>ஈப்போ இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் கைது – காணொளி

பிப்ரவரி 13, 2011

>

போராட்டம் தொடரும்..

Advertisements

>இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் 75 பேர் கைது! – காணொளி

பிப்ரவரி 13, 2011

>


>’இண்டர்லோக்’ விவகாரம் : இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் கைது!

பிப்ரவரி 13, 2011

>

பேரா மாநில நிலவரம்

இன்று காலை 9.40 மணியளவில் பேரா மாநில இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் திட்டமிட்டபடி தொடங்கிய ‘இண்டர்லோக் எதிர்ப்பு மகிழுந்து ஊர்வலம்’ புந்தோங் தொடங்கி ஜெலாப்பாங் சென்று கொண்டிருந்த வேளையில் காவல்த்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. இண்ட்ராஃப் ஆதரவாளர்களுக்கும் காவல்த்துறையினருக்கும் ஏற்பட்ட நீண்ட நேர வாக்குவாதத்திற்குப்பின், வன்முறையைப் பயன்படுத்தி அறுவர் காவல்த்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு ஜெலாப்பாங் காவல் நிலைய தடுப்பு அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தற்சமயம் ஜெலாப்பாங் காவல் நிலையம் இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் உள்ளே நுழையாதபடி மூடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

@மதியம் 1.15 : கைது செய்யப்பட்ட பேரா இண்ட்ராஃப் ஒருங்கிணைப்பாளர் பிரதமர், காவல்த்துறை தலைவர், பேரா மாநில காவல்த்துறை தலைவர் மற்றும் ஈப்போ ஓ.சி.பி.டி ஆகியோர்மீது காவல்நிலையத்தில் புகார் கொடுப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் :

பேரா மாநில இண்ட்ராஃப் ஒருங்கிணைப்பாளர் திரு.ரமேஸ்
தைப்பிங் சிவா
ஜெயகுமார்
மோகன்
சுப்பிரமணியம்
லிங்கம்

சிலாங்கூர் மாநில நிலவரம்

இதனையடுத்து, சிலாங்கூர் மாநிலத்திலும் திட்டமிட்டப்படியே மதியம் தொடங்கப்பட்ட ‘இணடர்லோக் எதிர்ப்பு மகிழுந்து ஊர்வலம்’ டெம்ப்லர் சாலையில் சென்றுகொண்டிருக்கும்பொழுது கோம்பாக் வட்டார காவல்த்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஏழு மகிழுந்துகள் கோம்பாக் காவல் நிலையத்திற்கு திசைதிருப்பட்டுள்ளன. ஒரு பெண்மணியின் நகர்ப்படக்கருவி காவல்த்துறை அதிகாரியால் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அப்பெண்மணியின் முகத்தில் குத்து விழுந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் :

சிலாங்கூர் மாநில இண்ட்ராஃப் ஒருங்கிணைப்பாளர் திரு.செல்வம்
திரு.ஜெயதாஸ்
திரு.சாமி
திரு.நவா
திருமதி லோசனா

இதற்கு முன்பு ராவாங்கில் ஊர்வலம் செல்லும்போது காவல்த்துறையினர் சாலை தடுப்பு போட்டிருந்ததாகவும், இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் கோஷமிட்டவுடம் சாலை தடுப்பு திறக்கப்பட்டதாகவும் திரு.ஜெயதாஸ் கூறினார்.

@12.45 மதியம் : அதே சமயம் சுமார் 10 மகிழுந்துகள் தற்சமயம் பத்து கேவ்ஸ் வளாகத்தில் 27 பிப்ரவரி ’இண்டர்லோக்’ எதிர்ப்பு பேரணிக்கான துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு விநியோகித்துக் கொண்டிருப்பதாக திரு.தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

@மதியம் 2.15 : தற்சமயம் மகிழுந்து ஊர்வலம் பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் தொடர்வதாக தகவல் கிடைத்துள்ளது.

@மதியம் 2.45 : பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் ஊர்வலம் சென்ற 20 மகிழுந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டு 8 இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் திரேவர்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் :

திரு.கேப்டன் பாலா
திரு.மணியம்
திரு.லதா
திரு.ரவி
திரு.ஹரி
திரு.சரண்
திரு.தமிழ் செல்வம்
குமாரி சாந்தி

@ மதியம் 3.00 : கோலாலம்பூர் பங்சாரில் அமைந்திருக்கும் மனித உரிமைக் கட்சியின் தலைமையகத்தின் முன்பு 12 இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் :

திரு.தியாகராஜன்
திரு.தினா
திரு.பாலா
திரு.மணி
திரு.நந்தன்
திரு.மகேன்
திரு.பரம்
திருமதி.கோகிலா

நெகிரி மாநில நிலவரம்

@மதியம் 1.00 : தற்சமயம் காவல்த்துறையினர் நெகிரி மாநில இண்ட்ராஃப் ஆதரவாளர்களின் மகிழுந்து ஊர்வலத்துடன் துணை செல்வதாக தகவல் கிடைத்துள்ளது.

@மதியம் 2.30 : தற்சமய்ம் நெகிரி செம்பிலான் மாநில இண்ட்ராஃப் ஒருங்கிணைப்பாளர் திரு.சிவகுமார் உட்பட 15 ஆதரவாளர்கள் காவல்த்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

@மதியம் 3.40 : ’பெர்காசா’ இயக்கம் சிரம்பான் சதுக்கத்தில் இண்ட்ராஃபிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால், காவல்த்துறையினர் அவர்களை கைது செய்யவில்லை.

இதுவரையில் நெகிரி செம்பிலானில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 15 வயதிற்குட்பட்ட இரு பள்ளி மாணவர்களும் 10 வயதிற்குட்பட்ட ஒரு பள்ளி மாணவியும் அடங்குவர்.

@இரவு 10.40 : நெகிரி செம்பிலானில் கைதான 24 ஆதரவாளர்கள் நாளைவரையில் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்படுவார்கள் என்று தகவல் கிடைத்துள்ளது.

ஜொகூர் மாநில நிலவரம்

காலை தொடங்கிய ‘இண்டர்லோக் எதிர்ப்பு கருத்தரங்கு’ திரு.சம்புலிங்கம் தலைமையில் வெற்றிகரமாக நடந்து முடிந்ததும், மதியம் 2.00 மணியளவில் ஜொகூர் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.மோகன் தலைமையில் மகிழுந்து ஊர்வலம் தொடங்கியதாகவும், காவல்த்துறையினர் அவர்களை பின்தொடர்வதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

கெடா மாநில நிலவரம்

@மதியம் 1.55 : காலையில் தொடங்கிய ‘இண்டர்லோக் எதிர்ப்பு மகிழுந்து ஊர்வலம்’ வெற்றிகரமாக நடந்து முடிந்ததாகவும். இறுதியில் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஆதரவாளர்கள் காவல் நிலையத்தில் பிரதமர், காவல்த்துறை தலைவர், அட்டர்ணி ஜெனரல் மீது புகார் கொடுத்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

அம்னோவை எதிர்க்கும் சக்தி இண்ட்ராஃபிற்கு மட்டுமே உண்டு!

இதுவரையில் நாடுதழுவிய நிலையில் பிடிப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 பேர் ஆவர். அவர்களில் 9 பெண்களும் நான்கு சிறுவர்களும் அடங்குவர்.

ஈப்போ (6)
ரவாங் (5)
சிரம்பான் (32)
பிரிக்பீல்ட்ஸ் (20)
பங்சார் எச்.ஆர்.பி தலைமையகம் (12)

கைது செய்யப்பட்ட, பட்டியலில் விடுப்பட்ட சில பெயர்கள் :

திரு.லிங்கேஸ்
திரு.டாக்டர் பாணி
திரு.சதீஸ்வரன்
திரு.கலை
திரு.சுகுமாறன்
திருமதி சரஸ்
திருமதி சரஸ்வதி
குமாரி தேவிகா
குமாரி ரீத்தா

போராட்டம் தொடரும்…


>கில்லிங் பன்றி ! இந்திய மாணவர்களுக்கு எதிரான மனோவியல் வன்முறை!

பிப்ரவரி 10, 2011

>அன்புசார் உறவுகளே, இந்தப் படக்காட்சியை பாருங்கள்! அந்த வெகுளி இந்திய மாணவனின் மூளைக்குள் இனவாத நஞ்சுகள் விரும்பாலேயே காய்ச்சி ஊற்றப்படுகின்றன. அவன் முகத்தில் ஏற்படும் ஒருவிதமான அவமான முத்திரையை நாமும் ஒருகாலத்தில் தாங்கியிருக்கிறோம் என்பது உங்கள் நினைவுக்கு வருகிறதா? அந்த மாணவனின் முகம் உங்கள் குழந்தைகளின் எதிர்கால வாலிப முகம் என்பதனை மட்டும் மறந்துவிடாதீர்கள் உறவுகளே!

’இண்டர்லோக்’ எனும் மனோவியல் போர் தனது உக்கிரத்தை இந்திய சமூகம் மீது கடுமையாக்குவதற்குள் ஒரே மலேசிய இந்தியன் எனும் உணர்வோடு விழித்தெழுவோம்!

நம்மை இந்நாட்டின் அவமானச் சின்னங்களாக கருதி நடத்திவரும் அம்னோவின் ’மலாய் மேலாண்மை’ எனும் விஷமத்தன கோட்பாட்டினை வேரறுப்போம், வாரீர்!

27 பிப்ரவரி, நம் இனத்தின் மற்றுமொரு விடிவெள்ளி! அம்னோ இனவாதத்திற்கோர் மரணவெடி!

http://www.youtube.com/watch?v=YVUsoPayw7w

போராட்டம் தொடரும்…


>இண்ட்ராஃபின் மனு வீசியெறியப்பட்டது ! உதயகுமாரை குத்துவதற்கு கையோங்கிய காவல்த்துறை அதிகாரி!

செப்ரெம்பர் 1, 2010

>

போராட்டம் தொடரும்…


இனி என்ன செய்ய போகிறோம்?

மார்ச் 9, 2009

இனி என்ன செய்ய போகிறோம்?

மார்ச் 9, 2009