’மலேசிய வரலாறு’ பாடம் மீளாய்வு செய்யப்பட வேண்டும்! மின்னொப்பம் இடுங்கள்!

ஏப்ரல் 22, 2011

பள்ளிகளிலும் மற்றும் பிற கல்விசார் கழகங்களிலும் பயன்படுத்தப்படும் வரலாறு பாடத்திட்டங்களையும், பாடநூல்களையும் உடனடியாக மீளாய்வு செய்யக்கோரும் விண்ணப்பம்.
அக்கறையுள்ள பெற்றோர்களாகவும், இந்நாட்டின் குடிமக்களாகவும் அங்கம் வகிக்கும் நாங்கள், நம் நாட்டின் வரலாறு பாடப்புத்தங்களில் உள்ள வரலாற்றுப் பிழைகளையும் மற்றும் அதன் பலவீனங்களையும் மிகுந்த சிரத்தையோடு சுட்டிக் காட்ட விரும்புகிறோம். அவைகளாவன :-
a) வரலாறு பாடநூல்களில் நிறைய வரலாற்று பிழைகளும், பாதி உண்மைகளுமே அடங்கியிருக்கின்றன;
b) நாட்டின் வளர்ச்சிக்கு பல்லின மக்களும் ஆற்றிய பங்கினை அது பிரதிபலிக்கவில்லை; மற்றும்
c) குறுகியப் பார்வையோடு, குறிப்பிட்ட சமய நாகரீகங்களையும் நம்பிக்கைகளையும் புறக்கணிக்கும் வகையில் பாராபட்சமாக எழுதப்பட்டுள்ளது.
நம் இளைய மாணவ சமுதாயத்தின் சிந்தனைகளைப் பாதிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் வரலாறு பாடத்திட்டங்களிலும், பாடநூல்களிலும் அடங்கியுள்ளதால், உடனடி நடவடிக்கையாக பள்ளிகளிலும் மற்றும் பிற கல்விசார் கழகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் வரலாறு பாடத்திட்டங்களையும், பாடநூல்களையும் விரிவான மீளாய்வுக்கு உட்படுத்தி, புதிய பாடத்திட்டத்தினை வரைய வேண்டும் என அரசாங்கத்தையும், சம்பந்தப்பட்ட பொறுப்பிலுள்ள தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறோம்.
பாடத்திட்டங்கள் மற்றும் பாடநூல்கள் மீளாய்வையும், மறுவரைவையும் செய்யக்கூடிய நிபுணத்துவக்குழுவில் நாட்டின் முக்கிய இனங்களை பிரதிநிதிக்கும் தகுதியுள்ளவர்கள் இடம்பெற வேண்டும் என நாங்கள் பரிந்துரை செய்கிறோம்.
இந்த மீளாய்வின் நோக்கமானது, ஒரு பரந்த கொள்கை மற்றும் முற்போக்கான அம்சங்கள் கொண்ட வரலாறு பாடத்திட்டங்களையும் பாடநூல்களையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான், அவற்றில் :-
1) குறிப்பிட்ட நாகரிகத்தையும் சமயத்தையுமே அதிகம் வலியுறுத்தாது, உலக வரலாற்றில் பல முக்கியமான நாகரிங்கங்களையும் நிகழ்வுகளையும் பற்றிய ஒரு விரிவான மற்றும் சமமான பார்வையை நம் மாணவர்களுக்கு ஏற்படுத்த முடியும்.
2) துல்லிதமான ஆய்வு செய்து வரலாற்றுச் சம்பவங்களின் ஆதாரங்களை பாராபட்சமின்றி பதிவு செய்ய வேண்டும்.
3) வரலாற்றைப் பின்ணனியாகக் கொண்ட நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபட்ட பல்லின மக்களின் பங்களிப்பினை நியாயமாக அங்கீகரிக்க வேண்டும்.
4) மாணாக்கர்களின் சிந்தனைகளில் குறிப்பிட்ட சமயத்தின் மீதோ அல்லது அரசியல் கொள்கையின் மீதோ பிடிப்பு ஏற்படுத்துவதற்கான பாதிப்பு அம்சங்கள் நீங்கப்பெற்ற, முற்றிலும் வரலாற்று உண்மைத் தகவல்களின் மீதும் அதனைச் சார்ந்த செயல்பாடுகளின் மீதும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

ஓரங்கட்டப்படும் மலேசிய இந்தியர்கள் – பாகம் 1

திசெம்பர் 2, 2009
இந்தத் தொடரின் வழியாக மலேசிய இந்தியர்கள் எப்படியெல்லாம் ஓரங்கட்டப்படுகின்றனர் என்பதனை படம் பிடித்துக் காட்ட விரும்புவதோடு, எப்படியெல்லாம் அது நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பனவற்றை அடுக்கடுக்கான விளக்கங்களோடு விவரிக்கவுள்ளேன். மலேசிய இந்திய ஏழை சமூகத்திற்கு எதிராக நடந்தவையெல்லாம் தவிர்க்கவியலாத காரணங்கள் என பரவலாக நிலவிவரும் மாயையை எனது தொடர் கட்டுரையின்வழி உடைத்தெறியவிருக்கிறேன். இச்சமூகத்தினரிடையே நற்பண்புகள் குறைந்திருப்பதாகவும், சமய அறிவு அற்றவர்களாகவும், அளவுக்கதிகமாக ஆஸ்ட்ரோ பார்த்துக் கொண்டிருப்பவர்களாகவும், அடிப்படையில் வன்முறை கொண்டவர்களாகவும் மற்றும் இன்னும் பலவிதமான மாயாவாத காரணியங்களை நம் சமூகத்திலுள்ளவர்களும் பிற சமூகத்தைச் சார்ந்த தற்காலத்திய தத்துவவாதிகள் நிறுவி நம்மை நம்பச் செய்கின்றனர்.

இதோ முதல் பகுதி

இத்தொடரை நன்கு விளங்கிக் கொள்ள சில அடிப்படை தகவல்களோடு துவங்கலாம் என நினைக்கிறேன்.

மலேசியாவின் அடிப்படைத் தரவு

இனவாரியான மக்கட் தொகை கணக்கெடுப்பு, 2009

மேற்காணும் பட்டியலில் மலேசிய இந்தியர்களின் தற்போதைய மொத்த எண்ணிக்கை 7.4 சதவிகிதம் என மலேசிய புள்ளிவிவர இலாகா தகவல் வெளியிட்டுள்ளது. இதில் மலேசிய இந்தியர்களின் எண்ணிக்கையானது தனித்தன்மை வாய்ந்த சிறுபான்மையினர் குழாம் எனத் தெளிவாகத் தெரிகிறது.

நம் நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்றுவரை நாட்டு மொத்த உற்பத்தியில் தனி நபரின் ஆண்டு வருமானமானது 1960-ஆம் ஆண்டில் ரிம2500லிருந்து 2008-ஆம் ஆண்டிற்குள் ரிம15000 வரை உயர்ந்துள்ளது. இது ஒரு கணிசமான உயர்வு என்றே கொள்ளலாம். அடிப்படையில் நாட்டின் பொருளாதாரமானது கொள்முதல் பண்டங்கள் உற்பத்தி மற்றும் வேளாண்பொருளாதாரத்தையே (ரப்பர் மற்றும் செம்பனை எண்ணெய் உற்பத்தி) நம்பியிருந்த காலம்போய், தற்போது தயாரிப்புத் துறையை சார்ந்திருக்கும் பொருளாதாரத்தை நம்மால் காண முடிகிறது.

கீழ்காணும் அட்டவணையைக் காண்க :

நாட்டின் வளப்பத்திற்கு அச்சாணியாகவும் நவீன விவசாய உற்பத்தியாகவும் கருதப்பட்ட ரப்பர் உற்பத்தித் துறையில் மலேசிய இந்தியர்களின் பங்கு அளப்பரியதாகும். மலேசிய இந்தியர்களில் பெரும்பாலானோர் ரப்பர் தோட்டங்களில் மரம் சீவும் உடலுழைப்புத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். விவசாயத் துறை என்றாலே உணவு உற்பத்தி என்ற நிலையை மாறச் செய்து பெரும் முதலீடுகளை ஈர்த்து பணம் ஈட்டும் ஒரு துறையாகவும் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வரும் ஒரு துறையாக ரப்பர் உற்பத்தித் துறை விளங்கத் தொடங்கியது. ரப்பர் உற்பத்தித் துறை வளர்ச்சி பெற்றுவந்த காலக்கட்டங்களில் நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு பெருமளவில் மாற்றத்தை அடைந்து புதியதொரு பரிணாமத்தை நோக்கிச் செல்லத் தொடங்கியது. நடவுத் தொழிலைச் சார்ந்திருந்த பொருளாதாரம் மெல்ல மெல்ல தொழிற்சாலை உற்பத்தியை சார்ந்திருக்கும் பொருளாதார நிலைமைக்கு தன்னை இட்டுச் செல்ல வழி அமைத்துக் கொண்டது. ஆங்காங்கே புதிய தொழிற்சாலைகள் பல தோன்றத் தொடங்கியதிலிருந்து ரப்பர் தோட்டங்களை நம்பியிருந்த பொருளாதாரம் தொழிற்சாலைகளை மையப்படுத்தி வளரத் தொடங்கியது. இதன்வழி நாட்டின் பெரும்பணம் ஈட்டும் முதன்மை துறையாக தொழிற்சாலை உற்பத்தித் துறை இடம்பெற்றது.

பொருளாதார நிலைமை பெரும் மாற்றத்தை கண்டுவந்த அதே சமயம் நாட்டின் அரசியல் நிலைமையும் பெரும் மாற்றத்தைக் கண்டுவந்தது. நம் நாட்டின் முக்கிய அரசியல் பரிணாமங்களை நான்கு கட்டங்களாக வகுக்கலாம், அதாவது 1957 முதல் 1969வரை, 1969 முதல் 1981வரை, 1981 முதல் 2004வரை, 2004 முதல் 2008வரையாகும். ஒவ்வொரு கட்டங்களும் வரலாற்று பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டு, அவை நம் நாட்டின் தலையெழுத்தை மாற்றி எழுதிய சம்பவங்களோடு பிணைத்து, அவை ஏற்பட்டதற்கான காரணங்களையும் விளக்கிக் காட்ட வல்லவையாகும்.

இவ்வளவு பரிணாமங்களுக்கு இடையில் மலேசியாவின் சிறுபான்மையினராக விளங்கும் மலேசிய இந்தியர்கள் நாட்டின் பொருளாதார, அரசியல், சமூக முன்னேற்றங்களிலிருந்து திட்டமிட்ட தேசியக் கொள்கைகளினால் வெளிப்படையாகவே ஓரங்கட்டப்பட்டு வந்தனர்.

மலேசியா அடைந்துவந்த துரிதமான பொருளாதார வளர்ச்சியின் பலனாக குறிப்பிட்ட சில இனங்களுக்கு கிடைத்துவந்த பலவிதமான உதவிகளைப் போலவே மலேசிய இந்தியர்களுக்கு சரிசமமான உரிய பங்கீடு ஒதுக்கப்படவில்லை. இந்தத் தொடரின்வழி மலேசிய இந்தியர்களில் ஏழை வகுப்பினர் நாட்டின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் எந்தெந்த ரீதியில் புறக்கணிக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு வந்தனர் என்பதனையும், எதனால் அவர்கள் ஓரங்கட்டுதலுக்கு ஆளானார்கள் என்பதனையும் விளக்க முயல்கிறேன்.

பெரும்பாலும் நமக்கு சில உண்மைகள் தெரியும். ஆனால், நமக்குத் தெரிந்தவை அங்கும் இங்கும் நிகழ்கிற சில சம்பவங்கள், மற்றும் திரிந்துபோன சில செய்திகளை மட்டுமே நாம் அறிந்து வைத்திருக்கிறோம். நான் செய்யவிருப்பது என்னவென்றால், ஆங்காங்கே நடந்த பல்வேறு சம்பவங்களை இணைத்து, புள்ளிகளை இணைத்துப் பார்த்து அவை சொல்லும் உண்மைகளை ஒரு பெரிய படமாக வரைந்து அதன் பின்புலங்களை உங்களுக்குத் தெளிவாக காட்டவிருக்கிறேன்.

ஆனால், முதலில்ஓரங்கட்டப்படுதல்என்ற பதத்தின் அர்த்தத்தை சற்று விளக்கிவிடுகிறேன்.

சமூகவியல் பார்வையில்ஓரங்கட்டப்படுதல்என்றால், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களை கட்டங்கட்டமாக சில அதிரடி மறைமுக செயல்முறைகளின்வழி தொடர்ச்சியாக ஒடுக்கியும், தேசியப் பொருளாதார வெள்ளோட்டத்திலிருந்து ஒதுக்கியும், சில வரைமுறைகளின்வழி சமுதாய அடிமட்டத்தில் எல்லைக்குட்படுத்தி முக்கியமற்றவர்களாக முத்திரைக் குத்தப்பட்ட ஒரு தோற்றத்தையும் ஏற்படுத்தி ( மலேசிய இந்தியர் சமுதாயத்தில் அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கு இது மிகப் பொருந்தும்) நிரந்தரமாக புறக்கணிப்பதுதான் அதன் அர்த்தம். ‘ஓரங்கட்டுதலின்கொடூர நீட்சியானது ஒரு சமூகத்தைச் சார்ந்தவர்களையே அடியோடு வேரறுக்க இன அழிப்புவரை அதன் கரங்களை நீட்டச் செய்யும்.

இன்றுவரை பல சமூகங்கள்ஓரங்கட்டுதலுக்குஉள்ளாகி சின்னாப்பின்னமாகியிருக்கின்றன. அதன் விளைவாக பலர் தங்களின் குடியிருப்புகளையும் சொந்த நிலங்களையும் இழந்திருக்கின்றனர், வலுக்கட்டாயமாக வறுமை புரையோடும் ஒதுக்குப்புற இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர், பரம்பரை தொழிலையும் அதன் மூலம் ஈட்டக் கூடிய வருமானத்தையும் இழந்திருக்கின்றனர், வேலை வாய்ப்புகளிலிருந்து புறக்கணிக்கப்பட்டிருக்கின்றனர். மேற்படியாக தங்களின் கலாச்சாரத்தையும் இழந்து, சமூகத்தில் கிடைக்கப்பெற வேண்டிய அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டவர்களாக வலுவிழந்து போனவர்கள் ஏராளம்.

மலேசிய இந்திய சமுதாயம் தொடர்ச்சியாக மலேசிய சமூகத்திடமிருந்துஓரங்கட்டப்பட்டு’, இன்றுவரை சில அடிப்படை உரிமைகளுக்கே போராட வேண்டிய நிலைக்குள்ளாக்கப்பட்டதன் அடிப்படைக் காரணம் யாதெனில், அரசாங்கத்தின் நடைமுறைப் போக்குகளும், பக்கச்சார்பாக வகுக்கப்பட்ட தேசியக் கொள்கைகளும் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்ட செயல் திட்டங்கள் யாவுமே அதிகார வர்கத்தின் தேவைகளுக்கேற்பவும், தொடர்ந்து அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டு நாட்டின் வளங்களைச் சூறையாடி, மலேசிய இந்திய சமுதாயத்தின் எதிர்ப்பார்ப்புகளை புறக்கணிப்பதும் தொடர்ந்து நடைப்பெறுவதால்தான். இந்தஓரங்கட்டுதலைநடைமுறைப்படுத்துவதிலும், அதனை பொது கண்ணோட்டத்திலிருந்து மறைப்பதிலும், திசைத்திருப்புவதிலும் அதிகார வர்க்கத்தினருக்கு முக்கியமான பங்கு உண்டு. நம்மிடையே நிலவும் பொதுவான கருத்துகளை அதிகார வர்கத்தினருக்கு சாதகமாக நிலைப்பெறச் செய்வதிலும், வலுப்படுத்தச் செய்வதிலும் அவர்கள் பலவிதமான உத்திகளைக் கையாண்டு வருகிறார்கள். சமுதாயத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளை உண்மையின் அடிப்படையில் தெரிந்து கொள்வதற்கும் அணுகுவதற்கும் நமக்கு விதிக்கப்பட்ட சில வரைமுறைகளின்வழியும் தடைகளின்வழியும் உண்மை நிலவரங்களைத் தவறாக புரிந்துகொள்ளக் கூடிய சாத்தியங்களை விதைக்கிறார்கள் அதிகார வர்க்கத்தினர். இதன் விளைவாக உண்மையிலேயே மலேசிய இந்திய சமுதாயம்ஓரங்கட்டப்பட்டுவருகிறதா என்ற சந்தேகத்தினை நமது சிந்தனையில் நாமே விதைத்துக் கொள்ளக்கூடிய சாத்தியங்களை அதிகார வர்க்கத்தினர் ஏற்படுத்துகிறார்கள்.

என்னுடைய பணி இதுதான். நிலவரங்களைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுவதோடு மட்டுமல்லாது, அதற்கான பின்னணிகளை ஆய்ந்து எடுத்துரைக்கவிருக்கிறேன்.

மலேசிய இந்தியர்கள் எதிர்நோக்கிவரும்ஓரங்கட்டுதல்பன்முகங்கள் கொண்டவை. குறிப்பாக அதனை நான்கு பிரிவுகளாக நாம் வகுக்கலாம்.

1) பொருளாதார ரீதியில் ஓரங்கட்டப்படுதல்

மலேசிய இந்திய சமூகம் தன்னை நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் ஆக்கப்பூர்வமாக ஈடுபடுத்திக் கொள்வதை நிராகரித்தல். நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் வெள்ளோட்டத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டு ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுதல்.

2) அரசியல் ரீதியில் ஓரங்கட்டப்படுதல்

நாட்டு வளப்பம் மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சிக்கான பிரத்தியேக ஒதுக்கீடுகள் குறித்த முடிவெடுக்கும், நிர்ணயிக்கும் தகுதிகளையும் சரிசமமான வாய்ப்புகளையும் அரசியல் ரீதியில் மலேசிய இந்தியர்களுக்கு வழங்காமல் புறக்கணித்தல். நாட்டின் நேர்மையான அரசியல் செயல்பாடுகள் அரசியல் செல்வாக்குகளின்வழி கைப்பற்றப்படுதல். அதன் விளைவாக நாட்டு குடிமகனுக்கும், சிறுபான்மை வகுப்பினருக்கும் உரிய அடிப்படை அரசியல் உரிமைகள் பறிக்கப்படுதல்.

3) சமூக ரீதியில் ஓரங்கட்டப்படுதல்

கொதிக்கும் நீரின்மீது மிதக்கும் அசுத்த நுரையாக மலேசிய இந்தியர்களில் உழைக்கும் வர்க்கத்தினரின்மீது பல்வகையான முத்திரைகளைக் குத்தி அவர்களை ஒதுக்கி வைத்தல். மலேசிய இந்தியர்களின்மீது பொதுவாக நிறுவப்பட்ட சில மதிபீடுகள் யாதெனில், கூலிகள், குடிகாரர்கள், நம்பிக்கையற்றவர்கள், கறுப்பர்கள், அசுத்தமாகவும் துர்நாற்றமும் வீசக் கூடியவர்கள், பிறரை நம்பி சார்ந்திருப்பவர்கள், மற்றும் ஏழ்மை என்ற ஒரே காரணத்தினால் இன்னும் சில முத்திரைப் பெயர்களை இவர்கள் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதிலும் மலேசிய இந்தியர்கள் குறித்த மற்றுமொரு வேடிக்கையான மதிப்பீடானது என்னவென்றால், மலேசிய இந்தியர்கள் ஒதுக்கப்பட்ட சமூகத்திலிருந்து சஞ்சிக்கூலிகளாக இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதால், அவர்கள் மற்ற இனங்களைக் காட்டிலும் தரத்தில் சற்று தாழ்ந்தவர்களாம்.

பட்டியல் நீண்டுபோகும் பல தடைகளை உள்வாங்கிக் கொண்டு போராடும் ஒரு ஏழைச் சமூகம், தன்னை உயர்த்திக் கொண்டு தானும் மனிதன்தான் என்ற பெருமையோடு முன்னேறிச் செல்வதானது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. வாய்ப்புகளைப் பெறவும், பயன்படுத்தவும், மேம்படுத்திக்கொள்ளவும் மறுக்கப்பட்ட ஏழை மலேசிய இந்திய சமுதாயம் தன்னுடைய முக்கிய அடையாளங்களைக் காப்பாற்றிக் கொள்ளக் கூட வழியில்லாத ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.

நான் மேற்குறிப்பிட்டப்படிஓரங்கட்டப்படுதல்எனும் திட்டங்களின் பிரிவுகளை ஒவ்வொரு கூறாக எனது தொடர் கட்டுரைகளின்வழி தெளிவுற விளக்கிக் காட்டவுள்ளேன். சமூகவியல் அடிப்படையில்ஓரங்கட்டப்படுதல்ஏன் நிகழ்கிறது என்பதனை மேலும் விரிவாக விவாதிக்கவுள்ளேன். காலங்காலமாக மலேசிய இந்தியர்களின் நிலைமையினை மையப்படுத்தி எழுந்த பலவிதமான அலுப்புத் தட்டுகின்ற காரணங்களை உடைத்தெறிந்து, மலேசிய சமூகத்தின் வளர்ச்சியில் இந்தியர்கள் இன்று வகிக்கும் பங்கிற்கு மூலகாரணம் குறித்தும் எழுதவிருக்கிறேன். நிச்சயமாக இத்தனைக்கும் நாம் இந்தியர்கள் / தமிழர்கள் என்ற ஒரே காரணம் அல்லது நமக்குள் உறைந்திருப்பதாக பேசப்படும் இனவழி மரபும் அதன்மீது குத்தப்படும் முத்திரையும் நம்மை இந்நிலைக்கு இட்டுச் செல்லவில்லை. மலேசிய இந்தியர்கள் / தமிழர்கள் தாழ்ந்துபோன தரமும் இல்லை. நடப்பனவற்றைக் கண்டால் ஒருவேளை நம்மை நம்பக் கூடச் செய்துவிடும். அனைத்திற்கும் ஒரு நாட்டின் அரசியல் சார்ந்த பொருளாதாரமே காரணமென நான் துணிகிறேன்.

தொடர்ந்து வாருங்கள்

திரு.நரகன்

போராட்ட நினைவலைகள்…

திசெம்பர் 31, 2008

பி.ப : 23.59

நேற்றோடு 2008-ஆம் ஆண்டின்டைரிதன் இறுதி பக்கத்தை நிரப்பிக் கொண்டு நிரந்தரமாக மூடிக் கொண்டுவிட்டது. தன்னுடைய கடமையையும் ஆயுளையும் முடித்துக் கொண்ட 365 பக்க டைரியின் பக்கங்களை சற்று புரட்டிப் பார்க்க வேண்டியது அனைவரின் கடமையாகும். அதில் பதிந்துவிட்ட நிகழ்வுகள் இனி காலத்திற்கும் மறந்துவிட முடியாதபடி நிலைத்து நிற்பதோடு மட்டுமல்லாது, அதன் தாக்கம் இனிவரும் காலங்களில் நாமெடுக்கும் பலவகையான முடிவுகளுக்கு அச்சாணியாக அமைந்துவிடக் கூடிய சாத்தியங்கள் இருப்பதைப் பற்றி நாம் சிந்தித்தாக வேண்டும். குறிப்பாக உலகளவில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலை அடுத்த இரண்டாண்டுகளுக்கு நம்மை வாட்டி எடுக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே, அனைவரும் சிக்கனம் எனும் ஆயுதத்தை கையில் எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை!

சோதனைக் காலம் என உலகமே வர்ணிக்கும் இந்த 2008-ஆம் ஆண்டானது மலேசிய இந்திய சமுதாயத்தை மட்டும் விட்டுவைக்கவில்லை. எதையும் போராடினால்தான் பெற முடியும் எனும் இலக்கணம் கற்றுவிட்ட மலேசிய இந்தியர்கள் 2008-ஆம் ஆண்டில் போராடிப் பெற்றதும் இழந்ததும் ஒன்றல்ல இரண்டல்ல. சோதனை இருந்தால்தான் நம்முடைய பலம் நமக்கே தெரியும். அவ்வகையில் 2008-ஆம் ஆண்டினை ஒரு புரட்சியாண்டு என வர்ணிக்கலாம். குறிப்பாக நாட்டு நிலவரங்களை தைரியமாகவும் வெளிப்படையாகவும் கருத்து தெரிவிக்கும் பக்குவத்திற்கு இளைஞர்கள் முன்வந்தது பாராட்டிற்குரிய விடயமாகும். சிந்தனைப் பரிமாற்றங்கள் வெற்றியடைவதில் மிகச் சிறந்த ஊடகமாக சாமானிய மக்கள் தேர்ந்தெடுத்தது வலைப்பதிவுகள்தான். இவை ஏற்படுத்திய தாக்கத்தினால் நாட்டின் தலையெழுத்தே மாறிப்போகும் சூழ்நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இவற்றின் மத்தியில் மலேசிய இந்தியர்கள் தங்களுக்கென்று ஒரு குறிக்கோளை வகுத்துக்கொண்ட ஓர் ஆண்டாக 2008-ஆம் ஆண்டினை கூறலாம். சிந்தனையளவில் பல மாற்றங்களைப் பெற்றுவரும் மலேசிய இந்தியர்கள் இனி நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது அத்தியாவசியமாகிறது. மலேசிய இந்தியர்கள் கடந்தாண்டு கடந்துவந்த பாதைகளை , அதிலும் குறிப்பாக மலேசிய இந்தியர்களின் அரசுரிமைகளுக்காக போராடிவரும் இண்ட்ராஃப் இயக்கம் முன்னெடுத்த சில போராட்ட நிகழ்வுகளையும், சந்தித்த சவால்களையும் சற்று நினைவுக்கூர்வோம்.

18 சனவரிஈப்போவில் 5 நாட்கள் உண்ணாநோன்புப் போராட்டம்… (இண்ட்ராஃபின் முதல் உண்ணாநோன்புப் போராட்ட நிகழ்வு)

21 சனவரிலண்டன் வாழ் மலேசிய இந்தியர்களின் அமைதிப் பேரணி

23 சனவரிபத்துமலை தைப்பூசம் புறக்கணிப்பு. பிற முக்கிய நகரங்களில் இண்ட்ராஃபின் மெழுகுவர்த்தி ஏந்திய பேரணி

24 சனவரிதிரு.உதயகுமார் உடல்நிலை பாதிப்பு!

28 சனவரிஜாசினில் உண்ணா நோன்புப் போராட்டம்

டப்லினில் இந்து உரிமைப் பணிப்படைக்கு ஆதரவாக அமைதி மறியல்.

1 பிப்ரவரிபிரித்தனில் இண்ட்ராஃபின் அமைதிப் போராட்டம்..

16 பிப்ரவரிஇண்ட்ராஃபின் இரண்டாவது மாபெரும் பேரணி

8 மார்ச்சுநாட்டின் 13-வது பொதுத் தேர்தல், மக்கள் சக்தியின் வலிமையால் 5 மாநிலங்கள் மக்கள் கூட்டணிக்கு கைமாறின.

2 ஏப்ரல்இண்ட்ராப் ஐவரின் மேல்முறையீடு

17 ஏப்ரல்ஜெனிவாவில் இந்து உரிமைப் ணிப்படை, வேதமூர்த்தி .நா அதிகாரிகளை ந்தித்தார்

28 ஏப்ரல்கமுந்திங்கை நோக்கி இண்ட்ராஃபினர் மகிழ்வுந்து பயணம்

11 மேதிரு.உதயகுமாருக்கு முறையான சிகிச்சை வழங்கக் கோரி ஈப்போ, பினாங்கு,கோலாலம்பூர் ஆகிய இடங்களில் இண்ட்ராஃபினர் அமைதி மறியல்

19 சூன்திரு.உதயகுமார் தைப்பிங் மருத்துவமனையில் அனுமதி..!

5 சூலைகமுந்திங் தடுப்பு காவலுக்கு வருகைப் புரிந்த உள்துறை அமைச்சரை சந்திக்க திரு.உதயகுமார் மறுப்பு.

3 ஆகசுட்டுதலைநகரில் இண்ட்ராஃப் கொடி அறிமுக விழா

7 ஆகசுட்டு – 54-வது காமன்வேல்ட் மாநாட்டின்போது நான்கு இண்ட்ராபினர் கைது!

11 ஆகசுட்டுபெட்ரோனாசு இரட்டை கோபுரத்தின் முன்புறம் 30 இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் உண்ணாநோன்புப் போராட்டம்

23 ஆகசுட்டுசெபராங் ஜெயாவில் நடைப்பெற்ற யாகத்தில் கலகம். 9 இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் கைது!

30,31 ஆகசுட்டுமந்தின், நெகிரி செம்பிலானில் 24 மணிநேர மகா யாகம்,உண்ணா நோன்புப் போராட்டம்..

31 ஆகசுட்டுஇலண்டனில் இண்ட்ராஃப் அமைதி மறியல்

8 செப்தெம்பர்இண்ட்ராஃப் தலைவர்களை விடுவிக்க மனுநீதிமன்றம் தள்ளுபடி!

8, 9 செப்தெம்பர்இண்ட்ராஃப் பேரணியில் கைதானவர்களின் வழக்கு விசாரணை

9 செப்தெம்பர்உலு லங்காட் ஆலயம் உலு லங்காட் ஊராட்சி மன்றத்தினரால் உடைப்பு. மக்கள் சக்தியின் கண்டனம்

13 செப்தெம்பர்சுங்கை பட்டாணி, கெடாவில் இண்ட்ராஃபின் முதல் தேசிய மாநாடு

22 செப்தெம்பர்இண்ட்ராஃப் பேரணியில் கைதான 27 போராளிகளுக்கு இண்ட்ராஃப் நிதி திரட்டுதல்.

27 செப்தெம்பர்சுதந்திர சதுக்கத்தில் இண்ட்ராஃபின் மெழுகுவர்த்தி ஏந்திய பேரணி

4 அக்தோபர்புத்ரா உலக வாணிப மையத்தில் நடைப்பெர்ற பிரதமரின் அரி ராயா திறந்த இல்ல உபசரிப்பில் இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் வருகை

15 அத்தோபர்இண்ட்ராஃப் இயக்கத்திற்கு அதிகாரப்பூர்வ தடை

22 அத்தோபர்இண்ட்ராஃபினர் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி பிரதிநிதிகளிடம் மகசர் சமர்ப்பித்தல்

23 அத்தோபர்புத்ரா செயாவில் 11 இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் கைது (குழந்தை வைஷ்ணவி உட்பட)

24 அத்தோபர்காசாங் நீதிமன்றத்தில் 10 இண்ட்ராஃப் ஆதரவாளர்களின் வழக்கு விசாரணை

7 நவம்பர்உதயாவின் பிறந்தநாளையொட்டி நாடெங்கிலும் சிறப்புப் பிரார்த்தனைகள்

8 நவம்பர்உதயாவின் பிறந்தநாளையொட்டி லண்டனில் அமைதி மறியல்

13 நவம்பர்சாணக்கிய புரியில் அமைந்திருக்கும் மலேசியத் தூதரகத்தின் முன்புறம் இண்ட்ராஃபிற்கு ஆதரவாக மனித உரிமை இயக்கங்கள் அமைதி மறியல்!

செந்தூல் மாவட்ட காவல்த்துறை தலைமையகத்தில் திரு.செயதாசு, திரு.தனேந்திரன் வாக்குமூலம்

15,16 நவம்பர்கமுந்திங்கை நோக்கிய 350 கி.மீ மெதுவோட்டப் பயணம், இண்ட்ராஃபினர் ஆதரவு.

20 நவம்பர்உதயாவின் தாயார் மருத்துவமனையில் அனுமதி! தாயைச் சந்திக்க மகனுக்கு தடை.

25 நவம்பர்நாடெங்கிலும் 25 நவம்பர் பேரணி முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஆலயங்களில் சிறப்பு யாகங்கள் மற்றும் பிராத்தனைகள்

9 திசம்பர்இண்ட்ராஃப் இயக்கத்திற்கு 2008 ஆண்டிற்கான சிறந்த மனித உரிமை விருது சுவாராம் இயக்கத்தால் வழங்கப்படு கௌரவிக்கப்பட்டது.

பிரிட்டன் பிரபுக்களின் சபையில் இண்ட்ராஃப் போராட்டம் குறித்தும் மலேசிய இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்தும் விளக்கம்.

11 திசம்பர் – ‘ஜெரிட்இயக்கத்தின் மிதிவண்டி பயணப் போராட்டத்திற்கு மக்கள் சக்தி ஆதரவு!

13 திசம்பர்கிள்ளானின் மக்கள் சக்தி கருத்தரங்கம்

மக்கள் சக்தியினரின் காலவரையறையற்ற உண்ணாநோன்புப் போராட்டம்

17 திசம்பர்திரு.செயதாசு மருத்துவமனையில் அனுமதி.

21 திசம்பர்நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளரிடம் மக்கள் சக்தியினர் மகசர் சமர்ப்பித்தனர்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளைத் தவிர்த்து மாநில ரீதியில் பல நிகழ்வுகள் கடந்தாண்டு நிகழ்ந்த வண்ணமே இருந்தன. இனிவருங்காலங்களில், மலேசிய இந்தியர்களின் அரசுரிமைகள் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைப்பெற வேண்டும். அதற்கு மக்கள் தார்மீக ஆதரவு தொடர்ந்து இருக்க வேண்டும் என எதிர்ப்பார்போம்.

மலர்ந்துள்ள 2009 ஆண்டு சமுதாயத் தொண்டுகள் புரியும் ஆண்டாக மலரட்டும்!

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

போராட்டம் தொடரும்

>கல்லை மட்டும் கண்டால்…

ஓகஸ்ட் 30, 2008

>ஊனக் கண்கொண்டு பார்ப்பவர்களுக்கு இவை வெறும் கற்குவியல்கள் தான். கலைக் கண்ணுடன் பார்ப்பவர்களுக்கு, வீழ்ந்து நொறுங்கிக் கிடக்கும் கற்கள் ஒவ்வொன்றும் தன் சோகக் கதையினைச் சொல்லும்.

ஒரு வீட்டைக் கஷ்டப்பட்டு, கடன்பட்டு கட்டி முடிக்கிறீர்கள். ஆனால் ஒரே நாளில் உங்கள் வீடு இயற்கை இடர்களால் இடிந்து போனால், இடிந்தது வீட்டின் சுவராக மட்டும் இருக்காது, உங்கள் மனமும்தான் இடிந்து போயிருக்கும். இடிந்து போன வீட்டுச் சுவரைப் பார்க்கும் உங்கள் கண்களுக்கு மட்டும் அவற்றின் உயிர்ப்புதன்மை தெரியும், காரணம் கஷ்டப்பட்டு உழைப்பைக் கொட்டி எழுப்பிய வீடு அது.

அதேப்போல்தான் ஆயிரம் வருடங்கள் காலம் திடமாக நின்ற, தமிழகத்தின் பழம்பெரும் கோயிலான தஞ்சை இராசராசீச்சுரம் திருக்கற்றளி, இன்று மெல்ல மெல்ல சில பொறுப்பற்ற தரப்பினரின் கையில் சிக்குண்டு சின்னாப்பின்னமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அக்கோயிலின் உயிர்ப்பை உள்வாங்கிக் கொண்ட பல கலை ரசிகர்களின் நெஞ்சம் இப்பொழுது விம்மிக் கொண்டிருக்கும் என்றுக் கூறினால் அது மிகையாகாது. இக்கோயிலின் பாதுகாப்பிற்கு அரணாக விளங்க வேண்டிய இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையே ‘வேலியே பயிரை மேய்ந்தது போல’ அதன் அழிவிற்கு வித்திட்டு விட்டதை நினைத்தால் சங்கடமாக உள்ளது.

இக்கோயிலின் திருப்பணிக்கு தமிழக அரசு போதிய நிதியுதவிகள் வழங்கியுள்ள போதிலும், அதனை முறையாகப் பயன்படுத்தாது, முறையான ஆய்வுகள் நடத்தாது, பழங்கால கட்டிடங்களைக் கையாள்வதில் போதுமான நிபுணத்துவம் இல்லாத தரப்பினரைக் கொண்டு இக்கோயிலைப் பதம் பார்த்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இக்கோயிலுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தினை எடுத்துக் காட்டும், மேலும் பல படங்கள் உங்கள் பார்வைக்காக..

http://picasaweb.google.com/s/c/bin/slideshow.swf

படங்களைத் தரவிறக்கம் செய்ய நினைத்தால் இங்கே சுட்டவும் : தஞ்சை பெரிய கோயிலுக்கு ஆபத்து!

கல்லை மட்டும் கண்டால்…

ஓகஸ்ட் 30, 2008

ஊனக் கண்கொண்டு பார்ப்பவர்களுக்கு இவை வெறும் கற்குவியல்கள் தான். கலைக் கண்ணுடன் பார்ப்பவர்களுக்கு, வீழ்ந்து நொறுங்கிக் கிடக்கும் கற்கள் ஒவ்வொன்றும் தன் சோகக் கதையினைச் சொல்லும்.

ஒரு வீட்டைக் கஷ்டப்பட்டு, கடன்பட்டு கட்டி முடிக்கிறீர்கள். ஆனால் ஒரே நாளில் உங்கள் வீடு இயற்கை இடர்களால் இடிந்து போனால், இடிந்தது வீட்டின் சுவராக மட்டும் இருக்காது, உங்கள் மனமும்தான் இடிந்து போயிருக்கும். இடிந்து போன வீட்டுச் சுவரைப் பார்க்கும் உங்கள் கண்களுக்கு மட்டும் அவற்றின் உயிர்ப்புதன்மை தெரியும், காரணம் கஷ்டப்பட்டு உழைப்பைக் கொட்டி எழுப்பிய வீடு அது.

அதேப்போல்தான் ஆயிரம் வருடங்கள் காலம் திடமாக நின்ற, தமிழகத்தின் பழம்பெரும் கோயிலான தஞ்சை இராசராசீச்சுரம் திருக்கற்றளி, இன்று மெல்ல மெல்ல சில பொறுப்பற்ற தரப்பினரின் கையில் சிக்குண்டு சின்னாப்பின்னமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அக்கோயிலின் உயிர்ப்பை உள்வாங்கிக் கொண்ட பல கலை ரசிகர்களின் நெஞ்சம் இப்பொழுது விம்மிக் கொண்டிருக்கும் என்றுக் கூறினால் அது மிகையாகாது. இக்கோயிலின் பாதுகாப்பிற்கு அரணாக விளங்க வேண்டிய இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையே ‘வேலியே பயிரை மேய்ந்தது போல’ அதன் அழிவிற்கு வித்திட்டு விட்டதை நினைத்தால் சங்கடமாக உள்ளது.

இக்கோயிலின் திருப்பணிக்கு தமிழக அரசு போதிய நிதியுதவிகள் வழங்கியுள்ள போதிலும், அதனை முறையாகப் பயன்படுத்தாது, முறையான ஆய்வுகள் நடத்தாது, பழங்கால கட்டிடங்களைக் கையாள்வதில் போதுமான நிபுணத்துவம் இல்லாத தரப்பினரைக் கொண்டு இக்கோயிலைப் பதம் பார்த்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இக்கோயிலுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தினை எடுத்துக் காட்டும், மேலும் பல படங்கள் உங்கள் பார்வைக்காக..

படங்களைத் தரவிறக்கம் செய்ய நினைத்தால் இங்கே சுட்டவும் : தஞ்சை பெரிய கோயிலுக்கு ஆபத்து!

தஞ்சை பெரிய கோயிலுக்கு ஆபத்து!

ஓகஸ்ட் 29, 2008

அண்மையில் ‘கல்லுக்குள் நகரம்’ என்ற பதிவின் வாயிலாக தஞ்சை பெருவுடையார் ஆலயத்தைப் பற்றிய சில சிறப்புகளைக் குறிப்பிட்டிருந்தேன். தமிழர்களின் சிறப்பை எல்லாம் ஒருங்கே வடித்து, அதனைக் கலை விருந்தாகப் படைக்க அரும்பெரும் தொண்டாற்றிய உடையார் ஸ்ர்ராசராசதேவரையும், கலைத்தாயின் மைந்தர்களான சோழர்காலச் சிற்பிகளையும் இவ்வேளையில் நாம் நினைவுக் கூர்ந்தே ஆகவேண்டும். என்னே அவர்களின் சாதனை..!

ஐக்கிய நாட்டுச் சபையின் கீழ் செயல்பட்டுவரும் யுனேசுகோ அமைப்பின் வழி உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட இக்கற்றளி, அண்மைய காலமாக பெரும் சோதனைக்கு உட்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்ததோடு, நெஞ்சம் விம்மவும் செய்கிறது.

இக்கோயிலின் விமானத்தைப் பாருங்கள்… எவ்வளவு கலைவேலைப்பாடுகளுடன் அமைந்த உயர்ந்த கருங்கல் விமானம்..!

ஆகம விதி, சில்ப சாத்திர நுணுக்கங்கள், புராதன கணித முறை ஆகியவற்றை பயன்படுத்தி ஒவ்வொரு கல்லும் அடித்தளத்திலிருந்து விமானம் உச்சி வரை எடைக்கு எடை, நாற்புறத்திலும் சம அளவிலான பாரம் கொடுக்கப்பட்டு ஒரு பிரமிட்டைப் போல் கட்டி எழுப்பியுள்ளனர் நம் தமிழர்கள். இப்புராதன கட்டுமானத்தின் நுணுக்கங்களை இன்றளவிலும் பொறியியலாளர்களால் முழுமையாகப் புரிந்துக் கொள்ள இயலவில்லை.

நவீன தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இக்காலத்தில், அவற்றைப் பயன்படுத்தி இக்கோயிலைக் காலங்காலமாய் நிலைத்து நிற்கச் செய்து, வருங்கால சந்ததியினர் வரலாற்றை நினைத்து பூரித்துவிடும்படி செய்ய வேண்டாமா? முக்கிய விடயங்களை அறிவிக்கும் கல்வெட்டுகளைப் பாதுகாத்து வரலாற்றைக் காக்க வேண்டாமா?

ஆனால் அண்மைய காலமாக இக்கோயிலுக்கு ஏற்பட்ட சோதனை என்ன?

இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை அண்மையில் தஞ்சை பெருவுடையார் கோயிலில் மறுசீரமைப்புப் பணிகளில் ஈடுபடுவதாகக் கூறி, கோயிலின் பல பகுதிகளைச் சேதப்படுத்தி, வரலாற்றைச் சிதைத்து உள்ளனர். புனரமைப்பு என்றப் பெயரில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இத்திருகற்றளியைச் சேதப்படுத்தப்படும் வேளையில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தஞ்சை இராசராசீச்சுரம் திருக்கற்றளியின் இரண்டாவது கோபுரமான ராசராசன் கோபுரத்துடன் இணைத்து தெற்கு – வடக்காக 125.21 மீ.நீளமும், கிழக்கு மேற்காக 241.51 மீ.நீளத்துக்கு நான்கு புறங்களிலும் திருசுற்று மாளிகை எனப்படும் சுற்று மண்டபத்துடன் கூடிய மதில் சுவர்கள் அமைந்துள்ளன. கோயிலின் வடக்குப்புற திருச்சுற்றின் ஒரு பகுதியில் சுவரின் அடித்தளம் மன்ணில் புதைந்ததுடன், அதனருகே மற்றொரு மேற்கூரையில் விரிசலும் ஏற்பட்டது அண்மையில் கண்டறியப்பட்டது.

இக்கோயிலைப் பராமரித்து வரும் இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை அதைச் சீரமைக்க முடிவெடுத்து, வடக்கு திருச்சுற்று மாளிகையில் அம்மன் சன்னதிக்கும், சுப்பிரமணியர் சன்னதிக்கும் இடைப்பட்ட பகுதியில் 50 மீட்டர் நீளத்துக்கு சேதமடைந்த பகுதிகளைச் சீரமைக்க ரூ.59 லட்சத்தை ஒதுக்கி, முதல் தவணையாக ரூ.25 லட்சத்தை அனுமதித்து பணிகள் தொடங்கின.

பழுதடைந்த கற்களுக்கு மாற்றாக புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான் மலையிலிருந்து பெரிய கருங்கல் பாறைகள் கொண்டு வரப்பட்டன. இத்திருச்சுற்று மாளிகையில் 206 லிங்கங்கள் உள்ளன. பணி நடைப்பெறும் பகுதியில் இருந்த 23 லிங்கங்கள் அகற்றப்பட்டு பணிகள் நடைப்பெறுகின்றன.

பாதுகாப்பான வகையில் கல் தூண்களைப் பிரித்தெடுக்கத் தவறியதால் பெரும்பாலான சோழர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளுடன் கூடிய தூண்கள் துண்டு துண்டாக உடைந்து சேதமடைந்துள்ளன. இந்தத் தூண்கள் பழைய நிலையில் மீண்டும் இணைக்க முடியாத அளவுக்குச் சேதமடைந்துள்ளன. பழங்கால கட்டிடங்களைப் பற்றிய தகவல்களும், கட்டிட நுணுக்கங்களும், அதனைப் புனரமைக்கும் வேலைகளில் சற்றும் முன் அனுபவமில்லாதவர்களால் வந்த வினை இது!

தஞ்சை பெருவுடையார் கோயில் திருச்சுற்று மாளிகையிலிருந்து பிரித்தெடுத்தபோது சிதைந்த கல்வெட்டுத் தூண்கள் (வலது) மகா மண்டபம் குமுதப்படையில் இயந்திரம் கொண்டு அறுக்கப்பட்டப் பகுதி.

இவர்களால் சேதப்படுத்தப்பட்ட தூண்களிலுள்ள கல்வெட்டில் இராசராச சோழனின் வாய்மொழி உத்தரவின் பேரில், சோழநாட்டு அமன்குடியைச் சேர்ந்த சேனாதிபதி மும்முடி சோழ பிரம்மராயன் தலைமையில் இந்தத் திருச்சுற்று மாளிகை கட்டப்பட்டது என்ற செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேச் செய்திக் குறிப்பு விமானத்தின் பின்புறமுள்ள கருவூர் சித்தர் சன்னதிக்கு அருகிலுள்ள திருச்சுற்று மாளிகை தூண் உட்பட மூன்று இடங்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உடைக்கப்பட்ட தூண்களில் இராசராச சோழனும் அவரது மகன் இராசேந்திர சோழனும், இக்கோயிலுக்காக அளித்த செப்புத் திருமேனிகள் மற்றும் நகைகள் குறித்து கூறப்பட்டுள்ளன.

பழமையான கட்டிடங்களைப் பிரித்தெடுக்கும் போது முக்கிய ஆவணங்களாகத் திகழும் கல்வெட்டுகளைப் பாதுகாப்பது அவசியம். தூண்களுக்கு அழிவு நேரிட்டதுபோல் இக்கோயிலின் மகா மண்டபத்தின் தென்புற துணை பீடம், அதிட்டானம் ஆகிய பகுதிகளில் திருப்பணி என்ற பெயரால் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

அதிக எடையுள்ள கற்களைப் பிரித்தெடுக்கும் பணியில் மனித உழைப்பு மட்டுமே பயன்படுத்தப்பட்டிருப்பதால், தூண்கள் கீழே விழுந்து சேதமடைந்துள்ளன. பல லட்சம் நிதி ஒதுக்கி செலவு செய்யும் தொல்லியல் ஆய்வுத் துறை நவீன இயந்திரங்களைக் கொண்டு பணிகளைச் செய்திருந்தால் இந்த இழப்பை தவிர்த்திருக்கலாம்.

தொல்லியல் ஆய்வுத் துறையால் ஏற்பட்ட இந்தச் சேதம் ‘ஒரு தேசிய இழப்பு’ என்று கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

துறை சார்ந்த வல்லுநர்களின் நேரடி மேற்பார்வையில் இப்பணி நடைப்பெறாததால் இராசராசனின் பல கல்வெட்டுகள் முர்றிலுமாக அழிந்துவிட்டன. இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வரலாற்றுச் சின்னங்களின் முன்புள்ள அறிவிப்புப் பலகையில், அச்சின்னத்துக்கு சேதம் ஏற்படுத்துபவர்கள் கடுமையான தண்டனைக்குரியவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தகைய அறிவிப்பு வெளியிட்ட தொல்லியல் ஆய்வுத் துறையினரே வரலாற்றுச் சின்னத்தின் கல்வெட்டுகளை அழித்தால் அவர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது? இனியாவது தொல்லியல் ஆய்வுத் துறையின் உயர்நிலை அலுவலர்கள் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு, மேலும் அழிவுகள் ஏற்படாத வகையில் இக்கோயிலைக் காப்பாற்ற வேண்டும் என்பதே கலை ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பு. புலம்பெயர் தமிழர்களான மலேசியத் தமிழர்களின் எதிர்ப்பார்ப்பும் அதுதான் என நம்புகிறேன்.

இப்பதிவைப் படிப்பவர்கள் தயவு செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டு கடிதத்தையும், பதிவில் உள்ள படங்களையும், கொடுக்கப்பட்டுள்ள முகவரிகளுக்கு அஞ்சல் மூலமோ அல்லது மின்மடல் மூலமோ அனுப்பி வைத்து, சம்பந்தப்பட்டவர்களை உரிய நடவடிக்கை எடுக்கக் கூறலாம்.

Dear Sir/Madam,

I write in respond to the plea by G.P.Srinivasan in his article “Imminent Danger to Thanjavur Big Temple” as published in the Haindava Keralam website, i.e http://www.haindavakeralam.com/HKPage.aspx?PageID=6999&SKIN=B on 21st August 2008. Please see the attachment enclosed for reference.

The article clearly explains the appalling renovation works supposedly being carried out to restore/conserve a World Heritage Monument as declared by UNESCO. It also depicts the lack of awareness, respect and sensitivity by the named responsible body i.e ASI (Archeological Survey of India ) into the preservation of such an ancient, sacred, religious and cultural shrine.

Therefore, I am appealing to the UNESCO and relevant Indian Authorities to promptly intervene to stop such an atrocious dilapidation and insult of our Ancestral Testimony. I urge you to respond and rely on your compassionate understanding of this very sensitive matter.

Yours Sincerely,

உங்கள் பெயர்
( A Malaysian of Indian Origin and Devoted Hindu Practitioner).

கடிதம் அனுப்ப வேண்டிய முகவரிகள் :-

Hon’ble Smt. Ambika Soni,

Union Minister for Culture,
Govt. of India, New Delhi TEL. -26499332, 26494199, 26494652Fax 26494652, 9868181830(M)22, Akbar Road, New Delhi

Hon’ble Smt. Sonia Gandhi,
UPA Chairperson,
New Delhi
soniagandhi@sansad.nic.in
Fax: +91 (0)1123017047

Hon’ble Dr. Manmohan Singh,
Prime Minister of India, New Delhi
manmohan@sansad.nic.in pmosb@pmo.nic.in
Tel.Telephone: 91-11-23012312.
Fax: 91-11-23019545 / 91-11-23016857 Tel. 23018939, 23011156, 23018907, 23019334, 23015470

Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru Kalaignar Mu. Karunanidhi,
Chennai. cmcell@tn.gov.in

The World Heritage Centre, UNESCO
Attention:
Mr Francesco Bandarin, Director, F.Bandarin@unesco.org
United Nations Educational, Scientific and Cultural Organization
7, place de Fontenoy
75352 Paris 07 SP, France
Tel: +33-(0)1-45 68 15 71 / +33-(0)1-45 68 18 76
Fax: +33-(0)1-45 68 55 70
E-Mail: wh-info@unesco.org
Technical support: wh-support@unesco.org

Mme Zohra Nidaye,
Secretary, Central and South Asia Unit z.ndiaye@unesco.org

Mme Anne Lemaistre,
Chief of Policy and Statutory Implementation Unit A.Lemaistre@unesco.org

Mme Minja Yang,
Director and UNESCO Representative to Bhutan, India, Maldives and Sri Lanka
m.yang@unesco.org

மலேசிய இந்திய தூதரகம்

High Commission Of India
No. 2, Jalan Taman Duta,
Off Jalan Duta,
50480 Kuala Lumpur

Tel: (00-603) 20933510
Fax: (00-603) 20933507, 20925826

E-mail: hc.kl@streamyx.com

தமிழ் நாடு அரசு

tourism and culture tamil nadu
Dr. V. Irai Anbu IAS
Secretary to the Government,
Secretariat, Chennai – 600 009

Phone : 25670820 (O), 25384990 (R)
Fax : 25670820, 25670716, 25676287
E-Mail : toursec@tn.gov.in

Department of Archaeology,
Tamil Valarchi Valaagam,
Halls Road, Egmore,
Chennai – 600 008.

மின்மனுவில் உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம்.

http://www.ipetitions.com/petition/tanjavurtemple/