இந்திய மலேசியர்களின் எழுச்சி நாள்

நவம்பர் 25, 2011

இன்றோடு இந்திய மலேசியர்களின் அறப்போராட்டமானதும் எழுச்சி நாளுமான 25 நவம்பர் மாபெரும் இண்ட்ராஃப் பேரணி நடைப்பெற்று நான்கு ஆண்டுகள் பூர்த்தியடைகிறது. இத்தினத்தையொட்டி மாநில இண்ட்ராஃப் தலைவர்கள் தங்களின் கருத்துகளை பகிர்ந்துகொள்ளும் காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இந்நாளை நினைவுகூரும் வகையில் நாடுதழுவிய நிலையில் ஆங்காங்கே சிறப்பு வழிபாடுகள் நடக்கவிருக்கின்றன. பொதுமக்கள் தவறாமல் வழிபாட்டில் கல்ந்து கொள்ளவும். மேலும் தகவல்கள் இங்கே : இந்திய மலேசியர்களின் எழுச்சி தின சிறப்பு வழிபாடு, இண்ட்ராஃப் மக்கள் சக்தி ஏற்பாடு

போராட்டம் தொடரும்…

Advertisements

>பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி குறித்த ஆவணப்படம்

ஜனவரி 6, 2011

>

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4

போராட்டம் தொடரும்…

>இண்ட்ராஃப் தலைவருடன் ஒரு நேர்காணல்

ஒக்ரோபர் 23, 2010

>

தற்போது நடைப்பெற்றுவரும் அம்னோ மாநாட்டில் பிரதமர் நஜீப் கருத்துரைத்துள்ள சில விடயங்கள் குறித்து அண்மையில் லண்டன் பிபிசி தமிழோசை வானொலி இண்ட்ராஃப் தலைவர் பொ.வேதமூர்த்தியிடம் நடத்திய நேர்க்காணல் உங்கள் செவிகளுக்காக..

போராட்டம் தொடரும்…

சொந்த நாட்டிலேயே கள்ளக்குடியேறிகளைப்போல் வாழ்க்கை!

மார்ச் 17, 2010
ஏழை இந்திய மலேசியர்கள் எதிர்நோக்கிவரும் பல்வேறு பிரச்சனைகளில் முதன்மையாகத் திகழ்வது பிறப்புப் பத்திரம் மற்றும் அடையாள அட்டை இல்லாமை எனும் பிரச்சனைதான். சொந்த நாட்டிலேயே சுமார் ஒரு லட்சம் இந்திய மலேசியர்கள் கள்ளக்குடியேறிகளைப் போல் வாழ்ந்து வருகிறார்கள் என புள்ளி விவரங்கள் அறிவிக்கின்றன. நாளுக்கு நாள் இப்பிரச்சனை தொடர்ச் சங்கிலியைப்போல் நீண்டுகொண்டே செல்கிறது.

அண்மையில் இண்ட்ராஃப் தலைமையிலான பிரித்தானிய மக்களவை கருத்தரங்கு நிகழ்வில், ஒரு தமிழர் குடும்பத்தின் அவல நிலையினை திரு.நரகன் பங்கேற்பாளர்களிடம் விளக்கிக்காட்டி, ஏழை இந்திய மலேசியர்கள் எவ்வாறு ஓரங்கட்டுதலுக்கு உள்ளாகிறார்கள் என்பதனை நன்கு படம்பிடித்துக் காட்டியிருந்தார்.

பினாங்கில் கம்போங் பாகான் செராய், பெர்மாத்தாங் பாவோ எனுமிடத்தில் மிக வரிய நிலையில் வாழ்க்கையை ஓட்டிவரும் அக்குடும்பத்தினரின் நேர்க்காணலின் ஒரு பகுதி இதோ :-

பாகம் 1

போராட்டம் தொடரும்…

புவா பாலா மக்களே! கொடுக்கறத வாங்கிட்டு போங்க..!

ஓகஸ்ட் 13, 2009
இன்று பாமரர் முதல் படித்தவர்வரை புவா பாலா கிராம நில விவகாரம் குறித்து பெரும்பான்மையினர் கேட்கும் கேள்விகொடுக்கறத வாயமூடிக்கிட்டு வாங்கிட்டு போக வேண்டியதானே?”

சில நாட்களுக்குமுன், நான் குடியிருக்கும் அடுக்குமாடி கட்டிடத்தின் மின் தூக்கியில் நுழைந்த சமயம் என் அண்டை வீட்டுக்காரைப் பார்க்க நேர்ந்தது.

நான் கைகளில் தமிழ் நாளிதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்த அவர் என்னிடம் பேச்சு கொடுக்கத் தொடங்கினார்.

என்னையா இது அநியாயமா இருக்கு!”

அவர் எதைப்பற்றி கூறுகிறார் என்பதனை யூகித்தவனாய், ஏதும் பேசாமல் தலையை மட்டும் ஆட்டிவிட்டு நாளிதழைப் புரட்டத் தொடங்கினேன்.

சும்மா கொடுக்கறத வாங்கிட்டு போக வேண்டியதானே இவனுங்க…”

அவரை நிமிர்ந்துப் பார்த்தேன்.

சில நிமிடங்களில் மின் தூக்கி கீழ் மாடியை வந்தடைந்தது.

மின் தூக்கியிலிருந்து வேர்க்க விறுவிறுக்க என் அண்டை வீட்டுக்காரர் வெளியேறியக் காட்சியைக் கண்டு புன்னகைத்தவாரே மீண்டும் நாளிதழைப் புரட்ட ஆரம்பித்தேன்.

அவர் ஒருவேளை மனதில் நினைத்திருக்கக் கூடும்.

இந்த சனியன் கிட்ட இப்படியொரு கேள்விய கேட்டு மாட்டிகிட்டோமே…!”

அவரிடம் அப்படி என்ன பேசினேன் என்று நான் கூற ஆரம்பித்தால் நிறைய தணிக்கைகள் செய்ய வேண்டும் என்பதனால், கீழே இணைக்கப்பட்டுள்ள காணொளிப் பேட்டியைக் கேட்டு புரியாத சில விடயங்களை அறிந்து புரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கூடிய விரைவில் ஆங்கில மொழிப் பேட்டியும் வெளியிடப்படும்..

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. ( குறள் எண் : 423)

போராட்டம் தொடரும்

ராசீவ் காந்தி மரணத்தின் மர்மங்கள் !

திசெம்பர் 22, 2008
ஆங்கில நாள்காட்டியில் அன்று மே மாதம் 21-ஆம் திகதி 1991-ஆம் ஆண்டு. கடிகாரத்தில் இந்திய நேரப்படி சரியாக இரவு மணி 10.10 எனக் காட்டிக் கொண்டிருந்தது. தமிழகத்திலுள்ள சென்னை நகரிலிருந்து 30 மைல் தொலைவில் அமைந்திருக்கும் சிறீபெரும்புத்தூர் எனும் இடத்தில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இந்தியாவின் ஒன்பதாவது பிரதமர் அமரர் ரசீவ் காந்தியின் உடல் 700 கிராம் ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டு வெடித்ததில் சிதறி சின்னாப் பின்னமானது. இனவிடுதலைக்காக முழுமூச்சாகப் போராடிக் கொண்டிருந்த தமீழீழ விடுதலைப் புலிகளின் மீது கொலைப் பழி விழுந்தது.

இக்கொலை நடந்து 17 ஆண்டுகளாகிவிட்டன.. விடுதலைப் புலிகளின் மீது சுமத்தப்பட்ட பழி இன்னும் இந்திய, இலங்கை அரசியல் வட்டாரங்களில் பகடைக் காய்களாக உருண்டு கொண்டிருக்கின்றன..

உண்மையில் ரசீவ் காந்தியைக் கொன்றது விடுதலைப் புலிகளா?

திருச்சி வேலுசுவாமியின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலங்கள்..

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

பகுதி 5

பகுதி 6

பகுதி 7