சாயி பாபாவின் ஏமாற்று வித்தை அம்பலம்!

திசெம்பர் 10, 2008
சமயம் என்ற போர்வையில் பல போலி சாமியார்களின் கபட நாடகங்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டுதான் வருகின்றன. சரணாகதி என்றப் பெயரில் அவர்களையும் நம்பி தன் வாழ்க்கையையே அழித்துக் கொள்ளத் தயாராக இருப்பவர்களைக் கண்டுதான் மனம் வலிக்கிறது. இவர்களின் தவறான வழிகாட்டுதலினால், சமயங்கள் போதிக்கும் ஆழ்ந்த தத்துவங்கள் அடிபட்டு போகின்றன. சமயம் என்றாலே வெறி, பயங்கரவாதம், பணம் பண்ணும் குறுக்கு வழி, மூட நம்பிக்கை என பட்டம் கட்டப்பட்டு ஓரங்கட்டப்படுகிறது.

காரணம் என்ன?

சமயம் என்றாலே ஒரு மனிதனை தெய்வமாக்கும் மார்க்கம் என்று சிலர் இயம்புகின்றனர். ஆனால் ஒரு மனிதனை மனிதனாக்குவதுதான் உண்மையான சமயம். காரணம், ஒரு மனிதனை மனிதனாக்க முயல்வது அவ்வளவு எளிதான காரியமல்ல! மனிதனின் மனம் சமைந்து காணும் ஒரு முதிர்ந்த நிலையே ஒருவன் மனிதனாகப் பிறந்ததன் பிறவிப் பயனை எட்டிய நிலை என்று பலரும் அறிகிலர்!

நம் தமிழர்களின் சமய நம்பிக்கை பாழ்பட்டு போனதற்கு என்ன காரணம்? நம்மிடையே உள்ள அறியாமைதான் முதற்காரணம்! இரண்டாவது நம்முடைய தேவைகள்!

ஏழ்மையைப் போக்க வேண்டும், வேலை கிடைக்க வேண்டும், நோய் தீர வேண்டும், புதுமனை வாங்க வேண்டும், வாழ்க்கையில் துன்பங்கள் வந்து நிறைகின்றன அதனைப் போக்க வேண்டும், இறுதியாக மன நிம்மதி வேண்டும்! மனிதனுக்கான தேவைகளுக்கு ஓர் அளவே இல்லை! இவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஆக்ககரமான முயற்சிகளில் ஈடுபடுகிறோமோ இல்லையோ, சாமியார்களின் காலில் சென்று பலர் விழுந்து விடுகிறோம். நாம் காலில் விழுகின்ற அந்த ஆசாமி, பெரிய பெரிய சித்து வேலைகள் எல்லாம் செய்வார்! வானில் இறைவனின் திருவுருவத்தை காட்டுவார், நோய்களைப் போக்குவார், அவரின் திருவுருவப் படத்தில் குங்குமம், சந்தனம், திருநீறு கொட்டும் என பிறர் நமக்கு சொல்லியோ, அல்லது நம் ஊனக் கண்ணால் கண்டோ அறிந்து கொண்டு அவரிடமே சரணாகதி அடைந்து விடுவோம்!

தேவைகளின் அடிப்படையில்தான் நம்முடைய சரணாகதி அமைகிறது! இதில் இன்னுமொரு பரிதாபத்திற்குரிய விடயம் என்னவென்றால், இறைவனைக் காண வேண்டும் எனக் கூறி ஒரு புழுகு மூட்டையின் காலில் விழுந்து சரணாகதி அடைவதுதான். மனதில் வீற்றிருக்கும் மனசாட்சியிடம் ஒருபோதும் சரணாகதி அடையாதவர்களே புற உலகில் நிம்மதியைத் தேடி அலைகிறார்கள்.

மனிதனின் தேவைகளே போலி சாமியார்களின் மூலதனம் எனும் அறிவு நமக்கு வரவேண்டும்! இதுவும் ஒரு வியாபாரத்தைப் போலத்தான்!

மலேசிய இந்தியர்களைப் பொறுத்தமட்டில், நாட்டில் ஆங்காங்கே 7 நாட்கள், 14 நாட்கள் என அறைகுறை ஆன்மீகப் பட்டறைகளில் கலந்துகொள்வதை பலர் வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் இழக்கும் பணமோ ஆயிரக்கணக்கில்! இந்த அவசர உலகில் மாட்டிக் கொண்டுவிட்ட அனைவருக்கும் சமயமும் கடவுளும் விரைவு உணவு Instant Food போல உடனுக்குடன் பலனைக் காட்டிடும் ஒரு விருந்தாகவே அமைந்து விட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

ஏழு நாட்களில் உடலில் மையம் கொண்டுள்ள குண்டலினி சக்தியை தட்டி எழுப்புகிறேன், ஏழு நாட்களில் கடவுளின் தரிசனத்திற்கு உன்னைத் தயார் படுத்துகிறேன், மூலாதாரத்திலிருந்து சகஸ்ராரச் சக்கரத்தை திறந்து வைக்கிறேன், என இன்னும் பல தகிடுதித்தங்களை நம்பி நம்மவர்கள் பணத்தை வாரி வாரி அழிப்பதை விடுத்து, வசதி குறைந்த தமிழ்ப் பள்ளிகளுக்கோ ஏழை எளியவர்களுக்கோ ஒரு வாய் அன்னம் பாலிக்க உதவினால், அதில் கிடைக்கும் சந்தோசம் போல வருமா என்று நினைத்துப் பாருங்கள்!

இந்நாட்டில் தமிழர்களாகிய நாம் நம்முடைய அரசுரிமைகளை இழந்து கொண்டு வருகிறோம். மறுபக்கம் சொந்த தன்மானத்தை போலி சாமியார்களிடம் அடகு வைத்து சீரழிகிறோம்! ஆன்மீகத் தோல் போர்த்திய புலிகள் இந்து சமயத்தில் மட்டுமல்ல கிருத்துவம், இசுலாம் என இன்னும் பல சமயங்களில் ஊடுறுவிதான் இருக்கின்றனர். மக்கள் சுயமாகச் சிந்திக்க வேண்டும்!

இன்று இந்நாட்டில் பலமாக வேரூன்றி போன ஓர் இயக்கம் கொண்டாடும் மதகுருவின் தகிடுதித்தங்கள் விஞ்ஞான வளர்ச்சியால் அம்பலமாகியிருக்கின்றன. இதோ அதன் படக்காட்சிகள், இணையத்தில் இன்னும் நிறைய ஆதாரங்களைக் காணலாம்.

பி.கு: குறிப்பிட்டு ஒரு சாராரை மட்டும் சாடும் நோக்கமில்லை, இவரைப் போன்றே பலர் பல மதங்களைப் பயன்படுத்தி மக்களை மூடர்களாக்குகிறார்கள்!

சத்திய சாயி பாபா

Advertisements