மலேசியாவின் அத்திப்பட்டிக்கு வாருங்கள்!

மார்ச் 10, 2009
ஒரு சமுதாயம் கடந்த 50 ஆண்டுகளாக வெளிப்படையாகவே தொடர் ஒடுக்குதலுக்கு ஆளான அவலத்தைக் காணவேண்டுமா? மலேசியாவின் அத்திப்பட்டிக்கு வாருங்கள். பலரும் அறிந்திராத ஒரு தோட்டத்து மக்கள் கடந்த 50 ஆண்டுகளாக மின்சாரமும் குடிநீரும் இல்லாது வாழ்க்கை நடத்தும் அவலத்தை நீங்களும் எட்டிப் பார்த்துவிட்டுப் போங்கள்!

2020-ஆம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த நாடு எனும் முத்திரையைப் பதிக்க துடித்துக் கொண்டிருக்கும் மலேசியாவிலும் இப்படி ஒரு தோட்டமா என்று நம்மை அதிர்ச்சிக் கொள்ள செய்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக நடைப்பெற்ற பொதுத்தேர்தலின்போது, ஒவ்வொரு தடவையும் வேட்பாளர்கள் ஓட்டு பொறுக்குவதற்கு இத்தோட்டத்திற்கு வருவார்களாம். வழக்கம்போல் மின்சாரம் குடிநீர் பிரச்சனையை தீர்த்துவைக்கிறோம் என்று சூடம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக வாக்களித்துவிட்டுச் சென்றுவிடுவார்களாம். ஆனால் தேர்தலுக்குப் பின் இத்தோட்டத்தை , காகம்கூட ஏட்டிப் பார்க்காது என்பது இத்தோட்டத்து மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

அடிப்படை வசதிகள் கோரி மாநில மந்திரி புசார் அலுவலகம், சுல்தான் அரண்மனை முன்புறம் போராட்டம் எல்லாம் நடத்திப் பார்த்து ஓய்ந்துபோன மக்களிவர். இவர்களை பலர் பலவிதமான முறைகளில் தங்களின் சொந்த அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்தியவர்களும் உண்டு. இப்படி காலங்காலமாகவே ஏமாற்றப்பட்டு வருகிறோமே என்ற விரக்தியில்இனி எவன் வந்தாலும் ஓட்டுப் போடப்போவதில்லைஎன்ற முடிவிற்கும் சென்றுள்ளனர்.

அம்மக்களின் வயிற்றெரிச்சலோ என்ன காரணமோ, இன்று அத்தொகுதியைப் பற்றி ஒவ்வொரு மலேசியனும் வாய்திறக்கிறான். காரணம் இடைத்தேர்தல்!

இந்த மக்கள் யார்? எங்கு இருக்கின்றனர்?

இன்னும் ஒருமாத காலத்தில் மலேசியாவின் பார்வையே ஒருசேரக் குவியவிருக்கும் புக்கிட் செலம்பாவ் தொகுதியில்தான் இந்த அத்திப்பட்டி அமைந்திருக்கிறது. சுங்கை கெத்தா தோட்டம் 2, அல்லது ‘LADANG SUNGAI GETAH 2’ என இத்தோட்டம் அழைக்கப்படுகிறது. அரசியல் வேட்டையில் இத்தோட்டத்து மக்கள் மீண்டுமொருமுறை சிக்கவிருக்கின்றனர். அதற்கான அஸ்திவாரங்கள் போடப்பட்டுவிட்டன. பலவிதமான வாக்குறுதிகளை அம்புக் கணைகளாக இவர்களை நோக்கி வீசுவதற்கு அரசியல்வாதிகள் தயாராகிவிட்டனர். இவர்களைப் பயன்படுத்திக்கொள்வதால் அக்கம் பக்கத்திலுள்ள பல தோட்டங்களில் வாக்குகளை பெருவாரியாக அள்ளலாம் என்ற வியூகத்தின் அடிப்படையில் இப்பிரச்சனை மீண்டும் பூதாகரமாக்கப்படுகிறது.

அண்மைய சிலகாலமாகவே மலேசியத் தமிழ் நாளிதழ்களில் இத்தோட்டத்தைப் பற்றி பல அரசியல்வாதிகள் பேசிவருவதை படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

ஏன் மின்சாரம், குடிநீர் இல்லை?
ஏன் கடந்த 50 ஆண்டுகளாக இத்தோட்டத்தில் குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளற்ற நிலைமை உருவானது? இந்நிலைமைக்கு யார் முக்கிய காரணம்? இந்த திட்டமிட்ட ஒடுக்குதலுக்கு பின்புலமாக விளங்கிவரும் முக்கிய நபர்கள் யாவர்? அதற்கான விடையை அத்தோட்டத்து மக்களே கூறுகின்றனர்.

ஐரோப்பியர் ஒருவருக்கு சொந்தமாக இருந்த இந்தத் தோட்டம் பல வருடங்களுக்கு முன்பு மர்மமான முறையில் கைமாறியிருக்கிறது. தோட்ட நிர்வாகத்தை சிலகாலம் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை கோவிந்தன் என்பவரிடம் அந்த ஐரோப்பியர் கொடுத்துவிட்டு தாயகம் திரும்பியதாகவும், அதன்பிறகு அவர் மீண்டும் மலேசியாவிற்கு வரவேயில்லை எனவும், அவர் தன் தாயகத்திலேயே இறந்துவிட்டதாகவும் தோட்டத் தொழிலாளர்கள் கூறுகின்றனர். நிர்வாகப் பொறுப்பை மட்டுமே ஏற்றுக்கொண்டிருந்த கோவிந்தன் என்பவர் எப்படியோ நாளடைவில் அந்தத் தோட்டத்திற்கே முதலாளியும் ஆகிவிட்டார். இவர் ..காவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்த தோட்ட நிலங்களை அபகரித்துக் கொண்ட நாளிலிருந்தே அங்கு வசிக்கும் மக்களுடன் பல தகராறுகள் எழுந்துள்ளன.

தேசிய மின்சார வாரியத்தினர் இத்தோட்டத்திற்கு மின்சார வசதி ஏற்படுத்த முனைந்தபொழுதெல்லாம் கோவிந்தன் என்பவர் இதற்கு இடையூறாகவே இருந்துள்ளார். தோட்ட நிலம் இவரின் பெயரில் உள்ளதால் மின்சார வாரியம் இவரின் அனுமதியின்றி தோட்டத்தில் மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்க சிரமப்படுகின்றனர். தோட்ட மக்கள் பலவகையில் அடிப்படை வசதிகள் கேட்டுப் போராடியும் கோவிந்தன் என்பவர் ஒரு வீட்டிற்கு தலா ரி. 2000 கேட்கிறாராம். ரி. 2000 கொடுத்தால்தான் மின்சாரம் உள்ளே வரும் எனும் நிபந்தனையும் போட்டுள்ளாராம். இத்தனைக்கும் இவரது வீடு தோட்டத்தின் நுழைவாயிலில்தான் அமைந்திருக்கிறது. அவர் வீடுவரைக்கும் மின்சார வாரியம் மின்சார வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

எங்கள எல்லாரையும் இங்கேர்ந்து விரட்டிவுட்டுட்டு நிலத்த டெவலப்பர்கிட்ட விக்க பாக்குறானுங்க…” என்று தோட்ட மக்கள் வெதும்புகின்றனர். கரண்டுக்கு ஜெனெரேட்டர், தண்ணிக்கு கிணறு, அதுகூட சிலபேருக்கு இல்ல.. இதுதாங்க எங்க வாழ்க்க…” என்கிறார் பாதி வாழ்க்கையை இருட்டினுள் கடந்துவந்த ஒரு மூதாட்டி.

மண்ணெண்ண விளக்குலேயே படிச்சி என் பொம்பள புள்ள இப்ப யுனிவர்சிட்டி சைன்ஸ் மலேசியால படிக்கிறா..” என்று ஒரு மாது என்னிடம் கூறியபோது ஆச்சரியமாக இருந்தது. உண்மையிலேயே அத்தோட்டத்தில் படித்து பட்டம் பெற்றவர்கள் பலர். நல்ல பணியில் அமர்ந்ததும் அருகிலுள்ள பட்டணத்தில் பலர் குடியேறிவிட்டனர்.

நாங்களும் ..காவுல நிறையப் பேர பாத்து பேசனோம்..ம்ம்.. இடத்த காலி பண்ணுன்னுதான் சொல்றானுங்க…! முந்தி 50 குடும்பத்துக்கு மேலே இங்க இருந்துச்சி, இப்ப 20 குடும்பந்தான் இருக்குநாங்களும் எப்படா இந்த இடத்தவுட்டு போவோம்னு காத்துகிட்டு இருக்கானுங்க.. வெள்ளக்காரன் தோட்டத்த விக்காமலேயே இவனுங்களுக்கு எப்படிங்க கைமாறுனுச்சி!..” என்று நியாயத்தைக் கேட்டார் அங்குள்ள தோட்டத் தொழிலாளி ஒருவர்.

“யார் யாரையோ பாத்தோம், எல்லாரும் எங்கள வெளியிலே வீடு வாங்கிட்டு போக சொல்றாங்க, நான் மரம் வெட்டுறேன்.. நாள் சம்பளம் ஒன்பது வெள்ளிதான்.. இதுல எங்கே போயி வீடு வாங்க முடியும் சொல்லுங்க…” என்று வருத்தப்பட்டுக் கொண்டார் ஒரு குடும்ப மாது.

இதேப்போன்று பலரிடமிருந்து பலவிதமான முராரி ராகங்கள்…

எது எப்படியோ, வருகின்ற இடைத்தேர்தலில் களம் காணவிருக்கும் கட்சிகள் இத்தோட்டத்து மக்களுக்கு என்ன பதிலைச் சொல்லப் போகிறார்கள் என்பதுதான் கேள்வி. ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து இத்தோட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு வந்த சூழலானது கடுமையான மனித உரிமை மீறல் என்றே கூறவேண்டும்.

யார் அத்தொகுதியில் போட்டியிட்டாலும் சரி, முதலில் இம்மக்களுக்கு மின்சாரமும் குடிநீரும் கொடு! இவர்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை அமல்படுத்து! பிறகு ஓட்டைக் கேள்!

2004-ஆம் ஆண்டில் சுங்கை கெத்தா 2 தோட்டமானது, சுங்கை கெத்தா 2 கிராமம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அங்குள்ளவர்களிடம் பேட்டி எடுக்கப்பட்டது. இதோ அதன் காணொளி காட்சி உங்கள் பார்வைக்கு..

http://video.google.com/googleplayer.swf?docid=-8752655759079566596&hl=en&fs=true

போராட்டம் தொடரும்

Advertisements

பினாங்கு தியான ஆசிரமம் – சுய அறிவாலயம்

மார்ச் 31, 2008

படக்காட்சி 1

படக்காட்சி 2 (தொடர்ச்சி)

TamilFree videos are just a click away

பினாங்கு வாழ் தமிழர்கள் இந்த சுய அறிவாலயத்திற்கு உதவி புரியலாம், அல்லது தங்களுடைய பிள்ளைகளை இங்கு அனுப்பி தமிழர் பண்பாடு, கலாச்சாரத்தை தெரிந்து நல்ல மனிதர்களாக உருவாக்க வழி காணலாம்.

தற்பொது புக்கிட் குளுகோரிலிருந்து ஆசிரமம் ஐலண்ட் கிளேட்ஸ் எனும் இடத்திற்கு மாற்றலாகியுள்ளது. புதிய இடத்தின் வரைப்படத்தைக் காண கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பைச் சுட்டுங்கள் : தியான ஆசிரம பினாங்குக் கிளை

அழிவை நோக்கிப் பினாங்குத் தீவு.. உடனடி தீர்வு தேவை..

ஜனவரி 30, 2008

மலேசியாவின் வட மாநிலமான பினாங்கு மாநிலம், அதிலும் முக்கியமாக பினாங்குத் தீவு மலேசியாவின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். அழகிய கடற்கரை, வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள், பலவிதமான உணவு வகைகள் என பல சிறப்புகளை பினாங்குத் தீவு தன்னகத்தே தக்கவைத்துள்ளது. 19-ஆம் நூற்றாண்டில் இந்தியர்களை சஞ்சிக் கூலிகளாக கொண்டு வரப்பட்டு முதன் முதலில் அவர்கள் இறக்கி விடபட்ட இடம் பினாங்குத் தீவு என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

இத்தகு பெருமைகளைக் கொண்ட இத்தீவு, நாளுக்கு நாள் தன்னுடைய கற்பை இழந்து வருகிறது எனக் கூறினால் அதை மறுப்பதற்கில்லை. இன்று பார்க்கும் இடங்களிலெல்லாம் வானளாவிய கட்டிடங்கள், வாகன நெரிசல்கள், ஜனத் தொகை பெருக்கம், சுற்றுச்சூழல் மாசு என பல வளர்ச்சிகளையும், வீழ்ச்சிகளையும் ஒருங்கே பெற்றுக் கொண்டு இந்த குட்டித் தீவு அவதிப்படுகிறது. கடந்த ஆண்டில் மக்கட்தொகை கணக்கெடுப்பில் பினாங்கின் மக்கள் தொகை 1.6 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.

இத்தொகை மேலும் பெருகுமாயின் பினாங்குத் தீவு வரலாறு காணத நெரிசலை வருங்காலத்தில் எதிர்நோக்க வேண்டியுள்ளது. சுற்றுலாத்தலம் எனப் பெயர்பெற்ற இக்குட்டித்தீவு இன்று மிகப் பெரிய தொழிற்பேட்டைகள், அனைத்துலக விமான நிலையம், வர்த்தகக் கட்டிடங்கள் என ஹாங் காங்கைப் போல் ஒரு வர்த்தகத் தீவாக மாற்றம் கண்டுவிட்டது. குறுகிய காலக்கட்டத்தில் அதீத மாற்றம் கண்டுவிட்ட இக்குட்டித்தீவு தற்போது தன்னுடைய இயற்கை வளங்களை மெல்ல மெல்ல இழந்து வருகிறது. வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் அரசாங்கம் மேம்பாட்டாளர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, தன்னுடைய இயற்கை வளத்தை தாரை வார்த்துக் கொடுப்பதால் இன்று பினாங்கில் உள்ள பாதுகாக்கப்பட வேண்டிய காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.

நிம்மதியை நாடி பலர் சுற்றுலாத் தலங்களின் மீது படையெடுக்கும் பொழுது பினாங்குத் தீவு அவர்களை வாகன நெரிசலோடு வரவேற்கிறது. அதோடு மட்டுமல்லாமல் இன்று பினாங்கின் அழகிய கடற்கரைகள் குப்பைக் கூளங்களையும் நுரைகளையும் கக்கிக் கொண்டிருக்கின்றன.. இவை அனைத்தும் பினாங்கு இன்று அடைந்துள்ள மேம்பாடும், மக்கட் தொகைப் பெருக்கமுமே ஆகும்..

மெல்ல மடியும் பினாங்கின் இயற்கை அழகிற்கு உச்சாணிக் கொம்பாக இக்குட்டித் தீவிற்கு சற்றும் ஒவ்வாத ஒரு மிகப் பிரமாண்டமான திட்டம் ஒன்று அண்மையில் அரசாங்கத்தின் ஒப்புதல் பெற்றுள்ளது நம்மையெல்லாம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பினாங்கிற்கு சுமையாக வந்திருக்கும் அத்திட்டத்தின் பெயர் பினாங்கு அனைத்துலக மாநகர் மையம் ஆகும்.

இகூவின் கெப்பிட்டல் மற்றும் அதன் துணை நிறுவனமான அபாட் நலூரி சென்டிரியான் பெர்காட் இம்மாபெரும் திட்டத்தை ஏற்று நடத்தவுள்ளன. இத்திட்டமானது பினாங்கின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்கோட்லண்ட் சாலை பினாங்கு குதிரை பந்தயத் திடலில் அமையவுள்ளது. இத்திட்டம் பதினைந்து ஆண்டுகளில் பூர்த்தியாகும் என்றும் இதனை பூர்த்திச் செய்ய 25 பில்லியன் செலவாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த மேலும் சில தகவல்கள் :

50,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமையவிருக்கும் இம்மாபெரும் திட்டத்தில்,

1)384.953 ச.மீ பரப்பளவில் பேரங்காடி
2)95.174 ச.மீ பரப்பளவில் அனைத்துலக கருத்தரங்க மையம்
3)73.950 ச.மீ பரப்பளவில் பினாங்கு கலையரங்கம்
4)61.718 ச.மீ பரப்பளவில் 33 ஆடம்பர அடுக்குமாடிகள்
5)23.130 ச.மீ பரப்பளவில் 5 நட்சத்திர தங்கும் விடுதி
6)25.725 ச.மீ பரப்பளவில் 5 நட்சத்திர தங்கும் விடுதி
7)22.530 ச.மீ பரப்பளவில் அலுவலகங்கள்
8)183,390 ச.மீ பரப்பளவில் கார் நிறுத்துமிடம்

பினாங்கு குதிரைப் பந்தயத் திடல், திறந்த வெளிக்குரிய இடமாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட இடம் நாளடைவில் பலதரப்பட்ட வளர்ச்சித் திட்டங்களுக்குரிய இடமாக எப்படி மாற்றி அறிவிக்கப்பட்டது என புரியாத புதிராக உள்ளது. அதே வேளையில் இத்திட்டங்கள் முறையான பரிசீலனைக்குள்ளாகி அரசாங்கத்தின் ஒப்புதல் பெறுவதற்கு முன்பே எப்படி இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது என்பது இன்னொரு புரியாத புதிர்.

இத்திட்டத்திற்கு பினாங்கு மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியவுடன் அவசர அவசரமாக இத்திட்டத்திற்கு சான்றிதழ் வழங்கியவர் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தில் இன்னொரு கோளாறு என்னவென்றால், எந்த ஒரு குடியிருப்புத் திட்டமென்றாலும், அத்திட்டத்தில் 30 சதவிகிதம் மலிவு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட வேண்டும். இத்திட்டத்தில் மொத்தம் 6,933 ஆடம்பர அடுக்குமாடி வீடுகள் உள்ளனவே தவிர மலிவு விலை வீடுகளுக்கு அங்கு இடம் ஒதுக்கப்படவில்லை. இருப்பினும், இம்மலிவு விலை வீடுகள் வேறிடத்தில் கட்டப்படுமாம். ஏழையையும் பணக்காரனையும் பிரித்து வைக்கின்ற செயல் அல்லவா இது… ஏன், இரு பிரிவினரும் ஒரே இடத்தில் சேர்ந்து வாழ்ந்தால் அங்கு வசிக்கும் பணக்கார துவான்களுக்கு சகித்துக் கொள்ள முடியாதோ? அரசாங்கம் இப்படி கௌரவம் பார்ப்பது கேவலமாக இருக்கிறது.

இது மட்டுமல்லாமல், இத்திட்டதில் இரு உயர் கட்டிடங்கள் பேர் சொல்லும் அளவிற்கு பினாங்கு மாநிலத்தின் சின்னங்களாக விளங்குமாம். அக்கட்டிடத்தில் ஒரு கட்டிடம் 66 மாடிகளைக் கொண்டது எனத் தெரிய வந்துள்ளது.

ஏழைகளுக்கென்று எந்த ஒரு திட்டமும் கொண்டு வர இந்த அரசாங்கத்திற்கு வக்கில்லை, ஆனால் பணக்காரர்கள் நன்றாக வாழ்க்கை தரத்தை அனுபவிக்க வேண்டும் என இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதை நாம் அறியலாம். தற்போது பினாங்கு மக்களின் கேள்வி என்னவென்றால், ஸ்கோட்லண்ட் சாலை ஏற்கனவே ஒரு நாளைக்கு 60,000 வாகனங்கள் பயன்படுத்தும் சாலையாக இருக்கும் பொழுது, வரப்போகின்ற இம்மாபெரும் திட்டம் பினாங்கின் மையப் பகுதியை நெரிசலுக்கு உள்ளாக்கி விடாதா எனபதுதான்… இதில், நெரிசலைக் குறைக்க பினாங்கிற்கு இரண்டாவது பாலமாம்.. ஒரு குட்டித் தீவிற்கு இவ்வளவு மக்கள் பணத்தைச் செலவு செய்து, அத்தீவை அழிவிற்குள்ளாக்கும் செயலை அரசாங்கத்தின் மடத்தனம் என்றே சொல்லவேண்டும். அதிலும், சீன நாட்டின் ஒரு வங்கியில் கடனை வாங்கி இந்த இரண்டாவ்து பாலம் கட்டப்படுகிறது. இறுதியில் கடனை அடைப்பதற்கு மக்கள் பணம்தான் சுரண்டப்படும்..

இயற்கை வளங்களையும் அழித்து, மக்களின் உள்ளுணர்வையும் அவர்களின் தேவைகளையும் புறக்கணித்து மேம்பாட்டாளர்களின் லாபத்திற்கும் அரசாங்கத்தின் சுய லாபத்திற்கும் நிலங்களை விற்று இப்படி மாபெரும் திட்டங்களை உருவாக்கினால், நாளடைவில் அங்குள்ள மக்கள்தான் அவதிக்குள்ளாக வேண்டிவரும்… பினாங்கு மக்களே, உங்களின் எதிர்காலத்தை சோதனைக்காலமாக மாற்ற வரும் இத்திட்டத்தை புறக்கணியுங்கள்..! இனியும் நெரிசல்களின் இடிபாடுகளில் உங்கள் வாழ்க்கையின் சக்கரம் ஓடக் கூடாது…!

வளர்ச்சி என்பது கட்டிடங்கள் உயர்வதாலும், உல்லாசக் கேளிக்கைகள் பெருகுவதாலும் அல்ல..
நல்ல நற்பண்புகள் உள்ள, அலைச்சல் மன உளைச்சல் இல்லாத, நிம்மதியான, இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை என்பதே ஒரு நாட்டின் குடிமகனுக்கும், அந்நாட்டிற்கும் ஏற்பட்டிருக்கும் உண்மையான வளர்ச்சி என்பதை அறிக…

புவி வெப்பமயமாகிறது: எட்டு ஆண்டுகளில் அனைவரும் மாற வேண்டும்: ஐ.நா. எச்சரிக்கை!!!

ஒக்ரோபர் 30, 2007

புவி வெப்பமயமாகுதலை இன்னும் எட்டு ஆண்டுகளுக்குள் தடுத்து நிறுத்த வேண்டும். எனவே, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாயுக்களை வெளிப்படுத்தும், பூமியிலிருந்து எடுக்கப்படும் எரிபொருள் பயன்பாட்டில் இருந்து அனைத்து நாடுகளும் மாறியாக வேண்டும் என்று ஐ.நா., எச்சரிக்கை விடுத்துள்ளது.

பூமி உறைந்து போகாமல் இருக்க, ஓரளவுக்கு வெப்பம் தேவை. இந்த வெப்பத்தை கார்பன் டையாக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்கள் ஏற்படுத்துகின்றன. இவை பூமியின் மேற்பரப்பில் இயற்கையாக உருவாகும் தன்மை கொண்டவை. இவை போதிய அளவு வெப்பத்தை உருவாக்கி, பாதுகாப்பு கவசம் போல, பூமி உறைந்து போகாமல் பாதுகாக்கின்றன. ஆனால், நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்ற, பூமியிலிருந்து எடுக்கப்படும் படிம எரிபொருள்களை பயன்படுத்துவதால், கார்பன் டையாக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்களின் அளவு அதிகரித்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்தி பூமியை மிகவும் வெப்பமாகின்றன. இயற்கைக்கு எதிராக நடக்கும் இந்த போக்கு மிகவும் ஆபத்தானது. நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெயில் இருந்து கிடைக்கும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் பயன்பாடு உலகளவில் மிகவும் உச்சத்தில் இருக்கிறது. இதனால் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு புவி வெப்பமடைந்து வருகிறது; பனி மலைகள் வேகமாக உருகுகின்றன; கடல் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. வெப்பம் அதிகரிப்பதால் வறட்சியும் மிரட்டுகிறது.

இயற்கையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தால் பல நாடுகளுக்கு ஆபத்து ஏற்படும். இதை தடுக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா., ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. 24 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் வாயுக்களை இன்னும் எட்டு ஆண்டுகளுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். தொழிற்சாலைகள் அமைவதற்கு முன்பு, பூமி வெப்பம் கட்டுக்குள் இருந்தது. பூமி தாங்கக் கூடிய அளவிலிருந்து 2 முதல் 2.4 பாகை சென்டிகிரேட் வரை வெப்பம் அதிகரித்தால் ஆபத்து இல்லை. அதற்கு மேல் அதிகரித்தால் ஆபத்து தான்.அளவுக்கு அதிகமாக உற்பத்தியாகும் வாயுக்களைக் கட்டுப்படுத்த, பூமியிலிருந்து எடுக்கப்படும் நிலக்கரி மற்றும் எண்ணெய் எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். மாற்று எரிபொருளைப் பயன்படுத்த உலக நாடுகள் தயாராக வேண்டும்.

நீர் மின் நிலையங்கள், அணுசக்தி, சூரிய சக்தி, காற்றாலை ஆகியவற்றின் மூலம் மின்சாரம் தயாரிப்பதை அதிகரிக்க வேண்டும். குறைந்த எரிபொருளில் ஓடும் வாகனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தனித்தனியாக வாகனங்களில் செல்வதை தவிர்த்து ரயில்கள் மற்றும் பஸ்கள் போன்ற வாகனங்களில் செல்ல வேண்டும். பயிர் மேலாண்மையை மேம்படுத்த வேண்டும். பசுமையை அதிகரித்து, காற்று மாசுபடுவதை தடுக்க வேண்டும். நெல் விளைச்சலில் புதிய யுக்திகளை பயன்படுத்த வேண்டும். கால்நடைகள் வளர்ப்பு மற்றும் எருவை பயன்படுத்தும் முறையை மேம்படுத்த வேண்டும். இதனால் மீத்தேன் வாயு வெளிப்படுவது குறையும். சிறந்த மின்சார சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவற்றை சரியான முறையில் பொருத்த வேண்டும். குளிர்படுத்தவும், வெப்பப்படுத்தவும் சூரிய சக்தியை பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு பல விஷயங்களை ஐ.நா., வலியுறுத்தியுள்ளது. இவற்றை பின்பற்றுவதாக இந்தியா, சீனா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. தங்களின் வாழ்க்கை முறையையும், பொருட்கள் பயன்பாட்டில் மாறுதலையும் ஏற்படுத்தி கொள்வதாக வளர்ந்த நாடுகள் தெரிவித்துள்ளன. உலக மக்கள் தொகையில், 20 சதவீதம் பேரே வளர்ந்த நாடுகளில் உள்ளனர். ஆனால், உலகளவில் 50 சதவீத அளவுக்கு, சுற்றுச்சூழல் மாசுபடுத்தும் வாயுக்களை அந்த நாடுகள் தான் வெளிப்படுத்துகின்றன. அந்த நாடுகளில் மாற்றம் கொண்டு வந்ததால்தான் புவி வெப்பமடைவதை தடுக்க முடியும். அதே போல் மலேசியாவிலும் இந்த மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மூலம் : நம் பூமி (நன்றி)