நெதர்லாந்து தொலைக்காட்சியில் இண்ட்ராஃப் செய்தி!

திசெம்பர் 15, 2011

போராட்டம் தொடரும்…

Advertisements

பிரித்தானிய மக்களவையில் இண்ட்ராஃப் (காணொளி)

மார்ச் 14, 2010
பாகம் 1

பாகம் 2

பாகம் 3

பாகம் 4

பாகம் 5

பாகம் 6

பாகம் 7

போராட்டம் தொடரும்…


பிரித்தானிய மக்களவையில் மலேசிய இந்தியர்கள் மற்றும் கிழக்கு மலேசிய பழங்குடியினர் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்தான இண்ட்ராஃபின் விளக்கக்கூட்டம்.

மார்ச் 10, 2010
10/03/10 திகதியன்று லண்டனில் பிரித்தானிய மக்களவை உறுப்பினர் திரு.வீரேந்திர சர்மாவின் துணையோடு இண்ட்ராஃப் தலைவர் திரு.வேதமூர்த்தி, இண்ட்ராஃப்பின் தேசிய ஆலோசகர் திரு. என்.கணேசன் ஒரு விளக்கக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

மலேசிய இந்தியர்கள் மற்றும் கிழக்கு மலேசிய பூர்வீகக் குடினருக்கு எதிராக தொடர்ச்சியாக இழைக்கப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து அக்கூட்டத்தில் திரு.கணேசன் மற்றும் திரு.வேதமூர்த்தியால் விளக்கப்பட்டது. தொடர்ந்து அம்னோ அரசாங்கத்தின்கீழ் நிகழ்ந்துவரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து அனைத்துலக ரீதியில் அதற்கான தீர்வினை விவாதிக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக இவ்விளக்ககூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் படங்களைக் காண்பதற்கு இந்த இணைப்பைச் சுட்டவும் : பிரித்தானிய மக்களவையில் இண்ட்ராஃப்

போராட்டம் தொடரும்…


பிரவாசி பாரதிய திவாசு மாநாட்டில் இண்ட்ராஃப்..

ஜனவரி 10, 2010
இண்ட்ராஃப் தலைவர் திரு.பொ.வேதமூர்த்தி தயாரித்த மலேசிய இந்திய சிறுபான்மையினர் மற்றும் மனித உரிமை மீறல்கள் 2009 எனும் ஆய்வறிக்கையை புது தில்லியில் நடைப்பெறும் பிரவாசி மாநாட்டின்போது திரு.உதயகுமார் பலருக்கும் விநியோகித்து விளக்கமளித்தார். மலேசிய சிறுபான்மை இந்தியர்களுக்கு எதிராக இழைக்கப்படும் மனித உரிமை மீறல்களை, அனைத்துலக கவன ஈர்ப்பு மூலம் அம்னோ அரசாங்கத்திற்கு பல்வகையில் அழுத்தம் கொடுக்கும் ஒரு முயற்சியாக இண்ட்ராஃப் இம்மாநாட்டில் கலந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மலேசிய சிறுபான்மை இந்தியர்களின் பிரச்சனைகள் குறித்து இந்திய நிருபர்கள் திரு.உதயகுமாரின் விளக்கத்தை கேட்டறிதல்.

கலிஃபோர்னியாவை மையமாகக் கொண்ட பொறியியலாளர் திரு.என்.பி.ஆசார்யா, மலேசிய இந்தியர்களின் பிரச்சனைகள் குறித்து அமெரிக்க வெளியுறவு செனட் குழுவின் பார்வைக்கு அங்குள்ள செனட்டர் மூலமாகக் கொண்டுச்செல்லவிருப்பதாக உறுதி கூறினார்.

ஃபிஜியின் முன்னால் பிரதமர் மகிந்த சௌத்ரியுடன்..

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் அனுமந்த ராவுடன்

30 இந்திய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு திரு.உதயகுமார் விளக்கமளித்தல்..

முன்னாள் இந்திய எதிர்க்கட்சி தலைவர் சிறீ லால் கிருஷ்ணா அத்வானியுடனான தனிப்பட்ட சந்திப்பு..


போராட்டம் தொடரும்

மலேசிய இந்தியர்களின் மனித உரிமை ஆண்டறிக்கை 2009

ஜனவரி 7, 2010
2008-ஆம் ஆண்டைப் போலவே, 2009-ஆம் ஆண்டிற்கான மலேசிய இந்தியர்கள் குறித்தான மனித உரிமை ஆண்டறிக்கையை புது தில்லியில் நடைப்பெற்றுவரும் பிரவாசி பாரதிய திவாசு (புலம்பெயர் இந்தியர் மாநாடு)ஆண்டுக்கூட்டத்தில் இண்ட்ராஃப் தலைவர் திரு.பொ.வேதமூர்த்தி சமர்ப்பித்துள்ளார். கடந்தாண்டில் சிறுபான்மை மலேசிய இந்தியர்களுக்கு எதிராக மத்திய மற்றும் மாநில அரசினால் நடத்தப்பெற்ற 15 வகையான மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு தெளிவாகவும் விரிவாகவும் வரையப்பட்டுள்ள இவ்வறிக்கையை அனைவரும் படித்து பிறருக்கும் அறியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Malaysian Indians Annual Human Rights Report 2009

2008-ஆம் ஆண்டின் மலேசிய இந்தியர்களின் மனித உரிமை ஆண்டறிக்கையைப் படிக்க இங்கே சுட்டுக : அறிக்கை 2008

போராட்டம் தொடரும்

சிறீ லங்கா தற்காப்பு அமைச்சு வெளியிட்டுள்ள புகைப்படங்கள்!

மே 20, 2009
தமிழர்களின் எட்டப்பனான கருணா, பிரபாகரனின் உடலத்தை அடையாளம் காண்பதாக இலங்கை தற்காப்பு அமைச்சு வெளியிட்டுள்ள படங்கள் சித்தரிக்கின்றன. காணொளியில் காட்டப்பட்ட பிரபாகரனைப் போன்ற தோற்றம் கொண்ட முகத்திற்கும் புகைப்படங்களில் தெரியும் முகத்திற்கும் நிறையவே வித்தியாசங்கள் தெரிகின்றன.

இவ்விடயம் குறித்து மக்கள் தொலைக்காட்சியில் ஓர் அலசல்.


சிறீ லங்கா தற்காப்பு அமைச்சு வெளியிட்டுள்ள புகைப்படங்கள்!

மே 20, 2009
தமிழர்களின் எட்டப்பனான கருணா, பிரபாகரனின் உடலத்தை அடையாளம் காண்பதாக இலங்கை தற்காப்பு அமைச்சு வெளியிட்டுள்ள படங்கள் சித்தரிக்கின்றன. காணொளியில் காட்டப்பட்ட பிரபாகரனைப் போன்ற தோற்றம் கொண்ட முகத்திற்கும் புகைப்படங்களில் தெரியும் முகத்திற்கும் நிறையவே வித்தியாசங்கள் தெரிகின்றன.

இவ்விடயம் குறித்து மக்கள் தொலைக்காட்சியில் ஓர் அலசல்.