திருவெம்பாவை – பாடல் 5

ஜனவரி 12, 2009

திருவெம்பாவை – பாடல் 4

மாலறியா நான்முகனுங் காணா மலையினைநாம்
போலறிவோ மென்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேஎன்
றோல மிடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்.

அரிவையர் கூட்டம் வேறு ஒரு வீட்டிற்குச் செல்கிறது. அந்த வீட்டு அஞ்சுகம் மஞ்சத்தைவிட்டு எழுந்திருக்கவில்லை. அவளைப் பார்த்து மங்கையர் தலைவி கேட்கின்றாள்:

மால்அறியா நான்முகனும் காணா, மலையினைநாம்
போல்அறிவோம் என்றுஉள்ள பொக்கங்க ளபேசும்
பால்ஊறு தேன்வாய்ப் படிறீ, கடைதிறவாய்.”

திருமால் அறியாத திருவடியை , நான்முகன் அறியாத திருவடியை , மலை உருவாய்மாமலை போல் மேனி உடையராய், ஓங்கி உலகளந்த உத்தமனைநாம் உணர்வோம் என்று பொய்யுரைக்கும் பெண்ணே, சுரக்கின்ற பாலையும், தேனையும் போல் இனிமையாகப் பேசுகின்ற வஞ்சகியே, கொஞ்சம் கதவைத் திறப்பாய்!” என்று சொன்ன போது, அவள் வாயில் பாலும் தேனும் ஊறியது போல் வந்தவர்கள் நினைத்தார்கள். ஆனால், “நாம் போல் அறிவோம்என்று சொன்னவுடன், அவள் வஞ்சக நெஞ்சினள் என்பதை உணர்ந்தார்கள்.

மால்அறியா நான்முகனும் காணா மலை.” நான்முகன், மால் என்ற இருவரும் இறைவன் ஒளிமலையாகத் தோன்றியும் முறையே முடியையும் அடியையும் காண முடியாதுப் போயினர்.

மேலும் தலைவி பாடுகிறாள் :

ஞாலமே, விண்ணே, பிறவே அறிவரியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டு அருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே, சிவனேஎன்று
ஓலம் இடினும்

நாங்கள் உன் வாசலில் வந்து பாடுகிறோம். யாரைப்பற்றி?
மண்ணுலகத்தார் அறிய முடியாத அந்த அருட்பெரும் கடவுளை, விண்ணுலகத்தார் அறிய முடியாத அந்தப் பேரருளை, பிற உலகத்தார் அறிய முடியாத அந்த அரும் பொருளை நாம் பாடுகிறோம். அவர் அழகுத் திருக்கோலம், நம் கருமேனி கழிக்க வந்த திருக்கோலம். எளியவர்களாகிய நம்மை ஆட்கொள்ளும் பெருங்குணத்தை புகழ்ந்து பாடுகிறோம். அவன் சீலத்தையும் சிறப்பையும் பாடுகிறோம். அது மட்டுமா? சிவனே, சிவபெருமானே என்று ஓலமிட்டுக் கூவுகின்றோம். ஒருமுறைசிவனேஎன்றாலே, உறக்கம் கலையவேண்டும். இரண்டாம் முறையாக ஓலமிடுகிறோம். ஆனால் நீயோ,

“……………………… உணராய் உணராய்காண்
ஏலக் குழலி, பரிசுஏலோர் எம்பாவாய்

ஓலங்கேட்டும், ஓய்வு நீங்காது உன்னையே இன்னும் நீ அறிந்திலையே, விழித்து எழுந்தாய் இல்லை. மயிர்ச்சாந்தணிந்த கூந்தலாய், இது என்ன உன் தன்மை? உன்னை மயிர்ச்சாந்தால் அலங்கரித்துக் கொண்டு அக்கோலத்தைக் கண்டு மகிழ்கின்றாயே தவிர, அப்பெருமானைக்கோலமே நீ வா!’ என்று கூவி அழைத்தால் குறைந்திடுமோ? அவன் கோலமன்றோ திருக்கோலம். அழியாக் கோலம். நீயே உணர்ந்திருக்க வேண்டும். நாங்கள் பகர்ந்துமா பகற்கனவு நீங்கவில்லை?”

-மாணிக்கத்தேன்-

இறைமையின் வல்லமை அறியாத / அறிய விரும்பாத மாந்தர்கள் இப்படித்தான் அடிக்கடி நொண்டிச் சாக்குகள் கூறிக் கொண்டு உறக்கத்தில் இருப்பர்! சமயங்களின்வழிதான் இறைமையை அறிய முயற்சிக்க வேண்டுமென்பதில்லை. முதலில் உன் மனசாட்சிக்கு கட்டுப்படு. அற வழியில் நடக்க முயற்சி செய். இயற்கையே இறைமையை உனக்கு ஆசானாக இருந்து உணர்த்தும்!
Advertisements

ஜனவரி 9, 2009திருவெம்பாவை – பாடல் 3

ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்
தெண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.

அடுத்த வீட்டிற்கு வருகிறார்கள். அந்தப் பெண், தூக்கத்தின்பால் விருப்பம் மிகுந்தவள் அவள், கண்ணைத் திறக்காமல் புன்னகை பூத்துக்கொண்டிருக்கின்றாள்.

ஒருவேளை, தாயுமான அடிகள் சொன்னார்களே, “தூங்கி விழித்து என்ன பயன், தூங்காமல் தூங்கும் பாங்கு கண்டால் அன்றோ பலன் பெறுவேன் பைங்கிளியேஎன்று, அதை நினைவில் கொண்டாளோ, என்னவோ? முன்பு, வெண்முகத்தைக் கண்டார்கள். இங்கே நன்முத்து, நனிமுத்தாகத் திகழ்கின்றது. அவளைப் பார்த்து, ”இன்னும் பொழுது புலரவில்லையோ?” என்று கேட்கிறார்கள் :

ஒள்நித்தில நகையாய், இன்னம் புலர்ந்தின்றோ?”

படுக்கையில் கிடந்தவாறே அந்தப் பைங்கிளி கேட்கின்றாள் :

வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ

அழகிய கிளி போன்று பேசும் மங்கையர் எல்லாம் வந்துள்ளனரோ?” கூடிச் செல்கின்ற பொழுது தன் கூட்டத்தினர் அனைவரும் வந்துவிட்டார்களா என்பது இயற்கை. ‘அவர் வரட்டும். நானும் வந்துவிடுகிறேன்என்பது பழக்கம். அந்த முறையிலேதான் இங்கே கேட்கிறாள் :

அதற்குப் பதில் உரைக்கப்படுகிறது :

வந்தவர்களைக் கணக்கிட்டுக்கொண்டா இருக்கின்றோம்? நாங்கள் எண்ணி முடிக்கும்வரை ஒரு சிறு தூக்கம் கொள்ளலாம் என்று எண்ணாதே. கண் மூடியபடி காலத்தை வீணாக்காதே.”

எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுகோம், அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே

காலம் கடக்கிறது. அந்த கடவுளைத் தொழு. அவன் புகழ் எப்படிப்பட்டது தெரியுமா? தேவர்களுக்கு எல்லாம் ஒப்பில்லாத அமிழ்தம். மறை ஆகமங்களின் விழுப்பொருள் ; கெழுதகை.

காட்சிக்கு எளியான்காண், மாட்சிமை மனம் வைத்தார்க்கு மாணிக்கத் துள்ளொளி காண்.”

அருள்எல்லாம் திரண்டுஓர் வடிவாகிய பொருள் எல்லாம் வல்ல பொற்பொதுநாதன் அவன்

விண்ணுக்கு ஒருமருந்தை, வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கு இனியானை

இவனைப் பாடி உள்ளம் அசைவற நின்று, நெகிழ்ந்து, நெக்குருகி, நெஞ்சுருகாயோ?

கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக

இப்போதும் அந்தப் பெண் எழுந்தபாட்டைக் காணோம். எனவே, மேலும் சொல்கின்றார்கள் :

“………. யாம்மாட்டோம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயில், ஏலோர் எம்பாவாய்.”

நாங்கள் என்ணிக் கணக்குச் சொல்லப்போவதில்லை. நீ வேண்டுமானால் கணக்கிட்டுக் கொள், காரிகையே. எண்ணிக்கையில் யாராவது குறைந்தால் மீண்டும் போய்க் கண் துயில்திரும்பவும் போய்த் தூங்கு.”

– மாணிக்கத்தேன்-

கேட்க கேட்க தீஞ்சுவைக் குன்றாத மாணிக்கத்தேனைப் பருக எண்ணம் கொண்ட அன்பர்களே, இன்று சிரம்பான், யாம் துவான் சாலையில் அமைந்துள்ள சிறீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் திருவெம்பாவைப் பாடல் நாட்டிய நிகழ்ச்சி நடைப்பெறவுள்ளது. இந்து சங்க ஏற்பாட்டில் நடைப்பெறும் இந்நிகழ்வில் திருவெம்பாவைப் பாடல்களின் விளக்கம் மற்றும் நாட்டிய அபிநயத்தோடுகூடிய திருவெம்பாவை நாட்டிய நிகழ்ச்சி நடைப்பெறும். சுற்றுவட்டார மக்கள் தவறாமல் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு பயன்பெறவும்.

திருவெம்பாவை – பாடல் 3

ஜனவரி 4, 2009

முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன்ஆ னந்தன் அமுதனென் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைத்தீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.

பாவையர்கள் பார்த்தார்கள். ‘இரண்டு பெண்களை எழுப்பிவிட்டோம். தவறாமல் அதிகாலையிலேயே எழுந்து நம்மை வழக்கமாய் எதிர் ஏற்கும் பெண்ணைக் காணவில்லையே! என்ன காரணம்?’ என்று அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்று அங்கே பாடுகிறார்கள்.

முத்தன்ன வெண்நகையாய்

முத்துப் போன்ற வெண்மையான பற்களையுடைய பெண்ணே!” என்று அந்தப் பெண்ணை வர்ணித்து, அந்தப் பெண்ணைப் பார்த்துக் கேட்கின்றார்கள் :

முன்பு எல்லாம், எங்களுக்கு முன்னரே துயில் எழுந்து, எங்களுக்கு எதிர்வந்து, இறையை வாய் இனிக்க இனிக்கப் போற்றுவாய். ‘ஆண்டவன் எனக்குத் தந்தை, இன்ப வடிவினன், அழிவற்றவன், அழகில் ஒப்பற்றவன், ‘அமுதன்என்று. ஆனால், இப்பொழுது என்னவென்றால் உறங்குகின்றாயே! விழித்தெழுந்து கதவு திறக்கின்றாய் இல்லையே! ஈது என்னை?”

முத்து அன்ன வெண்நகையாய், முன்வந்து எதிஎழுந்துஎன்
அத்த, ஆனந்தன் அமுதன்என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய், வந்துன் கடைதிறவாய்

அத்தன் : தந்தையும் ஆவான், தலைவனும் ஆவான். இப்படி எழுப்ப வந்தவர்கள் கூற, எழுந்தவள் சொல்கின்றாள் :

பத்துடையீர், ஈசன் பழஅடியீர், பாங்குடையீர்
புத்தடியோம், புன்மைதீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ

பேரன்புடையீர், பக்தியுடையீர், நீங்கள் எல்லோரும் பழைய அடியார்கள். பக்குவம் நன்கு பெற்றவர்கள் ; என் போன்றவர்கள் புதிய அடிமைகள். எங்கள் குற்றத்தை ஆட்கொண்டால் தீங்காமோ?” இவ்வாறு சொன்னதற்கு, எழுப்ப வந்த பெண்கள் பதிலுரைக்கின்றனர்:

எத்தோநின் அன்புடைமை, எல்லோம் அறியோமோ

உன் அன்புடைமை எங்களுக்குத் தெரியாதா? அது எப்படிப்பட்டது, எத்தகையது என்பதை நாங்கள் அறியமாட்டோமா?” என்றார்கள்.

இதைக் கேட்டுப் படுத்திருந்த பெண்மணி சொல்கிறாள் :

சித்தம் அழகியார் பாடாரோ நசிவனை?”

மன நன்மையுடையார், இறைவன் திருவருளை நாடிப் பக்தி செய்பவர்கள், நம் சிவபெருமானைப் புகழ்ந்து பாடாது இருப்பார்களோ?”

இறைவன் திருவருளை நாடிப் பாடுவார்கள் என்றமையினால், ‘இப்பெண்கள் எல்லாம் இறைவனைப் பாடாமல் என்னைப்பற்றியப் பேசிப் பொழுதைக் கழிக்கின்றார்களே!’ என்பதைக் கூறாமல் கூறுகிறாள். அதனால்தான் அந்தப் பெண்கள் தலைவி,

இத்தனையும் வேண்டும் எமக்குஏலோர் எம்பாவாய்

என்கிறாள். “ஆமாம், நமக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்என்ற வருத்தம் ஏற்படுகிறது.

திருவெம்பாவை – பாடல் 2

மறக்கப்பட்டு வரும் தமிழர் சமயப் பண்பாடு

நவம்பர் 22, 2008
சமயம் என்றாலே, தான் கண்டு வாழ்ந்த இயற்கையின்பால் மனிதனுக்கு எழுந்த உணர்வுகளின் அக,புற வெளிப்பாடு என்று கூறலாம். இந்த உணர்வுகள் பண்பட்ட நெறியாக வெளிக்கொணரப்பட்டது நாகரீகங்கள் எழுச்சி பெற்ற காலத்தில்தான். உலக சரித்திரத்தில் சமயத்தை அடிப்படையாகக் கொண்டே மனித நாகரீகங்கள் தோற்றம் கண்டன என்பது மறுக்க முடியாத உண்மையாகும். சுமேரியா, எகிப்து, சிந்து சமவெளி, மாயா, சீனா போன்ற ஆதிகால நாகரீகங்களில் வாழ்ந்த மக்கள், ஏதோ ஒருவகையில் இந்த இயற்கையோடு தங்களுக்குள்ள தொடர்பை வெளிப்படுத்த முனைந்த தடையங்கள் பல பரந்து காணக் கிடக்கின்றன. ஆனால் இந்நாகரீகங்களோடு தமிழர்களின் நாகரீகத்தை ஒரு ஒப்பீடு செய்து பார்த்தால், ஆதிகாலந்தொட்டே தமிழர்களின் சமய நம்பிக்கையானது புற வழிபாடுகளைவிட அக வழிப்பாட்டு தத்துவத்திற்கே அதிகம் மதிப்பு கொடுத்து வந்துள்ளது புலனாகிறது.

பாரத கண்டத்தில், அதிலும் முக்கியமாக தமிழகத்தில் சமய இலக்கியத்தின் வளர்ச்சியைப்போல் வேறெந்த நாகரீகமும் பெற்றிருக்க முடியாது என்று ஆணித்தரமாகக் கூறலாம். சங்ககாலம் தொட்டே தமிழர்கள் மொழியின் வளர்ச்சிக்காக சமயத்தையும், சமயத்தின் வளர்ச்சிக்காக மொழியையும் போற்றி பேணி வந்துள்ளார்கள். தமிழர்களின் சம இலக்கியங்களில் காணக் கிடக்கும் பலவகையான வழிப்பாடுகளை, தத்துவ அடிப்படையில் ஆய்வு செய்து அதற்கான விளக்கங்களை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தோன்றிய பல சமயப் பெரியார்கள் தெளிவுபடுத்தியிருக்கின்றனர்.

அந்தச் சமயப் பெரியார்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர், ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய மாணிக்கவாசகர் ஆவார். படித்தாலும், பக்கம் நின்று கேட்டாலும், கருங்கல் மனத்தையும் கனிந்துருகச் செய்யும் திருவாசகம் என்னும் தேனை உலகிற்கு வழங்கிய பெருமை அவரையேச் சாரும். தேன் கலந்து, பால் கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து, ஊன் கலந்து, உயிர் கலந்து உவட்டாமல் இனிக்கும் இணையற்ற பாடல்கள் பலவற்றைக் கொண்டது, திருவாசகமாகும். அத்திருவாசகத்திலுள்ள இரு தேன்துளிகளேதிருவெம்பாவை‘ , ‘திருப்பள்ளியெழுச்சிஆகியனவாகும்.

திருவெம்பாவை என்றால் என்ன?

இருள் விலகுமுன்னே இளம்பெண்கள் சிலர் எழுந்து, தம் தோழியரின் இல்லந்தோறும் செல்வர்; துயின்றுகொண்டிருக்கும் அவர்களை எழுப்பி அழைத்துச் சென்று நீர் நிலையில் நீராடுவர்; பின்பு, மணலால்பாவைபோன்ற ஓர் உருவம் அமைத்து, நாடு செழிக்க வேண்டும், நல்ல கணவர் தமக்கு வாய்க்க வேண்டும் என வேண்டி அதனை வணங்குவர். இதுவே திருவெம்பாவை எனப்படும்.

இதற்குத் தத்துவ அடிப்படையில் வேறு பொருளும் கூறுவர்.

அஃதாவது, பக்குவம் முதிர்ந்த ஆன்மா, மல இருளில் அழுந்திக் கிடக்கும் பக்குவம் பெறாத ஆன்மாவை எழுப்பி, இறைவன் அருள்நீரில் திளைப்பதற்கு அழைத்துச் செல்வதாய்க் கூறுவர்.

திருவெம்பாவை என்னும் பகுதியில் அமைந்துள்ள பாடல்கள், ஒருவருடன் ஒருவர் உரையாடும் நாடகக் காட்சிகள் போல் அமைந்துள்ளன. ஓரளவு தமிழ் கற்றவரும் விரும்பிப் படிக்கும்வண்ணம் அழகிய சந்த நடையில் அப்பாக்கள் ஆக்கப்பட்டுள்ளன.

திருவாசகத் தேனடையில் உள்ள மற்றொரு துளி, ‘திருப்பள்ளியெழுச்சிஆகும்.

திருப்பள்ளியெழுச்சிஎன்பதற்குப் பொருள் யாது?

இறைவனைத் துயில் எழுப்புதல் என்பதாகும்.

அப்படியென்றால், இறைவன் உறங்கிக் கொண்டிருக்கின்றானா?

அன்று.

இந்த ஊன் உடம்பாகிய ஆலயத்தில், உள்ளமாகிய பெருங்கோயிலில் இறைவன் வீற்றிருக்கிறான். ஆனால், ஆன்மா அந்த இறைவனைப் பற்றாது, ஐம்புலன் வழிப்பட்டு உலகாசையில் அழுந்தியுள்ளது. அவ்வாறு இறைவனை மறந்த நிலையேமறைத்துள்ள நிலையேஇறைவன் துயில்வதாய்க் குறிப்பிடப்படுகிறது. மறைத்துள்ள திரையை விலக்கி, ஆன்மாவை இறைவனோடு ஒன்றச் செய்வதற்காகஇறைவனை நெஞ்சகத்தில் நிலை நிறுத்துவதற்காகபாடப்படும் பாடல்களே திருப்பள்ளியெழுச்சியாகும்.

இன்று திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியைப் பற்றி பலருக்குத் தெரிவதில்லை. அப்படியென்றால் என்னவென்று கேட்கிறார்கள் இளையோர்கள்! காலத்தால் மறக்கடிக்கப்பட்டு வரும் விரத வழிபாடுகளில் திருவெம்பாவையும், திருப்பள்ளியெழுச்சியும் அடங்கும். மார்கழி மாதத்தில் இவ்விரு வழிபாடுகளும் பலங்காலந்தொட்டே தமிழ்ப் பெண்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இன்று தமிழகத்தில் ஆங்காங்கே ஆலயங்களில் மார்கழி மாத விரதம் இருந்து இவ்விரு பாடல்களும் பாடப்பட்டு வந்தாலும், எண்ணிக்கையளவில் குறைவாகவே மக்கள் ஈடுபடுகின்றனர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் தாய்லாந்தில்த்ரியம்பாஎன்றப் பெயரில் சிவனுக்கு விழா எடுக்கிறார்கள் அங்குள்ள மக்கள். நாம் இறைவனை பொன்னூஞ்சலில் வைத்து பாடுவது போலவே, அங்குள்ளவர்களும் சிவன் சிலையை பொன்னூஞ்சலில் வைத்து பாசுரங்கள் பாடுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

மலேசியத் தமிழர்களைப் பொறுத்தமட்டில் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியைப் பற்றி பலர் அறிந்திருக்கவில்லை. அதிலும் குறிப்பாக மலேசியத் தமிழ் இளைஞிகள் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியை ஆலயங்களில் பாடுவது என்பது அரிதாகவே இருக்கிறது. ஓரிரு தேவாரக் குழுக்கள் மட்டும் ஆலயங்களில் இப்பாடல்களைப் பாட கேட்டிருக்கிறேன்.

விரதமேதும் மேற்கொள்ளாவிடினும் குறைந்த பட்சம் இவ்விருப் பாடல்களையும் பொருளுணர்ந்து அனைவரும் பாடி அதன் இன்பத்தை பெற வேண்டும் எனும் நோக்கில்திருவெம்பாவையையும்திருப்பள்ளியெழுச்சியையும்தொடர் பதிவாக இனிவரும் பதிவுகளில் இடவுள்ளேன். இதற்காக சில நூல்களை மேற்கோள்களாகக் கொள்ளவுள்ளேன்.

இப்பாடல்களனைத்தும் பொருளுணர்ந்து வாசிக்கப்படின் / பாடப்படின் உள்ளத்துக்கு நல்லதோர் அரிய விருந்தாக அமைவது திண்ணம் என்ற நம்பிக்கையில் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்..