒளிந்துக் கொண்டான்.

இவ்விரு கொலையாளிகளும் (பூத், ஓஸ்வெல்ட்), நீதிமன்ற விசாரணைக்கு முன்பே கொல்லப்பட்டுவிட்டனர்.

இங்குதான் சுவாரசியமே உள்ளதுமேலும் தொடர்ந்து படியுங்கள்..

லிங்கன் இறப்பதற்கு ஒருவாரத்திற்கு முன்பு மான்றோ, மேரிலாண்ட் எனுமிடத்தில் இருந்தார்.

கென்னடி இறப்பதற்கு ஒருவாரத்திற்கு முன்பு மர்லின் மன்றோ எனும் நடிகையுடன் இருந்திருக்கிறார்.

தகவல்களனைத்தும் எப்படி இருந்தன? ஆச்சரியமாக உள்ளதா…?

இதனையடுத்து மற்றொரு சுவாரசியமான விடயமும் கைவசம் இருக்கிறது! அதனை அடுத்தப் பதிவில் காணலாம்.. 🙂