புவா பாலா மாட்டுக் கொட்டகை, கிணறு உடைப்பு ! – பி.ப சங்கம் கேள்வி எழுப்புகிறது

ஒக்ரோபர் 20, 2009

பத்திரிகை செய்தி (1)
15.10.2009

கம்போங் புவா பாலா

புவா பாலா கிராமத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் தாங்கள் தினமும் பினாங்கு மாநிலத்தில் உள்ள பசும்பால் குடிக்கும் பயனீட்டாளர்களுக்கு வழங்கிவந்த பசும்பாலை தொடர்ந்து வழங்க முடியுமா என்ற அச்சத்தில் இருக்கின்றார்கள் என்று தெரிவிக்கின்றது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்.

இந்த புவா பாலா கிராமத்தில் சுமார் 100 ஆண்டு காலமாக மிகப்பெரிய மாட்டுக்கொட்டகையை வைத்திருக்கின்ற இந்த 3 சகோதரர்களான சிவானந்தம், முருகன், சுப்பிரமணியம் ஆகியோருக்குச் சொந்தமான மாட்டுக்கொட்டகையின் ஒரு பகுதியை புவா பாலா கிராமத்தில் மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ளவிருக்கும் மேம்பாட்டாளர் உடைத்ததன் காரணமாக இந்த அச்சம் ஏற்பட்டிருப்பதாக பி..சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.

கடந்த புதன்கிழமை வரை இந்த சகோதரர்களுக்குச் சொந்தமான 150 மாடுகள் தினமும் 300 லிட்டர் பசும்பாலை கொடுத்து வந்தன. ஆனால் நேற்று மேம்பாட்டாளர் திடீரென்று மாட்டுக்கொட்டகையின் ஒரு பகுதியை உடைத்துத் தரைமட்டமாக்கியதால் திகிலும் பயமும் அடைந்த கறவைமாடுகள் 300 லிட்டர் பால் கொடுப்பதற்குப் பதிலாக 140 லிட்டர் பாலையே கொடுத்ததாக சிவானந்தம் பி..சங்கத்திடம் தனது மனக்குமுறலைக் கொட்டியதாக சுப்பாராவ் மேலும் கூறினார்.

ஏற்கெனவே வீடுகளை உடைத்த மேம்பாட்டாளர் இப்பொழுது திடீரென்று எந்த வித முன்னறிவிப்பும் இன்றி மாட்டுக்கொட்டகையை உடைத்தது மிகப்பெரிய தவறு என அவர் கூறினார்.

திரு சிவாவும் அவருடைய சகோதரர்களும் பிரிதொரு இடத்தில் மாட்டுக்கொட்டகையை கட்டிக்கொள்வதற்கு இரண்டு வாரம் காலக்கெட்டு கேட்டிருந்தார்கள். ஆனால் அதற்கும் மேம்பாட்டாளர் சம்மதிக்காமல் திடீரென்று மாட்டுக்கொட்டகையை உடைத்தது இந்தக் கால்நடைகள் மீது கருணை இல்லாததையே காட்டுகின்றது என்றார் அவர்.

இப்பொழுது இந்த மாட்டுக்கொட்டகையிலிருக்கும் மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் கறவை மாடுகள் கொடுக்கின்ற 300 லிட்டர் பால் இப்பொழுது 150 லிட்டர் பாலாக குறைந்திருக்கின்றது. இது மேலும் குறையக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் அச்சகோதரர்கள் பி..சங்கத்திடம் கூறியதாக சுப்பாராவ் கூறினார்.

தங்களின் வருமானத்தை இழந்துள்ள இச்சகோதரர்களுக்கு மாநில அரசாங்கம் கட்டாயமாக நிதி உதவி செய்து தர வேண்டும் என்றும் என்.வி.சுப்பாராவ் கேட்டுக்கொண்டார்.

பத்திரிகை செய்தி (2)
15.10.2009

200 ஆண்டு கால கிணறு மூடப்படுகின்றது

படத்தில் காணப்படும் கிணறுதான் சுமார் 200 ஆண்டு காலமாக இந்த கம்போங் புவா பாலா கிராமத்தில் இருக்கின்றது. ஒரு காலத்தில் பினாங்கு மாநிலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது இக்கிராமத்தில் இருக்கும் சுமார் இதே போன்ற 10 கிணறுகளிலிருந்துதான் பினாங்கு மக்களுக்கு இக்கிராமத்திலிருந்து தண்ணீர் வழங்கப்பட்டிருக்கின்றது.

கே.டி.சிவானந்தம் என்பவரின் மாட்டுக் கொட்டகையிலிருக்கும் இந்தக் கிணறு இப்பொழுது மேம்பாட்டாளரின் அராஜகப் போக்கினால் எந்த நேரத்திலும் மூடப்படக்கூடிய சூழ்நிலையில் இருக்கின்றது. சிவானந்தம் தன் மாட்டுக் கொட்டகையில் இருக்கும் 150 மாடுகளுக்கும் 50 ஆடுகளுக்கும் இந்தக் கிணற்றிலிருந்தான் தண்ணீர் எடுத்துப் பயன்படுத்துகிறார்.

இந்தக் கிணற்றிலிருந்து சுமார் 50 லிட்டர் தண்ணீர் ஒரு தடவை எடுக்கப்பட்ட அடுத்த ஐந்தே நிமிடங்களிலேயே அந்தக் கிணற்றில் 50 லிட்டர் தண்ணீர் ஊறிவிடும். இந்தக் காட்சியை நாம் நேரடியாகப் பார்க்கும்பொழுதுதான் இந்த புவா பலா கிராமத்தில் எவ்வாறு கிணறுகளில் தண்ணீர் தேங்கிக்கிடக்கிறது என்ற உண்மை தெரிகிறது.

இந்த நீரின் சுவையே வித்தியாசமாக இருக்கிறது. இப்பொழுது இந்தக் கிணற்றை மேம்பாட்டாளர் மூடவிருப்பதால் சிவானந்தத்தின் 150 மாடுகளுக்கும் 50 ஆடுகளுக்கும் எங்கேயிருந்து அவர் தண்ணீர் எடுக்கப்போகின்றார் என்பதுதான் பெரிய கேள்வி.

பினாங்கு பயனீட்டாளர் சங்கத்திலும் தனது மனக்குறையை திரு சிவானந்தம் பகிர்ந்துகொண்டார்.

என்.வி.சுப்பாராவ்
கல்வி அதிகாரி

Advertisements

கைப்பேசியின்வழி தமிழில் மலேசியா கினி செய்திகள்!

நவம்பர் 24, 2008
உள்நாட்டில் நடைப்பெறும் சம்பவங்களைச் சுடச் சுட அறிந்துக் கொள்ள வேண்டுமா? ஜாவா செயலி கொண்ட கைப்பேசிகளின்வழி மலேசியா கினி புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும்மொபைல் கினிமென்பொருளை நிறுவிக் கொள்ளுங்கள்!

இச்சேவையின்வழி தமிழ் மொழியிலும் செய்திகளைக் கைப்பேசியின்வழி பெறலாம் என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். நாடறிந்த தமிழறிஞர் முனைவர் திரு.முரசு நெடுமாறன் அவர்களின் மகன் திரு.முத்து நெடுமாறனின் கைவண்ண்த்தில் உருப்பெற்ற இக்கைப்பேசி செயலியானது இப்பிராந்தியத்திலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட சேவையாகும். முரசு தொடர்புத்துறை நிறுவனத்தின் தோற்றுநரும் தொழிநுட்ப வரைகலைஞருமான திரு.முத்து நெடுமாறன் கூறுகையில், மலேசியா கினியுடன் தொழில்நுட்ப ரீதியில் இணைந்து பணியாற்றுவதில் தாம் மிக்க மகிழ்வதாகவும், மொழி மேலாண்மை, செயல்த்திறன், அதிவேகத் தகவல் வழங்குதல் போன்ற கூறுகளில் இச்செயலியானது நிச்சயம் ஒரு வெற்றிப் பெற்ற சேவைதான் என்றார் அவர்.

மலேசியா கினி செய்திகள் கைப்பேசிகளின்வழி மக்களைச் சென்றடையவிருப்பது தமக்கு மிக்க மகிழ்ச்சியை அளிப்பதாகவும், இணையச் சேவையின் தரத்திற்கொப்ப இச்செயலி செயல்படும் என்று மலேசியா கினியின் தலைமை நிர்வாகி திரு.பிரேமேசு சந்திரன் கூறினார்.

முதல் 30 நாட்களுக்கு இலவசமாக வழங்கப்படும் இச்சேவையில் மலேசியா கினியின் சுடச் சுடச் செய்திகளை முழுமையாகப் படிக்க அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. 30 நாட்கள் கழித்து சந்தாதாரர்களுக்கு மட்டுமே முழு செய்திகளும் வழங்கப்படும். சந்தாதாரர் அல்லாதவர்கள் செய்திகளின் சுருக்கத்தினைப் படித்து அறிந்துக் கொள்ளலாம். அதோடு சுருக்கச் செய்திகளை பிற நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்ளும் சேவையும் இதில் அடங்கியுள்ளது. இச்சேவையை மேலும் மேம்படுத்தும் வகையில் பின்னூட்டம் இடுதல், கருத்து கணிப்புகளுக்கு வாக்களித்தல் போன்ற வசதிகள் வரவிருக்கின்றன.

இச்சேவையை ஜாவா செயலி கொண்ட கைப்பேசிகளில் மட்டுமே பெற முடியும். இச்சேவையை இலவசமாக நிருவ உங்கள் கைப்பேசியில் குறுந்தகவல் சேவைக்குச் சென்று “mk” என ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து 32577 என்ற எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

இவ்வசதியை தமிழிலும் ஏற்படுத்திக் கொடுத்த முரசு நிறுவனத்திற்கும் மலேசியா கினி ஊடகத்திற்கும் வாழ்த்துகளும் நன்றிகளும் உரித்தாகட்டும்!

மலேசியா கினி நிர்வாகத்திடம் ஒரு வேண்டுகோள். மலேசியா கினி காணொளி தளத்தில் தமிழ்ப் பிரிவு ஒன்றிருந்தது. தற்போது மூன்று மொழிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன, தமிழ்ப் பிரிவு விடுபட்டுள்ளது. கூடிய விரைவில் தமிழையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்விடயம் குறித்து மலேசியாகினியிடம் பலரும் மின்னஞ்சல்வழி தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தீபாவளியன்று மது அருந்தலாமா?

ஒக்ரோபர் 17, 2008
நண்பன் நாளிதழ் 17/10/2008 பக்கம் 5

தருதலை : வணக்கோண்ணே…

முதலை : வணக்கம், வாழ்க தமிழ்! யாரது.. அடடே தருதலையா வாப்பா.. (முதலைக்கு புல்லரிக்கிறது)

தருதலை : தீபாவளி சீசன் வந்துருச்சுலே, அதான்…

முதலை : தெரியும்.. தெரியும் விளம்பரம்தானே.. எங்க காட்டு பாக்கலாம்..

தருதலை விளம்பரப் படிவத்தை நீட்டுகிறான். அதனைப் பெற்றுக் கொண்ட முதலை விளம்பரப் படிவத்தை சற்று நேரம் வெறித்து பார்க்கிறான்.. விளம்பரத்தை அலசிப் பார்த்துக் கொண்டிருந்த அவனது இருவிழிகளின் மேல் குடிகொண்டிருந்த புருவங்கள் நெறியத் தொடங்கியதைக் கண்ட தருதலைக்கு லேசாக வியர்க்க ஆரம்பித்தது.

முதலை : என்ன இது?!

தருதலை : விளம்பரம்…

முதலை : அது தெரியிது, பெரிய கோலம்.. அதுக்கு நடுவுல என்ன?

தருதலை : ஸ்கோல் பியர்..

முதலை : குத்துவிளக்கு எங்க?

தருதலை : அதுதான் இது…

முதலையின் புருவங்கள் மேலும் நெறிந்தன..

முதலை : இது சரி வராது.. நீ வேற ஆளே பாரு..

தருதலை : ஏன்? இந்த விளம்பரம் நல்லாதானே இருக்கு..!

முதலை : இத விளம்பரமா போட்டா என்ன நடக்கும்னு தெரியுமா?

தருதலை : என்ன நடக்கும்?

முதலை : இத விளம்பரப்படுத்திய மறுநாளே கண்டனத்துக்குமேலே கண்டனம் வரும்..

தருதலை : யார்கிட்டேர்ந்து…

முதலை : நம்மாளுங்ககிட்டேர்ந்துதாம்ப்பா…

தருதலை : அதுலாம் ஒண்ணும் வராதுண்ணா…

முதலை : எப்டி சொல்ற?

தருதலை : நம்மாளுங்களுக்கு தண்ணி இல்லாத தீபாவளியா என்ன?

முதலை : இல்ல.. இல்ல முடியாது! நம்பாளுங்க பாரம்பரிய கோலத்துக்கு நடுவுல பியர் போட்டல வெச்சது மட்டுமில்லாம, தீபாவளிங்கிற சமய திருநாளையும் கேவலப்படுத்தியிருக்கே..!

தருதலை: அட போங்கண்ணே, நீங்க வேணுண்ணா பாருங்க.. தீவாளி அன்னிக்கி நம்பப் பயலுங்க தண்ணிய போட்டுட்டு மல்லாக்க படுக்குறாங்களா இல்லியான்னு..! முதல்ல நீங்களே ஒரு தண்ணி கையி, நெஞ்ச தொட்டு சொல்லுங்க.. தீவாளிக்கு தண்ணி போடமாட்டீங்க??

முதலை தலையைச் சொறிந்துக் கொண்டான். தருதலையை நோக்கிப் புன்முறுவல் ஒன்றினை வீசிக் கொண்டே…

முதலை : அது வேறே.. இது வேறப்பா.. நம்ம ஒட்டு மொத்த சமுதாயத்தையும் கேவலப்படுத்துற மாறிலே இந்த விளம்பரம் இருக்கு..

தருதலை : அண்ணே, பேப்பர்லே முழுசா ஒரு பக்கம் இந்த விளம்பரத்த போடுறீங்க, இந்தாங்க பதினஞ்சாயிற வெள்ளி செக்கு கொண்டு வந்துருக்கேன்.

பதினைந்தாயிரம் வெள்ளி மதிப்புள்ள காசோலையைக் கண்ட முதலையின் வாய் பிளந்து கொண்டது.

தருதலை : அண்ணே வாய மூடுங்க.. ஈ புகுந்துற போகுது…!

முதலை, தருதலை நீட்டிய காசோலையை வாங்கிப் பத்திரப்படுத்திக் கொண்டு தொடர்ந்தார்..

முதலை : சரிப்பா, நீ சொன்ன மாறியே போட்டுர்றேன்.. ஆனா இந்த விளம்பர்த்துக்குக் கீழே பியர் தண்ணி மிதக்குறமாறி போட்டுருக்கீங்களே, அத எடுத்துறலாமே..

தருதலை : தண்ணி போட்டு நம்பாளுங்க மிதக்கணும்னுதான் கீழே சிம்பாலிக்கா போட்டுருக்கோம்.

முதலை : நான் அதுக்கு சொல்லலப்பா, நம்ப ஆளுங்களும் இப்ப வரவர திருந்திகிட்டு வராங்க..

தருதலை வாய்விட்டுச் சிரிக்கிறான்.

தருதலை : என்னண்ணே காமெடி பண்றீங்க.. கொடுக்குற பணத்த வாங்கிட்டீங்கல்லே, விளம்பரத்த போடுங்க.. அப்படி யாருக்காவது இந்த விளம்பரத்து மேலே உடன்பாடு இல்லேன்னா என்ன இந்த முகவரில வந்து பார்க்க சொல்லுங்க, இல்லாட்டி இ-மெயில் பண்ண சொல்லுங்க, நான் பாத்துகிறேன் என்ன? எழுதிக்கோங்க..

Carlsberg Marketing Sdn Bhd
No. 55, Persiaran Selangor, Section 15
40200 Shah Alam, Selangor
P.O.Box 10617, 50720 Kuala Lumpur
Tel : 03-55226688 Fax : 03-55191931
Email : enquiry@carlsberg.com.my

ஓகேவா, எழுதிக்கிட்டீங்கலா?..

முதலை : ம்ம்… ( நமக்குத் தேவை பணம், அது வந்துருச்சி.. இவனுங்க கோலத்து மேல பியர் பாட்டிலே வெச்சா என்ன, பியர் தண்ணியிலே சாமிய அபிசேகம் பண்ணா நமக்கு என்ன? எக்கேடு கெட்டாவது போகட்டும்..) என்று மனதிற்குள் முதலை நினைத்து கொண்டிருக்கையில்…

தருதலை : சரிண்ணே, நான் கிளம்புறேன்.. வர்ற தீபாவளிக்கு வீட்டுக்கு வந்துருங்க.. பிராண்டி, விஸ்கி எல்லாம் இருக்கு.. ஓகேவா, பாய்…

முதலை வாயில் 32 பற்களும் தெரிகின்றன.. கண்களிரண்டும் காசோலையில் பதினைந்தாயிரம் வெள்ளிக்கு எத்தனை முட்டைகள் என்று சரியாக எண்ணிக் கொண்டன..

தீபாவளி நன்னாளில் மலேசியத் தமிழர்களை போதையில் திளைக்க வைக்கப் போகும் கார்ல்சுபேர்க்கு நிறுவனத்தாருக்கும் மற்றும் அதனை அழகாக விளம்பரப்படுத்திக் காட்டிய நண்பன் நாளிதழுக்கும் நமது வாழ்த்துகள்.

நாளிதழில் சமயத் திருநாளையும் தமிழர்களையும் இதைவிடச் சிறப்பாகக் வேறெப்படிக் கேவலப்படுத்த முடியும் என்று எண்ணிப் பாருங்கள்..

ஒட்டு மொத்த மலேசியத் தமிழர்களையும் கேவலப்படுத்தும் இவ்விளம்பரத்தை நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும். தமிழர்கள் குடிபழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்ற முத்திரையைக் கிழித்தாக வேண்டும்!

மரியாதைத் தெரியாத இரு வாடிக்கையாளர்கள் !

ஓகஸ்ட் 12, 2008

மின்னஞ்சலில் கிடைத்த ஓர் ஒலிக்கோப்பு. வெறுப்படைய வேண்டாம் என நினைப்பவர்கள் ஒலிப்பேழையை சுட்டி உரையாடலைக் கேட்க வேண்டாம். எதற்கும் கேட்டுத்தான் பார்ப்போமே என நினைப்பவர்கள், தாராளமாகக் கேட்கலாம்.. ஆனால், நீங்கள் வெறுப்படைந்து கோபத்தின் எல்லைக்கே சென்றுவிடுவது நிச்சயம்.. அசுட்டுரோ வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு இரு இந்திய பெண்மணிகள் அலைப்பேசியில் அழைத்து உரையாடுவதைக் கேளுங்கள்…

Get this widget | Track details | eSnips Social DNA

இந்த ஒலிக்கோப்பைப் பதிவிறக்கம் செய்ய இணைய இணைப்பைச் சுட்டுங்கள் : அசுட்டுரோ

>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>

என்ன, உரையாடலைக் கேட்டு விட்டீர்களா? ஆங்கிலம் தெரிந்துவிட்டால் என்ன ஒரு துடுக்கு, மிடுக்கு இவர்களுக்கு! அலைப்பேசியில் சொந்த பணத்தை செலவழித்து ஆங்கில வகுப்பு நடத்துகிறார்கள்.. சீவானந்தன், உங்கள் பொறுமைக்கு பாராட்டுகள், இருந்தாலும் நீங்கள் மிகவும் நல்லவர்..

அந்த பீட்டர் அக்கா கேட்கிறார் : டோன் லெட் மீ டாக் இன் டமில்!! ஷிட்!! வாட் இஸ் மை ப்லடி பிராபலம்…?

அதற்கு விடை : த பிராபலம் இஸ், போத் ஓஃப் யூ ஆர் அ டோட்டலி ஹார்ட்கோர் மெண்டல் பேஷண்ட்ஸ்!! கோ டூ ஹேல்!!